யுத்த நடவடிக்கைகளால் அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் குடிநீர் விநியோகத் திட்டத்துக்கு ஜப்பான் அரசாங்கம் 8.6 மில்லியன் ரூபாவை உதவியாக வழங்கியுள்ளது.
குறிப்பிட்ட பிரதேசத்துக்கான குடிநீர் விநியோகத்திட்டத்தின் நிர்மானப்பணிகள் 2002 ஆம் ஆண்டு முதல் தடைப்பட்டுள்ளன.
ஜப்பான் நிதியுதவி மூலம் தடைப்பட்டுள்ள நிர்மானப்பணிகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அம்பாறை மாவட்டத்தின் தமன பிரதேச செயலகப்பிரிவைச் சார்ந்த 600 குடும்பங்களுக்கு குடிநீர் வசதி கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.