மீட்டல் வகுப்புக்களை ஒரே இடத்தில் நடத்த ஏதுவாக 50 கூடாரங்கள் – நிவாரணக் கிராமங்களில் க.பொ.த. (உ/த) பரீட்சை

2009 ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள சுமார் 1500 மாணவ, மாணவிகளு க்கும் துரித மீட்டல் வகுப் புகளை ஒரே இடத்தில் நடத்துவதற்கு ஏதுவாக 50 கூடாரங்கள் அமைக்கப்படுவதாக வவுனியா மாவட்ட வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ் வர்ல்ட் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்க ளுக்கு பொறுப்பான இரா ணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சந்திரசிறி எதிர் வரும் திங்கட்கிழமை மேற் படி 50 கூடாரங்களையும் திறந்துவைப்பதுடன் துரித மீட்டல் வகுப்புகளையும் ஆரம்பித்து வைப்பார் என திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார்.

திங்களன்று இதற்காக வைபவமொன்றும் நடை பெறவுள்ளது. க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கு துரித மீட்டல் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கான கூடாரங்களை உடனடியாக பெற்றுக் கொடுப்பதாக மேஜர் சந்திரசிறி உறுதியளித்ததையடுத்து நேற்று முதல் கூடாரங்களை அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகின.

வவுனியாவில் கதிர்காமர் ஆனந்தகுமார சுவாமி, இராமநாதன், அருணாசலம் நிவாரணக் கிராமங்கள் உட்பட 8 வலயங்களில் தங்கியுள்ள இம்மாணவர்களை கதிர் காமர் நிவாரணக் கிராமத்திலேயே துரித மீட்டல் வகுப்புகளை நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது.

கொழும்பு ரோயல் கல்லூரி, கொழும்பு டி. எஸ். சேனநாயக்க கல்லூரி, திருகோணமலை மற்றும் வவுனியா தெற்கு வலய கல்வி வாண்மையாளர்களின் உதவியுடன் இவர்களுக்கு துரிதமீட்டல் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *