18

18

உண்ணாவிரதத்தை முடித்தார் திருமா

thirumma.jpgஇலங்கையில் உடனே போரை நிறுத்தி அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், சென்னையை அடுத்த மறை மலைநகரில் கடந்த 15-ந் தேதி  உண்ணாவிரதம் தொடங்கினார்.  இன்று நான்காவது நாட்களாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

அவரது உடல் நலன் கருதி, தமிழக முதல்வர் கருணாநிதி,  பாமக நிறுவனர் ராமதாஸ்,  ஆற்காடு வீராசாமி,  தா.பாண்டியன்.  என்.வரதராஜன் உட்பட பல்வேறு அரசியல்  தலைவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்தினர். இன்று திருமாவளவனின் தாயார் பெரியம்மாவும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் இன்றூ மாலை  பாமக நிறுவனர் ராமதாஸ், ஈழ போராட்டத்திற்கு உண்ணாவிரதம் சரியல்ல. வேறு வகையில்  போராடுவோம் என்று சமாதானப்படுத்தி பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்துள்ளார்.

காஸாவில் இஸ்ரேல் போர் நிறுத்தம்

gaza_war02.jpg
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் கடந்த 22 நாட்களாக நடத்தி வந்த படுகொலைத் தாக்குதலை நிறுத்திக் கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய பயங்கர ஏவுகணை, விமானப் படை, டாங்கிப் படை தாக்குதலில் 1,200க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். காஸா பகுதியின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் நொறுக்கப்பட்டுவிட்டன. மின்சாரம், குடிநீர் சப்ளை கட்டமைப்பையும் இஸ்ரேல் தகர்த்துவிட்டது. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பாலங்கள், சாலைகள் ஆகியவற்றையும் இஸ்ரேல் சிதறடித்துள்ளது.

காஸாவில் தாக்குதலை நிறுத்துமாறு உலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தினாலும் அதை அந்த நாடு காதில் போட்டுக் கொள்ளவில்லை. இஸ்ரேலை நெருக்குவது போல அமெரிக்கா வழக்கம் போல நடித்தாலும் தாக்குதலை நிறுத்த உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் போதி அளவுக்கு காஸாவை உருக்குலைத்துவிட்டதையடுத்து போர் நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் பிரதமர் எகுட் ஓல்மார்ட் இன்று அறிவித்தார். அதே நேரத்தில் படைகள் தொடர்ந்து காஸா பகுதியில் நிலை கொண்டிருக்கும் என்றார்.

காஸாவில் இயங்கி வரும் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுவிட்டதால் தற்போது இந்தப் போரை நிறுத்திக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். ஆனால், இஸ்ரேல் மீதான தங்களது தாக்குதல் தொடரும் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது.

4வது நாளாக உண்ணாவிரதம்: திருமா மயக்கம்

thirumma.jpgஇலங்கையில் போரை நிறுத்தக் கோரி 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு இன்று மயக்கம் ஏற்பட்டது. கடந்த 15ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய அவர் வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி வருகிறார்.

இன்று காலை அவர் மிகவும் சோர்வுடன் மயங்கிய நிலையில் காணப்பட்டார். பேண்ட், சட்டை உடையிலிருந்து லுங்கிக்கு மாறியிருந்த அவர் நாற்காலியில் துவண்டு போய் காணப்படுகிறார். அவரது உடலை டாக்டர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்து வருகின்றனர். ரத்த அழுத்தம் குறைவாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து போய்விட்டதால் அவருக்கு மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டு வருகிறது. வெறும் தண்ணீர் மட்டுமே அருந்துவதால் வயிற்று புரட்டலும் ஏற்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவி்த்தனர். திருமாவளவனின் தாயார் பெரியம்மா கூறுகையில்,

திருமா உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இனிமேல் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். அதை அவன் உடனே கைவிட வேண்டும். இங்கு கூடியிருக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து திருமாவை உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று கண் கலங்கினார்.

