2025

2025

இருபது இராணுவ வீரர்கள் கைது !

இருபது இராணுவ வீரர்கள் கைது !

 

இராணுவ முகாம்களில் இருந்து தப்பிச் சென்ற 20 இராணுவ வீரர்கள் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இராணுவ வீரர்கள் கண்டி பிரதேசத்தில் பல்வேறு தொழில்களில் பணிபுரிந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அண்மையில் அனுராதபுரத்தில் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான நபரும் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை சிறுமிகளுக்கு ஆபத்தாக உருவெடுக்கும் AI ! 

இலங்கை சிறுமிகளுக்கு ஆபத்தாக உருவெடுக்கும் AI !

 

இலங்கையில் ஒரே வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றி பகிரப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் இந்த பொருத்தமற்ற செயலை 13 தொடக்கம் 17 வயதுடைய சிறுவர்கள் செய்கிறார்கள் எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமலாக்க இயக்குநர் வழக்கறிஞர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளின் பெற்றோர் முறைப்பாடு செய்வதாகவும் இவை அந்த சிறுமிகளுக்கு தெரியாமல் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யும் மோசமான செயல் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை AI தொழில்நுட்பத்தைப் பற்றிய விடயங்களும் – விளக்கங்களும் புதிய கல்வி சீர்திருத்தங்களில் கொண்டு வரப்படும் என கல்வி அமைச்சர் தெரவித்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.

 “சுமந்திரன் பகற்கனவு காண்கிறார் – நாங்கள் வலுவாக இருக்கிறோம்” – அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற விக்கினேஸ்வரன் !

“சுமந்திரன் பகற்கனவு காண்கிறார் – நாங்கள் வலுவாக இருக்கிறோம்” – அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற விக்கினேஸ்வரன் !

 

வடக்கு இலங்கையில் கூட்டணி அறிவிப்புக்கள்இ கட்சித்தாவல்கள்இ புதிய அறிவிப்புகள் என உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் களைகட்ட ஆரம்பித்துள்ளது. இதே நேரம் அனுர அலை இன்னமும் ஓய்ந்தபாடில்லை; இது பெரிய சவாலாக தமிழ்தேசிய கட்சிகளுக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இருக்கும் எனவும் ஆனாலும் தமிழரசு வெற்றி பெறும் எனவும் அண்மையில் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சுமந்திரன் பகற்கனவு காண்கிறார் என கடந்த தேர்தலில் மண் கவ்விய தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) தங்களுடைய தனித்துவத்தை முன்வைத்து செல்ல வேண்டும் என்ற நோக்கில் தங்களுடைய சங்கு சின்னத்தையும் முக்கியத்துவப்படுத்தி முன்வைத்தமையால் எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாத படியால் நாங்கள் வெளியேறினோம். ஆகவே நாங்கள் தனித்து போட்டியிடுவதாக இப்பொழுது அறிவித்துள்ளோம். தேர்தலின் பின்னர் யார் யாருடன் சேரந்து அந்த நிர்வாகத்தை அமைக்க வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது யாழ் மாவட்டத்திலுள்ள 17 சபைகளையும் கைப்பற்றுவோம் என தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் பகற்கனவு காண்பதாக தெரிவித்துள்ள விக்கினேஸ்வரன்இ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் சிங்கள ஆதிகத்திலிருந்து விடுபட்டுத் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வினை வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

“மௌனத்தைக் கலைப்போம்” – யாழில் நடைபவணி பேரணி !

“மௌனத்தைக் கலைப்போம்” – யாழில் நடைபவணி பேரணி !

 

வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கத்தின் பௌர்ணமி நாள் செயற்பாட்டுத் தொடர்ச்சியில், பெண்களுக்கு எதிரான அனைத்துச் சுரண்டல்களையும் முடிவுக்கு கொண்டுவர “மௌனத்தைக் கலைப்போம்” எனும் தொனிப்பொருளில் நேற்றையதினம் வியாழக்கிழமை (13) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்ட பேரணியானது தந்தை செல்வா கலையரங்கு வரை சென்று நிறைவடைந்தது.

“எமது நிலம் எமக்கு வேண்டும்“ – மீண்டும் தையிட்டி !

“எமது நிலம் எமக்கு வேண்டும்“ – மீண்டும் தையிட்டி !

