எஸ் சிவரூபன் தனது சொந்த முகத்துடன் கட்டுரையை வெளியிடாமல் தனது உருட்டுக்கும் புரட்டுக்கும் புனைபெயரில் கவர் எடுத்துக்கொள்கின்றார். சேதுவும் தேசம் ஜெயபாலனின் பொறுப்பற்ற பத்திரிகா தர்மமும். : எஸ் சிவரூபன் பத்திரிகா தர்மம் பற்றிப் பேசுவதற்கு இவருக்கு எவ்வித அருகதையும் இல்லை. இவரிடம் உள்ள தாழ்வுமனப்பான்மையே இவரை மற்றவர்களது கல்வித் தகுதி திருமணம் போன்ற விடயங்களை கேவலப்படுத்த காரணம் என நினைக்கிறேன். என்னைப் பற்றிப் பிழையான தகவல்கள் பல உலாவருகின்றது. உங்களைப் போன்றவர்கள் ஒழிந்திருந்து செய்கின்ற ஊத்தை வேலைகள் தான் நிதர்சனத்திலும் இடம்பெற்றிருக்கும் என நினைக்கின்றேன். தற்போது நீங்கள் தேசம்நெற்றை இன்னொரு நிதர்சனமாக்கி இருக்கிறீர்கள்.
கட்டுரையாளர் எஸ் சிவரூபன் என்ற பெயருக்குள் ஒழிந்திருப்பவரிடம் நான் கேட்பது என்னைப் பற்றி எழுதிய ஒரு விடயத்திற்காவது உங்களுக்கு ஆதாரம் இருந்தால் அதனை நீங்கள் உங்களது சொந்தப் பெயரில் அல்லது எஸ் சிவரூபன் என்ற பெயரில் ஒழிந்து கொண்டே வையுங்கள். நான் எழுதுவதை நிறுத்துகின்றேன். அது எனது குழுந்தைகள் மீது சத்தியம். அப்படி ஆதாரத்தை வைக்காவிட்டால் நீங்கள் எழுதுவதை நிறுத்துங்கள்.
1. ‘புலிகளின் நிதர்சனம் டொட்கொம் என்ற புலிகளின் இணையத்தளத்திற்கு நிர்வாகி ஆகிய சேது என அழைக்கபடும் நடராசா சேதுரூபன் என்பவருக்கு தமிழ் எழுதவோ வாசிக்கவோ தெரியாதவன்’ என்கிறார் இந்த கட்டுரை எழுதியவர்.
அப்படியானால் அவர் என்ன மொழியில் இணையம் நடாத்தினார்? தொடர்பில் இருந்திருந்தால் தமிழைத் தவிர உலக மொழிகள் எதுவுமே பாவிக்காத புலிகளுடன் என்ன மொழியில் சேது உரையாடி இருப்பார்? நான் தற்போது தேசம் இணையத்திற்கு தமிழில் தான் பதில் எழுதி உள்ளேன். சேதுவுக்கு தமிழில் எழுதவோ வாசிக்கவோ தெரியாது என்பது கட்டுரையாளனின் தலைசிறந்த கண்டுபடிப்பு.
நிதர்சனம் இணையத்தளத்தை சேதுரூபனாகிய நான் இயக்கியதற்கான ஒரு ஆதாரத்தைத் தானும் கட்டுரையாளர் முன்வைக்கட்டும்.
சேதுரூபனாகிய நான் பொட்டமானுடன் நேரடித் தொடர்பில் இல்லாத போதும் அப்படி இருந்ததாக அடம்பிடிக்கும் கட்டுரையாளர் நான் பொட்டம்மானுடன் நேரடித் தொடர்பில் இருந்ததை உறுதிப்படுத்தட்டும்.
எந்தக் கொலைகளுடனும் அல்லது கொலை செய்தவர்களுடனும் எந்த தொடர்பும் வைத்திராத என்மீது சேது பல கொலைகளுக்கு நிதர்சனம் ஊடாக உடைந்தையாக இருந்தவர் என கூறபட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை வைத்துள்ள கட்டுரையாளர் ஒரு செய்தியைத் தானும் ஆதரமாக காட்ட முடியுமா என்பதே சேதுருபனாகிய எனது சவால்.
மத்திய கல்லூரி அதிபர் ராஜதுரையுடைய கொலைக்கும் அது பற்றிய செய்திக்கும் அது வெளியான இணைய ஆசிரியருக்கும் இணையத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படி இருந்தால் அதனை வெளியிடுங்கள். எனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள்.
