2010

2010

நாட்டில் 28,720 வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாக கணிப்பீடு

dinesh.jpgதொழில் அமைச்சு மேற்கொண்ட ஆய்வின் படி 2010 ஆம் ஆண்டாகும் போது 28,720 வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு தொழில் வழங்குவதற்கு தனியார்துறையுடன் இணைந்து வேலைத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார்.

வாய் மூல விடைக்காக தொழில் அமைச்சரிடம் வினவப்பட்டிருந்த கேள்விக்கான பதிலை அமைச்சர் சபையில் சமர்ப்பித்தார். 2010 ஆம் ஆண்டாகும் போது இலங்கையில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் குறித்தும் அவர்களுக்கு தொழில் வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஐ. தே. க. எம். பி. தயாசிரி ஜயசேகர கேள்வி எழுப்பியிருந்தார்.

பொன்சேகா விவகாரம்; ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரினால் தீர்ந்துவிடும் – பிரதமர்

dm.jpgசரத் பொன்சேகாவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சட்டபூர்வமானதாகும். சிவில் சட்டத்தை மீறியது தொடர்பில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தண்டனையை மாற்ற சபாநாயகருக்கு அதிகாரம் கிடையாதென பிரதமர் டி.எம். ஜயரட்ன நேற்று (8) சபையில் தெரிவித்தார். சரத் பொன்சேகா விடயத்தில் தவறான வழிகளைப் பின்பற்றாது ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரினால் இந்தப் பிரச்சினை இலகுவாக தீர்ந்துவிடும் எனவும் அவர் கூறினார்.

ரவி கருணாநாயக்க எம்.பி முன்வைத்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன் வைத்தார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர் மேலும் கூறியதாவது; இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டபூர்வமானதாகும். பாராளுமன்றத்தினுள் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலே சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது. சாதாரண குடிமகனுக்குள்ள சட்டமே எம்.பி. தொடர்பில் உள்ளது. குற்றவியல் சட்டத்தை மீறும் எம்.பி ஒருவரை பாராளுமன்றத்தைத் தவிர வேறு எங்கு வைத்தும் கைது செய்ய முடியும். அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பாதிருக்கவும் சட்டத்தில் இடமுண்டு. அந்த எம்.பி.யை பாராளுமன்றத்திற்கு அழைக்க சபாநாயகருக்கு அதிகாரம் கிடையாது.

மக்களின் கவனத்தை திருப்பவே ஐ.தே.க.வும் ஜே.வி.பியும் இந்த விடயத்தை முன்னெடுப்பதாக தெரிகிறது. ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோருவதை விடுத்து தேங்காய் உடைப்பதால் எதுவித பயனும் ஏற்படாது.பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் உரையாற்றுவதற்கு பொதுமக்களின் பெருமளவு பணம் செலவாகிறது. ஒரு வசனத்தில் சாதிக்கக் கூடிய விடயத்தை ஏன் பெரிது படுத்துகிaர்கள். மன்னிப்புக்கோரும்படி எதிர்க்கட்சித் தலைவருக்கு பொன்சேகாவின் மனைவியை கேட்க முடியும்.

கோரமின்மையால் சபை அமர்வு 19 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

sri-lankan-parliament.jpgஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. ரவி கருணாநாயக்கவின் தனிநபர் பிரேரணை நேற்று சபையில் விவாதத்திற்கு எடுக்கப்பட்ட போதிலும் கோரமில்லாததால் பாராளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையும் ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் கூடியது.

ஐ.ம.சு.மு.யின் காலி மாவட்ட எம்.பி. சந்திம வீரக்கொடி உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது பிற்பகல் நேரம் 2.40 மணியாகும். சாபாநாயகரின் பணிப்பின் பேரில் கோரம் மணி ஒலிக்கப்பட்டது.

சரியாக பிற்பகல் 2.45 மணியளவில் சபாநாயகர் சபையில் 18 உறுப்பினர்களே அமர்ந்திருப்பதால் சபை நடவடிக்கையைக் கொண்டு செல்லுவதற்கு போதிய கோரமில்லை எனக்குறிப்பிட்டு சபையை எதிர்வரும் 19 ஆம் திகதி வரையும் ஒத்திவைத்தார்.ரவி கருணாநாயக்க எம்.பியின் ஜனாதிபதி, பிரதமர் பதவி வகிப்போர் அமைச்சரவைப் பதவிகளை வகிப்பது தொடர்பான தனிநபர் பிரேரணையே நேற்று சபையில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டிருந்தது.

