தாம் நாடாளுமன்ற உறுப்பினர் நிலையை விட்டு விலகப்போவதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், சகோரதருமான பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார் மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர்களிடம் இதனை அவர் தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நிலையில் அதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதற்காகவே தாம் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 20 ஆம் திகதியன்று தாம் தமது பதவியை துறக்கப்போவதாக தெரிவித்த அவர், அதற்கு முன்னர்,நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.