இன்று சிலர் வேண்டுமென்றும் சிலர் அறியாமையினாலும் சாதியம் ஒழிந்துவிட்டதென்றும் தமிழ் தேசியமே அதை முறியடித்தது என்றும் பேசுகின்றனர். இரண்டுமே பொய்யானவை. சாதியம் இன்னும் ஒழியவில்லை. அதற்கான சான்றுகள் வெளிவெளியாகவே உள்ளன. ஆயினும் சாதிய உடுக்குமுறைக்கு சாவுமணி அடிக்கப்பட்டாயிற்று. தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். அந்த வெற்றிக்கு தமிழ் தேசியம் எவ்வகையிலும் பங்களிக்கவில்லை. அதை இயலுமாக்கியவர்கள் தாழ்த்தப்பட்ட வெகுசனங்களும் அவர்களோடு இணைந்து நின்று போராடிய நேர்மையான இடதுசாரி சனநாயக முற்போக்கு சக்திகளுமேயாவர். அதை இயலுமாக்கியது மாக்ஸிச லெனினியவாதிகளின் வழிநடத்தலின் கீழ் அவர்கள் முன்னெடுத்த வெகுசனப் போராட்டப் பாதையே.
இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்
._._._._._.
இலங்கையிலே சாதியம் மிகக் கொடுமையாக நடைமுறையிலிருந்த பகுதி யாழ்ப்பாணக் குடாநாடுதான் தென்னிலங்கையில் அந்நியக் குறுக்கீடு நேர்ந்த சூழல் ஒரு குறிப்பிட்ட சாதியின் முழுமையன சமுதாய ஆதிக்கத்திற்கு ஆப்பு வைத்தது. எனவே தான் சாதிய ஒடுக்குமுறையைப் பல்வேறு சமூகச் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் தனிக்க இயலுமாயிற்று. சர்வசன வாக்குரிமையும் குறிப்பாக 1956ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் சாதி அடிப்படையிலான சமூக ஒடுக்குமுறையைப் தணிப்பதில் முக்கிய பங்காற்றினபலும் சாதியையும் சாதியச் சிந்தனையையும் ஆதிக்கத்தையும் இன்னமும் முற்றாக ஒழித்து விடவில்லை.
யாழ்ப்பாணக் குடாநாட்டுச் சூழல் வித்தியாசமானது அங்கே சாதியத்தின் பிடிப்பு சகல துறைகளிலும் வழுவாக இருந்தது. எனவே அங்குதான் சாதியத்திற்கெதிரான போராட்டங்கள் முனைப்பாக இருக்க நேர்ந்தது. சாதியத்திற்கெதிரான போராட்டங்களின் மையமாக யாழ்ப்பாண குடாநாடே இருந்தது என்பதில் ஐயமில்லை.
சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும் என்ற நூல் 1989ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிரசுரிக்கப்பட்டது. அது இலங்கையில் சாதியத்தின் வரலாற்றுப் பிண்ணணியையும் அதற்கெதிரான போராட்டங்களையும் பொதுப்படக் கூறி அதன் அதி உச்சக்கட்டமான தீண்டாமைக்கெதிரான வெகுஜனப் போராட்டத்தின் வரலாற்றுப் பிண்ணணியையும் வளர்ச்சியையும் நிறைவையும் இந்நூல் விவாதித்து அதன் இரண்டாவது திருத்திய பதிப்பு தமிழகத்தில் வெளியிடப் பட்டதனால் இலங்கையில் என்ற சொல் நூலின் பேருடன் சேர்க்கப்பட்டது.
இந்த நூலும் எம்.சி. சுப்பிரமணியத்தின் வாழ்க்கை பற்றிய நூலொன்றும் பாரிஸிலும் லண்டனிலும் 2008 செப்ரெம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றுள் சாதியமும் அதற்கு எதிரான போராட்டமும் பற்றியதே அதிகம் பேசப்பட்டதில் வியப்பில்லை என்றாலும் பிரான்சில் நடந்த கூட்டத்தில் விமர்சனம் போதாது என்று கூறி லண்டனில் நடந்த கூட்டத்தில் விமர்சனம் எனற பேரில் சிலரால் ஏதேதோ எல்லாம் பேசப்பட்டன. அவற்றில் நூலை வாசித்து விளங்கிப்பேசப்பட்டது எவ்வளவு என்பது அந்நிகழ்வுகளின் ‘தூ’ இணையத்தளத் தொகுப்பு மூலம் ஓரளவு தெரியவந்தது. வக்கிரமான கருத்துக்களைக் கூறியவர்களில் அரசியல் பிண்ணணியையும் புலம்பெயர்ந்ந சூழலில் அவர்களது செயற்பாடுகளையும் அறிந்தவர்கட்கு அவர்களின் வன்மை விளங்கும்.
