2009

2009

இலங்கையின் இறைமை பாதுகாக்கப்பட வேண்டும்.

 asoka-de-silva.jpgபுதிதாக பிரதம நீதியரசராக பதவியேற்ற திரு. ஆசோக டீ சில்வா அவர்ளை வரவேற்கும் சம்பவம் ஒன்றில் பேசிய அவர், இலங்கை ஏனைய தேசங்களோடு சேர்ந்தும் இசைந்தும் சகிப்புத்தன்மையோடும் வாழும் அதே நேரத்தில், தனது இறைமையையும் தனித்துவத்தையும் இறுக்கமாகப் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஜனாதிபதி மியன்மாருக்கு விஜயம்

he_speech_ranaviru_.jpgஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று (13.06.2009) மியன்மாருக்கு செல்கின்றார். அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 60 ஆண்டுகள் பூர்தியடைவதை முன்னிட்டு இந்த விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மியன்மாரில் 2008ம் ஆண்டு ஏற்பட்ட நர்க்கிஸ் புயலில் பாதிக்கப்பட்டு மீள புனரமைக்கப்பட்ட கிராமம் ஒன்றை ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது அங்குரார்ப்பணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கிராமத்தின் நிர்மாணப்பணிகளுக்கென இலங்கை பிக்குமார் நிதியுதவி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிதி உதவி கேட்டு நாம் யாரையும் கெஞ்சமாட்டோம் பிச்சைப் பாத்திரம் ஏந்தத்தயார் இல்லை- மத்திய வங்கி கப்ரால்

_niward.jpgசர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுண்டு. ஆனாலும் நாம் யாரிடமும் நிதி கேட்டு பிச்சையெடுக்கவோ கெஞ்சவோ மாட்டோம் என்று மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் கப்ரால் தெரிவித்துள்ளார்.

பிச்சைப் பாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு எந்த நாட்டிடமும், எந்த நிதியத்திடமும் போய் பணம் கொடுங்கள் என நாங்கள் கெஞ்ச மாட்டோம். சொந்தக் காலில் நிற்கும் தகுதி எங்களுக்கு உண்டு. பங்குச் சந்தைகள் மூலம் பணம் திரட்டிக் கொள்ளும் வாய்ப்புகளும் எங்களிடம் அதிகமாகவே உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சர்வதேச நிதியத்தின் நிதியுதவி எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இலங்கையின் வடக்கில் இடம்பெயர்ந்து வந்துள்ள 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்குத் தேவையானதை செய்ய எங்களிடம் போதுமான நிதி உள்ளது. மேலும் பல தரப்பிடமிருந்து நிதி வந்து கொண்டுள்ளது. எனவே, பிரச்சினை இல்லை. உண்மையைச் சொல்வதாக இருந்தால் சர்வதேச நிதியத்தின் நிதியுதவி கண்டிப்பாக தேவை என்ற கட்டாயம் படிப்படியாக குறைந்து வருகிறது. எங்களுக்கு அந்த நிதியுதவி தேவையில்லை என்று நான் கூற மாட்டேன். அதே சமயம், யாரிடமும் போய் நாங்கள் பிச்சை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

சுற்றுலா அபிவிருத்திக்கு இலங்கை இந்தியா கூட்டுத் திட்டம்

milindamoragoda1.jpgசுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக இலங்கையும் இந்தியாவும் இணைந்து விசேட திட்டம் ஒன்றை முதற்தடவையாக ஆரம்பித்துள்ளன. சீன சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்தே இந்தத்திட்டம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கச் செய்யவும இந்திய உப கண்டத்தில் காணப்படும் கவர்ச்சிகரமான சுழலை மற்றும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்ததுமான இடங்களை சீன சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதற்கும்  இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு வருடத்துக்கு ஆயிரக் கணக்கான சீன சுற்றுப் பயணிகள் வருகை தருகின்றனர். அவர்களை இந்தியாவுக்கும் அழைத்துச் செல்ல இத்திட்டத்தின் மூலம் உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கைக்கு வருகின்ற சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைகை அதிகரிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.

