எஸ் சிவரூபன் தனது சொந்த முகத்துடன் கட்டுரையை வெளியிடாமல் தனது உருட்டுக்கும் புரட்டுக்கும் புனைபெயரில் கவர் எடுத்துக்கொள்கின்றார். சேதுவும் தேசம் ஜெயபாலனின் பொறுப்பற்ற பத்திரிகா தர்மமும். : எஸ் சிவரூபன் பத்திரிகா தர்மம் பற்றிப் பேசுவதற்கு இவருக்கு எவ்வித அருகதையும் இல்லை. இவரிடம் உள்ள தாழ்வுமனப்பான்மையே இவரை மற்றவர்களது கல்வித் தகுதி திருமணம் போன்ற விடயங்களை கேவலப்படுத்த காரணம் என நினைக்கிறேன். என்னைப் பற்றிப் பிழையான தகவல்கள் பல உலாவருகின்றது. உங்களைப் போன்றவர்கள் ஒழிந்திருந்து செய்கின்ற ஊத்தை வேலைகள் தான் நிதர்சனத்திலும் இடம்பெற்றிருக்கும் என நினைக்கின்றேன். தற்போது நீங்கள் தேசம்நெற்றை இன்னொரு நிதர்சனமாக்கி இருக்கிறீர்கள்.
கட்டுரையாளர் எஸ் சிவரூபன் என்ற பெயருக்குள் ஒழிந்திருப்பவரிடம் நான் கேட்பது என்னைப் பற்றி எழுதிய ஒரு விடயத்திற்காவது உங்களுக்கு ஆதாரம் இருந்தால் அதனை நீங்கள் உங்களது சொந்தப் பெயரில் அல்லது எஸ் சிவரூபன் என்ற பெயரில் ஒழிந்து கொண்டே வையுங்கள். நான் எழுதுவதை நிறுத்துகின்றேன். அது எனது குழுந்தைகள் மீது சத்தியம். அப்படி ஆதாரத்தை வைக்காவிட்டால் நீங்கள் எழுதுவதை நிறுத்துங்கள்.
1. ‘புலிகளின் நிதர்சனம் டொட்கொம் என்ற புலிகளின் இணையத்தளத்திற்கு நிர்வாகி ஆகிய சேது என அழைக்கபடும் நடராசா சேதுரூபன் என்பவருக்கு தமிழ் எழுதவோ வாசிக்கவோ தெரியாதவன்’ என்கிறார் இந்த கட்டுரை எழுதியவர்.
அப்படியானால் அவர் என்ன மொழியில் இணையம் நடாத்தினார்? தொடர்பில் இருந்திருந்தால் தமிழைத் தவிர உலக மொழிகள் எதுவுமே பாவிக்காத புலிகளுடன் என்ன மொழியில் சேது உரையாடி இருப்பார்? நான் தற்போது தேசம் இணையத்திற்கு தமிழில் தான் பதில் எழுதி உள்ளேன். சேதுவுக்கு தமிழில் எழுதவோ வாசிக்கவோ தெரியாது என்பது கட்டுரையாளனின் தலைசிறந்த கண்டுபடிப்பு.
நிதர்சனம் இணையத்தளத்தை சேதுரூபனாகிய நான் இயக்கியதற்கான ஒரு ஆதாரத்தைத் தானும் கட்டுரையாளர் முன்வைக்கட்டும்.
சேதுரூபனாகிய நான் பொட்டமானுடன் நேரடித் தொடர்பில் இல்லாத போதும் அப்படி இருந்ததாக அடம்பிடிக்கும் கட்டுரையாளர் நான் பொட்டம்மானுடன் நேரடித் தொடர்பில் இருந்ததை உறுதிப்படுத்தட்டும்.
எந்தக் கொலைகளுடனும் அல்லது கொலை செய்தவர்களுடனும் எந்த தொடர்பும் வைத்திராத என்மீது சேது பல கொலைகளுக்கு நிதர்சனம் ஊடாக உடைந்தையாக இருந்தவர் என கூறபட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை வைத்துள்ள கட்டுரையாளர் ஒரு செய்தியைத் தானும் ஆதரமாக காட்ட முடியுமா என்பதே சேதுருபனாகிய எனது சவால்.