ஏ-9 வீதி புனரமைப்புப் பணி இம்மாத இறுதியில் ஆரம்பம் – இரு மாதங்களில் பஸ் போக்குவரத்து

bus-17o1.jpgஏ-9 வீதி புனரமைப்புப் பணிகளை இம்மாதம் இறுதியில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க தெரிவித்தார். கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ஏ-9 வீதியினூடாக போக்குவரத்து நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஏ-9 வீதியில் புதைக்கப்பட்டுள்ள மிதிவெடிகளை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் புனரமைப்புப் பணிகளை உடன் ஆரம்பிக்க உள்ளதாகவும் கூறினார்.

வுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான 130 கிலோமீட்டர் தூரமான வீதி செப்பனிடப்படவுள்ளதாக வும் இது குறித்து பொறியியலாளர்கள் அடங்கலான குழு நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். வீதியை புனரமைப்பதற்கான செலவு குறித்து மதிப்பீடு செய்து வருவதாகவும் இதுவரை 8 கம்பனிகள் வீதியை செப்பனிடும் பணிகளை முன்னெடுக்க முன்வந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். வீதி செப்பனிடும் பணிகளை துரிதப்படுத்துவதற்காக 20-30 கிலோ மீட்டர் வரையான பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் வழங்க உத்தேசித்துள்ளதா கவும் அவர் தெரிவித்தார். ஏ-9 வீதியை செப்பனிடும் பணிகளை துரிதமாக பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதா கவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை இன்னும் 2 மாதங்களில் ஏ-9 வீதியில் பஸ் போக்குவரத்துகளை ஆரம்பிக்க உள்ளதாக போக்கு வரத்து அமைச்சர் டளஸ் அலஹப்பெரும கூறினார். வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வரும் மக்களை அழை த்து வருவதற்காக இ.போ.ச பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டு ள்ளதாகவும் அவை ஏ-9 வீதியினூடாக மக்களை அழை த்து வருவதாகவும் அமைச்சர் கூறினார். இதற்கென 6 பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதேவேளை மன்னாரில் இருந்து பூநகரி ஊடாக யாழ்ப்பாணத்துக்கான ஏ-32 வீதியை செப்பனிடும் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஈழத்தமிழர்கள் பிச்சைக்காரர்களா? எம்.பி. சிவாஜிலிங்கம்

Sivajilingam M K_TNA MPஇலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்து வரும் திருமாவளவன் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்யும் இந்திய அரசு மீதும் ஆவேசப்பட்டுள்ளார்.

’’திருமாவளவனின் உடல்நிலை கருதி அவர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். திருமாவளவனின் நலம் ஈழத்தமிழர்களுக்கு முக்கியம். அவர்கள் அவர் மீது அவ்வளவு மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் தமிழ் ஈழத்தில் இருந்து தலைவர்கள் வருவார்கள். அவர்களும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்துவார்கள். திருமாவளவன் அவர்களது அந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்.

ஈழப்பிரச்சனையைப் பொறுத்தவரையில் மத்திய, மாநில அரசைப்பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அப்படி பேசினால் கொடூரமான பேச்சாக இருக்கும். அதனால் நான் பேச விரும்பவில்லை. ஆனாலும் ஒன்றை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கை வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் சிவசங்கர் மேனன் பேசுகையில் இலங்கைத் தமிழர்களுக்காக இந்திய அரசு ஒரு கோடியே எழுபது லட்சம் நிவாரண நிதி வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஈழமக்கள் நிவாரணத்தை மட்டுமே எதிர்பார்த்து நிற்கும் பிச்சைக்காரர்களா என்ன. சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்காக முதல்வர் கருணாநிதி தன் பணத்தில் ஒரு கோடி கொடுக்கிறார். அப்படியிருக்க ஒரு இந்திய அரசு வெறூம் ஒரு கோடி எழுபது லட்சம் கொடுப்பதாக சொல்லியிருப்பதை என்னவென்று சொல்வது’’.

