2025

2025

சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படை உருவாக்கம் !

சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படை உருவாக்கம் !

 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக புதிதாக சேர்க்கப்பட்ட 500 சிறப்பு அதிரடிப்படை (STF) பணியாளர்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய சிறப்பு அதிரடிப்படை உறுப்பினர்கள் விரைவில் தங்கள் பயிற்சியை முடித்துவிட்டு பணிக்கு வருவார்கள் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

 

உள்ளூராட்சி தேர்தலில் சரியானவர்களை தெரிந்து வாக்களிக்க முன்னாள் அமைச்சர் கோரிக்கை!

உள்ளூராட்சி தேர்தலில் சரியானவர்களை தெரிந்து வாக்களிக்க முன்னாள் அமைச்சர் கோரிக்கை!

 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மக்கள் தமது கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு வாக்களிப்பார்கள் என முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மன்னார் பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை நேற்றையதினம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு, தமக்கு சேவையாற்ற கூடியவர்களை அடையாளம் கண்டு, சரியானவர்களை மக்கள் தெரிவு செய்வார்கள் என்று நான் நம்புகின்றேன். யாழ். மாவட்டத்தில் அனைத்து சபைகளுக்கும் வெற்றிகரமாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளோம். நீட்சியாக இந்தமுறை மன்னார் மாவட்டத்தில் இரண்டு சபைகளிலே போட்டியிட உள்ளோம். எதிர்வரும் காலங்களில் கடந்த காலத்தை போல மன்னார் மாவட்டத்தில் அனைத்து சபைகளிலும் போட்டியிட்டு அனைத்து சபைகளையும் கைப்பற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

சகாக்கள் மீதான பிரித்தானியாவின் தடை நாமல் ராஜபக்ச கொந்தளிப்பு! 

சகாக்கள் மீதான பிரித்தானியாவின் தடை நாமல் ராஜபக்ச கொந்தளிப்பு!

 

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகோடா மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா ஆகியோர் மீது பிரித்தானியா விதித்த தடை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது X தளத்தில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில், ஐக்கிய இராச்சியத்தின் இந்த தடைகள் மனித உரிமைகள் பற்றியவை அல்ல, மாறாக LTTE ஆதரவாளர்களின் தொடர்ச்சியான செல்வாக்கின் விளைவாகும்.

இது நீதியல்ல, சில மேற்கத்திய அரசியல்வாதிகள் பணத்தின் மூலம் செல்வாக்கு செலுத்தியும் சலுகைகளை அனுபவித்தும் நமது தேசத்தின் நல்லிணக்கத்தை கண்காணிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் கடினமான முடிவுகளால் பெறப்பட்டது என்பதை வடக்கு மற்றும் தெற்கு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

போர்க் குற்றவாளிகள் மீது பிரித்தானியா விதித்த தடையை வரவேற்கும் எம்பி சிறிதரன் ! வருத்தப்படும் முன்னாள் எம்பி அலிசப்ரி !

போர்க் குற்றவாளிகள் மீது பிரித்தானியா விதித்த தடையை வரவேற்கும் எம்பி சிறிதரன் ! வருத்தப்படும் முன்னாள் எம்பி அலிசப்ரி !