மத்திய கல்லூரி அதிபர் ராஜதுரையுடைய கொலைக்கும் அது பற்றிய செய்திக்கும் அது வெளியான இணைய ஆசிரியருக்கும் இணையத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படி இருந்தால் அதனை வெளியிடுங்கள். எனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள்.
இவை சாதாரண குற்றச்சாட்டுகளும் அல்ல. தண்டனைக்குரிய குற்றங்கள். இவை அனைத்தும் திட்டமிட்ட முறையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட புலம்பல்கள். ஒரு தாழ்வுமனப்பான்மை கொண்ட ஒருவர் ஒழிந்திருந்து கொண்டு புலம்பியதை விமர்சனம் என்ற பெயரில் வெளியிட்டது தேசம்நெற்றின் தவறு.
புலிகளுக்கும் சேதுவாகிய எனக்கும் தனிப்பட்ட தொடர்பு இருந்திருந்தால் அதை மறைக்க வேண்டிய தேவை எனக்கு எள்ளளவேனும் இல்லை. எனக்கும் ஈ.பி.டி.பிக்கும் புளோட்டுக்கும் ரெலோவுக்கும் ஈ.பி.ஆர்.எல்எவ்க்கும் இராணுவத்திற்கும் பொலிசுக்கும் இன்னோரன்ன பல சக்திகளுடனும் தொடர்பு இருந்தது அதை நான் ஏன் மறைக்க வேண்டும்?
2. 1998 காலபகுதியில் ஊடகத்துறையில் புகுந்து கல்வியையும் முழுநேர ஊடகத்துறையையும் தொடராக ஆரம்பித்து இலங்கை அரச தொலைக்காட்சி கொழும்பின் தமிழ் தேசிய பத்திரிகை ஊடாக யுத்த களத்து செய்தி சேகரிப்பு வரை ரிபிசி வானொலி, ஈரிபிசி வானொலி அதன் பின்னரான பல சர்வதேச ஊடகங்கள் வரை வேலை செய்து வருகிறேன். இந்த 11 வருடகால வராலாற்றை ‘ஒரு வயது குறைந்த ஒரு மூன்றாந்தர கோமாளி’யாக வர்ணித்தமை எழுத்தாளரின் தாழ்வு மனப்பான்மையை கட்டியம் கூறி நிற்கின்றது.
பாலாவின் பச்சில் ஊடகத்துறைக்குள் புகுந்து பாலா இறக்கும் வரை தொடர்பில் இருந்த வீரகேசரி பிரதம ஆசிரியராக 2006 வரை இருந்த பாலவின் ஊரவரான நடராஜா ஊடாகவே சேதுவும் வளர்க்கப்பட்டான். நடராஜாவுக்கும் பாலசிங்கத்துக்குமான செய்தி தொடர்பாளனாகவும் சமாதான காலத்தில் தனிபட்ட முறையில் சேதுவாகிய நான் செயற்பட்டிருந்தமை முக்கியமானது. 1994ம் ஆண்டுவரை அன்ரன் பாலசிங்கத்தின் அதிகமான மறைவிடங்கள் யாழில் கரவெட்டி துன்னாலைப் பகுதிகளே.
வீரகேசரியில் வேலை செய்த காலத்திலும் பாதுகாப்பு தரப்பினரது அனுமதிப் பட்டியல் தொடர்பான விபரங்களை பெற்று வெளியிடுவதே எனது வேலையாக இருந்தது. இலங்கையின் யுத்த முனைக்கு பிபிசி ஆணந்தியுடன் ஒரு சந்தர்பத்தில் அனுத்த ரத்வத்தை சகிதம் வன்னி களமுனைக்கு சென்று வந்தேன்.
3. ஒரு செய்தியாளன் என்ற முறையில் இலங்கை அரசும் உத்தியோகபூர்வமாக சேதுவுடன் நோர்வே வந்த நாளில் இருந்து பல்வேறு அதிகார மட்டங்களில் தொடர்பில் இருந்தது. இன்று 08 வருடங்களாக இலங்கையின் நோர்வேக்கான தூதுவராலய அதிகாரிகள் அனைவராலும் சேது அறியபட்டவராகவே இருந்தான். சேது புலியாகவோ அல்லது புலி உளவுக்காறனாகவோ இருந்திருந்தால் இலங்கை அரசால் தனது நாட்டு பிரஜைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருக்க முடியும். இன்றும் எடுக்க முடியும். இங்கு வைக்கபட்டுள்ள குற்றச்சாட்டுகள் எதையும் இலங்கை தூதுவராலயம் நோர்வே அரசுக்கோ அல்லது சேதுவுக்கு எதிராக ஏன் முன்வைக்க இல்லை?
