ஐ.பி.எல். 2 வது அரை இறுதி போட்டி சனிக்கிழமை ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.
முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 5 விக் கெட்டு இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பெங்களூர் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 149 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூர் அணி இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெற்றது.
தோல்வி குறித்து சென்னை அணி கேப்டன் டோனி கூறியதாவது: நாங்கள் 160 ரன்கள் வரை எடுக்கலாம் என எதிர்பார்த்தோம் ஆனால் 15 ல் இருந்து 20 ரன்கள் வரை குறைந்து விட்டது. இந்த கூடுதல் ரன்களை எடுத்து இருந்தால் பெங்களூர் அணிக்கு நெருக்கடி கொடுத்து இருப்போம்.
ஆடுகளமும் சரியாக இல்லை. மந்தமான ஆடுகளமாக இருந்தால் எங்கள் பேட்டிங்கை பாதித்தது. அதே போல எங்கள் பந்து வீச்சாளர்களும் பந்து வீச்சை சரியாக செய்யவில்லை. இவற்றால்தான் தோல்வியை சந்தித்தோம் என்றார்.