2வது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள மன்மோகன் சிங்குக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். மேலும், தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் செயல்படுவோம் எனவும் அவரிடம் தெரிவித்தார். இன்று காலை மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒபாமா அவருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது உலகளாவிய தீவிரவாதம் , பொருளாதார சீர்குலைவு உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
மேலும், தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்தும், இந்திய, அமெரிக்க இரு தரப்பு உறவை மேலும் வலுவாக்குவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
தீவிரவாதத்தை ஒழிப்பதில் உறுதியுடன் செயல்படவும் இரு தலைவர்களும் உறுதி கூறிக் கொண்டனர். இந்தப் பேச்சின்போது மன்மோகன் சிங்கை அமெரிக்காவுக்கு வருமாறு ஒபாமா அழைப்பு விடுத்தார். லோக்சபா தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதற்காகவும், மன்மோகன் சிங்கின் முந்தைய அரசு கடைப்பிடித்த கொள்கைகளுக்கு மக்கள் அளித்துள்ள பாராட்டே இந்த வெற்றி என்றும் ஒபாமா பாராட்டு தெரிவித்தார்.