மன்னார் முசலி பிரதேச செயலகப் பிரிவினுள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள மீன வர்களுக்கு விசேட அடை யாள அட்டைகள் வழங்கப் படவுள்ளன. அத்துடன் இப் பகுதி மக்களுக்கு உடனடி குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 39 நீர்த் தாங்கிகளும் வழங்கப்பட்டுள்ளதாக முசலி பிரதேச செயலாளர் எஸ். கேதீஸ்வதன் தெரிவித்தார்.
முசலி கிராமப் பகுதியி லுள்ள குடிநீர்க் கிணறுகளி லிருந்து நீரை பெளசர்கள் மூலம் கொண்டுவந்து நீர்த் தாங்கிகளை
நிரப்புவதாகவும் குறிப்பிட்ட அவர் நாளை ஞாயிற்றுக்கிழமை அரிப்பு மேற்குப்பகுதியிலுள்ள புனித செங்கோல் அன்னை ஆலயத்தில் விசேட கூட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மீளக்குடியேறிய மக்களுக்கும் மீனவர்களுக்கும் இப்பகுதி கடற்படையினர் ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாகவும் கூறிய பிரதேச செயலாளர் கடற்படை கப்டன், ஜயதிலக்க, லெப்டினன் தேசப்பிரிய ஆகியோர் பெரிதும் உதவுவதாக குறிப்பிட்டார்.
வங்காலை பகுதியில் தற்போது தரித்து வைக்கப்பட்டுள்ள தமது மீன்பிடி வள்ளங்களை முசலி பகுதிக்கு எடுத்து வரவும் கடற்படையினர் உதவி வருவதாக குறிப்பிட்டார். நேற்றுக்காலை வரை அரிப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம் வரையில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முசலி பிரதேச செயலகப் பிரிவின் மின் இணைப்புக்கான திருத்த வேலைகளை இலங்கை மின்சார சபை நேற்று முதல் ஆரம்பித்து விட்டதாகவும் குறிப்பிட்டார்