14

14

பெண்கள் அமைப்புகள் ஏன் இந்தப் பெண்களுக்காகக் குரல் எழுப்பவில்லை? 

பெண்கள் அமைப்புகள் ஏன் இந்தப் பெண்களுக்காகக் குரல் எழுப்பவில்லை?

 

பெண்கள் உரிமைக்காக போராடுகிறோம் என்று கூறிக் கொண்டு, அதையே பிழைப்பாக செய்யும் பெண் போராளிகளின் குரல்கள் ஏன் கேட்பதில்லை. பெண்களை முன்னேற்றத்துக்கு என கூறிக் கொண்டு அரசார்பற்ற நிறுவனங்களின் உதவிப் பணத்தில் கூடிக் கதைப்பதும், புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவதுடன் அவர்களது போராட்டங்கள் முடிந்து விடுகின்றன.

அதேநேரம் பெண்கள் அமைப்பில் அங்கம் வகிக்கும் சக தோழிகள் தமது அரசியல் சுய இலாபத்திற்காக பெண்கள் மீது பாலியல் சுரண்டலில் ஈடுபடும் ஆண்களுக்கு துணையாக நிற்கும் போதும் இப் பெண்கள் அமைப்புகளில் உள்ள பெண்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுப்பதும் இல்லை. தமது தோழிகளை கண்டிப்பதும் இல்லை. மாறாக தவறான ஆண்களுக்கு அரசியலில் முகவரி தேடிக் கொடுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளரான உமா சந்திர பிரகாஷ் போன்ற பெண்களை ஆதரிக்கிறார்கள். பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த, வன்புணர்ந்த குடுமி ஜெயந்திரனை ஐக்கிய மக்கள் சக்திக்குள் யாழ் மாவட்ட அமைப்பாளராகக் கொண்டு வந்தவர் இந்த உமா சந்திர பிரகாஷ். இப்பெண்கள் அமைப்பில் உள்ளவர்கள் தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்கிறார்கள்.

தற்போது தென்னிலங்கையை மையமாக கொண்டு இயங்கும் பெண்கள் அமைப்புக்கள் மேட்டுக் குடிப் பெண்களின் பொழுதுபோக்கு மையங்களே. அவர்கள் சாமானிய பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி அக்கறை கொள்ள மாட்டார்கள். இவ்வாறான அமைப்புகளில் உள்ள பெண்களுக்கு சாமானிய பெண்களின் வலியும் பிரச்சினைகளும் தெரிந்திருக்கப் போவதில்லை. இவர்கள் தங்களை பிரபல்யப்படுத்திக் கொண்டு அரசியலிலும் அதிகாரத்திலும் பங்கெடுக்கவே ஆசைப்படுகின்றனர்.

பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் பற்றியோ நாளாந்த பிரச்சினைகள் பற்றியோ அவர்களுக்கு அக்கறையில்லை. எனவே பாதிக்கப்பட்ட பெண்களே தமக்காக துணிந்து குரல் கொடுக்க வேண்டும்.

தமிழ் தலிபான்களாகும் ஊழல் ஒழிப்பு அணி வன்னி: 

தமிழ் தலிபான்களாகும் ஊழல் ஒழிப்பு அணி வன்னி:

ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுப்பதாகவே காட்டி வந்தது. கடந்த மாதம் யாழில் தீயில் எரிந்து இறந்த சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் தமிழினி சதீஸ்க்காக குரல்கொடுத்து கட்டியெழுப்பிய விம்பம் படிப்படியாக உடைந்து வருகின்றது.

சமீபத்தில் ஊழல் ஒழிப்பு அணி வன்னி கையிலெடுத்துள்ள மூன்று பெண்களின் விவகாரமும் தமிழ் ஆண்களின் ஆணாதிக்க மனோபாவத்தினை அடக்குமுறை மனோபாவத்தினை வெளிப்படுத்தி நிற்கின்றது. அவர்கள் சட்டவிரோத அல்லது சமூகப் பிறழ்வான செயற்பாடுகளில் ஈடுபடும் பெரிய இடங்களில் இருக்கும் பெண்களில் கைவைக்கவில்லை. மாறாக பெரிய பின்புலம் இல்லாத ரிக்ரொக்கில் வீடியோ போடும், யூரியூப்பில் செய்தி வாசிக்கும் மற்றும் தனது வாழ்வாதாரத்திற்கு பாலியல் தொழில் செய்யும் பெண்ணும் தான் கண்ணில் பட்டுள்ளார்கள்.

