இலங்கையின் வடகிழக்கே புதுமாத்தளன் பகுதியில் செயற்பட்ட தற்காலிக மருத்துவமனையில் பணியாற்றிய 3 மருத்துவர்கள் மீது இலங்கை சுகாதார அமைச்சு விசாரணைகளை நடத்திவருவதாக அமைச்சின் பேச்சாளர் தர்ம வன்னிநாயக்க தெரிவித்ததாக பிபிசி செய்தி தெரிவிக்கின்றது.
யுத்த பிரதேசத்தில் கடமையாற்றிய இந்த மருத்துவர்களான டி.சத்தியமூர்த்தி, டி.வரதராஜா, வி.சண்முகராஜா ஆகிய மூவரும் அந்தப் பகுதியில் காயமடைந்த பொதுமக்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கினார்கள் என்று அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னதாக இவர்கள் மூவரும் யுத்த பிரதேசத்திலிருந்து தப்பிவந்தபோது, இவர்களை இராணுவம் கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.