4. சேதுரூபன் லண்டனை விட்டு வெளியேறவில்லை எவராலும் வில்லங்கமாக வெளியேற்றப்படவும் இல்லை. சேதுரூபனாகிய நான் சட்டரிதியாக 08-11-2002 யு.எல் இலங்கை விமானத்தில் லண்டனில் உள்ள கால்ரன்லெசரில் சொந்தச் செலவில் விமானச் சீட்டைப் பெற்று இலங்கை சென்றேன்.
அதன்பின் 2 வாரம் கழித்து மீண்டும் அதே இலங்கை விமானத்தில் கொழும்பில் இருந்து பிரித்தானியா வந்து, பிரித்தானியாவில் இருந்து சட்டரிதியாக நோர்வே சென்றேன். நேர்வே சென்ற பின்பும் சட்டரீதியாக பல தடவை பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் சென்று வந்துள்ளேன்.
ஒருவன் நாடு கடத்தபட்டால் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றபட்டிருந்தால் பிரித்தானிய நடைமுறை என்ன என்பது சிறு குழந்தைக்கும் தெரியும்.
5. ”Marriage of convenience மூலமாகவா சேதுரூபன் நோர்வே சென்றார்?” என்பது கட்டுரை எழுதிய எழுத்தாளரின் சிறுபிள்ளைதனமான குற்றச்சாட்டு. சேதுரூபன் திருமணம் முடித்த நாளில் இருந்து குறித்த அதே விலாசத்தில் மனைவியுடன் சீரும் சிறப்புமாக இரண்டு குழந்தைகளுக்கும் தகப்பனாக வாழ்ந்து வருகிறேன். தன்னை புனைப் பெயரில் ஒழித்துக் கொண்டு எனது திருமணம் பற்றி கதைகட்டுகின்ற எழுத்தாளர் பத்திரிகா தர்மம் பற்றி ஊருக்கு உபதேசம் வேறு. குறித்த முறையில் திருமணம் முடித்திருந்தால் நோர்வேக்கு சேதுரூபன் சென்றிருக்கவும் முடியாது. நோர்வே நாட்டு குடிஉரிமை பெற்றிருக்கவும் முடியாது.
6. புலிகள் அழிந்த பின்பு மகிந்தவுடன் தொடர்பு எடுக்க முற்படுவதாக குற்றச்சாட்டு முனைவைக்கபட்டுள்ளது. ஆனால் அது தவறு தற்போதைய வெளிநாட்டு அமைச்சர் முதல் ஜ.தே.கட்சி அமைச்சர்கள் வரை பலருடன் நான் அண்மைக் காலம்வரை தொடர்பில்தான் இருந்தேன். இன்றும் தொடர்பில்தான் இருக்கின்றேன்.
7. ஜரோப்பாலில் எனக்கு ரி.பி.சி விடயம் தவிர்ந்த எந்த விடயத்திலும் கிறிமினல் றக்கோட் இருந்தது இல்லை. தற்போது ரிபிசி விடயமும்கூட ஒரு சட்ட தவறாக மாறியுள்ளதால் அதை கிறிமினல் றக்கோட்டாக பார்க்க முடியுமா, முடியாதா என்பது சட்டத்தின் முன் நிக்கிறது.
அண்டப் புழுகுத்தனமாக கட்டுரையை எஸ் சிவரூபன் எந்தவித ஆதரமும் இல்லாமல் எழுதி உள்ளார். அதனை தேசம்நெற் விமர்சனம் என்ற பெயரில் பிரசுரித்தும் உள்ளது. தேசம்நெற் பத்திரகா தர்மம் உண்மையானது என்றால் அந்த ஆதாரங்களை வாங்கிப் பிரசுரிக்க வேண்டும். இல்லாவிட்டால் எஸ் சிவரூபனின் சுயரூபத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் அவர் இதுவரை இப்படி எத்தனை அண்டப் புழுகுகளை எழுதினார் என்பது வெளிவரும்.
