இலங்கைக்கு விஜயம் செய்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவுடன் தான் பேசியது குறித்து முதல்வர் கருணாநிதியை சந்தித்து விளக்கினார் .
விடுதலைப் புலிகளுடனான மோதல் முடிவுக்கு வந்ததாக ராஜபக்சே அறிவித்ததைத் தொடர்ந்து நாராயணன், வெளியுறவுச் செயலாளர் எஸ்.எஸ்.மேனன் ஆகியோர் கொழும்பு சென்றனர். அங்கு ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பின்னர் நாராயணன், முதல்வர் கருணாநிதியை சந்தித்து தனது பயணம் குறித்து விளக்குவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை செல்வதற்கு முன்பு கருணாநிதியை நாராயணன் சந்தித்துப் பேசியிருந்தார்.
இருப்பினும் இலங்கை சென்று வந்த அவர் முதல்வரை சந்திக்கவில்லை. அரசமைப்பு குழப்பம் நிலவி வந்ததால் அவர் சந்திக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென சென்னை வந்தார் நாராயணன். இரவு எட்டரை மணியளவில் நாராயணன் முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. இலங்கை பயணம், ஜனாதிபதி ராஜபக்ச என்ன கூறினார் என்பது குறித்து கருணாநிதியிடம், நாராயணன் விளக்கியதாக தெரிகிறது.
msri
கலைஞருக்கு இப்பொழுது ஓர் பிளசு(+) பொயின்ற் கிடைத்ததுள்ளது! ஆனால் கேட்ட மந்திரிப்பதவிகளுக்கு?……………