இலங்கையில் இறுதி உள்நாட்டு போர் முனைப்படைந்த காலங்களில் 58 வது படையணியின் தளபதியாக விளங்கிய சவேந்திர சில்வா, புலிகளில் இருந்து விலகிய விநாயகமூர்த்தி முரளீதரன், முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகோடா ஆகியோர் மீது அண்மையில் பிரித்தானியா தடை விதித்துள்ளது.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தமிழரசுக் கட்சி எம்.பி சிறிதரன், இலங்கையில் தமிழர்கள் மீதான இன அழிப்பு யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை ஆயுதப்படையின் முன்னணி தலைவர்கள் மற்றும் கருணா குழுவின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மீது பிரித்தானியா விதித்துள்ள தடை, ஈழத் தமிழர்களின் நீதிக்கான தேடலின் நம்பிக்கைக் கீற்று என்றார். அத்துடன் அந்த அறிவிப்பை தாம் வரவேற்பதாகவும் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், மூலோபாயரீதியாகவும், விடாமுயற்சியுடனும் உள்ளனர் என்பதை பிரிட்டனின் தடை அறிவிப்புகள் வெளிப்படுத்துகிறது. உலகின் மிகக்கொடுரமான பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றை தோற்கடித்து, பல தசாப்தங்களாக இரத்தக்களறியை எதிர்கொண்ட எமது தேசத்திற்கு அமைதியையும் ஸ்திரதன்மையையும், கொண்டுவருவதற்கு பொறுப்பானவர்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் அரசியல் நோக்கத்திற்காக இலாபத்திற்காக ஆபத்தான முறையில் சமரசம் செய்துவருகின்றோம் என்பது எனக்கு உண்மையிலேயே கவலையளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

போராட்டத்தின் வலிகளை உணராத கோமாளியின் பன்னாடைத் தனமான கிளுகிளுப்புப் பேச்சுக்கள் !

போராட்டத்தின் வலிகளை உணராத கோமாளியின் பன்னாடைத் தனமான கிளுகிளுப்புப் பேச்சுக்கள் !

 

எண்பதுக்களில் ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் போராட்டம் 2009 வரையான நீண்ட நெடிய பாதையைக் கொண்டது. அப்போராட்டம் பற்றிய விமர்சனங்கள் பல இருந்தாலும் அதில் செய்யப்பட்ட அர்ப்பணிப்புக்களை யாரும் கொச்சைப்படுத்தி விட முடியாது. போராட்டத்தை மக்கள் மயப்படுத்த வேண்டும் மக்களையும் தங்களோடு இணைத்துக்கொள்ள வேண்டும், மக்களைப் போராட்டத்தின் பங்குதாரர்களாக்க வேண்டும் என்பது எந்த வகையான போராட்டத்தினதும் அத்திவாரமாக இருந்தது. அதற்காக மக்களுடன் நெருங்கிப் பழகுவது, மக்களோடு மக்களாக வாழ்வது, அவர்களிடமே வாங்கி உண்பது இதுவெல்லாம் விடுதலைப் போராட்டங்களின் முக்கிய இயல்புகள்.

ஆனால் போராட்டத்தையே கூகுளில் தேடிக் கற்றுக்கொண்ட ஒரு உதவாக்கரைக் கூட்டம் தற்போது உருவாகி வருகின்றது. இதனையெல்லாம் கேவலமானதாக சித்தரிக்கின்றனர். ஊசி அர்ச்சுனா யாழ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பா உ இளங்குமரனைக் குத்திப் பேசும் போது நீ வீடு வீடாகப் போய் கொடிவித்து எம்பி யான மாதிரியோ மாதிரியோ. நான் எம்பிபிஎஸ் என்று தன்னுடைய வர்க்க குணாம்சத்தை வக்கிரமாக வெளிப்படுத்தினார்.

மக்களோடு மக்களாக பணியாற்றாததாலேயே தமிழ் தேசியம் தனது கடைசி மூச்சில் உள்ளது. ஆனால் ஊசி அர்ச்சுனாவோ மக்களோடு மக்களாக பணியாற்றுவதை கேவலமாக சித்தரிக்கின்ற தனது மனநிலையைப் பொது வெளியில் கூச்சமின்றிச் சொல்கின்றார். அர்ச்சுனா போன்ற குறைவருத்தியுடையவர்களால் தமிழ் தேசியம் தலைமை தாங்கப்படுவதால் சாதாரண மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுள்ளனர். கொழுத்துகின்ற வெய்யிலில் வெள்ளைக்காரன் விட்டுவிட்டுப் போன அடிமைத்தனத்தின் குறியீடான ரையைக் கட்டிக்கொண்டு குரைப்பதால் தான் தமிழ் மக்கள் இதுகள் தங்களைக் கடித்துவிடும் என்ற அச்சத்தில் தள்ளியே நிற்கின்றனர்.