சீனாவுக்கு விஜயம் செய்த சுற்றுலாத்துறை அமைச்சர் மிலிந்த மொரகொட அங்குள்ள இந்தியத்தூதுவர் நிருபமா ரவோவுடன் நடத்திய பேச்சுவார்தைக்கு ஏற்ப இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கருணாதிலக்க அமுனுகம இத்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றார். 

ஈரான் ஜனாதிபதி தேர்தலில் அகமதிநிஜாத் பெரும் வெற்றி!!

president-ahamadinejad.jpgஈரான் ஜனாதிபதி தேர்தலில் அதிபர் மஹமூத் அகமதிநிஜாத் பெரும் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் “இந்தத் தேர்தல் மோசடியாக நடந்துள்ளது. நானே வெற்றி பெற்றுள்ளேன். ஆனால் அதைத் திரித்து அகமதிநிஜாத் வெற்றி பெற்றதாக கூறியுள்ளனர்” என்று அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் மீர் உசேன் மெளசவி.கூறியுள்ளார்

ஈரான் ஜனாதிபதி தேர்தல் விதிப்படி மொத்தம் பதிவான வாக்குகளில் 50 சதவீதத்தைப் பெறுபவர்தான் ஜனாதிபதிக முடியும். இல்லாவிட்டால் மறுபடியும் தேர்தல் நடத்தப்படும். ஆனால் அகமதி நிஜாத் 60 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்றுள்ளாக தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் பெரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஈரான் ஜனாதிபதி தேர்தல் முடிவை உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தன. மெளசவி வெற்றி பெறக் கூடும் என சில செய்திகள் கூறி வந்தன. ஆனால் அகமதிநிஜாத் அபார வெற்றி பெற்றுள்ளார்.

பத்திரிகை சம்மேளனத் தலைவர் நேற்று கடமைகளைப் பொறுப்பேற்பு

somarathna_balasuriya_prof.jpgஇலங்கை பத்திரிகை சம்மேளனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் சோமரத்ன பாலசூரிய நேற்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கொழும்பிலுள்ள சம்மேளத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தகவல், ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க, திருமதி நிரோஷனி டி சில்வா மற்றும் ஏ.எஸ். ஜகத்சிறி ஆகியோரும் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க முடியாது என சர்வதேச சமூகம் உணர்ந்துள்ளது

keheliyas.jpgஇலங்கை மீது தொடர்ந்தும் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது என்பதை சர்வதேச சமூகம் உணர்ந்து கொண்டுள்ளது என பாதுகாப்புத்துறை பேச்சாளரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலனோம்புகை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். தேசிய வானொலிச் சேவைக்கு நேற்று  தொலைபேசி மூலம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளின்போது இலங்கை மீது உலகின் பல நாடுகள் பெருமளவு வற்புறுத்தல்களை மேற்கொண்டிருந்தன. எனினும் எத்தகைய வற்புறுத்தல்களையும் சவால்களையும் இலங்கைக்கு எதிர்கொள்ள முடியும் என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிரூபித்துக் காட்டியுள்ளார். இதற்காக நாம் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

வவுனியாவின் இராணுவ ஆயுதக்கிடங்கை எரித்தது புலிகள் என வைகோ தெரிவிப்பு

12vaiko000.jpgவவுனி யாவில் இலங்கை இராணுவ ஆயுதக் களஞ்சியம் மீது, புலிகள் ஊடறுப்பு தாக்குதல் நடத்தியதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தென்காசியில் நெல்லை மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக  செயல் வீரர்கள் கூட்டம், நாஞ்சில் சம்பத் தலைமையில் இடம்பெற்றது.

அக்கூட்டத்தில் வைகோ உரையாற்றுகையில்,
 
இலங்கையில் இராணுவம், கர்ப்பிணிகளையும், சிசுக்களையும் கொன்ற சம்பவங்கள், உலகில் வேறு எங்குமே நடந்ததில்லை என அவர் சுட்டிக்காட்டினார். இலங்கைப் பிரச்னையில், திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள் கோபாலரத்னம், சிவப்பிரகாசம் தற்கொலை செய்து, உயிர் நீர்த்தனர்.

