‘‘முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை படுகொலை செய்தவர்களை உடன் கண்டுபிடியுங்கள். எம்மீதுள்ள களங்கத்தை போக்குங்கள்” என – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான தி.மகேஸ்வரனை படுகொலை செய்தவர்களை கைது செய்யுமாறு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்திடம் கோரியுள்ளார். கொலையாளிகளை உடனடியாக கைது செய்து தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நீக்குமாறு அவர் கோரியுள்ளார்.
அத்துடன் அண்மையில் சாவகச்சேரியில் மாணவர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும், விரிவான விசாரணகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இக்கொலை தொடர்பாகவும் சிலர் தம்மீது குற்றம் சுமத்தி வருவுதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவங்களை முன்னிறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தம்மீதும் தமது கட்சி மீதும் பாராளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் எனவும், இவற்றிற்கும் தமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய விசாணைகளை நடத்தி தம்மீது சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை போக்குமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
மகேஸ்வரனின் மனைவியும் தற்போது ஐக்கிய தேசியக்கட்சியின் பாராயுளுமன்ற உறுப்பினராக இருப்பவருமான விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவற்றைத் தெரிவித்துள்ளார்.
சாந்தன்
இவர் அமைச்சர், இப்போதுதான் தெரிந்ததா குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என. கோவிலுக்குள் வைத்தே துவக்கும் கையுமாக ‘புலி’ பிடிபட்டதாக சொன்னார்களே? வழமைபோல பம்மாத்துதானா அதுவும்?
சம்பவம் நடந்து இவ்வளவு நாள் ஆச்சு. நியமித்த நீதிபதியையும் ரான்ஸ்ஃபர் பண்ணியாச்சு. உடனடியாக பிடிக்கட்டாம் சொல்கிறார் இவர். என்ன வன்னியில் இருந்து ஒரு ‘குற்றவாளி’ பிடித்துக்கொண்டு வருவது அவ்வளவு கடினமா என்ன? ஆனானப்பட்ட தமிழினியையே இரண்டாம் தடவை பிடித்தவர்கள் இவர்கள். அப்படியே சூளைமேட்டு கொலைக்கும் ஒருவரை பிடியுங்கள்.
நல்ல ஐடியா, இனிமேல் குற்றவாளி பிடிபட அரசு “விரைந்து” செயற்பட வேண்டும் என்றால் பேசாமல் இவரின் தலையில் பழியைப் போடுங்கள் எல்லோரும் பிடிக்கப்படுவார்கள்!
Vicky
அமரர் மகேஸ்வரன் தான் உயிருடன் இருந்தகாலத்தில் செய்தது எல்லாமே தனது சுயநலம்தான் என்பதை உலகம் அறியும். இதை சிலவேளை விஜயகலா அறியமாட்டார் போலும். மகேஸ்வரன் மண்ணெண்ணை மகேஸ்வரன் என பெயர் வரக்காரணம் வியாபாரம் அல்ல. மக்கள் மிகவும் கஸ்டப்பட்ட காலத்தில் மக்களுக்கு செய்த வியாபாரமே. அன்று மகேஸ்வரன் வியாபாரம்தான் செய்தார். மக்கள் சேவையல்ல. இது உலகம் அறியும். தனக்கு இருந்த அரசியல் யுஎன்பி தொடர்புகள் எல்லாமே தனது வியாபாரத்திற்கே பயன்படுத்தியவர் மக்களுக்காக அல்ல.
மகேஸ்வரன் செய்த உருளைக்கிழங்கு வியாபாரமும் அதில் பெற்ற லாபத்தில் கோயிலில் அன்னதானமும் வழங்கியவர். புலிகளின் காலத்தில் புலிகளுடன் உறவு கொண்டு புலிகளுடன் இணைந்து வியாபாரம் செய்து பணம் சம்பாதித்தவர் என்பதும் இதன் காரணமாக வந்த தகராற்றில் புலிகளின் பெண்கள் முகாம்களில் பெண்கள் குளிக்க துலாவில் தண்ணீர் இழுத்தவர் என்பதும் உலகுக்கு தெரியும்.
இப்படியான வேலைகளை இவர் மட்டுமல்ல யாழ்ப்பாணத்து பல வியாபாரிகள் செய்துள்ளனர். அவர்களில் பலர் மகேஸ்வரன் போன்றே புலிக்கு வாலும் அரசுக்கு தலையும் காட்டியவர்கள் ஆனால் மகேஸ்வரன் புலிகளுக்கு பல தடவைகள் சீமெந்தும் இரும்புக் கம்பியும் புலிகளக்கு தேவயான தளபாடங்களையும் இரகசியமாக யுஎன்பியின் உதவியுடன் கொண்டு சென்று கொடுத்தவர். இதில் இவர் செய்த பல தில்லுமுல்லுகள் அரசுக்கு தெரியாது என்றே மகேஸ்வரன் கோட்டை விட்டார் என்பதே முக்கியமானது
அரசும் விசேட இராணுவப்பிரிவும் உளவுப்படையும் மகேஸ்வரனை எத்தனை தடவைகள் பின்தொடர்ந்தன என்பதை விஜயகலாவுக்கும் தெரியாமல் இருக்கலாம்.