இதற்குள் ஊசி அர்ச்சுனா விடும் இன்னுமொரு உல்டா என்ன வென்றால் நான் அரசியலை விட்டுவிட்டுப் போனால் டொக்டர் தொழில் இருக்கு, இலங்கையில் இல்லாவிட்டால் வெளிநாட்டுக்கு சென்று சொகுசாக செற்றிலாகி விடுவேன் என்பதாகும். ஊசி அர்ச்சுனா நீங்கள் வெளிநாடுகளில் வந்து வேலை செய்வதற்கு உங்களுடைய முன்னைய வேலையிடத்திலிருந்து நற்சான்றிதழ் இருக்க வேண்டும். அதை எந்த மருத்துவமனை உங்களுக்கு வழங்கும். தற்போது உங்களுடைய பரீட்சையிலும் நீங்கள் பெயிலாகிவிட்டீர்கள்.

மருத்துவருக்கு நல்ல பண்புகள் இருக்க வேண்டும். உங்கள் மீது வழக்குகள் மட்டும் தான் இருக்கின்றது. அதில் அரைவாசி வழக்குகள் மருத்துவர்களால் போடப்பட்டுள்ளது. மேலும் அர்ச்சுனா வெளிநாட்டுக்கு வந்தால் சில தொழில் பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நோயாளிகள், சக ஊழியர்கள் அவர்கள் கக்கூஸ் கழுவுவர்களாக இருந்தாலும் கேட்கின்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். நீ என்ன படிச்சனி, எம்பிபிஎஸ் படிச்ச என்னிலும் பார்க்க உனக்கு கனக்கத் தெரியுமோ என்றெல்லாம் கேட்க முடியாது.

அர்ச்சுனா தன்னுடைய யூரியூப்பை நம்பி மக்கள் விரோதியாகாமல் தன்னை பார்த்துக்கொள்ள வேண்டும். இதுவரைக்கும் தன்னுடைய அரசியலுக்கு இன்னொருவரை வென்றெடுக்க வக்கற்ற ஒருவராகவே அர்ச்சுனா இருக்கின்றார். அவரோடு பயணிப்பார் என்று நம்பப்பட்ட கௌசல்யா நரேந்திரன் தற்போது வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளார். அவருக்கு உண்மையில் என்ன நடந்தது. ஒரு சட்டத்தரணியாக கௌசல்யா நரேந்திரன் மக்களிடம் வந்து பேச வேண்டும்.

தன்னுடைய ஆசிரியர் வழங்கிய குற்றச்சாட்டை வைத்து சபையை பிழையாக வழிநடத்துகின்றார் அர்ச்சுனா மின்சாரசபை அதிகாரி குற்றச்சாட்டு !

தன்னுடைய ஆசிரியர் வழங்கிய குற்றச்சாட்டை வைத்து சபையை பிழையாக வழிநடத்துகின்றார் அர்ச்சுனா மின்சாரசபை அதிகாரி குற்றச்சாட்டு !

 

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மின்சார சபை அதிகாரி ஒருவர் பா உ அர்ச்சுனாவுக்கு முகத்தில் அறைந்தது போன்று சில பதில்களையும் வைத்தார். தன்னுடைய முகத்தை மிக இறுக்கமாக வைத்திருந்த அந்த அதிகாரி , ஊசி அர்ச்சுனாவுக்கு கற்பித்த ஆசிரியர் ஒருவர் அவருக்கு வழங்கிய குற்றச்சாட்டை வைத்துக்கொண்டு ஊசி அர்ச்சுனா இந்த சபையையும் நாட்டையும் தவறாக வழிநடத்துவதாக அர்ச்சுனாவின் முகத்தில் அறைந்தாற் போல் குற்றம்சாட்டினார்.

