சனத் ஜயசூரிய தொடர்ந்தும் தேசிய போட்டிகளில் விளையாடுவார்

sanath-jayasuriya.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற அமைச்சுப் பொறுப்பு ஏற்க உள்ளதாகத் தெரிய வருகிறது.

40 வயதுடைய ஜயசூரிய தற்போது ஐ. பி. எல். போட்டிகளில் மும்பை அணி சார்பில் விளையாடி வருகின்றார். நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 74,352 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையின் வரலாற்றில் மூன்றாவது விளையாட்டு வீரர் ஒருவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் உலகக் கிண்ண வீரர் அர்ஜுன ரணதுங்க, ஹசான் திலகரட்ன ஆகியோர் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதேவேளை முன்பு ஆளுங்கட்சி சார்பில் செயற்பட்ட அர்ஜுன ரணதுங்க தற்போது ஜனநாயகத் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுகின்றார்.

பாராளுமன்றத்திற்கு தெரிவாகிய போதிலும் தொடர்ந்தும் தனது இடத்திற்காக தேசிய போட்டிகளில் தனது பங்களிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளுவார் எனவும் ஏ. எப். பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • PALLI
    PALLI

    ஜயா பாராள மன்றமே கிரிகட் மைதானம் போலதானே போகபோகிறது, உங்கள் பாட்டுக்கு போட்டு தாக்குங்கோ; என்ன உங்களுக்கு எதிராக எதிர் கட்ச்சியினர் போல் போடுவார்களோ தெரியவில்லை;

    Reply
  • rohan
    rohan

    அரசியல் தான் ஜயசூரியவை கிறிக்கெற்றில் வைத்திருக்கிறது என்பது கிறிக்கெற் இரசிகர்களுக்குத் தெரிந்த விடயம்.

    இனி அவர் கிறிக்கெற்றில் இருந்தாலும் அரசியல் தான் அவரை அங்கு வைத்திருக்கும்.

    ஏதோ அவரை நம்பிப் புள்ளடி போட்டோரைப் பார்த்துக் கொண்டால் சரி.

    Reply