2010

2010

கிளிநொச்சிப் பகுதிகளில் கள்வர்களின் தொல்லை அதிகரித்து வருகின்றது.

மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள கிளிநொச்சிப் பகுதிகளில் கள்வர்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.  சொத்துக்கள் எல்லாவற்றையும் இழந்துள்ள நிலையில் தங்கள் காணிகளில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ள இம்மக்களின் நகை. பணம் போன்றவற்றை இரவு வேளைகளில் சென்று அபகரித்துச் செல்லும் கள்வர்களால் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் மிகுந்த அச்சம் கொண்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கிளிநொச்சி உதயநகர் மேற்கில் வசிக்கும் ஒருவருடயை வீட்டினுள் புகுந்த கள்வர்கள் அவரிடமிருந்த பணம். நகை. மற்றும் சில பொருட்களை களவாடிச் சென்றுள்ளனர். இறுதிக்கட்டப் போரில் காயமுற்றதால் நடமாடமுடியாத நிலையில் உள்ள அவரது விட்டிலேயே இக்கொள்ளளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கதவுகள். யன்னல்களற்ற வீட்டில் அவரும் அவரது குடும்பத்தினரும் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் கள்வர்கள் வீட்டினுள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

மீள்குயேற்றப்பட்டுள்ள மக்கள் தங்கள் இருப்பிடங்களில் பாதுகாப்பற்ற நிலையில் தங்கியுள்ளதால் கள்வர்களின் செயற்பாடுகளுக்கு அது இலகுவாகவுள்ளதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தை விமல் வீரவன்ஸ முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதியிடம் 4 கோரிக்கைகள்.

ww-pr.jpgதேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸவின் நான்கு கோரிக்கைகள் நிறைவேற்றுவார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உறுதிமொழி வழங்கியதையடுத்தே சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை விமல் வீரவன்ஸ முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்றார். இத்தகவலை தேசிய சுதந்திர முன்னணி உறுதிப்படுத்தி உள்ளது.

அந்த நிபந்தனைகள் வருமாறு:-

1. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவை எக்காரணத்தை கொண்டும் இலங்கைக்குள் அனுமதிக்கக் கூடாது.

2. ஐ.நா நிபுணர் குழு சம்பந்தமாக விசாரணை நடத்த உள்நாட்டு நிபுணர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும்.

3. ஐ.நாவின் எந்த நிபந்தனைகளுக்கும் உடன்பட்டு ஐ.நா நிபுணர் குழுவை விசாரணை மேற்கொள்ள அனுமதிக்க கூடாது.

4. ஐக்கிய நாடுகள் சபையுடன் பேசி, நிபுணர்கள் குழுவை நீக்க வேண்டும்.

வீரவன்ஸவின் தாயார் மரணம்

funeral-flowers.gifநேற்று இரவு விமல் வீரவன்ஸவின் தாயார் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர தகவல் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்து வெல்லப்போவது யார்? மோதலில் நெதர்லாந்து – ஸ்பெயின்

spt2.jpgஉலகின் 6 கண்டங்களில் இருந்து 32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து – ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.

கால்பந்து விளையாட ஆரம்பித்து 76 ஆண்டுகளுக்குப்பின் முதன்முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது ஸ்பெயின். 1974-ம் ஆண்டு மேற்கு ஜெர்மனியிடமும்இ 1978-ம் ஆண்டு ஆர்ஜென்டீனாவிடமும் இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து கோப்பையை தவறவிட்ட நெதர்லாந்து அணி தற்போது மூன்றாவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் உலகக் கோப்பையை வெல்லும் துடிப்போடு இறுதி ஆட்டத்தில் களமிறங்குகின்றன.

ஜோன் ஹோம்ஸின் இடத்திற்கு புதியவர் நியமனம் – ஐ.நா. செயலர் அவசர நடவடிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாகப் பணியாற்றிய ஜோன் ஹோம்ஸின் இடத்துக்குப் புதியவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவுஸ்திரேலியாவுக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராகக் கடமையாற்றும் திருமதி வெலேரி அமோஸ் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனினால் ஹோம்ஸின் இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதா அவரின் இணைப் பேச்சாளரான ஃபர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

ஜோன் ஹோம்ஸ் இதுவரை காலம் ஆற்றிய பணிகளுக்காக அவருக்கு நன்றி தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் பான் கி மூன் புதியவர் அந்தப் பணியைத் திறம்பட மேற்கொள்வாரென நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஜோன் ஹோம்ஸ் இலங்கை அரசாங்கத்தரப்பால் முன்னர் கடும் விமர்சனத்திற்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை படுகொலை செய்தவர்களை உடன் கண்டுபிடியுங்கள். – அமைச்சர் தேவானந்தா அரசிடம் கோரிக்கை!

douglas-devananda.jpg‘முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை படுகொலை செய்தவர்களை உடன் கண்டுபிடியுங்கள். எம்மீதுள்ள களங்கத்தை போக்குங்கள்” என – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான தி.மகேஸ்வரனை படுகொலை செய்தவர்களை கைது செய்யுமாறு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்திடம் கோரியுள்ளார். கொலையாளிகளை உடனடியாக கைது செய்து தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நீக்குமாறு அவர் கோரியுள்ளார்.