அரசியல் விடயங்கள் கதைக்க வேண்டாம் என நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தாண்டி யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை பற்றி விவாதிக்க வேண்டிய இடத்தில் அதிகாரிகளை கூப்பிட்டு வைத்து அவமானம் செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றச்சாட்டினார். மேலும் இதனை கண்டித்து ஆக்க பூர்வமாக நடக்காத கூட்டத்தை விட்டு தான் வெளியேறுவதாகக் கூறி அங்கிருந்து வெளியேறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஏன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இடையில் வெளியேறி ஸ்ரன்ட் அடிக்க வேண்டும். எம்பி சிவஞானம் சிறிதரன் அரசாங்க அதிகாரிகள் அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்று கொந்தளித்தன் பின்னணியில் கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளுடன் அவருக்கு இருக்கும் தொடர்பே காரணமாக கூறப்படுகிறது.

கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்கள விடயத்துக்கு வெளியேறினால் அது தன்னுடைய பெயரைப் பாதிக்கும் என்பதால் இந்த விடயத்தில் அரச அதிகாரிகளுக்காக பா உ சிறிதரன் வெளிநடப்புச் செய்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் தான் ஊசி அர்ச்சனா தமிழ் பெண்கள் சிலரை விபச்சாரிகள் என்று விமர்சித்ததற்கு பாராளுமன்றத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பா உ சிறிதரன் அதனைக் கண்டித்து தமிழ் பெண்களை விபச்சாரிகள் என்று ஊசி அர்ச்சுனா சுட்டிக்காட்டியதை கணக்கெடுக்காது, சபாநாயகர் அர்ச்சுனாவுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையைக் கண்டித்திருந்தார். நாங்கள் தமிழ் தேசியத்தின் தூண்கள் என்றார். இப்ப மீண்டும் மல்லுக்கட்டுகின்றனர்.

அர்ச்சுனா ஒரு குழப்படிகாரப் பொடி: அர்ச்சுனா குரைக்கின்றார் என்பதற்காக பொறுப்பானவர்கள் குரைக்கக் கூடாது !

அர்ச்சுனா ஒரு குழப்படிகாரப் பொடி: அர்ச்சுனா குரைக்கின்றார் என்பதற்காக பொறுப்பானவர்கள் குரைக்கக் கூடாது !

பள்ளிக்கூடங்களில் எல்லா வகுப்பிலும் ஓரிரு சிறுபிள்ளைத்தனமான குறளிவித்தை செய்யும் மாணவர்கள் இருப்பார்கள். அவ்வாறான மாணவர்களை பக்குவமாகக் கையாள்வது ஆசிரியருடைய பொறுப்பு . அதேபோல கூட்டத்தில் குழப்பம் விளைவிப்பவர்களை கையாள்வது சபையின் முதல்வருடைய பொறுப்பு. அர்ச்சுனா ஒரு சமூகம் பற்றிய புரிதல் அற்ற உளவியல் பிரச்சினைகள் கொண்ட குறளிவித்தைக்காரன். அர்ச்சுனா கூட்டங்களில் குரைக்கின்றார் என்பதற்காக மற்றவர்களும் குரைப்பது அவ்வளவு ஆரோக்கியமானது இல்லை என்பதற்கு நல்லூர், வேலனை பிரதேசசபைக் கூட்டங்கள் மற்றும் யாழ் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் என்பன நல்ல உதாரணங்கள். யாழில் நேற்றைய தினம் நடந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் குழப்பத்தில் முடிவடைந்தது. இந்த விவகாரம் தொடர்பில் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்திருந்தார்.

வரவு செலவுத்திட்டத்தில் வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை கணக்காய்வு செய்யும் மற்றும் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திதிட்டங்கள் தொடர்பாக யாழில் நேற்று அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால் அக்கூட்டத்தை வினைத்திறனாக நடத்த விடாமல் சில நபர்கள் குழப்பங்களை ஏற்படுத்தினார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இருந்தபோதும் வடக்கிற்கு கொண்டுவரப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் தாங்கள் கலந்துரையாடி உள்ளோம் என்றார். கூட்டம் குழப்பத்தில் முடிந்தாலும் வடக்கில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தித் திட்டங்களிலிருந்து என்பிபி அரசாங்கம் பின்வாங்கப்போவதில்லை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சூளுரைத்தார். கூட்டத்தை குழப்பிய பாராளுமன்ற அர்ச்சுனாவையே அமைச்சர் இவ்வாறு சாடியிருந்தார்.