மீட்கப்பட்ட நகைகள் மீள்குடியேற்றத்தின் பின் உரியவரிடம் ஒப்படைப்பு – முரளிதரன்

murali.jpgயுத்தம் காரணமாக உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளானவர்களில் 5,44,494 பேர் இதுவரை மீள்குடி யேற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுயதொழில், மீன்பிடி, விவசாயம் மற்றும் அன்றாட கூலி வேலை செய்வதினூடாக தமது ஜீவனோபாயத்தை மேற்கொள்வதாக பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ரவி கருணாநாயக்க எம்.பி வாய்மூல விடைக்கான கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், தற்பொழுது 1,65,755 பேர் முகாம்களில் உள்ளனர். மீள்குடியேற்றப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 25 ஆயிரம் ரூபா உதவி வழங்கப்படுகிறது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கண்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பின் அப்பிரதேசங்களில் ஆரம்பிக்கப்படும் மக்கள் வங்கிக்கிளைகள் ஊடாக மீள வழங்கப்படும்.

வவுனியா மெனிக்பாம் முகாமில் மீள்குடியேற்றுவதற்காக 8228 குடும்பங் களைச் சேர்ந்த 24,280 பேர் எஞ்சியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 22,264 குடும்பங்களைச் சேர்ந்த 64,924 பேரும், அநுராதபுரத்தில் 4273 பேரும், குருநாகலில் 730 பேரும், பாணந்துறையில் 1405 பேரும், புத்தளத்தில் 67,428 பேரும் மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளனர்.

சீரற்ற காலநிலை நீடிக்கும்

bad-weather-in-sri-lanka.jpgநாட்டில் தற்போது நிலவும் கடுங்காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கு மென்று வானிலை அவதான நிலையம் தெரிவித்தது. மத்திய மலைப் பகுதியின் மேற்குப் பிரதேசத்தில் கடுங்காற்று நீடிக்குமென்று வானிலை அவதானிப்பாளர் பிரீதிகா ஜயகொடி தெரிவித்தார்.

மேல் மாகாணம், சப்ரகமுவ, மத் திய மாகாணங்களிலும் தென் மாகா ணத்தின் காலி, மாத்தறை மாவட்ட ங்களில் இடைக்கிடை மழை பெய்வதுடன், கடுங்காற்றும் வீசுமென்று வானிலை அவதான நிலையம் தெரிவித்தது. இதேவேளை, மலையகத்தின் நீரேந்தும் பகுதிகளில் கடுங்காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவித்தன.

உலகின் சக்தி வாய்ந்த பெண்ணாக பராக் ஒபாமாவின் மனைவி

mrs-obama.jpgஉலகின் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செல் முதல் இடம் பிடித்தார்.

உலகக் கோடீஸ்வரர்களின் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு புகழ் பெற்ற போர்ப்ஸ் பத்திரிகை உலகில் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலையும் வெளியிட்டு வருகிறது. இந்த 100 பேரை அரசியல், தொழில் ஊடகம், லைப்ஸ்டைல் என்ற 4 பிரிவுகளில் போர்ப்ஸ் நிறுவனம் பிரித்து இருக்கிறது.

சக்தி வாய்ந்த 100 பெண்களின் இந்த பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்சல் முதல் இடம் பிடித்து இருக்கிறார். 46 வயதான அவர் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் மட்டும் அல்லாமல், அரசியலில் பெண்கள் பிரிவிலும் முதலிடம் பிடித்து இருக்கிறார். இந்த பட்டியலில் 2வது இடம் பிடித்து இருப்பவர் இரின் ரோசன் பெல்டு ஆவார். இவர் கிராப்ட் புட் சர்வீசஸ் கம்பெனியின் தலைமை செயல் அலுவலராக இருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் காட்பரி சாக்லெட் தயாரிப்பு கம்பெனியை வாங்கியவர்.

3வது இடத்தில் இருக்கும் பெண் டி.வி.சேனலில் டாக் ஷோ நடத்தி புகழ் பெற்ற ஒப்ரா விண்பிரே ஆவார். 4வது இடத்தில், ஜெர்மனி நாட்டின் அதிபராக 2 முறை தேர்ந்து எடுக்கப்பட்ட ஏஞ்சலா மார்க்கெல் இருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் 5 வதாக இருப்பவர் அமெரிக்க வெளிநாட்டு மந்திரி ஹிலாரி கிளிண்டன் ஆவார்

கே. கே. எஸ். ரயில் பாதைக்கான வேலைகள் இந்த மாதம் ஆரம்பம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரதப் பாதைக்கான வேலைகள் இந்த மாதம் ஆரம்பமாகும் என இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் காந்த் கூறினார்.

