2010

2010

ஐரோப்பிய எழுத்தாளர் சோபாசக்தி ராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்!!!

Sobasakthyதனது எழுத்துக்களால் ஊடகங்களில் அறியப்பட்ட ஐரோப்பிய எழுத்தாளர் சோபாசக்தி தற்போது முற்றிலும் வேறுபட்ட காரணத்திற்காக ஊடகங்களில் இடம்பிடித்துள்ளார். தனுஷ்கோடியில் ‘செங்கடல்’ ஆவணப் படம் எடுக்கும் குழுவினரிடையே நடந்த தகராறு தொடர்பாக கதாசிரியர் சோபாசக்தியை அப்பகுதிப் பொலீசாரினால் கைது செய்யப்பட்டார். ஐரோப்பிய எழுத்துலகில் நன்கு அறிமுகமான சோபா சக்தி தமிழக எழுத்துலகிலும் அறியப்பட்டவர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸை வாழ்விடமாகக் கொண்ட இவர் கமராமென் தீபக் என்பவரைத் தாக்கியதற்காகக் கைது செய்யப்பட்டார். விசாரணைகளைத் தொடர்ந்து இவர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

இது பற்றித் தெரியவருவதாவது, கடந்த 20 நாட்களாக இலங்கை அகதிகள் சம்பந்தபட்ட செங்கடல் என்ற ஆவணப்படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் இடம்பெற்று வந்தது. ஜனவரி 2 இரவு செங்கடல் படத்தின் மானேஜர்கள் வெங்கட், தனுஷ் ஆகியோரிடம் உதவி கெமிராமேன்கள் தீபக், கனி, வெங்கட் உட்பட 3 கெமிராமேன்கள் ஊதியம் கேட்டதாகவும் ஊதியம் வழங்காமல் அவர்கள் ஏமாற்றப்பட்டதாகவும் தெரிய வருகின்றது. அதனால் ஆத்திரமடைந்த உதவி கெமராமன்கள் கனி, வெங்கட் ஆகியோர் படம் பதிவு செய்யப்பட்ட கேசட்டை எடுத்துக்கொண்டு சென்னை சென்றுவிட்டார்கள். இதையடுத்து மானேஜர்கள் வெங்கட், தனுஷ், கதாசிரியர் சோபாசக்தி ஆகியோர் தீபக்கை தாக்கி கேசட்டை கேட்டதாக கூறபடுகிறது.

இச்சம்பவம் குறித்து ஜனவரி 3 மதியம் ராமேசுவரம் கோவில் பொலீஸ் நிலையத்தில் தீபக் புகார் செய்தார். இப்புகார் தொடர்பான விசாரணையை மேற்கொண்ட பொலீசாரிடம் படத்தின் டைரக்டர் லீனா மணிமேகலை தகராறு செய்ததாகவும் அதை போலீஸ்காரர் நாகராஜ் என்பவர் செல்போன் மூலம் படம் பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அடைந்த லீனா மணிமேகலை போலீஸ்காரர் கையில் இருந்த செல்போனை பிடுங்கியதாக கூறபடுகிறது.

இறுதியில் பொலிசார் தீபக்கை தாக்கியது தொடர்பில் கதாசிரியர் ஷோபாசக்தியை கைது செய்து பொலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். கெமராமேனை தாக்கியதாக கூறபடும் மானேஜர்கள் வெங்கட், தனுஷ் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பொலிஸாரின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அல்லது ஊடகங்களில் வெளியாகி உள்ள செய்திகள் தொடர்பாக கதாசிரியர் எழுத்தாளர் சோபாசக்தி எவ்வித கருத்தையும் தனது இணையத்தில் பதிவு செய்யவில்லை. அவருடன் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

ஆட்சியை மாற்றி இராசபச்சேயின் கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! : தமிழ் படைப்பாளிகள் கழகம்

TCWAஎதிர்வரும் ஆட்சித்தலைவர்  தேர்தல் மூலம் இலங்கைத் தீவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் அரிய வாய்ப்பு தமிழ்மக்களுக்குக கிடைத்துள்ளது.

“நடைபெற இருக்கும் ஆட்சித்தலைவர் தேர்தலில் கடந்த காலங்களைப் போல் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவதோ அல்லது தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் வகையில் சுயேச்சையாகப் போட்டியிடுவதோ புத்திசாலித்தனமானதல்ல” என யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையை நாம் முழு மனதோடு வரவேற்கிறோம்.  இதே கருத்தை வலியுறுத்தியுள்ள முன்னாள் உச்ச நீதிமனற் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களோடும் நாம் நூறு விழுக்காடு உடன்படுகிறோம்.

2005 ஆண்டு இருந்த களநிலையோ அரசியல் நிலையோ இன்றில்லை என்ற உண்மையை (யதார்த்தத்தை)  நாம் மறந்துவிடக் கூடாது.   2005 இல் வி.புலிகள் இராணுவ சமபலத்தோடு இருந்தார்கள். ஒரு நிழலரசும் இயங்கிக் கொண்டிருந்தது.  இன்று இந்த இரண்டும் இல்லை.

 இன்று எமது மக்கள் சிங்கள – பவுத்த வெறிபிடித்த ஒற்றை ஆட்சிக்குள் சிக்கித் தவிக்கிறார்கள்.  அவர்களது வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது.  வன்னி முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுவாசல்களில் குடிபுக முடியாமல் இடைநடுவில் விடப்பட்டுளார்கள். மறு வாழ்வு என்ற பெயரில் ஒரு குடும்பத்துக்கு அய்ந்து தகரங்களும் ரூபா.25,000  மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.  

ஒரு இலட்சத்துக்கும் மேலான மக்கள் தொடர்ந்து வன்னி முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ளார்கள். .  பன்னீராயிரம் போராளிகள் சிங்களைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் கூறுவது போல் “எமது விதியை நாமே நிருணயிக்க வேண்டும். இதற்காக நாம் எமக்குக் கிடைத்திருக்கும் சிறிய துரும்புச் சீட்டையும் உரிய வகையில் உபயோகிக்க வேண்டும். வீரவசனங்களாலும் வெற்றுப் பேச்சுக்களாலும் காலம் கடத்தும் எமது அரசியல்வாதிகளை உரிய வகையில் நாம் இனங்காண வேண்டும்.”

அதாவது பட்டது போதும் இனிப் படமுடியாது என்ற நிலையில் ஆட்சிமாற்றம் ஒன்றே எமது மக்களுக்கு ஓரளவாவது நிம்மதியைத் தேடிக் கொடுக்கும்  என்ற உண்மையை உணரவேண்டும்.