தலித், தலித்தியம் என்ற சொற்கள் இலங்கையின் போராட்டங்களின் பயன்பட்டவையல்ல. தமிழகத்துத் தலித்தியவாதிகள் கொண்டாடுகிற டானியல் என்றுமே அச்சொல்லைத் தன் நூல்களிற் பயன்படுத்தவில்லை அவர் பஞ்சமர் என்ற சொல்லை பயன்படுத்தினார். தாழ்த்தப்பட்டோர் என்ற சொல்லே அவர்கள் தாழ்ந்தோர் அல்ல தாழ்த்தப்பட்டோர் என்ற உண்மையான நிலையை உணர்த்துகிறது என்ற அடிப்படையில் தாழ்ந்தோர் கீழ்ச்சாதி எளியசாதி பஞ்சமர் என்பவற்றாற் குறிக்கப்பட்டோர் ஆதிக்கக்காரரால் தாழ்த்தப்பட்டோர் என்ற வரலாற்று உண்மையை அச் சொல் குறிப்பிட்டதால் அதையே இலங்கையின் இடதுசாரிகள் அனைவரும் பயன்படுத்தினர் எனலாம்.
தலித் என்ற சொல் அடிநிலை என்பதைக் குறிப்பது அது மராத்தியிலிருந்து வந்தது. அது தமிழகத்துக்கு வருமுன்னமே சாதியத்திற் கெதிரான போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்று வந்துள்ளன.
சாதியத்திற்கெதிரான போராட்டத்தின் வர்க்கத்தன்மையை வெட்டி விலக்குவதற்காகவே தமிழகத்தின் ‘தலித்திய வாதிகள்’ செயற்பட்டுள்ளனர் என்பது தான் வரலாற்று உண்மை. அவ்வாறு வர்க்கத் தீக்கங் செய்யப்பட்ட அரசியல் தலித் அரசியலாக வளராமல் தமிழகத்தில் சாதி அரசியலாகிப் பிளவுப்பட்டது. இப்படிப் பட்ட ஒரு தலித்தியத்தைப் புலம் பெயர்ந்து சூழலில் உள்ள சிலர் உள்வாங்கிக் கொண்டவர்.
அவர்களிற் பெரும்பாலானவர்கட்கு ஈழத்துச் சாதியமும் போராட்டங்களும் பற்றி எதுவுமே தெரியாது. ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்த் தேசிய வாதத்தின் வழியில் சென்று தான் சாதியம் இன்னும் சாகவில்லை என்று கண்டவர்கள். அவர்கள் தமது தேசிய வாதத்தின் போக்கில் உள்வாங்கிய மாக்சிஸ எதிர்ப்பு இன்னமும் அவர்களை நீங்கவில்லை. அவர்களுடன் இடது சாரி விரோத வண்மம் பிடித்த சிலர் கூட்டமைத்து ‘கௌவர’ தலித்து களாகப் பம்மாத்துப் பண்ணி வருகிறார்கள்.
இலங்கையில் மேர்ஜ என்கிற என்.ஜி.ஓ. நிறுவனத்தின் ‘சரிநிகர் சஞ்சிகையின்’ குளு குளு அறையிலிருந்து நாள்தோறும் கணணியில் ரோஹணு விஜேவீரவின் படத்தை ஆராதனை செய்து வந்தவரான சரவணன், தனிப்பட்ட காரணங்கட்காக நவசமசமாஜக் கட்சியின் ஆதரவாளராகவும் இருந்து வந்தவர் (அக்கட்சி தலைவர் விக்கிரமபாகுவின் விடுதலைப்புலி ஆதரவு இன்னொரு விடயம்) அந்தப் பிண்ணணியிலேயே அவரது மாக்ஸிச லெனிசிச சரிநிகரில் அவரது தலித்தியாக குறிப்புகளில் மாக்சிச வாதிகளின் வரலாற்று பங்களிப்பு பற்றிய இருட்டடிப்பும் இடம்பெற்றன. இப்போது இந்த நூலை ஒரு கட்சி பிரசார நூலாக காட்ட முயன்றிருக்கிறார். இதில் அதிசயம் என்ன?
