பாகிஸ் தானுடனான ஐந்து ஒருநாள் சர்வதேச போட்டிகளைக் கொண்ட தொடரில் நேற்று தம்புள்ளை ரங்கிரிய மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இதன்மூலம் பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடரையும் இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் இலகுவாக கைப்பற்றிக்கொண்டது. இலங்கை மண்ணில் பாகிஸ்தானுக்கெதிரான ஒருநாள் தொடரொன்றை இலங்கை அணி வெற்றி கொண்டமை இதுவே முதற்தடவை.
நேற்றைய போட்டியில் முதல் விக்கட்டுக்காக வேண்டி மஹேல ஜயவர்தன உபுல் தரங்க ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக களம் இறங்கினர். முதலாவது விக்கட்டுக்கான 202 ஓட்டங்களை இணைப்பாட்ட ஓட்டமாக பெற்றனர். பாக்கிஸ்தான் முதலாவது விக்கட்டுக்கான பெறப்பட்ட கூடிய இணைப்பாட்டமாக இதேநேரம், தம்புள்ளை ரங்கிரிய மைதானத்தில் ஒரு அணி பெற்ற கூடுதலான ஓட்டமாக 289 ஓட்டத்தை இலங்கை தனதாக்கிக் கொண்டது. இம் மைதானத்தில் ஒருநாளில் இரு அணிகளும் 577 ஓட்டங்களைப் பெற்றன. இதுவும் தம்புள்ளை மைதான சாதனையாகும்.
ஏற்கனவே இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் இலங்கை வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்குமிடையிலான நான்காவது ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்வரும் 07ஆம், 02ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய ஆட்டத்தின் ஸ்கோர் விபரம் வருமாறு:
PAKISTAN
Kamran Akmal c Sangakkara b Mathews 45
Nasir Jamshed c Samaraweera b Thushara 1
Younus Khan run out 44
Shoaib Malik c Sangakkara b Fernando 12
Umar Akmal b Muralitharan 66
Fawad Alam c and b Mathews 13
Shahid Afridi b Muralitharan 32
Abdul Razzaq c Jayawardene b Kulasekara 30
Rana Naved not out 30
Mohammad Aamer not out 4
EXTRAS: (b1, w10) 11
TOTAL (for 8 wkts, 50 overs) 288
Did not bat: Saeed Ajmal.
Fall of wickets: 1-9 (Jamshed), 2-80 (Akmal), 3-101 (Malik), 4-107 (Younus),
5-149 (Alam), 6-190 (Afridi), 7-226 (Naved), 8-266 (Razzaq).
Bowling: Kulasekara 10-0-74-1, Thushara 10-0-46-1 (w7), Fernando 10-1-62-1, Mathews 10-0-41-2, Muralitharan 10-0-64-2 (w3)
SRI LANKA
U. Tharanga lbw b Ajmal 76
M. Jayawardene c Alam b Razzaq 123
K. Sangakkara not out 37
T. Samaraweera c and b Ajmal 0
T. Kandamby b Aamer 32
C. Kapugedera not out 8
EXTRAS:(B-1, LB-4, W-8) 13
TOTAL (for 4 wkts, 46.3 overs) 289
Did not bat: Angelo Mathews, Nuwan Kulasekara, Dilhara Fernando, Muttiah Muralitharan, Thilan Thushara.
FALL OF WICKETS:1-202 (Tharanga), 2-210 (Jayawardene), 3-212 (Samaraweera), 4-268 (Kandamby).
BOWLING: Aamer 9.3-1-45-1 (w2), Razzaq 9-0-62-1 (w1), Naved 7-0-41-0, Afridi 6-0-45-0 (w1), Ajmal 9-0-54-2 (w1), Malik 6-0-37-0 (w3)