2009

2009

நாடாளுமன்ற உறுப்பினர் நிலையில் இருந்து விலகுவதாக பசில் அறிவிப்பு

தாம் நாடாளுமன்ற உறுப்பினர் நிலையை விட்டு விலகப்போவதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், சகோரதருமான பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார் மாத்தளையில்  இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர்களிடம் இதனை அவர் தெரிவித்துள்ளார்
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நிலையில் அதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதற்காகவே தாம் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 20 ஆம் திகதியன்று தாம் தமது பதவியை துறக்கப்போவதாக தெரிவித்த அவர், அதற்கு முன்னர்,நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

180 நாள் வேலைத்திட்டம்; 60 மில்லியன் ரூபா செலவு; – பரந்தன், பூநகரி, வற்றாப்பளை உட்பட பல பிரதேசங்களுக்கு இன்று மின்சாரம்

பரந்தன், பூநகரி வற்றாப்பளை உட்பட பல பிரதேசங்களுக்கு இன்று (16) மின்சார வசதி அளிக்கப்பட உள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்தது. இந்தத்திட்டத்திற்காக 60 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

30 வருட மோதல் காரணமாக வட பகுதியிலுள்ள பல கிராமங்கள் மின்சார வசதியின்றி காணப்பட்டதோடு, உப மின்நிலையங்கள், மின்சார கோபுரங்கள் என்பன சேதமடைந்திருந்தன. வடக்கு வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வடக்கில் மின்சார வசதியற்ற சகல கிரா மங்களுக்கும் மின்சார வசதியளிக்க மின் சக்தி எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

பரந்தன் நகரின், பூநகரில் நகரம், மன்னாரின் நொச்சிக்குளம் பிரதேசம், முல்லைத் தீவின் வற்றாப்பளை பகுதி மற்றும் வவுனியாவில் உள்ள இரு கிராமங்கள் என்பவற்றுக்கு இன்று (16) மின்சார வசதி அளிக்கப்படவுள்ளதாக வடக்கு வசந்தம் மின்சாரத் திட்டப் பணிப்பாளர் கிரேசன் முதுகுடாராய்ச்சி கூறினார்.

ஏற்கெனவே கிளிநொச்சி நகரம், முல்லைத்தீவு நகரம், ஒட்டு சுட்டான் மற்றும் நெடுங்கேணி ஆகிய நகரங்களுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வடக்கிலுள்ள சகல கிராமங்களுக்கும் மின்சார வசதி அளிப்பதற்காக 3 வருட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு 11 ஆயிரம் மில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளது.

வடக்கிலுள்ள கிராமங்களுக்கு மின்சார வசதி வழங்கும் வைபவத்தில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன, வடக்கின் ஜனாதிபதி செயலணிக் குழு தலைவர் பெசில் ராஜபக்ஷ மின்சார சபை உயரதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

வவுனியாவில் புதிய சிறைச்சாலை

091009puttirasigamani.jpgவவுனியா நீதிமன்ற வளாகத்துடன் இணைந்த பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை கட்டிடத்தை பிரதி நீதியமைச்சர் வி.புத்திரசிகாமணி செவ்வாய்க்கிழமை வைபவரீதியாகத் திறந்து வைத்தார். வவுனியாவில் ஏற்கனவே அமைந்திருந்த விளக்கமறியல் சிறை அமைந்திருந்த இடத்தில் 9 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மாடிக்கட்டிடச் சிறையில் 300 பேரை தடுத்து வைக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் அனுராதபுரம் மற்றும் தென்பகுதி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டபோது அவர்களது உறவினர்கள் அங்கு சென்று அவர்களைப் பார்ப்பதில் அனுபவித்து வந்த பல சிரமங்கள் இந்த சிறைச்சாலை அமைக்கப்பட்டதன் மூலம் நீக்கப்படுவதாக இங்கு உரையாற்றிய பலரும் தெரிவித்தனர்.

சுமார் 50 பெண் கைதிகளைத் தடுத்து வைக்கக் கூடிய வசதியும் இந்த சிறைச்சாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பேராதனை பகிடிவதை – 13 மாணவருக்கு 27 வரை விளக்க மறியல்: பல்கலை விரிவுரைகள் பாதிப்பு

பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட புதிய மாணவன் ஒருவன் பகிடிவதைக்குட் படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேக நபர்களான 13 மாணவர்களையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவன் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார். இந்த நிலையையடுத்து புதிய மாணவர்களுக்கு விரிவுரைகளை நடத்துவது கூட பல சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மெனிக்பாம் வடிகால் திட்டத்துக்கு ஐ.நா. உதவி!

mahinda-samarasinha.jpgவவுனியா மெனிக்பாமில் மழை காலத்தில் அசௌகரியங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் உரிய வடிகால் திட்டங்களை நடைமுறைப்படு;த்த ஐ.நா. அபிவிருத்தித் திட்டப் பிரிவிடமிருந்து நிதி உதவியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதற்கான பிரேரணையை அனர்த்த முகாமைத்துவை மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க முன்வைத்திருந்தர்.