தேசியத் தலைவரின் பெற்றோர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சதாசிவம் கனகரத்தினம் சிறையில் வாடுகிறார். எழுநூறுக்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகள் ஆண்டுக்கணக்காகச் சிங்களச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

North Eastern Monthly என்ற செய்தி ஏட்டின் ஆசிரியர் து.ளு. திசநாயகம் அமைதிக் காலத்தில் எழுதிய இரண்டு கட்டுரைக்கு ஒரு சிங்கள நீதிபதியால் இருபது ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

மகிந்த இராசபச்சேயின் ஆட்சிக் காலத்தில் கொல்லப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசேப் பரராசசிங்கம்,  நடராசா  ரவிராஜ், கிட்டினன் சிவநேசன், தியாகராசா மகேஸ்வரன் போன்றோர்களது கொலையாளிகள் இன்னும் நீதிக்கு முன் நிறுத்தப்படவில்லை.

இதேபோல் மகிந்த இராசபக்சே அரசின் தமிழின அழித்தொழிப்பபின் (Genoside)  ஒரு கூறாகக் 30 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். பலர் கொடிய சிங்கள அரசுக்கு அஞ்சி வெளிநாடுகளுக்கு ஓடித் தப்பியுள்ளார்கள். 

எனவே எமது மக்கள் கொஞ்சமேனும் மூச்சுவிட வேண்டும் என்றால் ஆட்சிமாற்றம் தேவை. மகிந்த இராசபக்சேயை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அவரது குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முள்ளிவாய்க்காலில் 50,000 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ்மக்களைக் கொன்று குவித்ததை வெடிகொளுத்திக் கொண்டாடிய கொடிய ஆட்சிக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழ், தமிழீழம் என்ற சொற்களுக்குத்  தடைவிதிக்கச் சட்டம் கொண்டு வந்து இலங்கைத் தீவில் சிறுபான்மையினர் இல்லை,  தமிழர்களுக்கு  தாயகம் இல்லை, தேசியம் இல்லை, தன்னாட்சி உரிமை இல்லை, வடகிழக்கு இணைப்பில்லை என்று கொக்கரிக்கும் மகிந்த இராசபக்சே என்ற கொடுங்கோலனை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக சிங்கள ஆட்சியாளர்களுக்குப் பல்லக்குத் தூக்கிக் கைகட்டி வாய்பொத்தி சேவகம் செய்து வாழும் ஒட்டுக்குழுக்கள் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட வேண்டும்.

முன்னெப்பொழுதும் இல்லாதவாறு சிங்கள தேசம் தமக்குள் மோதிக்கொண்டிருக்கிறது. இதனை நாம் சாணக்கியத்தோடு எமக்குச் சாதகமாகப் பயன்படுத்த வேண்டும். இரண்டு எதிரிகளில்  ஒரு எதிரியை ஒழிக்க . இன்னொரு எதிரியோடு கூட்டுச் சேரவேண்டும்.

எனவே மேற்கூறிய காரணங்களை மனதில் கொண்டு தமிழ்மக்கள் தங்கள் வாக்குகளைப் புத்திசாலித்தனத்தோடு பயன்படுத்த வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

குறுகிய அரசியல் இலாபத்துக்காக அரசு அவசரகால சட்டத்தை நீடிக்காது – சபையில் நேற்று பிரதமர் அறிவிப்பு

pm.jpgகுறுகிய அரசியல் இலாபத்துக்காக அரசாங்கம் ஒரு போதும் அவசர கால சட்டத்தை நீடிக்கமாட்டாது. அவ்வாறான தேவைகள் அரசுக்கு இல்லை என்று பிரதமரும், பிரதிப் பாதுகாப்பு அமைச்சருமான ரத்னசிறி விக்ரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பயங்கரவாதம் வலுப்பெற வேண்டுமென விரும்புகின்றவர்கள் மட்டுமே அவசர கால சட்டத்தை எதிர்ப்பார்கள். உள்நாட்டு வெளிநாட்டு சதிகளின் சதிவேலைக்கு பதிலளிக்க அவசர கால சட்டம் பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளதென அவர் மேலும் தெரிவித்தார். பாராளுமன்றம் நேற்றுக் காலை கூடியபோது, அவசரகால சட்ட நீடிப்புக்கான பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதமர் தனது உரையில் மேலும் கூறியதாவது:-2005 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதிலும் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இறுதி அமர்வின் போதும் அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

ஒருவர் பயணம் ஒன்றை ஆரம்பிப்பதை விட அதனை முடிப்பது தான் மிக முக்கியமானது. முடிவில் தான் பெறுபேறு தங்கியுள்ளது. எமது அரசாங்கம் அன்று அடிப்படை நோக்கம் ஒன்றை வைத்துத் தான் எமது பணிகளை ஆரம்பித்தது. அது தான் பயங்கரவாதத்திற்கு முற்றிப்புள்ளி வைத்து மக்களுக்கு மீண்டும் சமாதானத்தை பெற்றுக் கொடுப்பதாகும். இன்று அது நிறைவேற்றி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டு மக்கள் தற்பொழுது நிம் மதியாகவும், சந்தோசமாகவும் வாழ்கின்றனர்.

வடக்கு, கிழக்கில் மாத்திரம் அல்ல தென்பகுதி மக்களும் சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றனர். ஏ-9 வீதி ஊடாக தடைகள் தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான மக்கள் இந்த வீதி ஊடாக தற்பொழுது சென்று வருகின்றனர். மீனவர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்பொழுது நீக்கப்பட்டுள்ளன. தற்பொழுது அந்த மக்களின் வாழ்வாதாரம் சிறந்த முறையில் காணப்படுகின்றது.

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தற்பொழுது மீளக் குடியமர்த்தப் பட்டுள்ளனர். புனர்வாழ்வும் புத்துணர்ச்சியும் நிறைந்த வருடமாக இந்த வருடம் உருவாகியுள்ளது. எமது நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தை நாம் இன்னும் முழுமையாக அடையவில்லை.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு அழுத்தங்கள் காணப்படுகின்றது. அவசர கால சட்டம் நீடிப்பானது நாட்டுக்கு கிடைக்கப் பெற்ற வெற்றிக்கு காரணமாகவும் அமைந்திருந்தது. குறுகிய அரசியல் இலாபத்துக்காக அரசாங்கம் ஒரு போதும் அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தப்போவதுமில்லை. அதற்காக நீடிக்கவும் மாட்டோம். அவ்வாறான தேவைகள் எமக்கு இல்லை.