பரிஸில் ஷோபா சக்தி இந்த நூல் எம்.சி. சுப்பிரமணியம் சாதி ஒழிப்பிற்காக எதுவுமே செய்யவில்லை என்று கூறுவதாகச் சொல்லியிருந்தார் அவர் நிச்சயமாக நூலை வாசிக்கவில்லை என்பேன் எம். சி. சுப்பிரமணியம் தீவிரவாதிகளுடன் நின்றதன் விளைவாக 1966 ஒக்டோபர் எழுச்சி தொடர்பாக தவறுகள் செய்தார். என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளதே ஒழிய அவரது பங்களிப்புகள் நூலில் மறுக்கவோ மறைக்கவோ படவில்லை. 1964க்குப் பிறகு தமிழரிடையே சாதியத்திற்கெதிரான போராட்டத்தை மாக்ஸிச nலனிசிச வாதிகளே முன்னெடுத்தனர். என்பதை ஷோபா சக்தியால் ஏற்க இயலவில்லை.
மாதவியின் கருத்து நூலில் கூறப்பட்டுள்ள ஒரு அடிப்டையான உண்மையான மே நிலையாக்கம் பெற்றவர்கள் சாதிய எதிர்ப்பில் பின்நிற்பதையும் தமது சாதி அடையாளத்தை மழுப்பு நிற தன்மையையும் பற்றிய குறிப்பைத் தவறாக வியாக்கியானம் செய்கிற சமூக நீதிக்குப் போராடப் பிண்ணிற்பதைப் கூறுவது எவரையும் சமூகவிரோதிகளாகப் காட்டுகிற முயற்சி என்பது நீதியற்றது.
எல்லாரையும் மிஞ்சிய வண்மம் மு.நித்தியானந்தனுடையது. இவருடைய திருகுதாளங்கள் பற்றிச் சில ஆண்டுகள் முன் புதிய பூமியில் எமுதப்பட்ட பிறகு பதில் கூற வக்கில்லாமல் தனது உளறல்களை சில காலம் அடக்கியிருந்த இவர் இப்போது மறுபடியும் விஷம் கக்கத் தொடங்கியிருக்கிறார்.
இந்திய தலித்தியவாதிகள் பற்றிய சிவசேகரத்தின் குறிப்புகள் வஞ்சக நோக்க முடையவை என்று கூறி தலிக் என்று ஒடுக்கப்பட்ட மக்களின் சுய கௌரவத்தை சிறப்பாக வலியுருத்துகிற பதம் என்று சொல்லியிருக்கிறார். அச்சொல் தாழ்நிலையில் உள்ளவன் என்ற கருத்துடையது. என்று அவருக்கு ஒருவேளை தெரியாது.
ஒரு சிரேஷ்ட விரிவுரையாளராக வரக்கூடிய போதிய கல்வித் தகுதி பெறாமல் தன்னைப் பேராசிரியர் என்று பிறரை சொல்ல வைத்து பூரித்து போகிற இந்தப் பம்மாத்து பேர்வழிக்கு எந்த விஷயத்திலும் ஆழமான அறிவோ அக்கறையோ இல்லை என்பது இன்று புலம் பெயர்ந்த சூழலில் அம்பலப்பட்டு போன விடயம் என்றாலும் அங்கே மேடை கிடைத்தாலும் ஓடிப்போய் அதற்கேற்ற விதமாக தீவிர இடதுசாரி, புலி ஆதரவாளன், புலி எதிர்ப்பாளன், மாக்ஸிச விரோதி என்ற வேடங்கட்டி ஆடுவதற்கு மட்டும் ஒரு திறமை உண்டு. ‘அவைகாற்று கலைக்கழகத்தில்’ ஒட்டிக் கிடந்த போது மேடையில் கண்டு நடிக்க முடியாவிட்டாலும் வாழ்க்யையில் மிக நன்றாகவே நடித்து வருகிறார். இந்தப் புத்தகத்தைச் சாதாரணமானவர்கள் பார்க்க நேர்ந்தால் சிவசேகரமும் செந்திவேலும் மட்டும்தான் சாதியப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள் என்ற கருத்துத்தான் உருவாகும் என்று அவர் கூறிய போது அவருடைய தண்ணீர் தொட்டி நிதானம் எப்படி இருந்தது என்று கூட்டத்தில் இருந்தவர்கள் கவனத்திருக்கக் கூடும். மிகக்கவனமாக எழுதப்பட்ட நூலை வாசிக்காமல் அதுபற்றி உளறுவதும் இரவல் வார்த்தைகளை சொந்த அறிவு மாதிரிப் பேசுவதும் அவரைச் சூழவுள்ள ஒரு சிலருக்கு சிலுசிலுப்பூட்டினாலும் நூலை வாசித்த எவருக்கும் இந்த வெறுங்குடத்தின் கலகலப்பு விளங்கிவிடும்.