பாராளுமன்ற சம்பளத்தைவிட யூரியூப் மூலம் ஒரு லட்சம் ரூபாய் வரை உழைப்பதாகத் தெரிவிக்கும் அர்ச்சுனா தன்னுடைய வெளிநாட்டில் உள்ள பார்வையாளர்களை கிளுகிளுப்பாக வைத்திருக்க பல்வேறு குறளிவித்தைகளையும் காட்டி வருகின்றார். அதற்காக அவர் எந்தக் கீழ் நிலைக்கும் செல்லத் தயங்கப் போவதில்லை.

கடந்த ஆறுமாதங்களில் அர்ச்சுனா தன்னை யார் என்பதை மிகத் தெளிவாக அடையாளப்படுத்தி உள்ளார். அதனால் அவருடைய நிலையை உணர்ந்து தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருடைய உளவியல் வலைக்குள் சிக்காமல் அறிவுபூர்வமாகச் செயற்பட வேண்டும். அர்ச்சுனா குரைக்கின்றார் என்பதற்காக என்பிபி பாராளுமன்ற உறுப்பினர்களும் பதிலுக்குக் குரைத்து மக்களுக்கு செய்ய வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகளை பிற்போடக் கூடாது. பா உ ரஜீவன் தலைமையில் நடந்த நல்லூர் பிரதேசசபைக் கூட்டத்தை ரஜீவன் ஓரளவு அவதானமாகச் செய்திருந்தாலும் ஊசி அர்ச்சுனாவுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்கக்கூடாது.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளான ஆளும் கட்சி எம்பி இளங்குமரன் கருணாநாதன் எதிர்க்கட்சி எம்பியுமான அர்ச்சுனா இராமநாதன் இருவரும் கண்டபடி வார்த்தைகளை அள்ளி வீசி மோதிக் கொண்டனர். அரசாங்க அதிகாரிகள் மற்றும் மக்கள் முன்னிலையில் முக்கியமான பிரச்சினைகளை கதைக்க வேண்டிய நேரத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் தனிப்பட்ட விடயங்களை இழுத்து பரஸ்பரம் சேற்றை வாரியிறைத்து கூட்டத்தை நாறடித்தனர்.

கிழக்கில் நடைபெறுகின்ற அமைதியான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களுக்கு மாறாக வடக்கில் அர்ச்சுனாவின் யூரியூப் வியூஸ்க்காக பெரும்பாலும் உருப்படியற்ற கலாட்டா கூட்டங்களே நடைபெறுகின்றது. பொதுவாகவே ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்கள் காரசாரமான வாதப்பிரதி வாதங்களால் அதகளப்படுவது அவ்வப்போது நடைபெறுவது உண்டு. முக்கியமான விடயங்கள் கலந்துரையாட வேண்டிய கூட்டத்தை கேலிக்கூத்தாக்க முடியாது. தனிநபர் வசை பாடல்களை தவிர்க்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறலாம்.

அர்ச்சுனா தன்னை நோக்கி என்ன கேள்வி வந்தபோதும் தேய்ந்துபோன றெக்கோட் (Record) போல் நான் எம்பிபிஎஸ் படித்தனான் நீ என்ன படிச்சனி என்பதில் வந்து நிற்கின்றார். பொன்னம்பலம் கஜேந்திரகுமாரும் தன்னளவுக்கு இல்லாவிட்டாலும் கொஞ்சம் படித்தவராம் அதனால் தான் தான் கூட்டுச்சேர்ந்தவர் என்கிறார். தலைவர் பிரபாகரன் எட்டாம் வகுப்பை தாண்டாதபடியால் தன்னளவிற்கு இல்லாவிட்டாலும் கொஞ்சம் படித்த அன்ரன் பாலசிங்கத்தை மதியுரைஞராக வைத்திருந்தவராம். தன்னளவுக்கு இல்லாவிட்டாலும் அன்ரன் பாலசிங்கம் என்ற படித்தவர் இல்லாவிட்டால் பிரபாகரனின் நிலையும் பரிதாபம் என்று நினைக்கின்றார் ஊசி அர்ச்சுனா.

