கிழக்கு மாகாணத்தில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்பவர்கள் அனுமதிப்பத்திரம் வைத்திருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள காரியாலயத்தில் இதற்கான அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகுகளுக்கான அனுமதிப்பத்திர பரிசோதனைகள் வாழைச்சேனை துறைமுக முகாமிலும், பேத்தாழை கடற்படை முகாமிலும் மேற்கொள்ளப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக 800 ஆழ்கடல் மீனவர்கள் மீனவ அடையாள அட்டைகளுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் 500 இயந்திரப்படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மீனவ அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களில் 300பேருக்கு மட்டுமே அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களில் வடக்கு கிழக்குப் பகுதிகளிலுள்ள மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்புக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தமையும், மீன் பிடித்தொழில்களை மேற்கொள்வதில் பல்வேறு நெருக்கடிகள் அவர்களுக்கு ஏறபடுத்தப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்படத்தக்கது.