 

யாழ் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக போராட்டம் பௌர்ணமி நாளான நேற்றையதினம் இடம்பெற்றது. காணி உரிமையாளர்கள், பொது மக்கள், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இப்போராட்டத்தில்இ கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு ”வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்”, “எமது நிலம் எமக்கு வேண்டும்“, ”சட்டவிரோத விகாரையை உடனே அகற்று”, “சட்டவிரோத விகாரைக்கு காவல்துறை பாதுகாப்பு”, “காவல்துறை அராஜகம் ஒழிக“ போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள விகாரை தொடர்பில் நேரில் சென்று ஆராயவுள்ளதாகவும் இதுவிடயத்தில் நியாயமான முறையில் தலையிட முடியும் என தான் நம்புவதாகவும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.

யாழ் 17 உள்ளூராட்சி சபைகளிலும் நாம் தான் – நாடு மட்டுமல்ல கிராமங்களும் அனுரவோடு தான் ! அமைச்சர் சந்திரசேகர் 

யாழ் 17 உள்ளூராட்சி சபைகளிலும் நாம் தான் – நாடு மட்டுமல்ல கிராமங்களும் அனுரவோடு தான் ! அமைச்சர் சந்திரசேகர்

 

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்திற்கு அவர் வருகை தந்தபோது இந்தக் கருத்தை தெரிவித்தார். அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தையும் இன்றைய தினம் என்.பி.பி செலுத்தியுள்ளது.

 5 வருடங்களில் போதைப்பொருள் பாவனை 250 சதவீதம் அதிகரிப்பு !

5 வருடங்களில் போதைப்பொருள் பாவனை 250 சதவீதம் அதிகரிப்பு !

 

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்தள்ளது. இவர்களில் குறிப்பாக 15 முதல் 17 வயதுடையவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அதிகம் அடிமையாகின்றனர். இத்தகவல்களை இலங்கை தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை கவலை வெளியிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 162,000 நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதுடன் 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மதிப்பீட்டில் நாட்டில் 92,000 முதல் 100,000 பேர் வரை போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும் சுமார் 350,000 பேர் ஹெரோயினுக்கும் 350,000 பேர் கஞ்சாவுக்கும் அடிமையாகி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை இலங்கையின் பல பகுதிகளிலும் பரவலாக பொலிஸ் அதிகாரிகளும் போதைப்பொருள் பாவனை தொடர்பிலும் விற்பனை தொடர்பிலும் கைதாகி வருகின்றனர். அரசாங்கம் இது தொடர்பில் இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்றையதினமும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகிய நாள் முதல் தற்போதுவரை ஹெரோயின், ஐஸ், குஷ் மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்களை எடுத்துச் சென்ற 393 பேர் கைதாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பட்டலந்த விவகாரம் ரணிலின் ஏழரைச் சனி ஆரம்பம்: மேற்கின் செல்லப் பிள்ளை ரணிலின் நாட்கள் எண்ணப்படுகின்றதா ? 

பட்டலந்த விவகாரம் ரணிலின் ஏழரைச் சனி ஆரம்பம்: மேற்கின் செல்லப் பிள்ளை ரணிலின் நாட்கள் எண்ணப்படுகின்றதா ?

 

மேற்கின் செல்லப் பிள்ளையான ரணில் விக்கிரமசிங்க முதலாளித்துவத்தின் ஒரு சிந்தனைவாதி என்பது இலங்கையர் பலரும் அறியாத விடயம். ரணில் விக்கிரமசிங்க உலகின் செல்வந்த மேற்கு நாடுகளின் தலைவர்களால் நண்பராக அணுகப்படும் ஒருவர். 2018இல் நல்லாட்சி அரசை உருவாக்கி ரணிலைப் பிரதமராக்குவதற்காக முன்னாள் பிரித்தானிய பிரதமர் ரொனிபிளேயர் இரண்டு வாரங்கள் யாருக்கும் தெரியாமல் இலங்கையில் தங்கியிருந்து காய் நகர்த்தியிருந்தார். அதற்கடுத்து அரகலயா போராட்டத்தைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதும் அமெரிக்காவின் மேற்குலகின் ஆதரவினாலேயே.

