அமெரிக்க பிரஜா உரிமை பெற்றுள்ள சரத் பொன்சேகா எவ்வாறு இலங்கை ஜனாதிபதியாக வர முடியும் என்று ஐக்கிய தேசிய மாற்று முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சரத் கோங்கஹகே நேற்று கேள்வி எழுப்பினார்.
நான் இரட்டை பிரஜா உரிமை கொண்டவரல்ல என்று சரத் பொன்சேகா இதுவரை மறுக்கவில்லை. எனவே இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான ஆலோசனைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளரான சரத் கோங்கஹகே ஏற்பாடு செய்திருந்த முதலாவது ஊடகவியலாளர் மாநாடு நேற்றுக் காலை இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில்:-
கடந்த 30 வருட காலமாக மிகவும் பரபரப்புடனும், சூடுபிடித்தும் காணப்பட்ட எமது நாட்டில் தற்பொழுது தான் அமைதியான சூழல் காணப்படுகின்றது. மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இந்தச் சூழலை மீண்டும் குழப்புவதற்கு பலர் முயற்சிக்கின்றனர்.
சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்கி இந்த நாட்டில் இராணுவ நிர்வாகத்தை ஏற்படுத்த பலர் முயற்சிக்கின்றனர். இதனை அனுமதிக்க முடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டிற்காக பாரிய சேவையாற்றியவர். நான் வெற்றி பெற முடியாது. எனினும் முன்றாவது இடத்திற்கு வர முடியும்.
ஐக்கிய தேசிய கட்சியோ அதன் சின்னமோ இம்முறை வாக்குச் சீட்டில் இல்லை. ஐ. தே. க. மக்கள் மனதிலிருந்து விடுபட்டுள்ளது. குரல் கொடுக்க இல் லாதவர்களுக்கு குரல் கொடுப்பதற்காகவே இன்று நான் களத்தில் குதித்துள்ளேன். இந்த மக்களை எனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
தற்பொழுது படை வீரர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளை கொச்சைப்படுத்தவும், சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவும் பலர் முயற்சிக்கின்றனர். சரத் பொன்சேகா சன்டே லீடர் பத்திரிகையில் ஒரு விடயத்தை கூறிவிட்டு அதற்கு அடுத்த வார பத்திரிகைகளில் வேறு விடயத்தை கூறுகிறார்.
வெளிநாடுகளின் பின்னணியிலேயே இவர் செயற்படுகின்றார். தனது தனிப்பட்ட குரோதத்தை வெளிக்காண்பிப்பதற்காக பல்வேறு பொய்யான தகவல்களை சரத் பொன்சேகா வெளியிட்டு வருகின்றமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
தற்பொழுது வைராக்கியமான அரசியல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இதனை நடுநிலைப்படுத்துவதற்காக சகல மதத் தலைவர்களும் முன்வர வேண்டும் என நான் கேட்டுக் கொள்கின்றேன்.
ஆயுதங்கள் கொள்வனவு செய்யவில்லை என்று இடத்திலும், அவ்வாறு வந்த ஆயுதத்தை நானே திருப்பி அனுப்பினேன் என்றும் பாதுகாப்புச் செயலாளர் தலையிட்டு அதனை திருப்பி அனுப்பினார் என்றும் இன்னுமொரு இடத்திலும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
ஆனால் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிதியாக இருந்தவாறே அவரே கையொப்பமிட்ட கடிதம் எம்மிடம் உள்ளது. எனவே சரத் பொன்சேகா முன்னுக்கு பின் முரணாக கூறுவது தெளிவாக விளங்குகின்றது என்றார்.
சரத் பொன்சேகா தோல்வி பெறுவது உறுதி. எனவே தான் அமெரிக்க பிரஜா உரிமையை இதுவரை ரத்துச் செய்யாமல் வைத்துள்ளார். ஏனெனில் தோல்விய டைந்தவுடன் மீண்டும் அமெரிக்கா செய் வதே அவரது நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டார்.
பல்லி
அதே போல் அமெரிக்க குடிமகன் (அதல்ல) ஜனாதிபதிக்கு நிகரான ராணுவ தளபதியாய் முப்படை செயலராய் வலம்வந்து போராடியது செல்லாது என சொல்லி தவறிபோன மக்களின் உயிரை அரசு தர முடியுமா? அதுக்கும் சட்டத்தில் இடம் உண்டோ, சரத்தை தோற்கடிக்க அரசு மக்களைவிட சாணக்கியதனத்தைதான் மிகவும் நம்புகிறது, அது அவர்கள் திறமை; ஆனால் சரத்தை இயக்குபவர்களையும் பிரபாகரன் போல் மகிந்தா குடும்பம் எடைபோடபடாது;