கட்டுரையாளர் மனசாட்சி உள்ளவராக இருந்தால் இதற்கு ஆதாரங்களை வைக்கும் வரை தயவு செய்து எழுதுவதை – புனைபெயரில் ஒழிந்திருந்து எழுதுவதை நிறுத்த வேண்டும்.
பல்லி
ஜயோ ஜயோ என்னதான் இங்கே நடக்குது? யார் யாருக்கு பிரச்சனை? இதில் ஏன் தேசம்னெற் பலியாகிறது; பலரை குளப்பி இறுதியில் தானும் குளம்பும் பல்லிக்கே தடுமாறம்;
சேது தாங்கள் நேர்மை பலருக்கு தெரியும்; அது ஒருபக்கம் இருக்க அது நேரம் வரும்போது நாம் விமர்சிப்போம்; இதில் சிவரூபனை மிரட்டுவதாய் சட்டத்தை காட்டி தேசத்தையும் மிரட்டுமா போல் உள்ளது; தேசம் ஜெயபாலனுக்கு மட்டும் சொந்தமல்ல; நாமும் எமது கருத்தை சொல்லும் ஊடகம்; அதனால் அதை சட்டத்தின் முன் நிறுத்தும் போது நாம் பார்த்து பரவசபட மாட்டோம், உங்களுக்கும் சிவரூபனுக்கும் உள்ள தனிபட்ட பிரச்சனைகளை தேசத்தில் காட்ட வேண்டாம் என கேட்டு கொள்கிறேன், சரியான கட்டுரை வராத பட்ச்சத்தில் பின்னோட்டம் இடும் நபர்கள் அதை கவனிப்பத்தில்லை என்பதை கடந்த கால கட்டுரைகளில் கவனிக்கவும்; ஆனால் அதேநேரம் இந்த கட்டுரை புனைபெயரில் வந்தாலும் கட்டுரையாளர் தன்னை அறிமுகம் (தேசத்துடன்) செய்த பின்பே வெளியிட்டிருப்பார்கள் என நினைக்கிறேன், அவரது கட்டுரை சரியோ தவறோ தங்கள் நிலை பாட்டை தாங்கள் சொல்லலாம்; அதை விட்டு தேசத்துக்கு மிரட்டல் பாணியில் பின்னோட்டம் இடுவது சரிதானா? சிவரூபன் கட்டுரையை பொட்டிஸம் போல் எழுதிவிட்டு இருப்பது நியாயம் இல்லை, சேது கேக்கும் கேள்விகளுக்கு குலன் போல் பதில் சொல்ல வேண்டியது உங்கள் பொறுப்பல்லவா?
என்னடா இது தடல்புடலாய் எழுதும் பல்லி அப்பாவிதனமாய் எழுதுகிறது என யாரும் நினைக்க வேண்டாம்; எதிரியாய் இருந்தால் கூட மதிக்கபளக வேண்டும்; அப்போதுதான் வாதம் சரியாக இருக்கும்; பல்லியை பொறுத்த மட்டில் சேதுவுடனோ அல்லது சேது சொல்லும் (மிரட்டும்) சட்டத்துடனோ இறுதிவரை நியாயமாக வாதிட முடியும், ஆனால் அது இப்போது தேவையில்லை, இது இரு மனிதருக்கு உள்ள கருத்து முரன்பாடு, இதில் சமூகத்தை உதவிக்கு அழைப்பது தவறுதானே,
சேது உங்களை நீங்கள் சுயவிமர்சனம் செய்யும் வரை நியாயபடுத்தாதீர்கள்; அதேநேரம் தாங்கள் இந்த கட்டுரையை பொறுத்த மட்டில் சிவரூபனிடம் கேட்ட கேள்விகள் நியாயமானதே, ஆனால் சட்டத்தை காட்டி மிரட்டுவது புலி பாணியே, இது பல்லியின் தனிப்பட்ட கருத்து;
நட்புடன் பல்லி தொடருவேன்;;
சாந்தன்
சேதுரூபன்,
நீங்கள் இங்கே கட்டுரையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கப்போவதாக அறிவித்திருப்பது மிக மிக மிக நியாயமானதே! தேசத்தில் பலர் கருத்தெழுதும்போது போகிரபோக்கில் குத்துமதிப்பாக தாக்குதல் நடத்துவது சகஜம். மேலும் பல கட்டுரையாசிரியர்கள் வாசகர்களின் பின்னூட்டங்களுக்கு பதில் தருவதேயில்லை. குலன் அவர்கள் விதிவிலக்கு!