பாதுகாப்புப் படையினர் மீட்டெடுக்க ப்பட்ட பிரதேசங்களில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் மீட்டெடுத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆயுதம் மீட்டெடுக்கப்பட்ட பிரதேசங்களில் படையினர் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றார்கள். 3 சதாப்தங்களுக்கு பின்னர் மக்களுக்கு விடிவு கிடைத்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

அவசரகாலச் சட்டம் 79  மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.  அதனை எதிர்த்து 18 வாக்குகள் அளிக்கப்பட்டன.
 
ஆளும்கட்சிக்கு ஆதரவாக 97  வாக்குகள் அளிக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் எதிர்த்து வாக்களித்தது. ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இதனையடுத்து  79  மேலதிக வாக்குகளால் மேலும் ஒரு மாத காலத்துக்கு அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த வாக்காளர் விபரங்களை வழங்க ஆணையர் முடிவு

Commissioner of Elections Dayananda Dissanayakeமுகாம்களில் உள்ள இடம் பெயர்ந்துள்ள வாக்காளர்களின் விபரங்களை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போட்டியாளர்களுக்கு வழங்குவதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார். அரசியல் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல்கள் ஆணையாளர் நேற்று சந்தித்தார். அப்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தல் பிரசார கட்அவுட் போஸ்டர் மற்றும் பதாகைகை அகற்றுவதற்கு நாளை வியாழக்கிழமை வரை காலக்கெடு விதிப்பதென்றும் இக்கூட்டத்தில் முடிவாகியது. இதற்கு முன்னர் இவற்றை அகற்றுவதற்கு காலக்கெடு விதித்திருந்தபோதும் பொலிஸாரால் அவற்றை முற்றாக அகற்ற முடியாமற்போனமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளமுள்ளிவாய்க்காலில் அதிரடித் தேடுதல்: பிரபாகரன் தனிப்பட்ட பாதுகாப்புக்காக பயன்படுத்திய ஆயுதங்கள், கவசம் மீட்பு

புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனிப்பட்ட பாதுகாப்புக்கு பயன்படுத்திய ஆயுதம், பாதுகாப்பு கவசம் உள்ளிட்ட பெருந்தொகை ஆயுதங்களும் வெடிபொருட்களும் வெள்ளமுள்ளி வாய்க்காலிலிருந்து கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எல். கருணாரட்ன தெரிவித்தார்.

மீட்கப்பட்டிருக்கும் எம் 16 – ஏ 2 ரக விசேட கிரனேற் லோஞ்சரும் அதனுடன் காணப்பட்ட உடற்கவசமும் பிரபாகரன் தனது தனிப்பட்ட பாதுகாப்புக்காக பயன்படுத்தியவையென்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கருணாரட்ன கூறினார்.

வெள்ள முள்ளிவாய்க்காலில் சுமார் 15 அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று முன்தினம் இரவு இவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி விசேட குற்றப்புலனாய்வு பொலிஸ் பிரிவினரே இவற்றை கண்டுபிடித்ததாகவும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும் வெடிபொருட்களும் மேலதிக சோதனைகளுக்காக வவுனியா சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

வெள்ளமுள்ளி வாய்க்காலிலிருந்து மேலும் 125 தற்கொலை அங்கிகள், 50 மோட்டார் குண்டுகள், 60 விமான எதிர்ப்பு பீரங்கி, 12 போர் ரக சொட் கன், 250 குதிரைவலு சக்தி கொண்ட படகு இயந்திரம், 40 குதிரை வலு சக்தி கொண்ட படகு இயந்திரம், ‘ஹெரட்’ குண்டு, 2 ஆயிரம் கிலோகிராம் நிறை கொண்ட ஆர். டி. எச். வெடிமருந்து, 02 கிளேமோர் குண்டுகள், 50 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பெருந்தொகை ஆயுதங்களும் வெடிபொருட்களும் பொலிஸார் மற்றும் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

‘உணவு ஏற்றிச் செல்ல ஐ.சி.ஆர்.சி மறுத்தபோதும் வடக்கு மக்களை நாம் பட்டினி போட்டதில்லை’- சிலாபத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் உணவு ஏற்றிச் செல்வதற்குக் கப்பலைத் தர மறுத்தபோதும் கூட நாம் வடக்கு மக்களை பட்டினி போட்டதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சிலாபம் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் பேரணிக் கூட்ட மொன்றில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி, சிலாபம் வரையிலான பகுதியை ஈழம் வரைபடத்தில் பொறித்து வைத்து எல்லை நிர்ணயித்திருந்த பயங்கரவாதிகளின் நடவடிக்கைகைளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டை ஒன்றிணைக்க எம்மால் முடிந் துள்ளது. அதற்கான மக்கள் ஆதரவே இதுவெனவும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் சிலாபம் நகர சபை விளையாட்டரங்கில் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மில்றோய் பெர்னாண்டோ, நியூமல் பெரேரா உட்பட முக்கிய ஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். இப் பிரசாரக் கூட்டத்தில் மேலும் உரை நிகழ்த்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ:- கடந்த வாரத்தில் நாம் களுத்துறை, அநுராதபுரம், மினுவாங்கொடை போன்ற பகுதிகளுக்குச் சென்றிருந்தோம். சென்ற இடமெல்லாம் பெரும் ஜனத்திரள்.

இன்று சிலாபத்தில் மூன்று தேர்தல் தொகுதிகளிலிருந்து மட்டுமே மக்கள் வருகை தந்திருந்த போதும் அச்சனத்திரளே இவ்விளையாட்டரங்கை நிறைத்துவிட்டுள்ளது. இம் மாபெரும் ஜனத்திரள் எமது அமோக வெற்றியை உறுதிப்படுத்துகின்றது.

எதிர்க் கட்சியினர் அரசியல் என்ற பெயரில் தமது குரோதத்தையும், விரோதத் தையும் காட்டுவதிலேயே மும்முரமாகச் செயற்பட்டு வருகின்றனர். எனினும் மக்கள் எப்போதும் எம் பக்கமே உள்ளனர்.

நாம் பயங்கரவாதத்தை ஒழிக்கும் யுத்தத்தை மேற்கொண்டிருந்த போதும் நாட்டின் அபிவிருத்தியை மறக்கவில்லை. முழு நாட்டையும் அபிவிருத்தி செய்தோம். நாடெங்கிலுமுள்ள வீதி, பாலங்கள் உட்பட சகல கிராமங்களையும் அபிவிருத்தி செய்தோம்.