இப்படியான வேண்டத்தகாத மற்றும் நேரத்தை விரயமாக்கும் குழறுபடிகளை தவிர்க்க வேண்டிய நடவடிக்கைகளை முற்கூட்டியே திட்டமிட வேண்டும். நிகழ்ச்சி நிரல் முறையாக தயாரிக்கப்பட்டு அதன்படியே ஒருங்கிணைப்பு கூட்டத்தை கொண்டு நடத்த வேண்டும். நடந்த குழப்பங்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திறமையாக சமாளிக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நடந்த அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களை அவர் மிகத் திறமையாக கையாண்டிருந்தார். எதிர்காலத்திலும் அவர் திறமையாகக் கையாள்வார் எனக் கொள்ளலாம்.

லைக்கா செக்ஸ் சாமியார் எனக் குற்றம்சாட்டப்பட்ட புலிக்கள் முரளிகிருஷ்ணனின் வழக்கு ! 

லைக்கா செக்ஸ் சாமியார் எனக் குற்றம்சாட்டப்பட்ட புலிக்கள் முரளிகிருஷ்ணனின் வழக்கு !

லைக்கா – செக்ஸ்சாமியார் எனக் குற்றம்சாட்டப்பட்ட, புலிக்கள் முரளிகிருஷ்ணனின் பாலியல்துஸ்பிரயோகம் பற்றிய வழக்கு நேற்று திக்கள் கிழமை முதல் ஏழு நாட்களுக்கு விசாரணைக்கு வந்துள்ளது. பிரித்தானியாவில் கிங்ஸ்பறி என்ற இடத்தில் ஆலயத்தை உருவாக்கி பக்தர்களைக் கவர்ந்து இழுத்துள்ள, இந்த செக்ஸ் சாமியார், மீதான வழக்கை பிரித்தானிய மெற்றோபொலிட்டன் பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.

பா உ அர்ச்சுனா உள்ளிட்டவர்கள் தமிழ் பெண்களை இலங்கையில் கேவலப்படுத்தி அவர்களுக்கு விபச்சாரப் பட்டம் வழங்குவதுடன் பெண்களின் நிர்வாணப்படங்களையும் சமூக வலைத் தளங்களில் பதிவேற்றி வருகின்றனர். இவ்வாறான ஒரு சமூகம் பிரித்தானியாவுக்கும் வேறு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த போதும் ஆணாதிக்க சிந்தனைமுறையிலிருந்து இன்னமும் விடுபடாமலேயே உள்ளது. பிரித்தானியாவிலும் தமிழ் ஆண்கள் சிலர், சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக தண்டணை பெற்றுள்ளனர். அவ்வாறு தண்டணை பெற்ற ஒருவருக்கு, அவரை விரைவில் விடுதலை செய்யக் கோரி நாற்பதிற்கும் மேற்பட்டவர்கள் நற்சான்றிதழ் வழங்கியதும் பிரித்தானியத் தமிழர்கள் மத்தியில் தான் நிகழ்ந்தது.

அர்ச்சுனாவும் அவருக்குத் துணையாக பெண்களின் நிர்வாணத்தை தரவேற்றும் ஊழல் ஒழிப்பு அணி வன்னி மற்றும் அர்ச்சுனா அடியான்கள் தான் ஆணாதிக்க வாதிகள் அல்ல. காமுகன் பிரேமானந்தாவை வணங்கும் விக்கினேஸ்வரனும் அவருடைய தலைமையில் அரசியல் செய்யும் கூட்டமும் இந்த ஆணாதிக்கத்துள் புதைந்து கிடப்பவர்கள் தான். இவர்கள் ”நான் என்ன குச்சிகட்டியிருந்த 16 வயது பெண்ணையா கொண்டே செய்தேன்” என்று கேட்கின்ற சீமானைத் தலைவராகக் கொண்டுள்ளனர்.