அத்துடன் உங்கள் மீது பல தீவிரக் குற்ரச்சாட்டுகளைச் சுமத்தியோருக்கு சட்டநடவடிக்கை எடுக்க கோரிச் சவால் விட்டிருப்பதையும் நான் நியாயமாகவே பார்க்கிறேன். ஏனெனில் தேசத்தில் பலர் அவன் களவெடுத்தான், இவன் கொள்ளை அடித்தான் என கருத்தெழுதுவார்கள். கொடிபிடிப்போம் கேள்வி கேட்போம் எனவெல்லாம் கதை விடுவார்கள். ஆனால் ஐரோப்பாவில் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் நியாயபூர்வமான சட்ட உரிமைகளை பயன்படுத்தி வழக்குத்தாக்கல் செய்யமாட்டார்கள்.
நீங்கள் உங்களுக்கும் நிதர்சனத்துக்கும் பொட்டம்மானுக்கும் உள்ள தொடர்புகளை நிரூபிக்கும்படி சிவரூபனைக் கேட்டிருந்தீர்கள். ஆனால் இதே கேள்வியை/ சவாலை நீங்கள் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் ராதிகா குமாரசுவாமியின் ந்ண்பர்களான திரு.ஹூல் சகோதரர்கள் எழுதிவரும் யூ.ரி.எச்.ஆர்(ஜே) அறிக்கையில் சொல்லியபோதும் திரு.ஹூலிடம் சொன்னீர்களா என அறிய விரும்புகிறேன். அவ்வாறு சொன்ன பட்சத்தில் அவர்கள் என்ன சொன்னார்கள் எனவும் சொல்வீர்களா? மேலும் இதை முடஹ்முதலில் எழுதிய டி.பி.எஸ்.ஜெயராஜ் ( உங்களைப்போல இவரும் அன்ரன் பாலசிங்கத்தின் நண்பர், வீரகேசரியில் வேலை பார்த்தவர்வர்களிடமும் கேட்டீர்களா எனவும் அறிய ஆவலாயுள்லேன்.
கீழே அவர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டது…
The exhilarating power over life and death is reflected in the threats to Rajadurai, first in a leaflet signed by the LTTE front Ellalan Force. To quote D.B.S. Jeyaraj (TamilWeek 16 Oct.05): “This was followed by the LTTE Tamil website “Nitharsanam” operating in Oslo with Norwegian funds threatening him as an EPDP “consultant”.
The Nitharsanam also warned Rajadurai that his corpse would be found soon with a name board around his neck. Incidentally this writer and his photo has also been featured frequently in this website run by “Oothai (Dirty) Sethu” a man linked directly to LTTE intelligence chief Pottu Amman.” (e.g. Nitharsanam on 29th September described Jeyaraj as a tool of ‘Sinhalese majoritarians’ and emphasised the need to be watchful over him.)
http://www.uthr.org/bulletins/bul39.htm
சேதுரூபன்
சாந்தன்
ஆம் டீ.பி.எஸ்க்கு 100 மின் அஞ்சல் போட்டிருப்பேன் பதில் இல்லை. 2005தான் அவர் எழுதினார் ஆனால் அவர் எனது சொந்த பெயரை போடவில்லை என்பதால் சட்டத்தில் அவர் தப்பலாம் என்பதால் 2005க்கு முதல் எழுதிய கே.ரி.றாஜசிங்கத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கை தற்போது நடைபெறுகிறது நீதிமன்றில் உள்ளது.
அந்த முடிவு இவருக்குமானதாக இருக்கும். அந்த முடிவின் அடிப்படையில் இவர் மீதும் சட்டம் எனது விடயத்தில் பாயும்.
