பிரபாகரனின் உடல் தகனம் செய்யப்பட்டு அஸ்தி இந்து சமுத்திரத்தில் எறியப்பட்டது- இராணுவத் தளபதி

fonseka-000.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலை இலங்கைப் பாதுகாப்புப் படையினர் தகனம் செய்து விட்டனர் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அவர் பேட்டியளிக்கையில் மேற்கண்டவாறு கூறியதாக ஏ.எவ்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகா மேலும் கூறுகையில், “முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம் பெற்ற கடும் தாக்குதலையடுத்து செவ்வாய்க்கிழமை காலை பிரபாகரனின் உடல் அடையாளம் காணப்பட்டது. நாம் அதே பிரதசத்தில் பிரபாகரனின் உடலைத் தகனம் செய்து அஸ்தியை இந்து சமுத்திரத்தில் எறிந்தோம். பிரபாகரன் இறக்கும் முன்னர் நாங்கள் யுத்தத்தில் வெற்றியடைந்து விட்டதாக நான் அறிந்து கொண்டேன். ஆனால், அவரது மரணம் ஊர்ஜிதமான பின்னர் நான் பெரு மகிழ்ச்சியடைந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • msri
    msri

    அங்கு கரைக்கப்பட்டு விட்டது! இஙகு யேசு சீவிக்கின்றார் என்ற பாங்கில் கனவு காண்கின்றனர்!

    Reply
  • BC
    BC

    யேசு சீவிக்கின்றார் என்பதை கேள்வியாவது கேட்க முடியும்.புலம்பெயர்ந்தவரின் தலைவர் பாதுகாப்பாக உயிருடன் இருக்கிறார் தேவைப்படும் நேரத்தில் வருவார் என்ற நம்பிக்கையை யாரும் அசைக்க முடியாது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பின்லாடனைப் போட்டு விட்டோமென்று அமெரிக்கா ஆதாரம் கூட இல்லாமல் அறிக்கை விட்ட போதெல்லாம், பின்லாடன் தனது உரையை ஒளிப்பதிவாக்கி தன் இருப்பை நிரூபித்தான். ஆனால் இன்று அரசு ஆதாரத்துடன் பிரபாகரனின் மரணத்தை உறுதிசெய்த போதும், பிரபாகரன் இருக்கின்றார் என்று அடித்துக் கூற முற்படுபவர்களால் கிராபிக் மூலம் ஏதாவது புரளிகளைக் கிளப்ப முடிகின்றதேயொழிய, ஆக்கபூர்வமான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க முடியாது வெறுவாயை சப்பவே முடிகின்றது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இவர்களைப் பொறுத்தவரை பிரபாகரன் உயிரோடிருப்பது முக்கியமல்ல. பிரபாகரன் உயிரோடிருப்பதாக பீலா விட்டாவது தமது சுருட்டல்களைத் தொடர வேண்டும் என்பதே முக்கியம்…….

    Reply
  • msri
    msri

    பிரபாகரனுக்கு அரசு செய்ததைக் கூட> பிரபாகரன் தன்னால் கொல்லப்பட்டவர்களுக்கே> செய்யவில்லை!

    Reply