இராணுவத்தின் விசேட புலனாய்வுப்பிரிவு மகேஸ்வரனை புலிகளுக்கு உதவ வேண்டாம் என பலதடவைகள் எச்சரித்திருந்தது விஜயகலாவுக்கு தெரியாமல் இருக்கலாம்
புலிகளடன் இருந்த உறவில் ஏற்ப்பட்ட விரிசல் காரணத்தையும் இதன்காரணமாக மகேஸ்வரன் லண்டன் வந்து புலிகளை சந்தித்ததையும் விஜகலா தெரியாமல் இருக்கலாம்
லண்டனிலிருந்தே புலிகளால் ஏற்ப்படுத்தப்பட்ட தெடர்புகள் மூலம் மகேஸ்வரனின் கப்பலில் புலிகளின் விமானங்களை பகுதிபகுதியாக கொண்டு சென்றது விஜகலாவுக்கு தெரியாமல் இருக்கலாம்
இப்படியாக தனது சுயநலனுக்காகவும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காகவுமே மகேஸ்வரன் அரசியலில் இணைந்தார் என்பதை உலகம் அறியும். இப்படியாக அரசியலில் இணைந்த பலர் இன்று தமது சுய ரூபங்களை வெளிக்கொணர்வதையும் அவதானிக்க வேண்டும். இதன் ஒரு நிலையேதான் வடக்கு மாகாண தேர்தலில் தாம் நிற்க உள்தாக பல வியாபாரிகள் வரிந்து கட்டிக் கொண்டிருப்பதை விஜயகலா கவனிக்க வேண்டும்.
மகேஸ்வரன் கோவில்களுக்கு செய்த தொண்டுகள் தனது கர்மத்தை மாற்றவே என மகேஸ்வரன் கூறியுள்ளதாக பலர் கொழும்பில் பேசுவதை விஜயகலா தெரிந்து கொள்ள வேண்டும்.
கொலை செய்தபோது மகேஸ்வரன் அருகே கொல்லப்பட்ட மற்ற தமிழர் ஈபிடிபி என்று கதைவிட்டது மகேஸ்வரனின் கையாட்கள். இந்த தமிழர் சாதாரண யாழ் பிரஜை என்பதை ஏன் இன்றும் வெளிப்படையாக உணரவில்லை.
யாழ்ப்பாணத்தில் மகேஸ்வரனை தேடித்திரிந்தவர்களில் ஈடுபட்ட பல தமிழ் இளைஞர்கள் புலி இயக்கப்போராளிகள் என்பதை ஏன் விஜயகலா இன்னும் உணரவில்லை
இவ்வளவு வேலைகளை புலிகளுக்கு செய்யும்போது விஜகலாவுக்கு ஏதும் தெரியாது என்று விஜயகலா சொல்லிடலாமா!
ஏன் அன்று புலிகளுக்கு இத்தனை உதவிகளை செய்யும்போது பணத்தைவிட உயிரே பெரிது என்பதை மகேஸ்வரனுக்கு விஜயகலா எடுத்து சொல்லியிருக்கக் கூடாது
யாழ்ப்பாணத்தில் சுழிபுரத்தில் மகேஸ்வரனை சந்தித்து கதைத்த நபர்கள் யார்? இவர்களுக்கும் புலிகளுக்கும் இருந்த தொடர்பு என்ன? இவர்களின் கதைகள் பின்னர் ஏன் தொடர்பு இல்லாமல் போனது?
இவை யாவற்றையும்விட விஜயகலா மக்களின் ஆதரவினைப்பெற்று பாராளுமன்றம் வந்தபிறகுதான், அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து மகேஸ்வரனின் கொலைக்கு நியாயம் கேட்பதற்காக என்றால் மக்களை விஜயகலாவும் ஏமாற்றுகிறார் என்பதில் ஜயமில்லை.