உலக நாடுகளில் பெரும் உணவுப் பிரச்சினை ஏற்பட்ட போதும் நாம் எமது மக்களைப் பட்டினி போட்டதில்லை. வடக்கு கிழக்கு உட்பட சகல மக்களுக்கும் உணவு வழங்கினோம். பிரபாகரனுக்குக்கூட நாமே உணவு வழங்கினோம். நுரைச்சோலை, மேல் கொத்மலை போன்ற மின் உற்பத்தித் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் நாட்டு மக்கள் நலன் தொடர்பான சகலதையும் தடையின்றி முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

புத்தளம் – மன்னார் பாதையை விரைவில் திறப்போம். அதன் மூலம் இப்பகுதி மக்கள் மடுத் திருப்பதிக்குச் சுதந்திரமாகச் செல்ல வாய்ப்புக் கிடைக்கும். நாட்டில் உல்லாசப் பிரயாணத்துறை வீழ்ச்சி கண்ட யுகத்தை நாம் மாற்றியுள்ளோம். எதிர்காலத்தில் கற்பிட்டி போன்ற பிரதேசங்களை சுற்றுலாப் பிரதேசமாக மாற்றுவதே எமது நோக்கமாகும். சிலாபம், புத்தளம் நகரங்களோடு தொடர்புடைய பாதைகள் முழுமையான அபிவிருத்திக்கு உட்படுத்தப்படும்.

விவசாயிகளுக்காகக் குளங்களைப் புனரமைத்தது போன்று, தொழிலாளர்களுக்கு கைத்தொழில் பேட்டைகளை அமைத்து க்கொடுத்தது போன்று மீனவர்களுக்கான மீன் பிடித்துறை முகத்தையும் நாம் உருவாக்கிக் கொடுத்துள்ளோம்.  அதில் நிலவும் குறைபாடுகளையும் நாம் தீர்த்து வைப்போம். இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது மீனவர்களை மீட்பதற்கு இந்திய அரசாங்கத்துடன் நேரடி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள் ளதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

இலங்கைத் தமிழர்களின் ஆங்கில நூல்கள் – நூல்தேட்டம் ஆங்கில நூல் தொகுப்புக்கானதொரு அறிமுகம் : என். செல்வராஜா (நூலகவியலாளர்)

Selvarajah Nஇலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் ஆங்கில மூலமான நூல்களை எழுதி வெளியிட்டதில் தமிழருக்கும் முஸ்லீம்களுக்கும் முக்கிய பங்குண்டு. அண்மைக்காலத்தில் கூட பல்வேறு நாடுகளில் ஈழத்தமிழர்களின் ஆங்கில நூல்கள் பல்துறைகளிலும் வெளிவந்த வண்ணமே உள்ளன. இவை எவ்வளவுதூரம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன வென்பதையோ திட்டமிட்டு ஆவணப்படுத்தப்படாமல் ஒதுக்கப்பட்டுள்ளனவென்பதையோ நாம் இன்றுவரை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அதை ஓரளவு உணர்ந்தவர்கள்கூட இது வேறு எவனோ ஒருவனுக்கு வித்pக்கப்பட்ட பணி என்று மூன்றாவது மனிதராகக் கைகட்டிப் பார்வையாளராக இருந்துவிடுகின்றார்கள்.

1970களில் பேராதனை பல்கலைக்கழக நூலகராகவிருந்த எச்.ஏ.ஐ.குணத்திலக்கவின் A Bibliography of Ceylon: a systematic  guide to the literature on the land, people, history and culture published in the Western  languages from the sixteenth century to the present day  என்ற தலைப்பில் ஆங்கில நூல்களுக்கான நூற்பட்டியல் 1970-1983 காலப்பகுதியில் 5 தொகுதிகள் வெளிவந்தது. இதை சுருக்கமாக H.A.I.Goonetileke’s Bibliography of Ceylon என்று அழைக்கிறோம். இதில் இலங்கைவாழ் தமிழர்களின் ஆங்கில நூல்கள் பெரும்பாலானவை பதிவுசெய்யப்படாததை அக்காலகட்டத்தில் நாம் கண்டுகொள்ளவில்லை.

ஈழத்தமிழர்களின் ஆங்கில நூல்கள் பெருஞ்சந்தை வாய்ப்புக்களை நாடாததும் தமக்குள்ளேயே வெளியிட்டு சிறுவட்டங்களுக்குள் அதை விநியோகித்து திருப்திகாண்பதும் அன்றும் இன்றும் எமது மக்களைப் பொறுத்தவரையில் பொதுவானதாகவே உள்ளது. ஏ.ஜே.வில்சன், எச்.டபிள்யு தம்பையா, சிவானந்தன் போன்றோரின் நூல்கள் ஓரளவு சர்வதேசச் சந்தையை எட்டியுள்ளனவாயினும் ஒப்பீட்டு அடிப்படையில் எம்மவர்களின் விநியோகத் திட்டம் வலுவிழந்ததே என்பதை எவரும் மறுக்கமுடியாது.

அண்மையில் 1987இல் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் நகரிலுள்ள Clio Press என்ற நூல் வெளியீட்டாளர்கள் World Bibliographical Series  என்ற ஒரு தொடரை வெளியிட்டார்கள். 77 நாடுகளில் அந்நாட்டவர்களால் ஆங்கிலத்தில் வெளியிடப்பெற்ற சகலதுறையிலான நூல்விபரங்களையும் குறிப்புரையுடன் (நூல்தேட்டம் தொகுப்புகள் போன்று) தொகுத்து ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தொகுதி என்ற வகையில் வெளியிட்டார்கள் 20ஆவது தொகுதி இலங்கைக்குரியது. அதனை விஜய சமரவீர என்பவர் தொகுத்திருந்தார். ((W.H.Smithஇல் இந்நூல் விற்பனைக்குண்டு). 631 ஆங்கில நூல்களை, இலங்கையரால் வெளியிடப்பட்டதாக அவர் அடையாளம் கண்டிருந்தார். இவற்றில் சின்னப்பா அரசரத்தினம், க.குலரத்தினம், சோ.செல்வநாயகம், கைலாசபதி உள்ளிட்ட சில தமிழர்கள் எழுதிய 46 ஆங்கில நூல்களையே இலங்கைக்குரியதாக அவரால் கண்டுகொள்ள முடிந்தது. புத்திஜீவிகளாகவும், முன்தோன்றிய மூத்தகுடிகளாகவும் தம்மை விதந்துரைக்கும் எம்மவரின் பங்களிப்பு வெறும் 46 தானா என்பதைக்கூட நாம் அப்போது சிந்திக்கவில்லை.

