நகர்ப்புற போக்குவரத்து அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கொழும்பு நகருக்கான இலகு பிரவேச தென்பகுதி சுற்றுவட்டப்பாதை ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி கொட்டாவையில் இருந்து கடுவளை வரையிலான சுற்றுவட்டப்பாதை அமைப்புக்கான அமைச்சரவைப் பத்திரத்தை நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்பித்திருந்தார்.
சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கி இதற்கு நிதியுதவி வழங்குகிறது. இத்திட்டத்துக்கு 2498 கோடியே 26 இலட்சத்து 1824 ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கெழும்புக்கு 10 முதல் 15 கிலோ மீட்டர் வெளிப்புறமாகச்; செல்லும் இச்சுற்றுவட்டப்பாதையின் முழு நீளம் 29.10 கிலோ மீட்டர் ஆகும். கடுவளைக்கும் கொட்டாவைக்கும் இடையில் அமைக்கப்படவுள்ள இதன் முதல் கட்டத்தின் நீளம் 11 கிலோ மீட்டராகும். இதன் நிர்மானப்பணிகள் சீன ஹாபர் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்பட்டுள்ளது.