ஈரான் ஜனாதிபதி தேர்தலில் அதிபர் மஹமூத் அகமதிநிஜாத் பெரும் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் “இந்தத் தேர்தல் மோசடியாக நடந்துள்ளது. நானே வெற்றி பெற்றுள்ளேன். ஆனால் அதைத் திரித்து அகமதிநிஜாத் வெற்றி பெற்றதாக கூறியுள்ளனர்” என்று அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் மீர் உசேன் மெளசவி.கூறியுள்ளார்
ஈரான் ஜனாதிபதி தேர்தல் விதிப்படி மொத்தம் பதிவான வாக்குகளில் 50 சதவீதத்தைப் பெறுபவர்தான் ஜனாதிபதிக முடியும். இல்லாவிட்டால் மறுபடியும் தேர்தல் நடத்தப்படும். ஆனால் அகமதி நிஜாத் 60 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்றுள்ளாக தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் பெரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஈரான் ஜனாதிபதி தேர்தல் முடிவை உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தன. மெளசவி வெற்றி பெறக் கூடும் என சில செய்திகள் கூறி வந்தன. ஆனால் அகமதிநிஜாத் அபார வெற்றி பெற்றுள்ளார்.