இலங்கைத்தீவின் இராணுவ வரலாற்றை முதலில் எழுதியவர் ஒரு தமிழர் என்பதோ (The Military History of Ceylon/ Anton Muttukumaru), கொழும்பு நகரின் தெருக்களின் வரைபடத்தை (A-Z Street  Guide of Greater Colombo, Kandy, Nuwara eliya, Anuradhapura & Polonnaruwa) நூலுருவில் வழங்கியவர் T.சோமசேகரம் என்ற தமிழரென்றோ நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இலங்கையின் சிங்கள குடித்தொகைப் பரம்பலையிட்டு தனது ஆராய்ச்சியை லண்டன் School of Economics  என்ற உயர் பல்கலைக்கழகக் கல்லுரியில் மேற்கொண்டவர் ஆர்.ராஜேந்திரா என்பவர். 1952இல் இவர் மேற்கொண்ட இந்த ஆய்வு இலங்கைப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் விதந்துரைக்கப்பட்டு 1955இல் பெருமையுடன் நூலுருவில் கொண்டுவரப்பட்டது. சிங்களவர்களின் குடித்தொகைப் பரம்பல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஆய்வு இதுவென்று குறிப்பிடப்படுகின்றது. இப்படியாக விவசாயத்துறை, பொருளியல்துறை, அரசியல்துறை, உயிரியல்துறை என்று பல்வேறு துறைகளிலும் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் தமிழ் அறிஞர்கள் தமது மேலான பங்களிப்பை வழங்கி வந்துள்ளார்கள். இதுவரை இது உலகில் எங்குமே முழுமையாக ஆவணப்படுத்தப்படவில்லை.

இன்று ஈழத்தமிழர்களின் வாழ்வு திறந்தவெளிச் சிறைகளுக்குள்ளும் தடுப்புமுகாம்களுக்குள்ளும் புலம்பெயர் தேசங்களின் இனக்கலப்புகளுக்குள்ளும் சிக்கிச் சீரழிந்திருக்கும் நிலையில் அவர்களின் தனித்துவம் பற்றிப் பேசப்படுகின்றது. இலங்கையில் அவர்களது கௌரவமான இருப்பிற்கான வழிகள் பற்றிப் பேசப்படுகின்றன. எங்கிருந்தோ வந்த இலங்கைத் தமிழர் தமக்கு ஒரு சுமை என்று இலங்கையின் இனவாத அரசுகள் சிந்தித்து செயற்படும் இன்றைய நிலையில், இலங்கைத் தமிழரின் இருப்பிற்கான உரிமைப்போர் ஒரு சர்வதேச சமூகத்தின் அவதானத்திற்கு உரியதாக மாறிவரும் இவ்வேளையில் இலங்கையில் தமிழ்பேசும் குடியினரின் அந்நாட்டின் கட்டுமானத்திற்கு என்ன செய்தார்கள் என்ற கேள்விக்கு விடைதேடும் பணியொன்றும் எமக்குள்ளது.

அப்பணியை தனிப்பட்டமுறையில் முன்னெடுத்து அண்மையில் ஒரு ஆங்கில நூற்பட்டியல் (Bibliography) ஒன்றினை உருவாக்கியிருக்கிறேன். நான் வாழ்நாள் பணியாக மேற்கொண்டுவரும் நூல்தேட்டம் என்ற தொகுப்பு முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த ஆங்கில நூற்பட்டியலை உருவாக்கியிருக்கிறேன். இலங்கைத் தமிழர்களும், தமிழ்பேசும் முஸ்லிம் மக்களும் இதுவரை எழுதி ஆங்கிலத்தில் பிரசுரித்துள்ள 323 நூல்களை பல்வேறு ஐரோப்பிய நூலகங்களிலும், தனியார் சேர்க்கைகளிலும் இருந்து இனம்கண்டு அவற்றை குறிப்புரையுடன் கூடியதாகத் தொகுத்து நூலுருவில் 201 பக்கங்களில் ஐரோப்பிய தமிழ் ஆவணக்காப்பக, ஆய்வகத்தினூடாக வெளியிட்டுள்ளேன்.

இந்த ஆங்கில மொழி நூற்பட்டியலை உலக நாடுகளெங்கும் இயங்கும் சர்வதேச நூலகங்களில் சேர்ப்பிக்க வேண்டிய அவசியம் இன்றுள்ளது. வெறும் வெளியீட்டு விழா நடத்தி ஒரு சிறு நண்பர் குழுவினருடன் சந்திப்பை ஏற்படுத்தி அதன்மூலம் இந்த நூலை அறிமுகம்செய்து விற்பனைசெய்து பணமீட்டும் முயற்சி இதுவல்ல. இக் கட்டுரையின் வாயிலாக ஒரு முக்கியமான ஆவணத்தின் இருப்பினை உங்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறேன். இது எனது முதற்கட்ட நடவடிக்கை.

நூல்தேட்டம் ஆங்கிலப் பதிப்பு ஒரு தனித்தொகுதியாகும். இதன் இரண்டாம் பதிப்பினை தற்போது சேகரித்துவரும் புதியதும், தவறவிடப்பட்டதுமான ஆங்கில நூல்களின் விபரங்களுடன் திருத்திய பதிப்பாக 2012இல் வெளியிடத் தீர்மானித்திருக்கிறேன். இவ்வாறு ஆங்கில நூல்தேட்டம் காலக்கிரமத்தில் முழுமையை நாடியதொரு தொகுப்பு முயற்சியாக அமையும் என்பது எனது நம்பிக்கை.

இந்நூல் தனிப்பட்ட தீவிர ஆய்வாளர்களுக்குப் பயன்பட வேண்டும். அவர்களின் மூலம் ஈழத்தமிழர்களின் பரந்துபட்ட அறிவியல் ஞானம் உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டப்படவேண்டும். இந்த அடுத்த கட்டத்தை முன்நகர்த்திச் செல்லும் பணியை தமிழர் வாழ்வியலுடன் அவர்களின் மேம்பாட்டுடன் தம்மை இணைத்துக்கொண்டுள்ள உங்களையொத்த அனைவரிடமும் ஒப்படைத்திருக்கிறேன்.

நூல்விபரம், விலை, மற்றும் கிடைக்குமிடம் போன்ற தகவல்களை இக்கட்டுரையின் இறுதியில் வழங்கியிருக்கிறேன். இந்நூலின் ஒரு பிரதியையாவது விலைகொடுத்து வாங்கி, அதனை உங்கள் பிரதேச நூலகத்திற்கு உங்கள் அன்பளிப்பாக வழங்க முன்வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். இதன்மூலம் ஈழத்தமிழரின் ஒரு ஆவணம் உலகின் முக்கியமான நூலகங்கள் அனைத்திலும் வைப்பிலிடப்படுவதை உறுதிசெய்துகொள்வோம். தயவுசெய்து இதையும் நானே செய்து முடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். உலகின் பிரபல நூலகங்கள் விலைகொடுத்து இந்நூலை எம்மிடத் பெற்றுக்கொள்ளத் துடிக்கும் என்று நம்பியிருப்பது மடைமை. நாம் தான் நூலகங்களை நாடி இந்நூலை எடுத்துச்சென்று வழங்க வேண்டும். அதற்கு நீங்கள் முன்வருவீர்களா மாட்டீர்களா என்ற கேள்விகளுடன் இந்த அறிமுகத்தை நிறைவுசெய்கின்றேன். நன்றி.

