திமுகவுடன் பிரச்சனையில்லை:விரைவில் தீர்வு ஏற்படும் – குலாம்நபி ஆசாத்

gulam-azad_.jpgமத்திய மந்திரிசபையில் திமுகவுக்கு எத்தனை மந்திரிகள் ஒதுக்குவது என்பது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மந்திரி பதவியேற்க திமுக மறுத்து விட்டது.  காங்கிரஸ் கூட்டணி அரசை வெளியில் இருந்து ஆதரிப்பது என்று தி.மு.க. முடிவு செய்தது. மத்திய மந்திரிசபையில் திமுக இடம் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. பிரதமரும் அழைப்பு விடுத்து இருந்தார்.

மந்திரிசபையில் சேர்வது தொடர்பாக உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கருணாநிதி அறிவித்து இருந்தார். இந்த நிலையில் மந்திரி சபை விஸ்தரிப்புக்கு முன்பு திமுகவுடன் உடன்பாடு ஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, ’’தி.மு.க.வுடன் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இதனால் நான் சென்னை செல்லவில்லை. மந்திரிசபை விஸ்தரிக்கப்படுவதற்கு முன்பு (செவ்வாய்க்கிழமை) தி.மு.க.வுடன் தீர்வு ஏற்பட்டு விடும்’’ என்று தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • DEMOCRACY
    DEMOCRACY

    தீர்வு ஏற்பட்டு விட்டது. வெகுநாட்களாக ஸ்டாலினும், கலாநிதி மாறனும் நினைத்ததை (கழட்டிவிட)சாதித்து விட்டனர். கேடையமாக(கேணையனாக)இனி “ராசா” செயல்படுவார். மானிதாபிமான? நிவாரணப்பணி பெயரில், “அரசு சார்பற்ற(அல்லிலூயா) நிறுவனங்களின்” பால்கறக்கும் வியாபாரம் அமோகம். “தமிழ் இந்தரன் வாலே” ஒழிந்துவிட்டார்!, தமிழக அகாலி தளத்திலிருந்து, “தமிழ் சுர்ஜித் சிங் பர்னாலா” உருவாகி விட்டார். “சஃப்சத் சூரத் ரம் கரேகா, இந்திரா ஜீ கி நாம் ஃகரேகா!”.

    Reply