சிவசங்கர மேனன் இந்தியா திரும்பினார்.

18-01menon.jpgஇலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்துப் பேசிய இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் இன்று காலை சென்னை வழியாக நாடு திரும்பியுள்ளார். ஆனால் பேச்சுவார்த்தையின் விவரங்களை அவர் வெளியிட மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் போர் நிறுத்தம் குறித்து ஏதும் பேசியதாக தகவல் இல்லை. அடுத்த மாதம் கொழும்பில் நடக்கவுள்ள சார்க் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு இரு நாட்டு உறவுகள் என வழக்கமான பேச்சுவார்த்தைகளே நடந்ததாகத் தெரிகிறது. இரு தரப்பு பொருளாதார உறவுகள் இலங்கையின் இப்போதைய அரசியல் நிலைமை ஆகியவை குறித்தே பேசப்பட்டதாக இலங்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

90 நிமிட நேரம் நீடித்த இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி  செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே மிக ஆழமான, நெருக்கமான மற்றும் நல்லுறவு நீடித்து வருவதாக சிவசங்கர் மேனன் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாதத்தை உறுதியோடும், ராணுவ ரீதியாகவும் எதிர்கொண்டு வரும் அதே வேளையில் தமிழர் இன பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண இலங்கை அரசு உறுதி பூண்டிருப்பதாகவும், வட பகுதிகளில் இருந்து வெளியேறும் தமிழ் அகதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வசதிகள்  குறித்து மேனனிடம் ஜனாதிபதி  விளக்கியதாகவும் அதி்ல் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை மேனன் சந்தித்தபோது இலங்கைக்கான இந்தியத் தூதர் அலோக் பிரசாதும் உடனிருந்தார். ராஜபக்சே கண்டியில் இருந்ததால் அவரை மேனன் ராணுவ ஹெலிகாப்டரில் கண்டிக்கு சென்று சந்தித்துள்ளார். இந் நிலையில் தனது இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி செல்லும் வழியில் இன்று காலை சென்னை விமான நிலையம்  சிவசங்கர மேனன் வந்தார். அவரை சந்திப்பதற்காக பத்திரிகையாளர்கள் நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் அவர் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் டெல்லி சென்று விட்டார்.

அவரது வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதே நேரம் மேனன் நடத்திய பேச்சு குறித்து இந்தியாவின் சார்பிலும் அறிக்கை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஜனாதிபதி – மேனன் நேற்று சந்திப்பு

manan-mahi.jpgபுலி களின் பிடியிலிருந்து தப்பி வரும் மக்களுக்கு அரசாங்கம் வழங்கிவரும் பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறித்தும் வடக்கை முழுமையாக மீட்டெடுத்த பின்னர் அப் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனனுக்கு விளக்கிக் கூறியுள்ளார்.

இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து சந்தித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த மேனனை ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத் மற்றும் வெளியுறவு அமைச்சின் மேலதிக செயலாளர் பிரசாத் காரியவசம் ஆகியோர் வரவேற்றனர்.

ஜனாதிபதிக்கும் இந்திய வெளியுறவுச் செயலாளருக்கு மிடையிலான சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் இடம் பெற்றதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்தே இங்கு முக்கியமாக ஆராயப்பட்டது. அதே போல இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளருக்கு ஜனாதிபதி விளக்கியதாக ஜனாதிபதி செயலகம் கூறியது.

புலிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்டெடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கை குறித்தும் அதன் பின்னர் வட பகுதியில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இரு தரப்பினரும் விரிவாக பேச்சு நடத்தியதாக ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டது.

