யாழ்.குடாநாட்டில் நல்லார் கந்தசாமி அலயம் உட்பட பல ஆலயங்களில் திருவிழா உற்சவங்கள் நடைபற்று வரும் நிலையில பெருந்திரளாக கூடும் பக்தர்களிடம் நகைகளை கொள்ளையடிக்கும் கும்பல்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. பல்வேறு வேடங்களில் நடமாடித் திரியும் இக் கள்வர்களிடமிருந்து தங்கள் நகைகளைப் பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நேவின் பத்மதேவா எச்சரித்துள்ளார்.
குறிப்பாக நல்லூர் ஆலயத் திருவிழாவில் மிக அதிகளவான பக்தர்கள் தினமும் வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில், அவ்வாலய சுற்றாடல்களில் திருடர்களின் நடமாட்டமும் அதரித்துள்ளதாக சுடடிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தங்க நகைகளைத் தவிர்த்து ‘கவரிங்’ நகைகளை அணிந்து வருமாறும் பொலிஸாரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் சாத்திரம் கூறுபவர்கள் போல் நடித்து பொதுமக்களின் தங்க நகைகளை அபகரித்த 12 பேரை பொலிஸார் கைது செய்தமை குறிப்பிடத்தாக்கதாகும்.