ஆனால் தற்போது அல்ஜசீரா ரணில் விக்கிரமசிங்கவை லண்டனுக்கு அழைத்து கிடுக்கு பிடியுள் சிக்க வைத்துள்ளது. தமிழ் மக்கள் ரணிலை நம்பிய அளவுக்கு சிங்கள மக்கள் ரணிலை நம்பியிருக்கவில்லை. சிங்கள மக்கள் மத்தியில் ரணிலக்கு பெரும் விம்பம் கட்டமைக்கப்பட வில்லை. அதனை கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் காணக் கூடியதாக இருந்தது. அல்ஜசீரா நேர்காணலில் ஊடகவியலாளரால் ரணிலிடமிருந்து புதிய தகவல்கள் எதனையும் வெளிக்கொணர முடியவில்லை. ஆனால் ரணில் தனக்குத் தானே மண்ணளிப் போட்டுக்கொண்டார். பட்டலந்த வதைமுகாம் விவகாரம் பற்றிய கேள்வி எழுப்பப்பட்ட போது அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தட்டிக்கழித்துவிட்டார்.

அதிலிருந்த ரணிலின் ஏழரைச் சனி ஆரம்பமாகியுள்ளது. 1990க்களுக்கு முன்பாக ஜேவிபி உறுப்பினர்கள் இந்த பட்டலந்த வதைமுகாமில் சித்திரவை செய்யப்பட்டதும் அதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருந்த தொடர்பு பற்றியதே இந்த பட்டலந்த அறிக்கை. இந்த அறிக்கையை அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பாராளுமன்றத்துக்கு கொண்டுவர இருந்த சமயம் அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையில் ரணிலைப் பிரதமராக்கி இந்தப் பட்டலந்த அறிக்கையை காணாமலாக்கினார். இந்த அறிக்கையின் ஒரு பிரதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் நெருங்கிய நண்பரான இக்னிசியஸ் செல்லையா மனோரஞ்சனிடம் இருந்துள்ளது. அதிலிருந்தே இந்தப் பட்டலந்த பூகம்பம் மீண்டும் அதிர்வை ஏற்படுத்துவதாக நம்பகமாகத் தெரியவருகின்றது.

தற்போது ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ஜேவிபி அரசும் தங்களுடைய போராளிகள் அன்று சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு நியாயம் கேட்க முனைகின்றனர். இந்த அறிக்கை அடுத்தவாரம் பாராளுமனறத்தில் சமர்ப்பிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசு அறிவித்துள்ளது.

பட்டலந்த விவகாரத்தை அன்று புலனாய்வு செய்த ஊடகவியலாளரே யாழ் நூலக எரிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியினதும் ரணிலினதும் பங்களிப்பை ஆதாரத்துடன் நூலாக வெளிக்கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்புலனாய்வுச் செய்தியாளர் நந்தன வீரரத்ன பட்டலகந்த விவகாரத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் பாத்திரம் பற்றி சூம் விழயாக மார்ச் 16இல் கலந்துரையாடலை மேற்கொள்ள உள்ளார். செல்லையா மனோரஞ்சன் இந்நிகழ்வை தொகுத்து வழங்க உள்ளார்.

ஆனால் பட்டலந்த விவகாரம் போன்று எத்தனை ஆயிரமாயிரம் சம்பவங்கள் எமது மண்ணிலே நடந்திருக்கிறது. இந்த சம்பவங்கள் உங்களுக்கு தெரியவில்லையா இதற்கு என்ன நடவடிக்கையை நீங்கள் எடுக்கப் போகிறீர்கள். இவ்வாறு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் கேள்வியெழுப்பியுள்ளார்.

மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் எங்களுக்கென்ன என்ற தொனியில் கருத்து வெளியிட்டுள்ள சிவஞானம்இ இந்த பட்டலந்த விவகாரம் சம்பந்தமாக ஆட்சியாளர்களிடம் நாங்கள் ஏதும் கோரிக்கை வைக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. அது அவர்களே சண்டையிட்டுக் கொள்வார்கள். அப்படி தான் இப்போது நடக்கிறது. இதனைப்பற்றி சிங்கள அரசியல்வாதிகள் பேசிக் கொள்ளட்டும் என்ற ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று தெளிவுபடுத்தி இருக்கின்றார்.

நாட்டில் உள்ள பேரினவாத ஆட்சியாளர்களோடு கூட்டுச் சேர்ந்து நாட்டைச் சீரழித்ததில் பங்கெடுத்துக்கொண்ட தமிழரசுக் கட்சி இவ்வாறான பேரினவாதசக்திகள், மனிதவிரோத சக்திகள் தண்டிக்கப்பட வேண்டும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பேச்சளவிலும் தெரிவிக்கவில்லை. மாறாக யாழ் நூலகத்தை எரித்தவர்களோடு கூட்டுச் சேர்ந்து அரசியல் செய்வதையே இவர்கள் நல்லாட்சி அரசாங்கம் என்று அழைத்தது குறிப்பிடத்தக்கது.