நூல் விபரம்:

Title: Noolthettam: An annotated bibliography of Sri Lankan Tamils.
Compiler: N.Selvarajah,  Co-ordinator,
European Tamil Documentation and Research Centre, London.
Publishers: European Tamil Documentation and Research Centre, London.
Pages: 201
Price: £ 15.00

Payment methods: Pay pal transaction: Noolthettam
Cheque: (UK only) payable to ETDRC
Bank: Abbey (Santender), 
Account Name: ETDRC, Sort Code 09-01-27, A/c No. 24459051,
IBAN: GB93ABBY09012724459051

Available at: United Kingdom:  N.Selvarajah, ETDRC, 48 Hallwicks Road, Luton LU2 9BH, United Kingdom.

தேசம்நெற் இணைய வலையில் இருந்து காணாமற் போனது ஏன்? : தேசம்நெற்

தேசம்நெற் இணைய வலையில் இருந்து காணாமற் போனது ஏன்?
தேசம்நெற் இற்கான இணையச்சேவையை (server)  வழங்கும் நிறுவனம் தேசம்நெற் இன் பதிவுக்கோவையினை (database) தேசம்நெற் இன் இணைப்பில் இருந்து பிரதான இணைப்பிற்கு (root directory)  இடம்மாற்றியது. அதனால் தேசம்நெற் இணையம் இணைய வலையில் காணாமல் போனது. தேசம்நெற் இணையத்திற்கு 500MB கொள்ளவு சேமிப்புத் திறனே வழங்கப்பட்டதாகவும் தேசம்நெற் இன் பாவனை 738 MB க்கு அதிகமாகியதால் இணையச்சேவையை வழங்குபவர்கள் மேற்படி நடவடிக்கையை எடுத்தனர்.

தேசம்நெற் நிர்வாகத்திற்கு இது பற்றி அறிவுறுத்தப்படவில்லையா?
இவ்வாறான அறிவுறுத்தல்கள் மின் அஞ்சலூடாக அனுப்பி வைக்கப்படும் என தேசம்நெற் நிர்வாகம் கருதி இருந்தது. ஆனால் இணைய சேவையை வழங்குபவர்கள் தமது தொடர்புகளை தமது இணையசேவையின் இணையத்தில் உள்ள தேசம்நெற் இற்கான பகுதியில் மட்டும் அவற்றை குறிப்பிட்டு இருந்தனர். வேறு எவ்வித தொடர்புகளும் மேற்கொள்ளப்படவில்லை. தேசம்நெற் இணைய வலையில் காணாமல் போனபோது தேசம்நெற் நிர்வாகமும் ஒரு வாசகனின் நிலையிலேயே இருந்தது.

அதனைச் சரி செய்வதற்கு ஏன் இவ்வளவு காலதாமதம் ஏற்பட்டது?
தேசம்நெற் ஒரு லாபமீட்டும் ஊடகமல்ல. தேசம்நெற் இல் பணிபுரிபவர்கள் அனைவரும் ஒரு நல்ல ஊடகத்தை நடாத்த வேண்டும் என்றதன் அடிப்படையில் எவ்வித பலனையும் எதிர்பாராமலே தங்கள் நேரத்தை சேமித்து தேசம்நெற் இல் பணிபுரிகின்றனர். குறிப்பிட்ட தொழில்நுட்பத் தவறு நடைபெற்ற போது எமக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்குபவர்களை உடனடியாகத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களைத் தொடர்புகொண்டு விடயத்தை ஆராயும் போது இரவு ஆகிவிட்டது.

மேலும் இணைச்சேவையை வழங்குபவர்களுடன் மின் அஞ்சலூடாக மட்டுமே தொடர்பு கொள்ள முடியும் ஒவ்வொரு மின் அஞ்சல் அனுப்பும் போதும் அவர்களிடம் இருந்து பதில் வருவதற்கு குறைந்தது அரைமணிநேரம் ஆவது ஆகும். தவறைச் சரி செய்வதற்கு தேசம்நெற் கோவையை மீளப் பதிவிறக்கம் செய்துகொள்ள மட்டும் இரு மணிநேரம் எடுத்துக் கொண்டது.

இவ்வாறான காரணங்களால் தேசம்நெற் யை உடனடியாக மீண்டும் இணைய வலைக்குள் கொண்டுவர முடியவில்லை.

தற்போது தேசம்நெற் இல் என்ன மாற்றம் செய்யப்பட்டு உள்ளது?
தேசம்நெற் இல் 2007 முதல் 2008 டிசம்பர் 31 வரையான சகல பதிவுகளும் கருத்தாளர்களின் பின்னூட்டங்களும் நீக்கப்பட்டு உள்ளது. இவற்றின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது. தேசம்நெற் இல் இருந்த இணைப்புகள் சிலவும் நீக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தேசம்நெற் இற்கு ஒதுக்கப்பட்ட 500MB கொள்ளளவிற்கு தேசம்நெற் இன் பதிவுக்கோவை கொண்டுவரப்பட்டு உள்ளது.

நீக்கப்பட்ட பதிவுக் கோவையை தேசம்நெற்றில் பார்வையிட முடியாதா?
தற்போது நீக்கப்பட்ட பதிவுகள் எதனையும் பார்வையிட முடியாது. ஆனால் அவற்றின் பிரதிகள் தேசம்நெற் இடம் உண்டு.

இதனை வடிவமைப்பின் ஆரம்பத்தில் கவனிக்கவில்லையா?
தேசம்நெற் வடிவமைக்கப்பட்ட போது அதனை குறிப்பிட்ட காலத்திற்குப் பின் மீள் வடிவமைப்பு செய்யத் திட்டமிட்டு இருந்தோம். அத்துடன் இணையச்சேவை வழங்குபவர்களிடம் ஒவ்வொரு விடயத்திலும் மட்டுப்படுத்தப்படாத (unlimited) எல்லைகளைக் கொண்ட ஒரு ஒப்பந்தத்தையே பெற்றுக் கொண்டோம். ஆயினும் அவர்களின் வர்த்தகச் சொல்லாடலில் இணையத்தின் கோவைகளுக்கான பதிவில் மட்டுப்படுத்தப்படாத கோவைப் பதிவு என்பது குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. நாங்களும் அதனை அடையாளம் காணத் தவறிவிட்டோம்.