தனது புருஷனை கொன்றவர்கள் யாரென அவவுக்கு முதலேயே தெரியுமாயின் ஏன் அப்பவே அதை வெளிக் கொணரவில்லை. மகேஸ்வரன் கொல்லப்ட்டது தவறு. இந்த கொலையை மகேஸ்வரன் தானே தேடிக்கொண்டார் என்பதையும் உணர வேண்டும் இதன் முதற்படியே புலிகளின் ஆதரவும் புலிகளுகளுக்காக பொருட்கள் எடுத்துப்போனதும் பின்னர் புலிகளுடனான ஒப்பந்தம் முறிப்புமாகும்
விஜயகலா மட்டுமல்ல யாழ்மாவட்டத்தில் மக்களால் தெரிவுசெய்ப்படடவ பல எம்பிக்களின் சுயரூபங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன எல்லாருமே தமது சுய இலாபத்திற்காகவே அரசியல் மேடை ஏறியுள்ளனர். மக்களையும் சந்தர்ப்பம் பார்த்து ஏமாற்றியுள்ளனராகும் இந்த ஏமாற்றும் பல காலம் நிலைக்காத என்பதேயாகும்.
விஜயகலா யுஎன்பியின் அரசியல் பிரச்சாரத்திற்காக மகேஸ்வரனின் கொலையை பாவிக்க வேண்டாம்
அல்லது மகேஸ்வரனின் கொலையையும் பணமாக்கும் வழிவகைகளைத்தான் விஜகலா செய்வதாயின் இது தான் முதலும் கடைசியுமாக பாராளுமன்ற வாழ்க்கை என்பதை உணருங்கள் அல்லது மீண்டும் 500 கோடி பணத்திலேதான் பாராளுமன்றம் வரலாம்.
எதற்கும் ஏழைமக்களின் வயிற்றில் அடிக்காதீர்கள் அப்பாவி தொழிலாளிகள் பணத்தில் கோடீஸ்வராக வேண்டாம்.
Anonymous
SORRY MR DEVA, YOU CANNOT BLAME ANY BODY BECAUSE BLOOD IN YOUR HAND YOU TELLS US, DONNOT TRYING SAY FIND OUT? LAUGH OR CRY PEOPLE KNEW BECAUSE MR GOT PERSONAL FILE HIS HAND, YOU PUPPET DANCE UNTIL TO PASS AWAY.
rohan
“அமரர் மகேஸ்வரன் தான் உயிருடன் இருந்தகாலத்தில் செய்தது எல்லாமே தனது சுயநலம்தான் என்பதை உலகம் அறியும்.” என்பது அவரது துர்மரணத்துக்கும் அந்தத் துர்மரணத்துக்குக் காரணமாய் இருந்தோர் தப்பி வாழ்வதற்கும் போதிய காரணங்கள் ஆகுமா?
“விஜயகலா மட்டுமல்ல யாழ்மாவட்டத்தில் மக்களால் தெரிவுசெய்ப்படடவ பல எம்பிக்களின் சுயரூபங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன எல்லாருமே தமது சுய இலாபத்திற்காகவே அரசியல் மேடை ஏறியுள்ளனர்.” என்பது ஒரு வேடிக்கையான அவதானம்! என்ன சுயரூபங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன? அரசியலில் சுய இலாபம் அல்லாது மக்களின் நன்மைக்காக மேடை ஏறிய இருவர் பெயர் சொல்ல முடியுமா?
kandiah
விஜயகலாவுக்கு யார் சுட்டது என தெரிகிறது. இவர்கள் தப்பி வாழ்கிறார்களாம் எண்டு சொல்வதைப் பார்த்தால் அது ரோகனுக்கும் தெரிகிறது. ஆனால் இதை ஏன் அவரை வெளியே கொண்டுவந்து மகேஸ்வரன் வழக்கில் சம்பந்தப்படுத்தலாமே. ஏன் ஒளிப்பான்? இத்தனை வருஷமாய் அதை வெளிக்கொணர தயங்கினால் நீங்கள் இதை வைத்து புளி வியாபாரம்தான் செய்யிறீயள் வேறென்ன?
rohan
“விஜயகலாவுக்கு யார் சுட்டது என தெரிகிறது. இவர்கள் தப்பி வாழ்கிறார்களாம் எண்டு சொல்வதைப் பார்த்தால் அது ரோகனுக்கும் தெரிகிறது.”/கந்தையா.
வசந்தன் என்று ஒருவர் சுட்டதாகவும் அவர் கையோடு பிடிக்கப்பட்டதாகவும் செய்தி வந்தது. அவர் புலி என்றும் சொன்னார்கள். அவரை உரிய முறையில் நீதிமன்றம் கொண்டு போய் யார் திட்டமிட்டார்கள் – யார் உத்தரவு கொடுத்தார்கள் – என்ற தகவல்களை வெளிக் கொண்டு வந்திருக்கலாம். ஏன் செய்யவில்லை? அவரை ஏன் வெளியே கொண்டு வர வேண்டும்?
என்னைப் பொறுத்த வரை சுட்டவர் தப்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார். இல்லை என்று சொல்வீர்களா?
“இத்தனை வருஷமாய் அதை வெளிக்கொணர தயங்கினால் நீங்கள் இதை வைத்து புளி வியாபாரம்தான் செய்யிறீயள் வேறென்ன?” என்று சொல்கிறீர்கள்.