பட்டலந்த விவகாரம் சூடு பிடித்தால் ரணிலுக்கு மாமா வேலை செய்த அந்த அர்த்தத்தில் எண்ணக் கூடாது, தமிழ் கட்சிகளுக்கு அது பிரச்சினையாகவே இருக்கும்.

ஊடகவியலாளரான திருமணமான குடும்பப்பெண் மீது பாலியல் வக்கிரம் கொள்ளும் தமிழ் தலிபான்கள்:

ஊடகவியலாளரான திருமணமான குடும்பப்பெண் மீது பாலியல் வக்கிரம் கொள்ளும் தமிழ் தலிபான்கள்:

ஊழல் ஒழிப்பு அணி வன்னி உட்பட்ட தமிழ் தலபான்களால் விபச்சாரம் செய்வதாக குற்றம் சுமத்தப்படும் பெண் ஊடகவியலாளர் சங்கவி பற்றியதாகும். சங்கவி தி ஐகன் (Shangavi The ICON) எனும் செய்திகள் வழங்கும் யுரீயூப் சனல் நடத்தி வருகிறார். அவர் தொடர்பில் ஊழல் ஒழிப்பு அணி வன்னி வெளியிட்டுள்ள காணொளி மற்றும் பதிவுகள் அனைத்தும் கண்டிக்கப்பட வேண்டியவை. சங்கவி ஒரு ஆணுடன் பாடல் காட்சி ஒன்றில் தோன்றும் ஒரு சிறிய றீல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அந்தக் காணொளியில் விபச்சாரம் செய்வதாக எந்த தடயங்களும் இல்லை. அதை விட சங்கவி யார் யாரோடெல்லாம் படுக்கையை பகிர்ந்து, அதற்காக பணம் வாங்கியுள்ளார் என ஒரு நீண்ட பட்டியலோடு ஒரு பதிவை ஊழல் ஒழிப்பு அணி வன்னி வெளியிட்டுள்ளது. அதிலும் முக்கியமாக ஊடகவியலாளர் சங்கவியின் ஆபாச காணொளிகள் தங்களிடம் இருப்பதாகவும் ஒரு அச்சுறுத்தலை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் பதிவுக்கு பதில் அளித்து சங்கவி ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அந்தக் காணொளியில் அவர் கேட்டுக் கொண்டபடியே ஊழல் ஒழிப்பு அணி வன்னி ஏன் சங்கவியிடம் பணம் செலுத்தி பாலியல் சேவை பெற்றதாக கூறும் ஆண்களின் விபரங்களையும் படங்களுடன் வெளிப்படுத்தவில்லை.

தற்போதுள்ள அறிவியல் வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இறந்தவர்களை கூட உயிரோடு கொண்டு வர முடியும். அப்படியிருக்க சங்கவியின் ஆபாச காணொளி என கூறப்படும் காணொளி எவ்வளவு தூரம் உண்மையானது என்பதும் கேள்விக்குறியே.

எப்படியாயினும் காணொளியை வெளியிட்டால் சைபர் கிரைம் பொலிஸார் அதனை விசாரித்து முடிவு எடுப்பார்கள். சங்கவியும் ஏற்கனவே சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டார். இவை எல்லாம் ஒரு புறம் இருக்க. எம்பி அர்ச்சுனா இராமநாதன் இந்த விடயத்திலும் தனது முந்திரிக் கொட்டைத்தனத்தை காட்டி பிரபல்யம் தேடிக் கொண்டுள்ளார். அவர் தனது முகநூலில் ஊடகவியலாளர் சங்கவி தொடர்பான அவதூறு பதிவை பகிர்ந்துள்ளார். இந்த விடயம் தொடர்பிலும் சங்கவி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மூச்சுக்கு மூண்ணூறு தரம் தனது தங்கை என கௌசல்யா நரேந்திரனுக்கு வக்காலத்து வாங்கும் எம்பி அர்ச்சுனா தனக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்று சங்கவி வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்னைப் போலவே அவதூறுகள் மற்றும் வசைப்பாடுகளை எதிர்கொள்ளும் சட்டத்தரணி கௌசல்யாவிடமும் சங்கவி கோரிக்கை வைத்துள்ளார். தனக்கு நியாயம் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