எதிர்காலத்தில் இவ்வாறான தவறு ஏற்படமாட்டாதா?
இவ்வாறான தவறு ஏற்படாத வகையில் தேசம்நெற்றை மீள்வடிவமைப்பு செய்ய உள்ளோம். மீள்வடிவமைப்பு வேலைகள் இன்னும் சில வாரங்களில் இடம்பெறும். மீள் வடிவமைப்பு செய்யும் போது நீக்கப்பட்ட பதிவுகள் மீளவும் தேசம்நெற்றுடன் இணைக்கப்படும். அனைத்துப் பதிவுகளையும் ஆண்டு வரிசையில் மீள்பதிவிடத் திட்டமிட்டு உள்ளோம்.

தேசம்நெற் மீள்வடிவமைக்கப்படுவதாயின் வாசகர்களின் கருத்தாளர்களின் ஆலோசனைகள் பரிசீலிக்கப்படுமா?
நிச்சயமாக! தேசம்நெற் இல் எவ்வாறான அம்சங்கள் தற்போது பிரச்சினையாக உள்ளதென்பதையும் எவ்வாறான அம்சங்கள் இணைக்கப்பட வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும் என்பதையும் இங்கு பதிவு செய்தால் தொழில்நுட்பக்குழு அவற்றைப் பரிசீலித்து அதற்கேற்ப தங்கள் வடிவமைப்பை மேற்கொள்வார்கள்.

இறுதியாக இத்தடங்கள் ஏற்பட்டதை அடுத்து எம்முடன் தொலைபேசியூடாகவும் மின் அஞ்சலூடாகவும் தொடர்பு கொண்டு தங்கள் ஆதங்கத்தையும் ஆதரவையும் வழங்கிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேசம்நெற்.

வேட்டும் வோட்டும்! : ஈழமாறன்

Mahinda_and_Fonsekaகேட்டவன் ஒருவன்
கேட்டுக் கொண்டதால் – பார்த்துப் பாராமல்
வேட்டு வைத்தவன் ஒருவன் – வைத்துவிட்டு
தமிழன் ஓரமாய் இருப்பதாயின் இருக்கட்டும்
அன்றி உரிமை கேட்கின்
உரிவோம் கோவணத்தையும் – என்று
அமெரிக்கா சென்று அறிக்கை விட்டவன் ஒருவன்
அந்த அறிக்கை தவறென்று
மறுக்க மறுத்தவன் ஒருவன்.

அள்ளிக் கொண்டுபோய் துலைவார்
முள்ளிவாய்க்காலில் வைத்து
கொள்ளி வைத்தது போக
முள்ளுவேலிக்குள் அடைத்து வைத்து
வெள்ளத்துக்கு ஒதுங்க
வீடில்லாமல்
பிள்ளைக்கு கொடுக்க மருந்துமில்லாமல்
கூனிக் குறுகி எம்மினம் டெங்குக்
காச்சலில் செத்து மடிகையில்
நாடுகடந்த தமிழீழம் அமைக்க
ஒரு கூட்டம்
போடச் சொன்னவனுக்கு போடுவதா – இல்லை
போட்டுத் தள்ளினவனுக்குப் போடுவதா
ஏன்று வியன்னா சென்று
விவாதம் செய்தனர்
முகாமில் அப்போது டெங்கு பிடித்து
செத்தவர் தொகை நாற்பதைத் தாண்டிற்று
சம்பந்தன் ஜயாவோ
சாகாமல் இருப்பவர்கள் சாரவேண்டியது
யார் பக்கம் என்று
கரிகாலன் பாணியில் கணக்கு விடுகிறார்.

வன்னி மன்னன் வெள்ளைக் கொடியுடன்
பிணமாய் கிடக்க
குரு திசை மாறியது
திரு சம்பந்தன் ஜயாவுக்கு.
பெடறல் தொடங்கி தமிழீழமாகி – பின்
வடக்கு கிழக்காகி
அதுவும் இப்ப இல்லையென்றான பின்னே
சம்பந்தம் ஜயா
தமிழ் மக்களின் பிரச்சனைக்கு
சம்பந்தம் பேசுறார்.
பதின் மூன்றோ கூடவோ இல்லைக் குறையவோ
என்றெல்லாம் போய்
வட்டமேசை போட்டு வடையும் தேனீரும்
பானமும் பருகிய கூட்டணிக் கூட்டத்தின்
மிஞ்சிய ஆடு – வன்னி
நரி செத்தபின் சிங்கமாய் மாறி
கோரிககை ஏட்டுடன்
கூட்டடமைப்பின் புறோக்கறாய்
தமிழர் மானத்தை விபச்சாரம் செய்ய
ஏறிறார் பொன்சேகா வீட்டுப் படி
இறங்கிறார் மகிந்த கூற்றுப்படி.
ஜரோப்பவிலோ வட்டுக்கொட்டை
மன்னிக்க கோட்டை தீர்மானத்துக்கு
வாக்கு போட வரிசைல் புலன்பெயர் மாக்கள்.

தமிழருக்காய் இணைய மறுத்தது ஒரு புலி
புள்ளையானைப் போட்டுத் தள்ள
அமைச்சராய் ஆனது இன்னொரு புலி
அறிக்கை வந்தது.
மகிந்த வெல்வதற்கு நான் அம்மானோடும்
இணைவேன்
அம்மணமாயும் அலைவேன் என்று.
கிழக்கின் உதயம் குலுங்கி குலுங்கி அழுதது.

வன்னிப்போரில் விழுவது மாடாய் இருந்தாலும்
மனுசனாய் இருந்தாலும்
சுடுவதை நிறுத்தாதே என்று
கட்டளை போட்டவனும்
சுட்டதை நிறுவியவனும்
வாக்குக் கேட்டு வருவது யாரியடம்?
புலி சுட்டு புருசனை இளந்தவள்
கெலிசுட்டு தனையனை தொலைத்தவள்
பிறந்திரு நாட்களில் தலை வெடித்து
பிணமாய்ப் போன தன்
பிஞ்சுக் குழந்தையின் இரத்தம் காயாது
தினம் வெம்பி அழுபவள்
முறிந்த கால் இன்னும்
ரணமாய்க் கொதிக்க
பிணமாய் கிடப்பவள்
சுpதைந்த மார்பிலிருந்து
சீழ் வடிய கதறித் தவிப்பவள்
பட்ட காயங்கள் தீர சிறு கட்டு
மருந்துகூட இல்லாத
அப்பாவி மக்கள் இவர்கள்
ஈனரே எப்படிக் கேப்பீர் வாக்கு
ஏப்படிப் பாப்பீர் அவர் முகம்.