அவர்களுக்கு கூட இரங்கல் தெரிவிக்காதவர், தமிழக முதல்வர் கருணாநிதி என வைகோ குற்றம்சுமத்தியுள்ளார்.  வவுனியாவில் இலங்கை இராணுவ களஞ்சியத்தின் மீது புலிகள் ஊடறுப்பு தாக்குதல் நடத்தி, ஆயுதங்களை எரியச் செய்துள்ளனர். ஆனால், அந்த நிகழ்வு தற்செயலானது என, இராணுவம் கூறுவதாக வைகோ தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் பிரித்தானிய தமிழருக்கு சிறைத் தண்டனை

11shanthan.jpgஇலங் கையில் விடுதலைப் புலிகளுக்கு வெடிகுண்டுகளை தயாரிக்க உதவும் உபகரணங்களை வழங்கியதான குற்றசாட்டில் குற்றவாளி என்று கண்டறியப்பட்டுள்ள பிரித்தானிய தமிழர் ஒருவருக்கு லண்டன் நீதிமன்றம் இரண்டு ஆண்டு காலம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

தெற்கு லண்டனில் வசிக்கும் சொத்து மிதிப்பீட்டாளரான அருணாச்சலம் கிறிஷாந்தகுமார் அவர்கள் விடுதலைப் புலிகளுக்காக பொருட்களை வழங்குவதை ஒருங்கிணைத்து நடத்தி வந்தார் என்பதான வழக்கில் குற்றவாளி என்று தீர்பபளிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் முன்னெடுத்துவந்த மனித நேயப் பணிகளை பாராட்டிய நீதிபதி அவர் ஒரு நாகரீகமான மனிதர் என்றும், தான் கொண்டிருந்த ஒரு கொள்கைக்கான காரணத்தினால் அவர் சட்டதை மீறி நடந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மீட்டல் வகுப்புக்களை ஒரே இடத்தில் நடத்த ஏதுவாக 50 கூடாரங்கள் – நிவாரணக் கிராமங்களில் க.பொ.த. (உ/த) பரீட்சை

2009 ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள சுமார் 1500 மாணவ, மாணவிகளு க்கும் துரித மீட்டல் வகுப் புகளை ஒரே இடத்தில் நடத்துவதற்கு ஏதுவாக 50 கூடாரங்கள் அமைக்கப்படுவதாக வவுனியா மாவட்ட வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ் வர்ல்ட் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்க ளுக்கு பொறுப்பான இரா ணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சந்திரசிறி எதிர் வரும் திங்கட்கிழமை மேற் படி 50 கூடாரங்களையும் திறந்துவைப்பதுடன் துரித மீட்டல் வகுப்புகளையும் ஆரம்பித்து வைப்பார் என திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார்.

திங்களன்று இதற்காக வைபவமொன்றும் நடை பெறவுள்ளது. க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கு துரித மீட்டல் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கான கூடாரங்களை உடனடியாக பெற்றுக் கொடுப்பதாக மேஜர் சந்திரசிறி உறுதியளித்ததையடுத்து நேற்று முதல் கூடாரங்களை அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகின.

வவுனியாவில் கதிர்காமர் ஆனந்தகுமார சுவாமி, இராமநாதன், அருணாசலம் நிவாரணக் கிராமங்கள் உட்பட 8 வலயங்களில் தங்கியுள்ள இம்மாணவர்களை கதிர் காமர் நிவாரணக் கிராமத்திலேயே துரித மீட்டல் வகுப்புகளை நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது.

கொழும்பு ரோயல் கல்லூரி, கொழும்பு டி. எஸ். சேனநாயக்க கல்லூரி, திருகோணமலை மற்றும் வவுனியா தெற்கு வலய கல்வி வாண்மையாளர்களின் உதவியுடன் இவர்களுக்கு துரிதமீட்டல் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.