இவை சாதாரண குற்றச்சாட்டுகளும் அல்ல. தண்டனைக்குரிய குற்றங்கள். இவை அனைத்தும் திட்டமிட்ட முறையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட புலம்பல்கள். ஒரு தாழ்வுமனப்பான்மை கொண்ட ஒருவர் ஒழிந்திருந்து கொண்டு புலம்பியதை விமர்சனம் என்ற பெயரில் வெளியிட்டது தேசம்நெற்றின் தவறு.
புலிகளுக்கும் சேதுவாகிய எனக்கும் தனிப்பட்ட தொடர்பு இருந்திருந்தால் அதை மறைக்க வேண்டிய தேவை எனக்கு எள்ளளவேனும் இல்லை. எனக்கும் ஈ.பி.டி.பிக்கும் புளோட்டுக்கும் ரெலோவுக்கும் ஈ.பி.ஆர்.எல்எவ்க்கும் இராணுவத்திற்கும் பொலிசுக்கும் இன்னோரன்ன பல சக்திகளுடனும் தொடர்பு இருந்தது அதை நான் ஏன் மறைக்க வேண்டும்?
2. 1998 காலபகுதியில் ஊடகத்துறையில் புகுந்து கல்வியையும் முழுநேர ஊடகத்துறையையும் தொடராக ஆரம்பித்து இலங்கை அரச தொலைக்காட்சி கொழும்பின் தமிழ் தேசிய பத்திரிகை ஊடாக யுத்த களத்து செய்தி சேகரிப்பு வரை ரிபிசி வானொலி, ஈரிபிசி வானொலி அதன் பின்னரான பல சர்வதேச ஊடகங்கள் வரை வேலை செய்து வருகிறேன். இந்த 11 வருடகால வராலாற்றை ‘ஒரு வயது குறைந்த ஒரு மூன்றாந்தர கோமாளி’யாக வர்ணித்தமை எழுத்தாளரின் தாழ்வு மனப்பான்மையை கட்டியம் கூறி நிற்கின்றது.
பாலாவின் பச்சில் ஊடகத்துறைக்குள் புகுந்து பாலா இறக்கும் வரை தொடர்பில் இருந்த வீரகேசரி பிரதம ஆசிரியராக 2006 வரை இருந்த பாலவின் ஊரவரான நடராஜா ஊடாகவே சேதுவும் வளர்க்கப்பட்டான். நடராஜாவுக்கும் பாலசிங்கத்துக்குமான செய்தி தொடர்பாளனாகவும் சமாதான காலத்தில் தனிபட்ட முறையில் சேதுவாகிய நான் செயற்பட்டிருந்தமை முக்கியமானது. 1994ம் ஆண்டுவரை அன்ரன் பாலசிங்கத்தின் அதிகமான மறைவிடங்கள் யாழில் கரவெட்டி துன்னாலைப் பகுதிகளே.
வீரகேசரியில் வேலை செய்த காலத்திலும் பாதுகாப்பு தரப்பினரது அனுமதிப் பட்டியல் தொடர்பான விபரங்களை பெற்று வெளியிடுவதே எனது வேலையாக இருந்தது. இலங்கையின் யுத்த முனைக்கு பிபிசி ஆணந்தியுடன் ஒரு சந்தர்பத்தில் அனுத்த ரத்வத்தை சகிதம் வன்னி களமுனைக்கு சென்று வந்தேன்.
3. ஒரு செய்தியாளன் என்ற முறையில் இலங்கை அரசும் உத்தியோகபூர்வமாக சேதுவுடன் நோர்வே வந்த நாளில் இருந்து பல்வேறு அதிகார மட்டங்களில் தொடர்பில் இருந்தது. இன்று 08 வருடங்களாக இலங்கையின் நோர்வேக்கான தூதுவராலய அதிகாரிகள் அனைவராலும் சேது அறியபட்டவராகவே இருந்தான். சேது புலியாகவோ அல்லது புலி உளவுக்காறனாகவோ இருந்திருந்தால் இலங்கை அரசால் தனது நாட்டு பிரஜைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருக்க முடியும். இன்றும் எடுக்க முடியும். இங்கு வைக்கபட்டுள்ள குற்றச்சாட்டுகள் எதையும் இலங்கை தூதுவராலயம் நோர்வே அரசுக்கோ அல்லது சேதுவுக்கு எதிராக ஏன் முன்வைக்க இல்லை?
