புதிய இன்புளுவென்ஸா ஏ(எச்1என்1) வைரஸ் நோய் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பதாகச் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் நோய் பரவுகைத் தடுப்பு பிரிவு நேற்று முன்னெச்சரிக்கை விடுத்தது.
கொழும்பிலுள்ள சர்வதேச பாடசாலை மாணவரொருவர் இந்நோய்க்கு உள்ளாகி இருப்பது உறுதியாகியுள்ளதை அடுத்தே இந்த அச்சுறுத்தல் தலைதூக்கி இருப்பதாகவும் நோய் பரவுகைத் தடுப்பு பிரிவு குறிப்பிட்டிருக்கின்றது.
புதிய இன்புளுவென்ஸா ஏ(எச்1என்1) நோய் இவ்வருடம் ஜூன் மாதம் இங்கு பதிவாகிய போதிலும் உள்நாட்டு பாடசாலை மாணவரொருவர் இந் நோய்க்கு உள்ளாகி இருப்பது முதற் தடவையாக உறுதிப்படுத்தப்பட்டி ருக்கின்றது.