வழமை போலவே சங்கவியின் காணொளிக்கு நேரலையில் வந்து எம்பி அர்ச்சுனா அநாகரீகமான முறையில் பதிலளித்துள்ளார். கௌசல்யாவுக்கும் சங்கவிக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம், சங்கவி தான் ஆபாசப்படத்தில் இல்லை என்று நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால் தான் சங்கவிக்கு பாராளுமன்றம் வரை சென்று குரல் கொடுப்பதாகவும் கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய கல்வியறிவு, அந்தஸ்து மற்றும் அனுபவம் பற்றி எல்லாம் சம்பந்தமில்லாமல் சிலாகித்துப் பேசுகிறார். அதேமாதிரி கௌசல்யாவின் சட்டத்தரணி தகுதியை சங்கவியின் கல்வித் தகமையோடு ஒப்பீடு செய்து தரம் தாழ்ந்த விமர்சனத்தை முன்வைக்கின்றார்.

அவருடைய உயர்வுச் சிக்கல் பிரச்சினையை மீண்டும் மீண்டும் நிருபித்து வருகின்றார் ஆயிரம் பேரைக்காதலித்ததாக பீற்றிக்கொள்ளும் அர்ச்சுனா. அர்ச்சுனாவுடைய முன்னாள்கள் மீது அல்லது தங்கைகள் மீது விபச்சாரக்குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டால் அவர்களுடைய கணவனமார் சமூகவலைத்தளத்தில் வந்து அப்பெண்களுக்கு நற்சான்றிதழ் வழங்குவது தானாம் அதற்குத் தீர்வு என்கிறார் அர்ச்சுனாவின் அடியான்.

கௌசல்யாவின் கல்வித் தகமையையோ அல்லது தொழில்த்திறனையோ எப்படி எவரும் குறைத்து மதிப்பிட முடியாதோ அதேமாதிரி தான் சங்கவியினுடைய தொழில்த்திறமையும் அவருடைய கல்வித் தகமையும். சங்கவியும் தான் பயணிக்கும் துறையில் சிறந்த நிலையில் இருக்கிறார். நீண்டகாலமாக ஊடகத் துறையில் பணியாற்றுபவர்கள் கூட இலகுவாக அடைய முடியாத சந்தாதாரர்களை அவர் சம்பாதித்து வைத்துள்ளார். சங்கவியின் யுரீயூப் சனலுக்கு ஒரு இலட்சத்தி தொண்ணூறாயிரம் சப்கிறைபர்ஸ் உள்ளார்கள். செய்தி ஊடகத்துறையில் தனியான ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். அவருடைய காணொளிகளை குறைந்தபட்டசமாக 5000 க்கும் மேற்பட்டோர் நாளாந்தம் பார்வையிடுகிறார்கள். கௌசல்யாவும் சரி சங்கவியும் சரி அவரவர் துறையில் திறமையாகவே செயற்படுகின்றனர்.

ஆகவே கௌசல்யா மற்றும் சங்கவி இருவரையும் ஒப்பிட்டு எம்பி அர்ச்சுனா ஒருவரை உயர்த்தி ஒருவரை தாழ்த்துவது கண்டிக்கப்பட வேண்டியது.

ஊடகவியலாளர் சங்கவி தனது கணவனுடன் இருக்கும் காணொளியை வெளியிட்டு முகநூலில் அவதூறு பரப்பும் ஊழல் ஒழிப்பு அணி வன்னி மற்றும் அச்செய்தியை பகிர்வோர் என அனைவரும் கண்டிக்கப்பட வேண்டும். இந்த இடத்தில் தான் எம்பி அர்ச்சுனாவின் ஜால்ரா தமிழ் அடியான் என்கிற யுரீயூப்பரின் பத்தாம்பசலித்தனமான பதிவு ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தமிழ் அடியான் பிரித்தானியாவில் வாழ்வதாக கூறப்படுகிறது. அவர் ஊடகவியலாளர் சங்கவி விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமானால் , சங்கவியின் கணவர் பொதுவெளிக்கு வந்து சங்கவிக்கு நற்சான்றிதழ் வழங்க வேண்டும் என ஆலோசனை கொடுக்கிறார்.