அத்துடன் அண்மையில் சாவகச்சேரியில் மாணவர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும், விரிவான விசாரணகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர்  தெரிவித்துள்ளார். இக்கொலை தொடர்பாகவும் சிலர் தம்மீது குற்றம் சுமத்தி வருவுதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவங்களை முன்னிறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தம்மீதும் தமது கட்சி மீதும் பாராளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் எனவும், இவற்றிற்கும் தமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய விசாணைகளை நடத்தி தம்மீது சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை போக்குமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

மகேஸ்வரனின் மனைவியும் தற்போது ஐக்கிய தேசியக்கட்சியின் பாராயுளுமன்ற உறுப்பினராக இருப்பவருமான விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவற்றைத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை தடுக்க சிவில் பாதுகாப்புக் குழுக்கள் – மட்டு பொலிஸ் அத்தியேட்சகர்

சிவில் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவதன் மூலம் இளைஞர்கள் பயங்கரவாதிகளாவதைத் தடுக்க தடுக்க முடியும் என மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவதன் மூலம் இளைஞர்கள் பயங்கரவாதிகளாவதையும், மீண்டுமொரு யுத்தம் எற்படுவதையும் தடுக்க முடியும் என மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கரணாரட்ண தெரிவித்துள்ளார். 

கடந்த புதன் கிழமை மட்டக்களப்பில் சிவில் பாதுகாப்புக் குழுக்களின் உயர்மட்ட மாநாடு நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கிராமங்களில் நடைபெறும் அபிவிருத்திப் பணிகள் இந்த சிவில் பாதுகாப்பு குழுக்களுடாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் மீண்டும் டெங்கு நோய் பரவல் தீவிரம்!

dengue22222.jpgஇலங்கை யில் மீண்டும் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்து வருகின்றது. கடந்த வாரத்தில் மட்டும் 11 பேர் டெங்கு நோயினால் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த யூன் மாதத்தில் மட்டும் நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 3,222 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டில் மட்டும் இனங்காணப்பட்ட டெங்கு நோயாளிகளின் தொகை 19,117 இற்கு மேல் எனவும், டெங்கு காய்ச்சல் நாடு முழுவதும் மீண்டும் பரவி வருவதாகவும், சில வைத்தியசாலைகளில் டெங்கு நொயாளிகளின் தொகை அதிகரித்துள்ள தாகவும் சுகாதார பிரிவுகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, யாழ்.குடாநாட்டில் தற்போது நுளம்புகளின் பெருக்கம் மோசமாக அதிகரித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

வெளிநாடுளிலிருந்து இலங்கை வருபவர்கள் தங்களை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டுமாம்!

Police_Checkவெளி நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகின்றவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என பொலிஸ் பேச்சாளர் – சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிராசாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் தங்கியிருந்து விட்டு இலங்கைக்கு வருபவர்களின் விபரங்களை, தகவல்களை சேகரிக்க வேண்டிய தேவை பொலிஸாருக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிற்கு வரும் தமிழ் மக்களை பொலிஸில் பதிவு செய்யுமாறு நேற்று முன்தினம் வெள்ளவத்தையில் பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழ் பத்திரிகையொன்று பொலிஸ் அத்தியட்சகரிடம் கேட்டபோது, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இலங்கைக்கு வந்து விடுதிகள், உறவினர் விடுகளில் தங்கியிருக்கும் போது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் அவர்கள் பதிவு செய்ய வேண்டும் எனவும், இந்நடமுறை நாடு முழுவதற்கும் பொருந்தும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழர்களை மீண்டும் பொலிஸ் பதிவுகளுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவசரகாலச் சட்டத்தின் 23ஆம் பிரிவின் அடிப்படையில் இப்பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஜனநாயக தேசிய முன்னணியின் மேல்மாகாணசபை உறுப்பினர் நா.குமரகுரபரன் தெரிவித்துள்ளார்.

கொழம்பிற்குச் செல்லும் தமிழ் மக்கள் விடுதிகளிலோ, உறவினர் வீடுகளிலோ தங்கியிருக்கும் போது அப்பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னர் நடைமுறையில் இருந்தது. எனினும், போர் முடிவிற்கு வந்ததன் பின்னர் அப்பதிவு முறை நீக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் இது நடைமுறைக்கு வந்து விடுமோ என்கிற அச்சமும, கவலையும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

உண்ணாவிரத போராட்டம் முடிந்தது

ww-pr.jpgஐ.நா. அலுவலகத்திற்கு முன்னால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுவந்த அமைச்சர் விமல் வீரவன்ஸ இன்று தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வந்து நீர் வழங்கி உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார்.  அங்கிருந்த வைத்தியருடன் கலந்துரையாடிய பின்பு விமல் வீரவன்ச அம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

இன்று பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும்
விமல் வீரவன்சவை பார்வையிட்டார்.

ww-pr.jpg

நன்றி: படம் டெயிலி மிரர்