வேட்டும் வோட்டும்! : ஈழமாறன்

Mahinda_and_Fonsekaகேட்டவன் ஒருவன்
கேட்டுக் கொண்டதால் – பார்த்துப் பாராமல்
வேட்டு வைத்தவன் ஒருவன் – வைத்துவிட்டு
தமிழன் ஓரமாய் இருப்பதாயின் இருக்கட்டும்
அன்றி உரிமை கேட்கின்
உரிவோம் கோவணத்தையும் – என்று
அமெரிக்கா சென்று அறிக்கை விட்டவன் ஒருவன்
அந்த அறிக்கை தவறென்று
மறுக்க மறுத்தவன் ஒருவன்.

அள்ளிக் கொண்டுபோய் துலைவார்
முள்ளிவாய்க்காலில் வைத்து
கொள்ளி வைத்தது போக
முள்ளுவேலிக்குள் அடைத்து வைத்து
வெள்ளத்துக்கு ஒதுங்க
வீடில்லாமல்
பிள்ளைக்கு கொடுக்க மருந்துமில்லாமல்
கூனிக் குறுகி எம்மினம் டெங்குக்
காச்சலில் செத்து மடிகையில்
நாடுகடந்த தமிழீழம் அமைக்க
ஒரு கூட்டம்
போடச் சொன்னவனுக்கு போடுவதா – இல்லை
போட்டுத் தள்ளினவனுக்குப் போடுவதா
ஏன்று வியன்னா சென்று
விவாதம் செய்தனர்
முகாமில் அப்போது டெங்கு பிடித்து
செத்தவர் தொகை நாற்பதைத் தாண்டிற்று
சம்பந்தன் ஜயாவோ
சாகாமல் இருப்பவர்கள் சாரவேண்டியது
யார் பக்கம் என்று
கரிகாலன் பாணியில் கணக்கு விடுகிறார்.

வன்னி மன்னன் வெள்ளைக் கொடியுடன்
பிணமாய் கிடக்க
குரு திசை மாறியது
திரு சம்பந்தன் ஜயாவுக்கு.
பெடறல் தொடங்கி தமிழீழமாகி – பின்
வடக்கு கிழக்காகி
அதுவும் இப்ப இல்லையென்றான பின்னே
சம்பந்தம் ஜயா
தமிழ் மக்களின் பிரச்சனைக்கு
சம்பந்தம் பேசுறார்.
பதின் மூன்றோ கூடவோ இல்லைக் குறையவோ
என்றெல்லாம் போய்
வட்டமேசை போட்டு வடையும் தேனீரும்
பானமும் பருகிய கூட்டணிக் கூட்டத்தின்
மிஞ்சிய ஆடு – வன்னி
நரி செத்தபின் சிங்கமாய் மாறி
கோரிககை ஏட்டுடன்
கூட்டடமைப்பின் புறோக்கறாய்
தமிழர் மானத்தை விபச்சாரம் செய்ய
ஏறிறார் பொன்சேகா வீட்டுப் படி
இறங்கிறார் மகிந்த கூற்றுப்படி.
ஜரோப்பவிலோ வட்டுக்கொட்டை
மன்னிக்க கோட்டை தீர்மானத்துக்கு
வாக்கு போட வரிசைல் புலன்பெயர் மாக்கள்.

தமிழருக்காய் இணைய மறுத்தது ஒரு புலி
புள்ளையானைப் போட்டுத் தள்ள
அமைச்சராய் ஆனது இன்னொரு புலி
அறிக்கை வந்தது.
மகிந்த வெல்வதற்கு நான் அம்மானோடும்
இணைவேன்
அம்மணமாயும் அலைவேன் என்று.
கிழக்கின் உதயம் குலுங்கி குலுங்கி அழுதது.

வன்னிப்போரில் விழுவது மாடாய் இருந்தாலும்
மனுசனாய் இருந்தாலும்
சுடுவதை நிறுத்தாதே என்று
கட்டளை போட்டவனும்
சுட்டதை நிறுவியவனும்
வாக்குக் கேட்டு வருவது யாரியடம்?
புலி சுட்டு புருசனை இளந்தவள்
கெலிசுட்டு தனையனை தொலைத்தவள்
பிறந்திரு நாட்களில் தலை வெடித்து
பிணமாய்ப் போன தன்
பிஞ்சுக் குழந்தையின் இரத்தம் காயாது
தினம் வெம்பி அழுபவள்
முறிந்த கால் இன்னும்
ரணமாய்க் கொதிக்க
பிணமாய் கிடப்பவள்
சுpதைந்த மார்பிலிருந்து
சீழ் வடிய கதறித் தவிப்பவள்
பட்ட காயங்கள் தீர சிறு கட்டு
மருந்துகூட இல்லாத
அப்பாவி மக்கள் இவர்கள்
ஈனரே எப்படிக் கேப்பீர் வாக்கு
ஏப்படிப் பாப்பீர் அவர் முகம்.