தமிழ் அடியான் போன்ற பால்நிலைச் சமத்துவம் மற்றும் சுய கௌரவம் என்றால் என்னவென்றே தெரியாத ஆண்களால் தான் பெண்கள் வன்முறைக்குள்ளாகிறார்கள். பெண்கள் அதிகமாக எதிர்கொள்ளும் வன்முறைகளே வீட்டில் தான் நிகழ்கின்றன. வீட்டு வன்முறைகளில் முக்கிய குற்றவாளிகளே கணவன்மார் மற்றும் ஆண் நண்பர்களே. ஒரு பெண்ணுக்கு கணவன் தான் பாதுகாப்பு எனக் கூறி தனது அறியாமையை தமிழ் அடியான் வெளிப்படுத்தி நிற்கின்றார். இப்படிப்பட்டவர்கள் தங்களை ஊடகவியலாளர்கள் என நினைத்துக் கொண்டு உளறுவதை பெண்கள் வன்மையாக கண்டிக்கிறார்கள்.

பெண்கள் மீதான அடக்குமுறையின் உச்ச கட்டம் அவர்களுடைய நற்பெயருக்கு களங்கத்தை (Character Assassination) ஏற்படுத்துதல் ஆகும். இது காலங்காலமாக நடந்து வரும் ஒடுக்குமுறை. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இப்போது புதிய வடிவம் எடுத்துள்ளது. நிஜ உலகில் ( real world ) வன்முறையை எதிர்கொண்ட பெண்கள். தற்போது நிழல் உலகில் ( virtual world ) அதைவிட மோசமான வன்முறைகளை எதிர்கொள்கின்றனர். வலைத்தளங்களில் மற்றும் சமூக ஊடகங்களில் தமது அடையாளத்தை மறைத்துக் கொண்டு பெண்கள் மீதான வன்முறைகளை துணிந்து முனைப்போடு ஈடுபடுகிறார்கள். இவ்வாறான ஒரு செயற்பாடே ஊழல் ஒழிப்பு வன்னி அணி போன்ற வலைத்தளங்கள் இயங்குகின்றன. இதற்கு அர்ச்சுனா போன்றவர்கள் வலுச்சேர்க்கின்றனர். இந்த புதிய போக்கை எதிர் கொள்ள தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உண்மையான பெண் உரிமைச் செயற்பாட்டாளர்கள் முன்வர வேண்டும்.

“ஊழல் ஒழிப்பு அணி வன்னி “ என்ற முகநூல் மற்றும் அந்த முகநூலைத் தொடரும் பல ஆயிரம் பேரும் கூறும் செய்தி பெண்ணடிமைத்தனம் புதிய வடிவம் எடுத்துள்ளது என்பதாகும். அத்துடன்

யாழ்ப்பாண வெள்ளாள மேலாதிக்கம் மற்றும் ஆணாதிக்க தமிழ்ச் சமூகம் ஒன்று மீண்டும் யுத்தத்திற்குப் பின் மேலெழுந்துள்ளது. இந்தப் போக்கு மிக ஆபத்தானது. தமிழ்ச் சமூகத்தில் ஈழத்தமிழ்ப் பெண்களின் நிலை மிகப் பிற்போக்குத்தனங்களால் நிரம்பியுள்ளது. பெண்கள் ஆண்களின் உடமைகளாகவும், கவர்ச்சிப் பாவைகளாகவும் , அடிமைகளாகவும் ஆக்கப்பட்டு வருகின்றனர்.

உலகமயமாக்கம், பால் இனச் சமத்துவம், புலப்பெயர்வு மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் என உலகம் பல வகைகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கின்றது. காலச் சூழ்நிலைக்கு ஏற்ப ஈழத்துப் பெண்களும் தங்களை தகவமைத்துக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும். சர்மினியும் சரி சங்கவியும் சரி பொதுவெளியில் அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் உறுதியாக வைக்க வேண்டும். சர்மினி விளங்கிக் கொள்ள வேண்டியது, பெண்கள் மீது நன்மதிப்பற்றவர்களே கேவலமான கேள்விகளை கேட்பார்கள். அதற்கு அவர்கள் பாணியில் பதில் அளித்தல் தற்துணிவு தான் . ஆனால் அது பாலியல் வக்கிரங் கொண்ட ஆண்களுக்கு இலவசமாக கிடைக்கும் வடிகால் ஆகிவிடும். சர்மினி உங்களுடைய துடுக்குத் தனத்தில் ஒரு துணிவு உண்டு. அதனை காத்திரமான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தவும்.

சங்கவி நீங்கள் தைரியசாலி. உங்கள் கணவர் மற்றும் உறவினர்கள் பின்னால் ஒளிந்து கொள்ளத் தேவையில்லை. நீங்கள் யாருக்கும் உங்களை நிரூபிக்க தேவையில்லை. உங்கள் பணி தொடரட்டும்.

