உலகின் 6 கண்டங்களில் இருந்து 32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து – ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
கால்பந்து விளையாட ஆரம்பித்து 76 ஆண்டுகளுக்குப்பின் முதன்முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது ஸ்பெயின். 1974-ம் ஆண்டு மேற்கு ஜெர்மனியிடமும்இ 1978-ம் ஆண்டு ஆர்ஜென்டீனாவிடமும் இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து கோப்பையை தவறவிட்ட நெதர்லாந்து அணி தற்போது மூன்றாவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் உலகக் கோப்பையை வெல்லும் துடிப்போடு இறுதி ஆட்டத்தில் களமிறங்குகின்றன.