பெரியார், அம்பேத்கார் போன்றோர் வெகுஜனப் போராட்டம் செய்யாதவர்கள் என்று சிவசேகரம் கூறுவதாக இன்னொரு புலுடா அந்த விதமான சாடையிற் கூட எதுவுமே எங்கும் சொல்லப்படாத போது, ஏன் இந்தப் பொய்? ஏனிந்த வன்மம் பிடித்த அயோக்கியத்தனம்?
சண்முகதாசன் பற்றிய சில குறிப்புகள் திருந்திய பதிப்பில் குறைக்கப்பட்டுள்ளதிற்கு குற்றங் காண்கிறார். அன்றைய சூழலில் நூலாசிரியர்கட்கு முக்கியமாக்கப் பட்டவை. இன்று விவரமான விவரணத்திற்கு அவசிய மற்றவை என்பதாலே சுருக்கப்பட்டன. இதில் நோக்கங் கண்டுபிடிப்பது போதாமல், தோழர் எஸ்.ரி. என. நாகரத்தினத்துக்கு முதற் பதிப்பு சமர்ப்பிக்கப்பட்டது. இப்பதிப்பு அதைச் செய்யவில்லை என்று வலிந்து நோக்கத் தேடுகிறார். முதற் பதிப்பு நூல்வடிவு பெற்ற போது தோழர் எஸ்.ரி.என். இறந்து சில நாட்களாகின. எனவே அவரது நினைவு நிகழ்வொன்றில் அது அவருக்கு சமர்ப்பணமாக வெளியிடப்பட்டது. இம்முறை அவர் பற்றிய குறிப்புகள் நூலினுள் முன்னை விட விரிவாக உள்ளன, என்பது இந்த போலிப் பேராசிரியருக்கு எப்படி விளங்கும். வாசிக்காமலே விமர்சிக்கிற வல்லமை வீண்போகலாமா.
நித்தியானந்நனுக்கு வஞ்சகம் என்ற சொல்லுக்கு பொருள் தெரியாது போலிருக்கிறது. அதனால் தான் எதையெதையோ எல்லாம் வஞ்சகம் என்கிறார் அவருடைய நடத்தையை அவரது இடதுசாரி வேடம், புலி வேடம், புலி எதிர்ப்பு வேடம், தலித் வேடம் போன்ற பல வேடங்களினூடும் முதுகுக்குப் பின்னால் கதைக் காவித் திரிகிற சில்லரைப் புத்தியையும் கண்டு கொண்டவர்கள் வஞ்சகத்தின் ஒரு ஒட்டுமொத்த வடிவமே அவர் என்று நன்றாக அறிவார்கள்.
இந்த விதமான கூட்டங்கள் நூல் பற்றிய ஒரு விரிவான ஆய்வையும் விளக்கத்தையும் தரவல்லன என நான் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் குறைந்தபட்ச நேர்மையுடன் நூலின் குறைநிறைகளை கூறக் கூடிய எவருமே லண்டன் ‘அறிமுக ஏற்பாட்டாளர்கட்கு’ கிடைக்கவில்லையா ? தூ!! வெட்கக்கேடு!!!
பின்குறிப்பு:
இந்தியாவில் சாதிவெறிக் கெதிராக யார் முன்னின்று போராடுகிறார்கள் என்பதைக் கொஞ்சம் விசாரித்தால் தமிழகத்தின் தலித்தியப் பிரமுகர்கள் பலரது முகமுடிகள் கழரும். ஐரோப்பியத் தலித்தியவாதிகள் புலி எதிர்ப்பாளர்களாக இருக்கையில் அவர்கள் மெச்சும் தமிழகத் தலித்திய வாதிகள் என்.ஜி.ஓ. தலித்திய வாதிகள் ஓரிருவர் போக புலி ஆதரவாளர்களாகக் கூடத் தோன்றியும் கருணாநிதியுடன் கைகோர்த்தும் என்.ஜீ.ஓ பினாமிகளாகவும் உலாவருகின்றனர் என்று விளங்கும்.