ஒரு பெண் நாட்டின் பிரதமராக இருக்கும் பாராளுமன்றத்தில் தான் வரலாற்றிலேயே இல்லாத மாதிரி இன்னுமொரு பெண் மீது விபச்சாரம் செய்கிறார், நடவடிக்கை எடுங்கள் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. என்பிபி அரசாங்கத்தின் பொறுப்பு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு உரிய சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகும்

பாலியல் தொழிலாளிகள் இல்லாவிட்டால் வீதிகளில் வன்புணர்வுகள் அதிகரிக்கும் !

பாலியல் தொழிலாளிகள் இல்லாவிட்டால் வீதிகளில் வன்புணர்வுகள் அதிகரிக்கும் !

 

ஊழல் ஒழிப்பு வன்னி அணியின் அடுத்த இலக்கு பாலியல் சேவை வழங்கும் பெண் வசந்தா. அவருடைய தொழில் தொடர்பிலும் கருத்துச் சொல்ல சட்டத்திற்கு தான் அதிகாரம் உண்டு. இலங்கையைப் பொறுத்தவரை தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்கள், பாலியல் தொழிலை தடை செய்துள்ளது. ஆனால் மேற்குநாடுகள் மற்றும் பல ஆசிய நாடுகள் கூட பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கியுள்ளன.

இந்தத் தொழிலுக்கு சட்டபூர்வமான அனுமதி அளிப்பதன் மூலம் விபச்சாரத்தை ஒழுங்குபடுத்த முயற்சித்துள்ளன. பாலியல் தொழிலாளர்களுக்கு உடல்நலம் மற்றும் சமூக நலன்களை வழங்குகின்றன. இந்த விடயங்கள் ஒன்றும் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு தெரியாது என்று சொல்வதிற்கில்லை. கிட்டத்தட்ட வெளிநாட்டில் உறவினர்கள் இல்லாத குடும்பங்களே இல்லை. அவர்கள் எல்லோரும் தங்களுடைய உறவினர்கள் வழியாக வெளிநாடுகளில் ஆண்-பெண் பாலியல் சமத்துவம் மற்றும் பாலியல் சுதந்திரம் தொடர்பான உரிமைகள் தொடர்பில் அறிந்து வைத்திருக்கிறார்கள். அதைவிட இணையத்துடன் கூடிய கையடக்கத் தொலைபேசிக்குள்ளேயே சகலதையும் அறியலாம்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க வசந்தா பற்றிய அவதூறுகள் பாரதுரமானவையாக காணப்படுகின்றது. வசந்தாவிடம் பணத்தை கொடுத்து பாலியல் சேவை பெறச் செல்லும் ஆண்களை ஏன் ஊழல் ஒழிப்பு அணி வன்னி வசை பாடவில்லை. அவர்கள் தானே இந்த தொழிலை ஊக்குவிக்கிறார்கள். வசந்தா 18 வயதிற்குட்பட்ட சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருந்தால் அந்த விடயம் கண்டிக்கத்தக்கது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் அவருடைய பிள்ளைகளை தண்டிப்பது. அந்தப் பிள்ளைகளின் அடிப்படை உரிமைகளை மீறுவதும் குற்றம். வசந்தா போன்ற விளிம்பு நிலையில் உள்ள பெண்கள் இவ்வாறான தொழில்களை தேர்தெடுக்க காரணமான சமூகச் சூழ்நிலைகள் மாற்றமடையாத வரை இந்நிலை மாறாது.

அதேநேரம் முற்போக்கு அரசாங்கம் “பாலியல் தொழிலை” சட்டபூர்வமாக்குவதன் மூலம் பல சமூக பொருளாதார சீரழிவுகளை தடுக்கலாம். இத் தொழிலில் சட்டவிரோதமாக ஈடுபடும் போது எயிட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் பரவும் ஆபத்துக்கள் அதிகம். தமிழர்களின் வரலாற்றில் பாலியல் தொழிலே இருக்கவில்லை என யாரும் வாதிட முடியாது. ஈழத்தமிழர்கள் பெருமிதம் கொள்ளும் சோழப்பேரரசில் மன்னர்களின் அந்தப்புரங்களில் பெண்கள் பாலியல் அடிமைகளாக இருந்த வரலாறுகள் தெரிந்ததே. யாழ் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தை அந்தப்புரமாக வைத்திருக்கின்ற விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் பற்றி இந்தக் கலாச்சாரக் காவலர்களான தமிழ் தலிபான்களுக்கு தெரியாதா ? பாராளுமன்றத்தில் ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஏன் கேடுகெட்ட ஆண்களைக் காப்பாற்றுவதில் இவர்களின் ஆணாதிக்க சிந்தனை மிகத் துல்லியமாகத் தெரிகின்றது.

