ஊழியர் களுக்கு சேமலாப நிதி வழங்குவதற்காக சுரகும் பியஸ என்ற பெயரில் 29 மாடிகளைக் கொண்ட பாரிய கட்டிடம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இதற்கான பிரேரணையை தெழிலாளர் மற்றும் மனிதவள அமைச்சர் அதாவுத செனவிரட்ன முன்வைத்திருந்தார்.
இதன்படி தொழில் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியில் இந்தப் பாரிய கட்டிடம் அமைக்கப்படும். ஊழியர் சேமலாப நிதியுடன் தொடர்புள்ள அனைத்து நிறுவனங்களும் இக்கட்டடத்தில் இயங்கும். இதன்மூலம் பொது மக்களின் சிரமும் வீண் தாமதங்களும் குறைய வழியேற்படும்.
இத்திட்டத்துக்கு மொத்தம் 7.585 பில்லியன் ரூபா செலவிடப்படும்.