2010
2010
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற அமைச்சுப் பொறுப்பு ஏற்க உள்ளதாகத் தெரிய வருகிறது.
40 வயதுடைய ஜயசூரிய தற்போது ஐ. பி. எல். போட்டிகளில் மும்பை அணி சார்பில் விளையாடி வருகின்றார். நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 74,352 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கையின் வரலாற்றில் மூன்றாவது விளையாட்டு வீரர் ஒருவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் உலகக் கிண்ண வீரர் அர்ஜுன ரணதுங்க, ஹசான் திலகரட்ன ஆகியோர் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதேவேளை முன்பு ஆளுங்கட்சி சார்பில் செயற்பட்ட அர்ஜுன ரணதுங்க தற்போது ஜனநாயகத் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுகின்றார்.
பாராளுமன்றத்திற்கு தெரிவாகிய போதிலும் தொடர்ந்தும் தனது இடத்திற்காக தேசிய போட்டிகளில் தனது பங்களிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளுவார் எனவும் ஏ. எப். பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியலில் இடம் பெற்றிருந்த முன்னாள் சபாநாயகர் லொக்குபண்டார சப்ரகமுவ மாகாணசபையின் ஆளுநராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதன் கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைப்பெற்ற ஊடவியலாளர் மாநாட்டின் போதே முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சப்ரகமுவ மாகாண ஆளுணராகப் பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளார்.
ஹரி போட்டர் புத்தகம் எழுதிய பிரபல பெண் எழுத்தாளர் ஜே.கே.ராவ்லிங், பிரிட்டன் அரசியல் களத்தில் குதித்துள்ளார். அடுத்த மாதம் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக ஆளும் கட்சிக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்து வருகிறார். பிரிட்டனின் பிரபல பெண் எழுத்தாளர் ஜே.கே.ராவ்லிங் உலகம் முழுவதும் உள்ள சிறுவர்களின் மனம் கவர்ந்தஇ ‘ஹரி போட்டர்’ புத்தகங்களை எழுதியதால் பிரபலமானார்.
ஹாரி போட்டர் புத்தகம் எழுதியதன் மூலம் கிடைத்த வருவாயால் பிரிட்டனின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ராவ்லிங்கும் இடம் பெற்றுள்ளார்.
ஜே.கே.ராவ்லிங்கிற்கு தற்போது அரசியல் ஆசை வந்துள்ளது. வரும் மே 6ம் தேதி நடக்கவுள்ள பிரிட்டன் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவாக அவர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்டுள்ள விஷயங்களை மேடைகள் தோறும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணியிலிருந்து விலகுவதாக மனோ கணேசனின் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. மனோ கணேசனுக்கு ஐக்கிய தேசிய முன்னணி வாக்களித்தபடி தேசியப் பட்டியலில் நியமனம் வழங்கப்படாததை எதிர்த்தே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனோ கணேசனுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையிலான ஒன்பது வருடகால உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினர் தம்முடன் எழுத்துபூர்வகச் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி நடந்து கொள்ளவில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்குளேயே இருக்கும் சில பேரினவாத நபர்களாலேயே தமது கட்சிக்கு தேசியப் பட்டியலில் இடம் கிடைக்காமல் போனது என்றும் பிரபா கணேசன் கருத்து வெளியிடுகிறார்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது தமது கட்சிக்கு கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் ஒரு இடத்தை விட்டுக் கொடுப்பதற்கு ஈடாக தேசியப் பட்டியலில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஒரு இடம் வழங்கப்படும் என்று ரணில் விக்ரமசிங்க உறுதியளித்ததாகவும் மனோ கணேசன் கூறுகிறார்.
இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உப தலைவர் வேலணை வேணியன் விடுத்துள்ள அறிக்கையில் :- கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக எமது தலைவரும் நாங்களும் நேற்றுவரை ஐ. தே. கட்சியின் தலைவரை நம்பியிருந்தோம். எமது தலைவருக்கு ஐ. தே. கட்சி மனிதாபிமான அடிப்படையில் தேசியப் பட்டியலில் ஒரு கூட்டுக் கட்சியின் தலைவர் என்ற வகையில் பாராளுமன்றத்தில் ஓர் இடம் கொடுத்திருக்க வேண்டும்.