இத்தனை வருஷமாய் ‘புலி வியாபாரம்’ செய்யும் தோழரிடம் போய், “ஏன் ஐயா இத்தனை வருஷமாய் அவரது நண்பர் மகேஸ்வரனைக் கொன்றவனைக் கண்டு பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை” என்று நீங்கள் கேட்டிருக்கலாமே?
BC
இலங்கை பாராளுமன்றத்தில் ஒரு மனைவியின் அறச்சீற்றம்..! என்று ஒரு தமிழ்நாட்டு கட்டுரை பார்த்தேன். மகேஸ்வரனின் மனைவி தானாம் அந்த அறச்சீற்றம் செய்தவர். கட்டுரை எழுதியவர் தமிழ்நாட்டு பெண் அரசியல்வாதிகளுக்கு புத்திமதியும் கூறுகிறார். பெரும் அதிகார வர்க்கத்தை அசைத்துப் பார்க்கும் வெறியும், வேட்கையும் கொண்ட ஒரு பெண்மணியும் அந்தத் தேசத்தில்(இலங்கை) இருக்கிறார் என்பதைக் காட்டும் இந்தச் செய்தி தமிழகத்தைச் சேர்ந்த பெண் அரசியல்வாதிகளுக்கு கொஞ்சமாவது சூடு சொரணையை உருவாக்கட்டும் என்று. நக்கீரன், விகடன் போன்றவை எங்களை வைத்து செய்த கொமடிகளை இப்போ பதிவு எழுதுபவர்களும் செய்ய தொடங்கிவிட்டார்கள்.
பார்த்திபன்
//இலங்கை பாராளுமன்றத்தில் ஒரு மனைவியின் அறச்சீற்றம்..! என்று ஒரு தமிழ்நாட்டு கட்டுரை பார்த்தேன்.- BC //
நல்லவேளை “நவீன கண்ணகி” என்று தலைப்புக் கொடுக்காதவரை தப்பித்தோம். சமீபகாலமாக நக்கீரன், குமுதம், விகடன் போன்றவை பிழைப்பிறகாக அளந்துவிடும் கட்டுக்கதைகள் ஏராளம். அதிலும் ஒரே நபர் பல பெயர்களில் அவிழ்த்துவிடும் கதைகள் விகடனில் ஏராளம்.
chandran.raja
விஜகலா பாராளுமன்ற உறுப்பினரா? தனது தொகுதியில் இருந்து மக்களால் தெரிவுய்யப் பட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டவரா? அல்லது தனது கணவனின் கொலைக்கு நியாயம் கேட்க கோடிகள் செலவழித்து படியேறி பாராளுமன்றம் வந்தவரா? பணத்தை செலவழித்தால் யாரும் பாராளுமன்ற உறுப்பினராக இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் வரமுடியுமென்பது துர்பாக்கிய நிலையே!
வெற்றிலை மதுவகை உருளைக்கிழங்கு மண்னென்ணை தொடர்ந்து நான்கு கப்பல் வைத்து வியாபாரம் செய்யுமளவுக்கு ஒரு சிவனடியார் பல ஆயிரம் கோடி ரூபாவுக்கு சொந்தக்காராக வரமுடிந்தது என்றால் அது ஐக்கியதேசியக் கட்சியுடனும் புலிகளோடு வைத்திருந்த கள்ளஉறவினாலுமே ஏற்பட்டது. புலிகளுடன் உறவைத்தவர்கள் புதைசேற்றில் கால்வைத்தவர்களே. அவர்கள் மீண்டுவருவதில்லை. இதை விஜயகலா புரிந்து கொள்ளவேண்டும்.
கணவனின் கொலைக்கு நியாயம் கேட்கத் புறப்பட்ட இந்த கண்ணகி உடனடியாக வன்னிக்கு சென்றல்லவா, சிலம்பை கழற்றி எறிந்திருக்க வேண்டும். எந்த நியாத்தைதையும் யாருடனும் கேட்கமுடியாத ஆயிரம்மாயிரம் விதைவைகள் நாளைப் பொழுதை ஏக்கத்துடன் கழித்துகொண்டு இருக்கிறார்களே! அவர்கள் விதியையும் ஒருமுறை எண்ணிப்பாருங்கள். அவர்களுக்கு ஏதாவது செய்ய முற்படுங்கள். அது உங்களுக்கும் நிம்மதி அளிக்கக்கூடியது. நியாயம் கேட்க தவறான கதவுகளைப் போய் தட்டாதீர்கள். இதுமக்களை தவறான குழப்பதிற்கு வழிகோலுவதும்மல்லாமல்
உங்ககளுக்குரிய பதவிக்கும் இழுக்கைத் தேடித்தரும்.