4. சேதுரூபன் லண்டனை விட்டு வெளியேறவில்லை எவராலும் வில்லங்கமாக வெளியேற்றப்படவும் இல்லை. சேதுரூபனாகிய நான் சட்டரிதியாக 08-11-2002 யு.எல் இலங்கை விமானத்தில் லண்டனில் உள்ள கால்ரன்லெசரில் சொந்தச் செலவில் விமானச் சீட்டைப் பெற்று இலங்கை சென்றேன்.
அதன்பின் 2 வாரம் கழித்து மீண்டும் அதே இலங்கை விமானத்தில் கொழும்பில் இருந்து பிரித்தானியா வந்து, பிரித்தானியாவில் இருந்து சட்டரிதியாக நோர்வே சென்றேன். நேர்வே சென்ற பின்பும் சட்டரீதியாக பல தடவை பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் சென்று வந்துள்ளேன்.
ஒருவன் நாடு கடத்தபட்டால் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றபட்டிருந்தால் பிரித்தானிய நடைமுறை என்ன என்பது சிறு குழந்தைக்கும் தெரியும்.
5. ”Marriage of convenience மூலமாகவா சேதுரூபன் நோர்வே சென்றார்?” என்பது கட்டுரை எழுதிய எழுத்தாளரின் சிறுபிள்ளைதனமான குற்றச்சாட்டு. சேதுரூபன் திருமணம் முடித்த நாளில் இருந்து குறித்த அதே விலாசத்தில் மனைவியுடன் சீரும் சிறப்புமாக இரண்டு குழந்தைகளுக்கும் தகப்பனாக வாழ்ந்து வருகிறேன். தன்னை புனைப் பெயரில் ஒழித்துக் கொண்டு எனது திருமணம் பற்றி கதைகட்டுகின்ற எழுத்தாளர் பத்திரிகா தர்மம் பற்றி ஊருக்கு உபதேசம் வேறு. குறித்த முறையில் திருமணம் முடித்திருந்தால் நோர்வேக்கு சேதுரூபன் சென்றிருக்கவும் முடியாது. நோர்வே நாட்டு குடிஉரிமை பெற்றிருக்கவும் முடியாது.
6. புலிகள் அழிந்த பின்பு மகிந்தவுடன் தொடர்பு எடுக்க முற்படுவதாக குற்றச்சாட்டு முனைவைக்கபட்டுள்ளது. ஆனால் அது தவறு தற்போதைய வெளிநாட்டு அமைச்சர் முதல் ஜ.தே.கட்சி அமைச்சர்கள் வரை பலருடன் நான் அண்மைக் காலம்வரை தொடர்பில்தான் இருந்தேன். இன்றும் தொடர்பில்தான் இருக்கின்றேன்.
7. ஜரோப்பாலில் எனக்கு ரி.பி.சி விடயம் தவிர்ந்த எந்த விடயத்திலும் கிறிமினல் றக்கோட் இருந்தது இல்லை. தற்போது ரிபிசி விடயமும்கூட ஒரு சட்ட தவறாக மாறியுள்ளதால் அதை கிறிமினல் றக்கோட்டாக பார்க்க முடியுமா, முடியாதா என்பது சட்டத்தின் முன் நிக்கிறது.
அண்டப் புழுகுத்தனமாக கட்டுரையை எஸ் சிவரூபன் எந்தவித ஆதரமும் இல்லாமல் எழுதி உள்ளார். அதனை தேசம்நெற் விமர்சனம் என்ற பெயரில் பிரசுரித்தும் உள்ளது. தேசம்நெற் பத்திரகா தர்மம் உண்மையானது என்றால் அந்த ஆதாரங்களை வாங்கிப் பிரசுரிக்க வேண்டும். இல்லாவிட்டால் எஸ் சிவரூபனின் சுயரூபத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் அவர் இதுவரை இப்படி எத்தனை அண்டப் புழுகுகளை எழுதினார் என்பது வெளிவரும்.
கட்டுரையாளர் மனசாட்சி உள்ளவராக இருந்தால் இதற்கு ஆதாரங்களை வைக்கும் வரை தயவு செய்து எழுதுவதை – புனைபெயரில் ஒழிந்திருந்து எழுதுவதை நிறுத்த வேண்டும்.