இன்று அக்கட்சி தமிழ் மக்களின் காலையே வாரி விட்டது போலவே கருதுகிறோம். இன்று முதல் ஐ. தே. கட்சிக்கும் எமக்கும் இடையே இருந்த கூட்டணி முறிவடைந்துவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரை மட்டுமல்ல எமது கட்சி சார்ந்த பல இலட்சக் கணக்கான வாக்காளர்களான தமிழ் மக்களுக்கே துரோகம் செய்து விட்டதாகவே கருதுகிறோம்.
ஐஸ்லாந்தின் எரிமலைக் குமுறல் 80 வீதத்தால் தணிய ஐரோப்பிய விமானப் போக்குவரத்து மீளவும் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் நேற்று (ஏப்ரல் 20 2010) இரவு பத்து மணி முதல் இயங்க ஆரம்பித்தது. பிரித்தானியாவின் பெரும்பாலான விமான நிலையங்கள் இன்று முதல் இயங்க ஆரம்பித்து உள்ளன. விமான நிறுவனங்களின் விமானங்கள் உலகின் பல்வேறு பாகங்களிலும் தரையிறக்கப்பட்டதால் வழமையான சேவைகளை உடனடியாக ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. இருந்த போதும் ஐரோப்பா முழுவதும் 75 வீதமான விமானப் பயணங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐஸ்லாந்தின் எரிமலைக் குமுறல் காரணமாக கடந்த ஆறு நாட்களாக பெரும்பாலும் மூடப்பட்டு இருந்த ஐரோப்பிய விமானப் போக்குவரத்து ஐரோப்பிய பொருளாதாரத்திலும் ஐரோப்பிய சகஜ வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது விமானப் போக்குவரத்து வழமைக்குத் திரும்பிக் கொண்டிருப்பினும் கடந்த ஆறு நாட்களாக விமானப் போக்குவரத்து தடைப்பட்டதன் தாக்கத்திலிருந்து ஐரோப்பா இன்னமும் முற்றாக விடுபடவில்லை. குறிப்பாக உலகின் பல்வேறு பாகங்களுக்கும் பயணித்தவர்கள் மீண்டும் தங்கள் சொந்த நாடுகளுக்கு வர முடியாமல் தங்கள் விமானப் பயணத்திற்காகக் காத்திருக்கின்றனர். இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து ஐரோப்பிய தலைநகரங்களுக்கு வரவேண்டிய விமானங்கள் இன்றும் புறப்படவில்லை.
இந்த விமானப் போக்குவரத்துத் தடையால் ஐரோப்பிய பொருளாதாரம் மட்டுமல்ல உல்லாசப் பயணத்துறை மற்றும் ஏற்றுமதிகளில் பெரும்பாலும் தங்கியுள்ள கென்யா போன்ற நாடுகளின் பொருளாதாரமும் கடுமையாகத் தாக்கப்பட்டு உள்ளது.
எரிமலைக் குமுறல்கள் ஏற்படுவது இது முதற் தடவையாக இல்லாத போதும் சர்வதேச விமானப் போக்குவரத்து இவ்வளவு தூரம் தாக்கப்பட்டது இதுவே முதற்தடவையாகும். எரிமலைக் குமுறலினால் வளிமண்டலத்துக்கு தள்ளப்பட்ட புகைமண்டலத்தில் காணப்பட்ட துகள்களே விமானப் பயணங்கள் தடைப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இத்துகள்கள் விமானத்தின் என்ஜினுக்குள் சென்று அதனைச் செயலிழக்கச் செய்யும் என்ற அச்சம் காரணமாகவே விமானங்கள் ஐரோப்பிய வான் பரப்பில் இருந்து தரையிறக்கப்பட்டது.
ஆனால் இத்துகள்கள் விமான என்ஜினைச் செயலிழக்கச் செய்யும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என இறுதியில் முடிவெடுக்கப்பட்டு ஐரோப்பிய வான் பரப்பு மீண்டும் திறந்துவிடப்பட்டு உள்ளது. இந்த முடிவினை முன்கூட்டியே எடுத்திருக்கலாமா என்ற வாதம் தற்போது வலுப்பெற்று வருகின்றது. மேலும் வான் பரப்பை மீண்டும் திறந்துவிட எடுத்த முடிவு விஞ்ஞானிகளின் முடிவு என்பதிலும் பார்க்க ஐரோப்பிய விமான நிறுவனங்கள் வழங்கிய கடுமையான அழுத்தம் காரணமாகவே உடனடியாக ஐரோப்பிய வான் பரப்பு போக்குவரத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது என்ற வாதமும் பலமாக உள்ளது. மேற்படி முடிவை எடுப்பதற்கு முன் விமான நிறுவனங்களின் தலைமைகள் பிரித்தானிய அரசுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டன. அதன் முடிவிலேயே வான் பரப்பு போக்குவரத்திற்கு திறந்துவிடப்பட்டது.