நாசமாய் போவார்
துலைவார் கூட்டமெல்லாம்
தலைமை எனச்சொல்லி
வாக்குக் கேட்டு வந்தால் – ஒரு பிடி மண்ணள்ளி
துலைவாரே நீவிரெல்லாம்
நாசமாய் போக என்று சபித்துவிடுங்கள்
அதைவிட உங்களிடம் வேறென்ன
வலு மிஞ்சியிருக்கிறது.

சரத் பொன்சேகாவின் குடும்ப ஆயுதக் கம்பனியின் ஊழல், மோசடிகள் – 48 மணி நேரத்தினுள் விவாதம் நடத்த தயார் : விமல் வீரவன்ச

vote.jpgசரத் பொன்சேகாவின் குடும்ப ஆயுதக் கம்பனியினால் புரியப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பாக எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் தனியார் தொலைக்காட்சியொன்றில் விவாதம் நடத்த அரச தரப்பு தயாரெனவும்,  எதிர்க்கட்சி அதற்கு இணங்காவிடின் குறித்த ஆயுதக் கொள்வனவின்போது இடம்பெற்ற ஊழல் தொடர்பான தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தப்படுமென்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்பி.யுமான விமல் வீரவன்ச நேற்று மீண்டும் சவால் விடுத்தார்.

மணமகனும் மணமகளும் சந்தித்துப் பேச்சு நடத்த இதுவொன்றும் மணமேடையல்ல.  விவாத மேடை.  இங்கு அரச தரப்பில் ஜனாதிபதி தான் விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்பது அவசியமில்லை. அதற்கு நாம் யாரையும் நியமிப்போம். அதேபோல் எதிர்க்கட்சி சார்பாக பொன்சேகா தான் விவாதத்தில் பங்குபற்ற வேண்டுமென நாம் கோரவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா, இராணுவத் தளபதியாக இருந்தவேளை அவரது மருமகனின் பெயரில் ஆயுதக் கம்பனியொன்றை நடத்தி வந்தமை தொடர்பாக நாம் அறிந்திருந்தோம்.

இருப்பினும் தற்போது சரத் பொன்சேகாவின் ‘கிரீன் கார்ட்’ டிலுள்ள விலாசமும் அமெரிக்காவில் அவரது மருமகனின் பெயரில் இயங்கி வரும் ‘ஹைகோப்’ எனும் ஆயுத கம்பனியின் விலாசமும் ஒன்றாக இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

கிரீன் கார்டில் உள்ளது போன்ற, கார்த்திஹேவா சரத் சந்திரலால் பொன்சேக்கா, 17545 கோல்ட் ட்ரைவ், ஹெட்மண்ட், ஓ.கே, 73012 என்ற விலாசத்திலும் ‘ஏ-055-090192’ என்ற க்ரீன் கார்ட் இலக்கத்திலுமே குறித்த ஆயுதக் கம்பனியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியென்றால் இதனை அவரது குடும்ப கம்பனியென்றுதானே கூறவேண்டுமென்றும் விமல் வீரவன்ச எம்.பி. கேள்வி எழுப்பினார்.

இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலகட்டத்தில் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு உட்பட்ட பெறுமதிமிக்க ஆயுதங்களை கொள்வனவு செய்தல் மற்றும் கேள்விப் பத்திரங்களை கோரும் அதிகாரம் ஆகியன பொன்சேகாவிடம் இருந்தன.  அதனை உபயோகித்தே அவர் ஊழல் மோசடிகளை கையாண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்றுக் காலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். விமல் வீரவன்ச எம்.பி, சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் ஆயுதக் கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விவாத மொன்றை நடத்த வேண்டுமென சவால் விடுத்திருந்தார்.

அதற்கு, அந்த விவாதத்தில் அரச தரப்பில் ஜனாதிபதி கலந்துகொள்ள வேண்டுமெனக் கோரி பொன்சேகாவின் ஊடகப் பேச்சாளர்களான அனுர குமார திஸாநாயக்கவும் மங்கள சமரவீரவும் கூட்டாக இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே விமல் வீரவன்ச எம்.பி. நேற்று மீண்டும் இந்த சவாலை விடுத்தார்.

’பொன்சேக்கா ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி. நீங்கள் இப்போது பெரிய பிள்ளை. (லொக்கு லமயெக்) இராணுவத்தில் தளபதியாகவிருந்த காலத்தில் செய்த சிறு பிள்ளைத் தனமான காரியங்களை கைவிட்டுவிட்டு இப்போது பொறுப்பாக நடத்துகொள்ளுங்கள்’ என்றும் வீரவன்ச எம்.பி. கூறினார்.

“நீங்கள் சுத்தமானவராக இருந்தால், பிழையற்றவர் என்றால், மதிப்புக் கொடுப்பவராகவிருந்தால் நீங்களே இந்த விவாதத்தில் நேரடியாகப் பங்குபற்றலாம். ஏனெனில் இது உங்கள் குடும்ப கம்பனி, ஊழல் குற்றங்கள் தொடர்பான சிறந்த அனுபவம் உங்களுக்கேயிருக்கிறது.

இருப்பினும் நீங்கள் விரும்பினால் உங்களுக்குப் பதிலாக வேறு யாரையும் விவாதத்தில் பங்குபற்ற வைக்கலாம். அதில் எமக்கு எந்த ஆட்சேபனையுமில்லை” எனவும் பொன்சேகாவுக்கு விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், மங்கள சமரவீர, சோமவன்ச அமரசிங்க ஆகியோர் வெள்ளையா கறுப்பாவென மக்களுக்கு நன்கு தெரியும்.  ஆனால் பொன்சேகா கறுப்பா வெள்ளையாவென்பது மக்களுக்கு இன்னும் தெரியாது. அவர் அரசியலுக்குள் வந்து 40 நாட்களே ஆகின்றன. இவர் 40 வருட அரசியல் அனுபவம் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது ஊழல் மோசடிகளை சுமத்த முற்படுகிறார். பிறர் மீது ஊழல் மோசடிகளை சுமத்த எத்தனிப்பவர் முதலில் தான் சுத்தமாக இருக்கிறாரா என்பதைப் பார்க்க வேண்டும்.

தனது குடும்ப கம்பனியூடாக அவரால் முன்னெடுக்கப்பட்ட ஊழல்களை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது எமது கடமை. உண்மையில் பொன்சேகா இலங்கையை மாத்திரமன்றி அமெரிக்காவையும் ஏமாற்றியிருக்கிறாரெனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, தினேஷ் குணவர்தன, ஜி. எல். பீரிஸ், ராஜித்த சேனாரத்ன, டளஸ் அழகப் பெரும, சுசில் பிரேம ஜயந்த் ஆகியோரும் கலந்துகொண்டனர்.