பயங்கரவாத நடவடிகைகளில் ஈடுபட்டு வருபவர்களை ஜனநாயக வழிக்குக் கொண்டு வருவது குறித்து இரு வரும் ஆராய்ந்துள்ளதோடு, வட பகுதி மக்களின் வாழ் க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்க உத் தேசிக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன ஆகியோரும் கலந்துகொண்டனர். இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு இந்திய வெளியுறவுச் செயலாளர் நேற்று மாலை இந்தியா திரும்பினார்.

‌வீர மரண‌ம் அடை‌யத் தயா‌ர்: தா.பா‌ண்டிய‌ன் ஆவேச‌ம்

phandiyan.jpgநா‌ம் சாக‌ப் ‌பிற‌ந்தவ‌ர்க‌ள் அ‌ல்ல, த‌மிழனை கொ‌ல்பவ‌ர்களை சாகடி‌‌க்க ‌பிற‌ந்தவ‌ர்க‌ள் எ‌ன்று கூ‌றிய இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்ச‌ி‌‌யி‌ன் மா‌நில செயலர் தா.பா‌ண்டிய‌ன், ஒ‌வ்வொரு த‌மிழனு‌ம் ‌வீர மரண‌ம் அடைவத‌ற்கு த‌ன்னை தயா‌ர்படு‌த்‌தி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்த ம‌த்‌‌திய அரசை வ‌லியுறு‌த்த‌ி உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்து வரு‌ம் ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் தொ‌ல். திருமாவளவனை வா‌‌‌ழ்‌த்‌தி பே‌சிய இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்ச‌ி‌‌யி‌ன் மா‌நில செயலர் தா.பா‌ண்டிய‌ன், இல‌ங்கை‌யி‌ல் நட‌க்கு‌ம் போரை உடனடியாக தடு‌த்து ‌நிறு‌த்த‌த்தா‌ன் ம‌த்‌‌திய அரசை வ‌லியுறு‌த்த‌ினோ‌ம்.

‌சி‌ங்களவ‌ர்க‌ள் ‌மீது கு‌ண்டுபோட‌ச் சொ‌ல்ல‌வி‌ல்லை. ‌ச‌ந்‌திரனு‌க்கு இ‌ந்‌தியா ச‌ந்‌திராயனை அனு‌ப்‌பியது. அதை‌ப் போல இல‌ங்கையை நோ‌க்‌கி ஏவுகணையை ‌இ‌ந்‌தியா ‌வீச‌த் தேவை‌யி‌ல்லை. இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களை தொட‌ர்‌ந்து கொ‌‌ன்று ‌கு‌வி‌த்தா‌ல் ஏவுகணை ‌வீசுவோ‌ம் எ‌ன்று இ‌ந்‌தியா பூ‌ச்சா‌ண்டி கா‌ட்டினாலே போது‌ம், அ‌ங்கு‌ள்ள ‌சி‌‌ங்களவ‌ன் இ‌ந்தளவு‌க்கு ஆ‌ட்ட‌ம் கா‌ட்டுவானா?

இ‌ப்போது இல‌ங்கை‌யி‌ல் த‌ர்மயு‌த்த‌ம் ந‌ட‌ந்து கொ‌ண்டிரு‌‌க்‌கிறது. ‌திருமாவளவனை நா‌ன் கே‌ட்டு‌க் கொ‌ள்வதெ‌ல்லா‌ம் உ‌ங்க‌ள் உட‌ல் நல‌ம் கரு‌தி ‌நீ‌ங்க‌ள் இ‌ந்த உ‌ண்ணா‌விரத‌த்தை உடனடியாக கை‌விட வே‌ண்டு‌ம். இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்துமாறு நா‌ம் இ‌ங்கே அற‌ப்போரா‌ட்ட‌த்தை நட‌த்‌தி‌க் கொ‌ண்டி‌‌க்‌கிறோ‌ம்.

