இலங் கையில் விடுதலைப் புலிகளுக்கு வெடிகுண்டுகளை தயாரிக்க உதவும் உபகரணங்களை வழங்கியதான குற்றசாட்டில் குற்றவாளி என்று கண்டறியப்பட்டுள்ள பிரித்தானிய தமிழர் ஒருவருக்கு லண்டன் நீதிமன்றம் இரண்டு ஆண்டு காலம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
தெற்கு லண்டனில் வசிக்கும் சொத்து மிதிப்பீட்டாளரான அருணாச்சலம் கிறிஷாந்தகுமார் அவர்கள் விடுதலைப் புலிகளுக்காக பொருட்களை வழங்குவதை ஒருங்கிணைத்து நடத்தி வந்தார் என்பதான வழக்கில் குற்றவாளி என்று தீர்பபளிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் முன்னெடுத்துவந்த மனித நேயப் பணிகளை பாராட்டிய நீதிபதி அவர் ஒரு நாகரீகமான மனிதர் என்றும், தான் கொண்டிருந்த ஒரு கொள்கைக்கான காரணத்தினால் அவர் சட்டதை மீறி நடந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
thurai
//மனித நேயப் பணிகளை பாராட்டிய நீதிபதி அவர் ஒரு நாகரீகமான மனிதர் என்றும், தான் கொண்டிருந்த ஒரு கொள்கைக்கான காரணத்தினால் அவர் சட்டதை மீறி நடந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.//
யாராவது இந்த நீதிபதியிடம் புலிகளின் ஆதரவாளர்களின் கொள்கைகளை விபரமாகக் தரும்படி கேட்பீர்களா?
துரை
பார்த்திபன்
துரை
நீதிபதி குற்றவாளியை முதலில் பப்பாவில் ஏற்றிவிட்டு பின் குப்பிறத் தள்ளியுள்ளார். ஆனாலும் 2 வருடமென்பது போதாது என்பது அடியேனின் கருத்தும்.
BC
“அவர் முன்னெடுத்துவந்த மனித நேயப் பணிகளை பாராட்டிய நீதிபதி அவர் ஒரு நாகரீகமான மனிதர் என்றும், தான் கொண்டிருந்த ஒரு கொள்கைக்கான காரணத்தினால் அவர் சட்டதை மீறி நடந்தார் ”
என்னாலும் நம்பமுடியவில்லை. இப்படியான ஓருவருக்கு வக்காலத்து வாங்க முடியுமா!! என்ன நீதி இது?
சாந்தன்
துரை,
நீங்கள் கேட்கலாம் தானே? ஏன் உங்களுக்கு உள்ள ‘கேள்வி கேட்கும் உரிமை’ யை மறுக்கிறீர்கள்?
சாந்தன்
ஐ.நா மனித உரிமை அமைப்பில் ஈழத் தமிழருக்கு வழங்கப்பட்ட நீதியிலும் விடவா இது கேவலமாகப்போய் விட்டது?
பார்த்திபன்
சாந்தன்,
எப்போதிலிருந்து ஐ.நா மனித உரிமை அமைப்பு நீதி எல்லாம் வழங்க ஆரம்பித்துள்ளது?? சொல்லவேயில்லை……