செக்ஸ் சாமியார் என்று குற்றம்சாட்டப்படும் இவரைக் குப்பிடுவதற்கும் பணத்தை வாரி இறைப்பதற்கும் பெரும் கூட்டம் லண்டனில் உள்ளது. முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் போன்று லைக்கா குருசாமி பிரேம், புலிக்கள் முரளிகிருஷ்ணனின் பக்தர். தனக்கு ஏற்பட்ட புற்றுநோயைக் குணப்படுத்தியதால் தனக்கு இந்தப் பக்தி ஏற்பட்டதாக பிரேம் தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தார்.

புலிக்கள் முரளிகிருஷ்ணன் நீண்டகாலம் தடுப்பிலிருந்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இவரை லைக்கா பிரேமே பிணை எடுத்ததாகவும், இந்த வழக்குக்கான நிதியை இவரே வழங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. இது பற்றி லைக்கா பிரேமிடம் கேட்ட போது அவர் அதனை மறுத்திருந்தார்.

லண்டன் வூட்கிரீன் கிறவுன் நீதிமன்றில் இடம்பெறும் இவ்வழக்கு அடுத்தவாரம் செவ்வாய்க்கிழமை வரை தொடரும். பாதிக்கப்பட்ட பெண்ணிணுடைய விபரங்களை வெளியிட நீதிமன்றம் கண்டிப்பான தடையை விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.

லண்டன் தமிழ் சமூககம் நீண்டகாலமாக சர்ச்சைக்குள்ளாகி உள்ள இவ்வழக்கை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இது போன்ற வழக்குகள் நீதமன்றம் வந்து தண்டனைகள் வழங்கப்படுவதனால் மட்டுமே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மட்டுப்படுத்தப்படும் என பெண்ணியவாதிகள் கருதுகின்றனர்.

இலங்கையின் பல்கலைக்கழகங்களில் குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் கலைப் பீடாதிபதி உட்பட பலர் பாலியல் லஞ்சம் கோருகின்றனர் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு ள்ளது. பேராசிரியர் ரி கணேசலிங்கத்திற்கு எதிராக பாலியல் வன்புணர்வு வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இவர்கள் இன்றும் தமிழ் தேசியத்தின் பிரதிநிதிகளாக வலம் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்பிபி க்கு மாற்றாக தெற்கிலோ வடக்கிலோ முற்போக்கான தலைமைகள் இல்லை ! அதனால் வடக்கில் 50 வீதத்திற்கு அதிகமான ஆசனங்களை என்பிபியே கைப்பற்றும் – சோலையூரான் !

என்பிபி க்கு மாற்றாக தெற்கிலோ வடக்கிலோ முற்போக்கான தலைமைகள் இல்லை ! அதனால் வடக்கில் 50 வீதத்திற்கு அதிகமான ஆசனங்களை என்பிபியே கைப்பற்றும்

 

ஈபிஆர்எல்எப் முன்னாள் போராளிஇ சமூக அரசியல் செயற்பாட்டாளர் சோலையூரானுடன் நேர்காணல்

 

 

ஆபிரிக்க பெருங்கண்டத்தில் இரண்டாவதாக பெண் ஜனாதிபதி – 72 வயது நெடும்போ !

ஆபிரிக்க பெருங்கண்டத்தில் இரண்டாவதாக பெண் ஜனாதிபதி – 72 வயது நெடும்போ !

 

ஆபிரிக்க நாடான நமீபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதில் தென்மேற்கு ஆபிரிக்க மக்கள் அமைப்பு கட்சி சார்பில் போட்டியிட்ட நெடும்போ நந்தி தைத்வா (வயது 72) 58 சதவீதம் வாக்குகள் பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இத்தேர்தலின் மூலம் நமீபியா நாட்டின் முதல் பெண் அதிபர் மற்றும் ஆபிரிக்காவின் 2-வது பெண் அதிபர் என்ற பெருமையை நெடும்போ பெற்றுள்ளார். நபீபியா என்ற ஒரேயொரு நாடே ஜேர்மனியின் காலனித்து ஆட்சியின் கீழிருந்த நாடாகும்.