நாசமாய் போவார்
துலைவார் கூட்டமெல்லாம்
தலைமை எனச்சொல்லி
வாக்குக் கேட்டு வந்தால் – ஒரு பிடி மண்ணள்ளி
துலைவாரே நீவிரெல்லாம்
நாசமாய் போக என்று சபித்துவிடுங்கள்
அதைவிட உங்களிடம் வேறென்ன
வலு மிஞ்சியிருக்கிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

 • guru
  guru

  சம்பந்தர் ஜயா சொல்லாமல் சொல்லிப்போட்டார் பொன்சேகாவுக்கு போடுங்கோ என.

  Reply
 • nadesh
  nadesh

  அதொண்டும் புதுசல்ல. உதைத்தான் சொல்லப்போறார் எண்டது உலகம் பூராத் தெரியும். அதை எல்லாத் தமிழ்த்தலைமையும் சொல்லவேணுமெண்டுதான் ஆசைப்பட்டவை.

  சம்பந்தர் ஜயா என்ன ஆலில்லா ஊருக்கு இலுப்பம்பூத்தான்

  Reply
 • thurai
  thurai

  தமிழ் அரசியல் தலைவர்கள் போராடுவது இழந்த தமிழர்களின் உருமைகளிற்காகவல்ல. தமிழர் மீது யாருக்கு உருமையென்பதெற்கே போராடுகிறார்கள், போட்டி போடுகின்றார்கள்.

  பொருளிற்கும், புகழிற்கும் அலையும் தமிழ் அரக்கர் கூட்டத்திடம் அல்லல் படும் இலங்கைத் தமிழினம். வட்டுக்கோட்டைத் தீர்மானம் அன்று, கடல் கடந்த தமிழீழம் இன்று. காண்பதோ கடைகழும் கோவில்கழும் உலகமெங்கும்.

  துரை

  Reply
 • DEMOCRACY
  DEMOCRACY

  பேராசிரியர் ரத்தின ஜீவன் ஹூல் ஒரு விஷயத்தை,இலங்கை வரலாற்றில்,நெடுங்காலமாகவே தமிழ்த் தலைமைகள் தோல்வியடைவதை கண்டு,”சிங்களவர்கள் குழம்பி போயுள்ளனர்” என்பதை பதிவு செய்துள்ளார்!.நான் முன்பே எழுதியுள்ளேன்,”யாழ்ப்பாண வெள்ளாலர்” என்ற “சொல்லாடல்” உண்மையில் இல்லாதொன்று என்று!.பலவித நலனுக்காக பலர் இந்த சொல்லாடனுள் புகுந்து கொண்டுள்ளனர்- முன்பு காலனித்துவ நிர்வாக உத்தியோகத்துக்காக, தற்போழுது,”புலம்பெயர் வசதிகளுக்காக”.இது முள்ளியவய்க்காலில்,பிரபாகரனின் விஷப்பரிட்சையிலிருந்து,அதன் விளைவுகளிலிருந்து தற்போது உளவியல் மற்றும் கருத்தியல் தற்பாதுகாப்பிற்கான புகலிடமாக உள்ளது.சரத் பொன்சேகாவை நோக்கி நகருவதற்கு வருங்கால தளமாக உருட்டப்படுகிறது.கருணா,பிள்ளையான்,இளைய பாரதி போன்றவர்கள்,யழ்ப்பாண வெள்ளாளரை எதிர்க்கவில்லை என்றாலும்,தங்கள் நலனுக்காக பிரேதேசவாதத்தை கையாளுகிறார்கள்.இப்படி இறைமையில்லாத சொல்லாடலால்,பல பொருப்புகளை கைகழுவ நினைப்பவர்களுக்கு சாதகமாக உள்ளது – இவர்களுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விற்கும் தமிழக அரசியல் வாதிகளும் இதை உசுப்பேத்தி விடுகிறார்கள்.தற்போது அனைவருடைய பிரச்சனை சிறையிலிருக்கும் முன்னாள் புலி உறுப்பினர்களை(ஆயிரங்கணக்கானவர்கள்)தாங்கள்தான் புனர்வாழ்வு அளிப்பதற்கு,விடுதலை செய்வதற்கு உதவி செய்தோம் என்ற தற்பாதுகாப்பை பெறுவதே அல்லது அவர்களுடைய அவலத்துக்கு மற்றவர் மீது பழிப் போடுவது(தமிழக அரசியல்வாதிகள் துணையுடன்).சிங்களவர்களும் குழம்பிய நிலையிலேயே இந்தப் போக்கை ஆதரித்தப்படியே இருக்கிறார்கள்!.

  Reply
 • Nesan
  Nesan

  ஈழமாறன் போன்றவர்கள் எல்லோர் மீதும் குற்றம் கண்டுபிடிப்பதிலேயே காலம் கடத்துபவர்கள். தமழிமக்களின் உரிமையை கூட்டமைப்புத்தான் இனி வென்றெடுக்கவேண்டும்.

  Reply