ம‌த்‌‌திய அரசை ந‌ம்‌பி ‌திருமாவளவ‌ன் இ‌த்தகையை மாபெரு‌ம் போரா‌ட்ட‌‌த்‌‌தி‌ல் ஈடுபட வே‌ண்டா‌‌ம் எ‌ன்று‌ம் கே‌ட்டு‌க் கொ‌ள்‌கிறே‌ன். நா‌ம் சாக‌ப் ‌பிற‌ந்தவ‌ர்க‌ள் அ‌ல்ல, த‌மிழனை கொ‌ல்பவ‌ர்களை சாகடி‌‌க்க ‌பிற‌ந்தவ‌ர்க‌ள். நா‌ன் இதை மேடை அல‌ங்கார‌த்‌தி‌ற்காக சொ‌ல்ல‌வி‌ல்லை.

ஒ‌வ்வொரு த‌மிழனு‌ம் ‌வீர மரண‌ம் அடைவத‌ற்கு த‌ன்னை தயா‌ர்படு‌த்‌தி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ள்‌கிறே‌ன். அ‌ப்போதுதா‌ன் த‌மிழனை‌க் கா‌க்கு‌ம் போரா‌ட்ட‌த்‌திற‌்கு ஒரு ‌தீ‌ர்வாக இரு‌க்கு‌ம் எ‌ன்பதை சு‌ட்டி‌க் கா‌ட்ட ‌விரு‌ம்பு‌‌கிறே‌ன் எ‌ன்று தா.பா‌ண்டிய‌ன் பே‌சினா‌ர்.
 

வடக்கு, கிழக்கு பிரிப்பால் தமிழர்கள் முஸ்லிம்களுக்கு திருப்தியில்லை – மேனனிடம் ஹக்கீம்

rauf_hakeem.jpgவடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டமை தமிழ், முஸ்லிம் மக்களுக்கு திருப்திகரமான தீர்வாக அமையவில்லையென்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் மட்டுமே கிழக்கில் அரசியல் செய்ய முடியுமென்ற சூழலே அங்கு நிலவுவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீம் எம்.பி., இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனிடம் சுட்டிக்காட்டியிருக்கிறார். கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் வெள்ளிக்கிழமை சிவ்சங்கர் மேனனை சந்தித்துப் பேசிய போதே இந்த விடயங்கள் பற்றி அவரிடம் எடுத்துரைத்ததாக ரவூப் ஹக்கீம் கூறினார். இந்தச் சந்திப்பின் போது இந்திய வெளியுறவுத் துறை செயலாளரிடம் எடுத்துரைத்த விடயங்கள் பற்றிக் கருத்து வெளியிட்ட ஹக்கீம் எம்.பி;

வடக்கு, கிழக்கில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. கிழக்கு மீட்கப்பட்டும் கூட அங்கு மக்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை. அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே அங்கு ஓரளவேனும் அரசியல் செய்ய முடியுமென்ற சூழல் நிலவுகிறது. நாட்டின் இனப்பிரச்சினை பாரதூரமான நிலைமைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ், முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக தங்களது தலைமைகளை தெரிந்தெடுப்பதற்கான புறச்சூழல் உருவாக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தை புறந்தள்ளி அரச பயங்கரவாதத்தின் மூலம் அடக்கியாளும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறுபான்மையின மக்கள் மத்தியில் யுத்தத்தை மாத்திரம் தீர்வாக அனுமதிக்க முடியாது.

பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தம் முன்னெடுக்கப்படும் அதேநேரம், அதற்கு சமாந்தரமாக அரசியல் தீர்வும் முன்வைக்கப்படுமென அரசாங்கம் கூறியது. எனினும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு அதனது 100 கூட்டங்களையும் கடந்து விட்ட போதிலும் இதுவரை இறுதித் தீர்வு யோசனை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. தற்போது அதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுக்க ஏதுவாக சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவை பயன்படுத்திவந்தது. எனினும் அதில் தற்போது 95 சதவீத இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருக்கின்றன. முக்கிய கட்சிகள் அதில் அங்கம் பெறாத போதிலும் அரசாங்கமும் சர்வதேச சமூகமும் அரசியல் தீர்வு பற்றிக் கூறிவந்த விடயங்களில் நம்பிக்கை கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதில் தொடர்ச்சியாக பங்குபற்றி வந்தது. எனினும் அந்த நம்பிக்கையை நாம் தற்போது இழந்துள்ளோம்.