அதுமட்டுமன்றி தமிழ்நாட்டில் கடவுளுக்கு பொட்டுக்கட்டி விடுதல் எனக் கூறி “ தேவதாசி” முறை மூலம் பெண்கள் கட்டாயமாக பாலியல்த் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரே தமிழ்நாட்டில் 1947 ஒக்டோபரில் தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு இம்முறை ஒழிக்கப்பட்டுள்ளது.

பாலியல் சேவை வழங்கும் வசந்தா, அவருடைய உறவினர்கள் மற்றும் கிராம சேவகருக்கும் இடையே நடந்த முறுகலில் கிராமசேவகர் தாக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. இந்த விடயத்தில் வசந்தாவினுடைய வார்த்தைப் பிரயோகங்கள் மற்றும் வன்முறை அவரது சமூக பிறழ்வான வாழ்வியலை வெளிப்படுத்தி நிற்கின்றது. மறைமுகமாக வசந்தா அவர் வாழும் சமூகம் அவரை நடத்தும் விதத்திற்கான எதிர்வினையாகவும் பார்க்க முடியும். உண்மையில் பாலியல் தொழிலில் விரும்பியோ விரும்பாமலோ ஈடுபடும் பெண்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அவர்கள் மறைமுகமாக பாலியல் ரீதியாக சுரண்டப்படுகிறார்கள். பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு முகம் கொடுக்குகிறார்கள். இத்தொழிலில் ஈடுபடும் பெண்களை பாதுகாக்கும் வகையிலான சட்டங்கள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முகநூலில் அம்பலப்படுத்தியோ அல்லது அவமானப்படுத்தியோ விபச்சாரத்தை ஒழிக்க முடியாது. இப்படியான தான் தோற்றித்தனமான நடவடிக்கைகள் விபச்சாரத்தின் பின்னாலுள்ள சமூகப் பொருளாதார காரணிகளை இல்லாதொழிக்காது.

மேலும் வசந்தா போன்ற பெண்கள் இல்லாவிட்டால் இந்தப் பாலியல் வக்கிரம் கொண்ட ஆண்களின் சமூகத்தில் சாதாரண பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாது. அனுராதபுரத்தில் அந்த மருத்துவப் பெண்ணுக்கு நடந்தது வித்தியாவுக்கு நடந்தது தான் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பெண்களுக்கு நடக்கும். ஒருவகையில் வசந்தா போன்ற பாலியல் சேவையை வழங்குபவர்கள் வீதிகளில் சென்றும் சமூக வலைத்தளங்களிலும் பாலியல் வன்புணர்வையும் பாலியல் வக்கிரத்தையும் கொட்டாமலிருக்க சில வசந்தாக்கள் பலிக்கடாவாக வேண்டியுள்ளது. தமிழ் தலிபான்களான ஊழல் ஒழிப்பு வன்னி அணி, ஊசி அர்ச்சுனா லண்டன் தமிழ் அடியான், வம்பன் டொட்கொம், எஸ் கே கிருஷ்ணா போன்றோரின் எழுத்துக்கள் கருத்துக்கள் பாலியல் வக்கிரத்தின் வெளிப்பாடே. அதனை மறைக்க இவர்கள் ஓழுக்க சீலர்களாக வேடம் போடுகின்றனர்.

இதே நிலை தான் சுஜூகூல் உடன் இரவுகளில் சல்லாபித்தவர்கள், பொழுது புலர்ந்ததும் பெரிய ஒழுக்க சீலர்களாகி ஆனையிறவுத் தாக்குதல் பாட்டையும் போட்டுக்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு லாச்சப்பலில் 30 கடையர்கள் சேர்ந்து ஒரு பெண்ணைத் தாக்கி அதனை விடியோபதிவாகப் போட்டு வெற்றிக் களிப்பில் திளைத்தனர். இவர்கள் இப்போது மீண்டும் சுஜூகூலுடன் இப்போது பொழுதுபட்டதும் ரிக்ரொக்கில் சல்லாபிக்கின்றனர்.