இடம் பெயர்ந்த மக்கள் நலனுக்காக் வவுனியா முகாம்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய வைத்திய உதவிச் சேவை மேலும்; இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது என்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரிலேயே மருத்துவமனையின் சேவைகள் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளன.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் இந்திய ஆயுத படையினர் தங்களது சேவைகளை செய்து வருகின்றனர். இந்த வெளிக்கள மருத்துவ மனையில் அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள், குழந்தைகளுக்கான மருத்துவ நிபுணர்கள், பெண் மருத்துவ அதிகாரிகள் ஆகியோர் உட்பட 60 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்
கடந்த மார்ச் மாதத்திலிருந்து பணியாற்றி வந்த முதலாவது மருத்துவர் குழுவை மாற்றிய இந்திய அரசாங்கம் ஜூலை மாதம் மற்றுமொரு குழுவை அனுப்பி இருந்தது. இதுவரை இக்குழுவினர் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு சிகிச்சை அளித்துள்ளது.