தூசு மண்டலத்தின் செறிவு ஒரு கன மீற்றருக்கு 0.002கிராம் இற்கு குறைவாக இருந்தால் விமானங்கள் பயணிக்க முடியும் என்ற முடிவுக்கு தற்போது Civil Aviation Authority (CAA) வந்துள்ளது. தற்போது பிரித்தானிய வளிமண்டலத்தில் ஒரு கன மீற்றருக்கு 0.0001 கீராம் செறிவிலேயே தூசு காணப்படுகின்றது. ஆனால் ஐரோப்பிய வான் பரப்பில் விமானங்கள் பறக்க தடைவித்தக்கப்பட்ட போது தற்போதைய செறிவு எல்லைக்கு மிகக் குறைவாக கன மீற்றருக்கு 0.0004 கிராம் செறிவிலேயே பிரித்தானிய வளிமண்டலத்தில் துகள்களின் செறிவு காணப்பட்டதாக சில விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். அதனால் ஐரோப்பிய வான் பரப்பை முற்றாக போக்குவரத்திற்கு உகந்ததல்ல என்று தடை செய்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற குற்றச்சாட்டு விமான நிறுவனங்களிடம் இருந்து வர ஆரம்பித்துள்ளது. இந்நடவடிக்கை மிகைப்படுத்தப்பட்ட ஒரு தேவையற்ற எச்சரிக்கை நடவடிக்கை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
விமானப் போக்குவரத்து கடந்த ஆறு நாட்களாகத் தடைப்பட்டதால் விமான நிறுவனங்களுக்கு 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டதாக International Air Transport Association (IATA) மதிப்பிட்டுள்ளது. இந்த நட்டத்தை ஈடுசெய்வதற்கு விமான நிறுவனங்கள் அரச நிதியுதவியை ஏதிர்பார்த்துள்ளன. ஆனால் கூடுதல் விமானச் சேவையை மேற்கொள்வதன் மூலம் இந்த நட்டத்தை ஈடுசெய்ய விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்படலாம் எனவும் தெரியவருகின்றது.
ஏற்கனவே பிரித்தானியாவில் பள்ளிகள் கல்லூரிகள் அரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஈஸ்ரர் விடுமுறையைக் கழிக்க உலகின் பல்வேறு பாகங்களுக்கும் சென்றவர்கள் மீண்டும் நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். விடுமுறையில் சென்றவர்கள் தங்கள் விடுமுறைக் காலத்திற்கு அதிகமான காலத்தை கழிப்பதால் தங்கள் விடுமுறையை இழக்கின்றனர். அல்லது சம்பளம் அற்ற விடுமுறையாக அவை கணிக்கப்படுகின்றது. மேலும் எப்படியாவது நாடு திரும்ப முற்பட்டவர்கள் மேலதிக கட்டணங்களைச் செலுத்தி நாடு திரும்ப வேண்டிய நிலையேற்பட்டது. ஐரோப்பிய வான் பரப்பு போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்ட போதும் விமானப் போக்குவரத்து மே முதல் வாரமளவிலேயே வழமைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக சர்ச்சைக்குள்ளான நித்யானந்தா இமாச்சல பிரதேசத்தில் இன்று கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகிள்ளன. இமாச்சலத்தில் உள்ள சோலன் என்னுமிடத்தில் அவரை கர்நாடக பொலிசார் கைது செய்துள்ளதாக இந்திய நாளிதழ்கள் தெரிவிக்கின்றன.
நடிகையுடன் உல்லாசமாக இருந்ததே நித்தியானந்தரின் வழக்கில் முக்கிய குற்றமாக கருதப்டுகிறது. வழக்கு பதிவு செய்யப்பட்டு 45 நாட்கள் கழித்து ஒருவாறாக நித்தியானந்தரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நடிகை ரஞ்சிதாவும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஞ்சிதா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இப்போது எங்கே இருக்கிறார் என்பது தற்போதைய கேள்வி.
