சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக இலங்கையும் இந்தியாவும் இணைந்து விசேட திட்டம் ஒன்றை முதற்தடவையாக ஆரம்பித்துள்ளன. சீன சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்தே இந்தத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கச் செய்யவும இந்திய உப கண்டத்தில் காணப்படும் கவர்ச்சிகரமான சுழலை மற்றும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்ததுமான இடங்களை சீன சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதற்கும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு வருடத்துக்கு ஆயிரக் கணக்கான சீன சுற்றுப் பயணிகள் வருகை தருகின்றனர். அவர்களை இந்தியாவுக்கும் அழைத்துச் செல்ல இத்திட்டத்தின் மூலம் உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கைக்கு வருகின்ற சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைகை அதிகரிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.
சீனாவுக்கு விஜயம் செய்த சுற்றுலாத்துறை அமைச்சர் மிலிந்த மொரகொட அங்குள்ள இந்தியத்தூதுவர் நிருபமா ரவோவுடன் நடத்திய பேச்சுவார்தைக்கு ஏற்ப இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கருணாதிலக்க அமுனுகம இத்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்.