இலங்கை இராணுவத்தின் 60ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுவதற்காக இராணுவத்தினர் ஒவ்வொருவரினதும் மாதாந்த சம்பளத்திலிருந்து 1800 ரூபா வெட்டப்படுவது ஏன் என ஜே.வி.பி. எம்.பி. அனுரகுமார திஸாநாயக்க சபையில் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார். முன்னதாக எழுந்த அனுரகுமார திஸாநாயக்க எம்.பி. இராணுவத்திற்கான விழாவை கொண்டாடுவதற்கு இராணுவத்தினரின் சம்பளத்திலிருந்தே பணம் அறவிடுவது ஏன்? அரசாங்கம் எவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும்.
இலங்கை போக்குவரத்து சபை, ‘அபிவெனுவென் அபி’ போன்றவற்றின் மூலமாக நிதி திரட்டப்பட்டது. எனினும் இந்த நிதியின் மூலமாக படையினருக்கு எவ்விதமான சேவைகளும் செய்யப்படவில்லை. இவ்வாறானதொரு நிலையிலேயே இராணுவத்தினரிடமிருந்து தலா 1800 ரூபா சம்பளத்தில் கழிக்கப்படுகின்றது. தேர்தல் காலங்களில் படையினர் தொடர்பில் பிரசார மேடைகளில் கூறுவதனை தவிர அரசாங்கம் வேறொன்றும் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டினார்