Dissa nayake Mudiyanselage Jayaratne was sworn in as the Prime Minister before President Mahinda Rajapaksa at Temple Trees a short while ago. The auspicious time to take oaths had been 6:06 p.m. Mr. D. M Jayaratne entered parliament from Gampola electorate following the General Election in 1970 from the United Front led by Mrs. Sirimavo Bandaranaike.
Born in June 7, 1931 he is one of the earliest members of the Sri Lanka Freedom Party when it was founded in Kandy in 1951. He was educated at Doluwa Maha Vidyalaya where he was a teacher later. He was later the Postmaster at Doluwa, Gampola from 1960-62.
He was defeated in the General Election of 1977 and later re-elected from the Kandy District. In the 1989 General Election, he obtained 54,290 votes; the highest polled by a candidate of the district from the SLFP and was a member of the opposition in the parliament.
He was a key member in forming the People’s Alliance and in the General Election of 1994, he was elected again with the highest number of votes from the Gampola electorate and appointed Minister of Land, Agriculture and Forestry in the cabinet of Prime Minister Chandrika Bandaranaike Kumaratunga.
Following the election in 2000 he was appointed Minister of Agriculture, Food and Cooperatives. With the General Election victory of the PA in 2004, he was appointed Minister of Post and Telecommunication and Upcountry Development and later in 2005 was appointed Minister of Posts and Telecommunication and Rural Economic
Development under President Mahinda Rajapaksa. From 2007 to date he has been the Minister of Plantation Industries.
In 2001, he was elected Chairman of the Asia Pacific Region of Food and Agriculture Organization (FAO).
Mr. Jayaratne is the 20th Prime Minister of the Democratic Socialist Republic of Sri Lanka.
2009 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் (பம்பலப்பிட்டி) கொழும்பு இந்துக் கல்லூரி மாணவன் சுசேந்திரலிங்கம் துவாகரன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் பாடசாலைகளில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார். ஆகக் கூடுதலான புள்ளிகளுடன் எட்டு ஏ, ஒரு பி பெறுபேற்றைப் பெற்று துவாகரன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு வின்சன்ற் பெண்கள் உயர் பாடசாலை மாணவி ஷோபனா ஸ்ரீ சூரிய காந்தன் இரண்டாமிடத்தையும், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் தனபாலசிங்கம் தர்ஷன் மூன்றாம் இடத் தையும் பெற்றுள்ளனர். நான்காம், ஐந்தாம் இடத்தை முறையே இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவி துலசி சர் வேஸ்வரன், கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரி மாணவன் வரதராஜன் ரிஷிகேஷ் ஆகியோர் அடைந்துள்ளனர்.
எனினும் இவர்கள் இருவரும் ஒரே புள்ளிகளைப் பெற்றுள்ளனர். அதேபோன்று ஆறாம், ஏழாம் இடங்களை யாழ்ப்பாணம் சுண்டிக்குழி மகளிர் கல்லூரி மாணவி லக்ஷனா விஜயகுமாரன், திருகோணமலை ஆர். கே. எம். ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவன் ரட்னகுமார் நீதன் ஆகியோர் சமமான புள்ளிகளைப் பெற்றுச் சித்தியடைந்துள்ளார்கள்.
கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் விஜயரட்ணம் விதுஷன் எட்டாவது இடத்தைப் பெற்றிருக்கிறார். அதேபோன்று மூன்று மாணவர்கள் சமமான புள்ளிகளைப் பெற்று 9ஆம், 10ஆம் இடங்களுக்குத் தெரிவாகியுள்ளனர்.
மட்டக்களப்பு சென். மைக்கல் கல்லூரி தேசிய பாடசாலையின் மோகனசுந்தரம் கீர்த்தன். கொழும்பு – 4, திருக்குடும்ப கன்னியர்மட பாடசாலையின் கேஷிகா குமாரதீஸன், யாழ். வேம்படி மகளிர் கல்லூரியின் விதுக்ஷா மகேந்திரராஜா ஆகியோர் சமமான புள்ளிகளைப் பெற்றுச் சித்தியடைந்துள்ளனர்.