இத்திட்டத்துக்கு 52.9 மில்லியன் ரூபாவை வழங்க ஐ.நா. அபிவிருத்தித் திட்டப் பிரிவு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்தி மெனிக்பாம் 1, 3, மற்று 4 ஆகிய பிரிவுகளில் மழை நீர் வடிந்தோடக்கூடிய கால்வாய்கள் மற்றும் மதகுகள் அமைக்கப்படவுள்ளன.

கத்தோலிக்க ஆயர் பேரவை ஜனாதிபதிக்கு பாராட்டு

இன, மதங்களுக்கிடையிலான நட்புறவை அடித்தளமாகக் கொண்டு நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தமது பாராட்டையும், ஆசீர்வாதத்தையும் வழங்கியுள்ளது.

கத்தோலிக்க ஆயர் பேரவையின் அங்கத்தவர்கள் பேராயர் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் ஆண் டகையின் தலைமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இச்சந்திப்பு நேற்று முன்தினம் அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.

முதல் காலாண்டுக்கான இடைக்காலக் கணக்கு அறிக்கை

290909mahinda.jpgஅடுத்த வருட முதல் காலாண்டுக்கான இடைக்காலக் கணக்கு அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்தர ராஜபக்ஷ முன்வைத்ததிருந்தார். இதன்படி,  மீண்டுவரும் செலவினம் 197,478,109,000 ரூபாவாகும் மூலதனச் செலவு 158,987,398,000 ரூபாவாகும்.

ஏ(எச்1என்1): இன்புளுவென்ஸா வைரஸ் பாடசாலைகளில் பரவும் அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

புதிய இன்புளுவென்ஸா ஏ(எச்1என்1) வைரஸ் நோய் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பதாகச் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் நோய் பரவுகைத் தடுப்பு பிரிவு நேற்று முன்னெச்சரிக்கை விடுத்தது.

கொழும்பிலுள்ள சர்வதேச பாடசாலை மாணவரொருவர் இந்நோய்க்கு உள்ளாகி இருப்பது உறுதியாகியுள்ளதை அடுத்தே இந்த அச்சுறுத்தல் தலைதூக்கி இருப்பதாகவும் நோய் பரவுகைத் தடுப்பு பிரிவு குறிப்பிட்டிருக்கின்றது.

புதிய இன்புளுவென்ஸா ஏ(எச்1என்1) நோய் இவ்வருடம் ஜூன் மாதம் இங்கு பதிவாகிய போதிலும் உள்நாட்டு பாடசாலை மாணவரொருவர் இந் நோய்க்கு உள்ளாகி இருப்பது முதற் தடவையாக உறுதிப்படுத்தப்பட்டி ருக்கின்றது.

ஊழியர் சேமலாப நிதிக்கு 29 மாடி அலுவலக கட்டிடம்!

151009athaudasenevirathna.jpgஊழியர் களுக்கு சேமலாப நிதி வழங்குவதற்காக சுரகும் பியஸ  என்ற பெயரில் 29 மாடிகளைக் கொண்ட பாரிய கட்டிடம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதற்கான பிரேரணையை தெழிலாளர் மற்றும் மனிதவள அமைச்சர் அதாவுத செனவிரட்ன முன்வைத்திருந்தார்.

இதன்படி தொழில் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியில் இந்தப் பாரிய கட்டிடம் அமைக்கப்படும். ஊழியர் சேமலாப நிதியுடன் தொடர்புள்ள அனைத்து நிறுவனங்களும் இக்கட்டடத்தில் இயங்கும். இதன்மூலம் பொது மக்களின் சிரமும் வீண் தாமதங்களும் குறைய வழியேற்படும்.

இத்திட்டத்துக்கு மொத்தம் 7.585 பில்லியன் ரூபா செலவிடப்படும்.

மின்துண்டிப்பு விசாரணை மூவரடங்கிய குழு நியமனம்

கடந்த வாரம் நாடுபூராவும் ஏற்பட்ட மின்துண்டிப்பு தொடர்பாக விசாரணை நடத்தும் பொறுப்பு மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

இதன் படி மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதோடு இந்தக் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.