இலங்கைப் பிரச்சினையின் மூல காரணத்துக்கு தீர்வு காண வேண்டும்: இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சர்

krishna.jpgஇந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கையில் போர் முடிவுற்றிருக்கும் நிலையில், பிரச்சினைக்கான மூல காரணத்தைக் கண்டறிந்து அதற்குத் தீர்வு காண வேண்டிய தருணம் வந்துவிட்டதாக இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள எஸ்.எம். கிருஷ்ணா, அண்டை நாடுகளுடனான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளைப் பலப்படுத்த முன்னுரிமை அளிக்கப் போவதாகவும், விரைவில் அந்த நாடுகளுக்குச் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார்.  இலங்கைப் பிரச்சினை தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அமைச்சர், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு, இலங்கை மக்கள் மற்றும் அந்நாட்டு அரசுடன் இணைந்து இந்தியா பணியாற்றும் என்றும், இடம் பெயர்ந்த மக்களுக்கு விரைந்து மறுவாழ்வு அளிக்கவும், அவர்களது வாழ்க்கையில் விரைவில் சகஜ நிலையை ஏற்படுத்தவும் இந்தியா முயற்சிக்கும் என்றும் தெரிவி்ததார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • msri
    msri

    அதுதானே கண்டுவிட்டீர்களே! (ஆசியாவின் மிகபபெரும் மனிதப்படுகொலை+தமிழ்மக்களை அநாதைகளாக்கியது) இனி என்ன பிச்சை போடப்போகினறீர்களோ?

    Reply