ஊழல் கரை படிந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கும் இடம் கிடைத்துள்ளது. வாழ்க்கையின் ஒருங்கிணைந்த ஒரு விஷயமாக இன்று ஊழலும், லஞ்சமும் சேர்ந்து போய் விட்டது. எத்தனை டன் சோப்புப் போட்டாலும் இந்த கரை போகாது என்ற அவல நிலை.
இந்த நிலையில் எந்தெந்த நாடுகளில் ஊழில் மலிந்துள்ளது என்பது குறித்த பட்டியல் ஒன்றை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 19வது இடம் கிடைத்துள்ளது. 10 புள்ளிகளில் இந்தியா 6.8 புள்ளிகளுடன் 19வது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகங்களில்தான் பெருமளவில் லஞ்சம் கை மாறுகிறதாம். ரஷ்யா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் போதுதான் பெருமளவில் லஞ்சம் வாங்குகிறார்களாம். மேலும் வேலையை வேகமாக முடிப்பதற்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டியுள்ளதாக 30 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
லஞ்சம் மிக மிகக் குறைவாக புழங்கும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பவை பெல்ஜியம், கனடா நாடுகள் தான். இந்த நாடுகளில் மிகக் குறைந்த அளவில் லஞ்சம் வாங்குகிறார்களாம். இந்த இரு நாடுகளும் லஞ்சம் குறித்த இன்டெக்ஸில் 8.8 புள்ளிகளுடன் உள்ளனர். இந்த இரு நாடுகளையும் சேர்ந்த நிறுவனங்கள் பொதுவாக லஞ்சம் தருவதில்லையாம்.
இந்த இரு நாடுகளுக்கும் அடுத்து நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் வருகின்றன. இவை 8.7 புள்ளிகளுடன் உள்ளன. இவற்றுக்கு அடுத்த இடங்களில் உள்ள நாடுகள் – ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து , ஆஸ்திரேலியா , அமெரிக்கா , பிரான்ஸ், சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகியவை.உள்ளன