எனவே, அரசியல் தீர்விற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியமாகி நிற்கிறது. அரசாங்கம் பெற்ற யுத்த வெற்றிகளை தக்க வைத்துக் கொள்ள அரசியல் தீர்வு அவசியம். பிரிந்த வடக்கு, கிழக்கு முஸ்லிம்களுக்கு திருப்திகரமான தீர்வாக அமையவில்லை. பிரிந்த கிழக்கில் முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். எனவே, வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களுக்கு போதிய அதிகாரங்களுடைய தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும். இந்த விடயங்களே சந்திப்பின் போது சிவ்சங்கர் மேனனிடம் சுட்டிக்காட்டப்பட்டன என்று கூறினார்.

www.cityzens.lk குடியிருப்பாளர் விபரங்களை இணையத்தில் பதிவது எப்படி?

srilanka.jpgபாது காப்பு அமைச்சின் கீழ் www.cityzens.lk என்ற இணையத்தளத்தில் தரவுகளை பதியும்போது பிரதான குடியிருப்பாளரின் விபரங்களைத் தொடர்ந்து குடும்ப அங்கத்தவர்களின் விபரங்களையும் பதிய வேண்டும். நாட்டிலுள்ள சகல பிரஜைகளும் இதில் பதிவு செய்ய வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

மேற்படி இணையத்தளத்தை தரவிறக்கம் செய்த பின்னர் பொலிஸ் பிரிவு, வீட்டு இலக்கம், வீதி, நகரம், பிரதான நகரம், வீட்டின் மாதிரி, குடியிருப்போர் எண்ணிக்கை, பிரதான குடியிருப்பாளரா? அப்படியாயின் பெயர், ஆணா? பெண்ணா?, பிறந்த திகதி, தொலைபேசி இக்கங்கள், ஈமெயில் போன்ற விபரங்களுடன் தேசிய அடையாள அட்டை, கடவுச் சீட்டு, சாரதி அனு மதிப்பத்திர இலக்கங்கள் என்பனவற்றையும் பதிவு செய்ய வேண்டும்.

வாடகைக்கு குடியிருப் பவர் எனில் முதலாவது பகுதியில் வீட்டின் உரிமை யாளரும், இரண்டாவது பகு தியில் வீட்டில் குடியிருப் பவரும் தரவுகளை பதிவு செய்ய வேண்டும். வீட்டின் உரிமையாளரின் அல்லது பிரதான குடியிருப்பாளரின் தரவுகளை பதிவு செய்து submit செய்தவுடன் அடுத்து வரும் பகுதிகளில் மனைவி குழந்தைகளின் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஒவ்வொரு பகுதியாக பதிவு செய்ய வேண்டும்.

தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பதிவு செய்யும்போது 9 இலக்கங்களும், அதனுடன்கூடிய v அல்லது x  என்ற ஆங்கில எழுத்தும் இடைவெளியில்லாமல் இருக்க வேண்டும்.

அனைவரது தரவுகளையும் பதிவு செய்த பின்னர் இறுதியில் குடும்பத் தலைவன் உட்பட அனைவரது தரவுகளும் வரிசையாக இருப்பதை கணனித் திரையில் காணலாம். இதனைத் தொடர்ந்து save என்ற பகுதியை கிளிக் செய்வதன் மூலம் பாதுகாப்பு அமைச்சின் பதிவுக்குள் தரவுகளை அனுப்ப முடியும். பிரஜைகள் அனைவரதும் பாதுகாப்பின் காரணமாகவே உடனடியாக பதிவுகளை செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது என பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.