ரிக்ரொக் சாளினி பற்றிய ஊழல் ஒழிப்பு வன்னி அணி வெளியிட்ட முதல்ச் செய்தியிலேயே எடுத்த எடுப்பிலேயே அவர் விபச்சாரத் தொழில் புரிகிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதற்கு ஆதாரமாக சாளினியின் நிர்வாண புகைப்படங்களும் பதிவேற்றப்பட்டிருந்தன. அப்படி பதிவேற்றப்பட்ட படங்களில் பெண்ணின் முகம் மறைக்கப்படவில்லை. அந்தப் படங்களில் தோன்றும் ஆணின் முகம் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருந்தது. முதலில் அந்தப் படங்களில் தோன்றிய பெண் சாளினி தானா? என்பதே உறுதிப்படுத்தப்படவில்லை.

இதற்கிடையில் இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்த மெத்தப்படித்த மூன்று பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றதாக சொல்லித திரியும் மேதாவி எம்பி இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் கூட ஊரைக் கூட குறிப்பிட்டு சாளினி என்னும் பெண் விபச்சாரம் செய்வதாக உரையாற்றியிருந்தார். இதைவிட வேறு என்ன அறியாமை இருக்க முடியும். பொறுப்புள்ள ஒரு பதவியிலிருக்கிற ஒரு மக்கள் பிரதிநிதி தீர விசாரிக்காமல் ஒரு பெண்ணின் சுயமாரியாதை மற்றும் மாண்பை பாராளுமன்றத்தில் ஏலம் போட எம்பி அர்ச்சுனா இராமநாதனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.

சாளினி மீது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசிய ஊழல் ஒழிப்பு வன்னி அணி இப்போது இந்த விவகாரத்தில் பின்வாங்கியுள்ளது. ரிக்ரொக்கில் தனக்கு ஆபாசமாக பேசி கொமன்ட் அடிப்பவர்களுக்கு அதேபாணியில் ஆபாசமாக பேசி பதிலழித்த வீடியோக்களையும் ஒரு சில நிர்வாண படங்களையும் வைத்துக் கொண்டு சாளினி பாலியல் தொழிலில் ஈடுபடும் விபச்சாரி என பிரச்சாரத்தில் ஈடுபட்டது சம்பந்தப்பட்ட முகநூல். தற்போது சாளினி தங்களை தொடர்பு கொண்டு மன்னிப்புக் கேட்டதாகவும், அவர் இனிமேல் ஆபாசமாக பேச மாட்டார். அவர் தொடர்பில் வெளிவந்த படங்கள் போலியானவை. அவருடைய முன்னாள் காதலன் தான் அப்படங்களை எடுத்தவர் என்றும். அந்த காதலன் தற்சமயம் பொலிஸாரால் தேடப்பட்டு வருவதகவும் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் சாளினி மன்னிப்புக் கேட்கும் காணொளி ஒன்றையும் பதிவேற்றியுள்ளனர்.

ஊழல் ஒழிப்பு வன்னி அணியும் அவர்களை முகநூலில் பின்தொடர்பவர்களும் சாளினிக்கு மன்னிப்பு கொடுத்து விட்டார்கள் என்றும் சாளினி திருந்தி வாழ சந்தர்ப்பம் கொடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இறுதியில் சாளினி என்ற அபலை பெண் மீது சுமத்தப்பட்ட பழிச்சொல்லுக்கு யாரும் மனம் வருந்தவில்லை. பாராளுமன்றம் வரை சாளினி பற்றிய கிசுகிசுவை பாராளுமன்ற கன்சேர்ட்டில் பதிவு செய்த எம்பி இராமநாதன் அரச்சுனாவும் வெட்கப்படவும் இல்லை.