யாழ். மாநகர சபையில் இலங்கை – இந்திய நட்புறவுச் சங்கத்தால் வழங்கப்பட்ட பஸ் வண்டிகளின் திறப்புகளை யாழ். நகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் என். சண்முகலிங்கன், வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் திருமதி பொன்னம்பலம், யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் கு. பற்குணராஜா ஆகியோரிடம் இந்தியத் தூதுவர் அசோக்காந்த் நேற்று வெள்ளிக்கிழமை கையளித்தார். அசோக்காந்த் மேலும் பேசும்போது கூறியதாவது:- மக்களின் போக்குவரத்துச் சேவைகளை முன்னெடுக்கக் கூடியதான உதவிகளை இந்தப் பிரதேசத்திற்கு வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

மன்னார், மடு, தலைமன்னார் பகுதிகளுக்கான புகையிரத வீதிகளையும் எமது அரசு அமைத்துக் கொடுக்கவுள்ளது. இலங்கை – இந்திய நட்புறவின் சின்னமாக இங்கே பல்வேறு உதவித் திட்டங்களை நடைமுறைப் படுத்தவுள்ளோம். மீள் குடியமர்ந்த மக்களின் வாழ்வாதார உதவியாக அவர்களுக்கான வீடுகளைக் கட்டிக் கொடுக்கவும் இந்திய அரசு உதவி வருகின்றது.

கிளிநொச்சியில் நாளொன்றுக்கு நால்வர் தற்கொலை செய்கின்றனர். அல்லது தற்கொலை முயற்சியில் இறங்குகின்றனர்.

Stop_Sucideகிளி நொச்சியில் யுத்தத்தின் விளைவாக தற்கொலை முயற்சிகள் அதிகரித்துள்ளன. கிளிநொச்சியில் தற்கொலை முயற்சியிலீடுபடுபவர்களின் தொகை அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மனநல மருத்துவர் மா.ஜெயராஜா தெரிவித்துள்ளார். நாளொன்றிற்கு நான்கு பேர் தற்கொலை அல்லது தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதாகவும், யுத்தத்தின் பின்னான விரக்தி இல்லது மனநோய் இதற்கு காரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் போது கணவரை இழந்த விதவைகள், காணாமல் போனோரின் மனைவிமார் அதிகமாக தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்திற்கு முன் மனநோயாளிகளாக இருந்த 300 பேரில் நூறு பேர் காணாமல் போயுள்ளனர். யுத்தத்தினால் மனநோயாளிகளாகியுள்ள மற்றும், பாடசாலைகளுக்குச் செல்லாத மாணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. தற்போது ஐந்நூறு மனநோயாளிகள் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ளனர். இவர்களின் இந்நிலைக்கு இவர்களது நெருங்கிய உறவினர்கள் காணாமல் போயுள்ளமையும், இடப்பெயர்வுகளினால் ஏற்பட்ட துன்பங்களுமே காரணம் என இவர்களுடன் உரையாடுகின்ற பொது தெரியவருகின்றது.  மனநோயாளிகள் தங்கவைக்கபட்டுள்ள கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் மாடியிலுள்ள 2ஆம் விடுதியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள பலர் முயன்றுள்ளனர். – இவ்வாறு அவர் மேலும் தெரிவித்தார்.

வடமாகாணசபை அலுவலகத்தை நாவற்குழியில் இயங்க வைப்பதற்கு ஆலோசனை.

வடமாகாண சபை அலுவலகத்தை யாழ். நாவற்குழியில் இயக்கலாம் என ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி அறிவியல்நகரில் வடமாகாணசபை அலுவலகத்தை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதும் அங்கு மாகாண சபை தற்போது இயங்கவதிலுள்ள சிக்கல்கள் குறித்து மாகாணசபையின் பிரதம செயலாளர்கள், அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கலந்துரையாடல்களின் போது இவ்வாலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மாகாண சபையின் அலுவலங்களை கிளிநொச்சியில் இயங்க வைப்பதிலுள்ள சிக்கல்களை எடுத்துக்கூறி யாழ்ப்பாணம் அல்லது வவனியாவில் அதை அமைக்கலாம் எனவும் ஆலோசனையின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் இறுதி முடிவு எதுவும் இது வரை எட்டப்பட்டவில்லை.

கிழக்கில் ஆழ்கடல் மீன்பிடிக்க அனுமதிப்பத்திரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Fishing_in_Jaffnaகிழக்கு மாகாணத்தில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்பவர்கள்  அனுமதிப்பத்திரம் வைத்திருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள காரியாலயத்தில்  இதற்கான அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகுகளுக்கான அனுமதிப்பத்திர பரிசோதனைகள் வாழைச்சேனை துறைமுக முகாமிலும், பேத்தாழை கடற்படை முகாமிலும் மேற்கொள்ளப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக 800 ஆழ்கடல் மீனவர்கள் மீனவ அடையாள அட்டைகளுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் 500 இயந்திரப்படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மீனவ அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களில் 300பேருக்கு மட்டுமே அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களில் வடக்கு கிழக்குப் பகுதிகளிலுள்ள மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்புக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தமையும், மீன் பிடித்தொழில்களை மேற்கொள்வதில் பல்வேறு நெருக்கடிகள் அவர்களுக்கு ஏறபடுத்தப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்படத்தக்கது.