இலங்கை யில் மீண்டும் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்து வருகின்றது. கடந்த வாரத்தில் மட்டும் 11 பேர் டெங்கு நோயினால் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த யூன் மாதத்தில் மட்டும் நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 3,222 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டில் மட்டும் இனங்காணப்பட்ட டெங்கு நோயாளிகளின் தொகை 19,117 இற்கு மேல் எனவும், டெங்கு காய்ச்சல் நாடு முழுவதும் மீண்டும் பரவி வருவதாகவும், சில வைத்தியசாலைகளில் டெங்கு நொயாளிகளின் தொகை அதிகரித்துள்ள தாகவும் சுகாதார பிரிவுகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, யாழ்.குடாநாட்டில் தற்போது நுளம்புகளின் பெருக்கம் மோசமாக அதிகரித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.