சாளினி மீது நடந்தது அப்பட்டமான ஊடக அடக்குமுறை. சாளினியை விபச்சாரி என மிரட்டி அவரை அடிபணிய வைத்துள்ளார்கள். கலாச்சார மற்றும் பண்பாட்டு காவலர்கள் ஏன் ரிக்ரொக்கில் மணிக்கணக்கில் ஆபாசமாக பேசும் ஆண்களை வெளிப்படுத்தவில்லை. அவர்களுக்கு வகுப்பு எடுக்கவில்லை. தமிழர்களின் கலாச்சாரத்தை தமிழ்ப் பெண்கள் தான் காப்பாற்ற வேண்டும். பெண்கள் எப்படி தமிழ்க் கலாச்சாரத்தை பேணுகிறார்கள் என்பதை தமிழ் ஆண்கள் கண்காணிப்பது மட்டும் தான் அவர்களின் தலையாய கடமை. அர்ச்சுனா மற்றும் அர்ச்சுனாவின் நண்பர்கள் ரிக்ரொக்கில் சமூக வலைத்தளங்களில் பாலியல் வக்கிரமாக பதிவுகளை மேற்கொண்டு வருபவர்கள். அதைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை.

சாளினிக்கு ஆபாச கேள்விகளை அனுப்பிய ஆண்கள் தமிழர் கலாச்சாரத்தை கெடுக்கவில்லை. அவர்கள் சமூக சீரழிவுக் காரணமாகவில்லை சாளினி நீ பெண். நீதான் பார்த்து பேச வேண்டும். உன்னுடைய எல்லை இவ்வளவு தான் என்று வரையறை செய்ய ஊழல் ஒழிப்பு அணி வன்னி உட்பட யாருக்கும் அதிகாரம் இல்லை. எப்படியோ பெரிய பின்புலம் எதுவும் இல்லாவிடினும், சாளினி தானாகவே முன் வந்து எம்பி அர்ச்சுனா மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழ் தலிபான்கள்: வம்பன்கள், ஊசி அர்ச்சுனா, லண்டன் தமிழ் அடியான், ஊளையிடும் அணி, புலனாய்வுப் புண்ணாக்குகள் – பெண்களின் ஒழுக்க காவல்துறையாம்

தமிழ் தலிபான்கள்: வம்பன்கள், ஊசி அர்ச்சுனா, லண்டன் தமிழ் அடியான், ஊளையிடும் அணி, புலனாய்வுப் புண்ணாக்குகள் – பெண்களின் ஒழுக்க காவல்துறையாம்

 

பெண்கள் எப்படி வாழ வேண்டும், என்ன படிக்க வேண்டும், அவர்கள் பொதுவெளியில் என்ன பேச வேண்டும், என்ன தொழில் செய்ய வேண்டும், எத்தனை மணிக்கு வீட்டுக்கு வெளியில் வர வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் , யாரை திருமணம் செய்ய வேண்டும், ஏன் யாருடன் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் மற்றும் யாருக்கு பிள்ளை பெற வேண்டும் என்பதை கூட போலி முகவரியுடன் வரும் சமூக வலைத்தளங்கள் முடிவு செய்யத் தொடங்கிவிட்டன. எல்லா மோதல்களிலும் பெண்கள் தான் இறுதியில் இலக்கு வைக்கப்படுவார்கள். அதேபோன்று தான் சமூக வலைத்தளங்களிலும் நடக்கின்றது.

ஊழல் ஒழிப்பு அணி வன்னி, பா உ அர்ச்சனா, லண்டன் தமிழ் அடியான், வம்பன் டொட்கொம், எஸ் கே கிருஷ்ணா போன்றோர் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளும் அடாவடித் தனங்கள், தலிபான்களிலும் பார்க்க மோசமானதாக மாறி வருகின்றது. இவர்கள் சமீபகாலங்களில் வெளியிட்டு வரும் பதிவுகள் மற்றும் தனிநபர்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் மற்றும் புகார்கள் அனைத்தும் எல்லை தாண்டி சென்று கொண்டிருக்கின்றன.