யு.ரி.ஏச்.ஆர் விடயத்திலும் சட்ட நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது ஆனால் நோர்வே சட்ட நிறுவனம் அதை அமெரிக்காவிலா இலங்கையிலா நடாத்துவது என்ற சிக்கல் இருந்தது தற்போது சாரும் என்ற சட்ட நிறுவனம் இலங்கை உயர் நீதிமன்றுக்கு விடயத்தை எடுத்து செல்கிறது ஆனால் அவர்களும் சுவீடன் உயர் நீதிமன்ற முடிவுக்கு காத்து இருக்கிறார்கள்.
காரணம் முதலில் 2003ல் பிரசுரமானது ஆசியன்ரிபுயுனில்.
Kandaswamy
சந்தானம், உங்கள் கேள்விகளுக்கு நிறைய பேர் பதில் சொல்ல வேனும் – ஜெயபாலன், சேது ரூபன், கலாநிதி Hஊள் உட்பட).
nadaiyan
“பாலாவின் பச்சில் ஊடகத்துறைக்குள் புகுந்து பாலா இறக்கும் வரை தொடர்பில் இருந்த வீரகேசரி பிரதம ஆசிரியராக 2006 வரை இருந்த பாலவின் ஊரவரான நடராஜா ஊடாகவே சேதுவும் வளர்க்கப்பட்டான். நடராஜாவுக்கும் பாலசிங்கத்துக்குமான செய்தி தொடர்பாளனாகவும் சமாதான காலத்தில் தனிபட்ட முறையில் சேதுவாகிய நான் செயற்பட்டிருந்தமை முக்கியமானது. 1994ம் ஆண்டுவரை அன்ரன் பாலசிங்கத்தின் அதிகமான மறைவிடங்கள் யாழில் கரவெட்டி துன்னாலைப் பகுதிகளே.”
ஒரு செய்தியாளன் என்ற முறையில் இலங்கை அரசும் உத்தியோகபூர்வமாக சேதுவுடன் நோர்வே வந்த நாளில் இருந்து பல்வேறு அதிகார மட்டங்களில் தொடர்பில் இருந்தது.
“இது எதைச் சொல்கின்றது என்றால், அன்ரன் பாலாவுக்கும் அரசுக்கும் தொடர்பு, அல்லது அரசுக்கும் அன்ரன் பாலாவுக்கும் தொடர்பு இருந்த்தது என்பது தான்.”
மறைவிடம் வரை தெரியும் என்பது நானும் இவர்களில் ஒருவன் என்பததான் தெரிவிக்கின்றது
பார்த்திபன்
சேது,
ஹாட்லிக்கல்லூரியின் இணையத்தளத்தில் தாங்கள் 1984 இலிருந்து (அதாவது முதலாம் வகுப்பிலிருந்து) கல்வி கற்றதாக பதிந்துள்ளீர்கள். எப்போதிலிருந்து ஹாட்லிக்கல்லூரியில் முதலாம் வகுப்பு இருந்தது?? நானும் ஹாட்லிக்கல்லூரியின் மாணவன் தான்.
Tamil
//ஆனால் சட்டத்தை காட்டி மிரட்டுவது புலி பாணியே – பல்லி//
சட்ட நடவடிக்கை எடுப்பது எப்படி புலி பாணியென கொஞ்சம் விளக்க முடியுமா ?
P.V.Sri Rangan
சேதுரூபன் தன் வாக்குமூலத்துடன் தனக்கு இலங்கை அரசு-து}துவராலயம் உட்பட அமைச்சகர்களுடன் தொடர்பிருந்ததாகச் சொல்கிறார்.இது பல வருடங்களாக.அத்துடன் புலிக்கு விசுவாசமாகவும் கருத்துக்கள் உரைத்துத்”தமிழீழ”போராட்டம்பற்றி நியாயப்படுத்திப் புலிக்கு-புலியாகச் செயற்பட்டவர். இது வரலாறு. புலம் பெயர் ஊடகங்களைக் கேட்டவர்கள்-பார்த்தவர்களுக்குத் தெரிந்தது.
இங்கு என்ன கேள்வியென்றால்-புலிகள் தம்மை எதிர்ப்பவர்கள் மாற்றுக் கருத்து வைப்பவர்கள்மீது கருத்துக்கட்டித் துரோகிகளாகப் பொதுத்தளத்தில் ஒருவரை “இனங்”காட்டும்போது-அவர்களுக்கு இலங்கை அரசோடும்-து}துவராலயத்துடன் தொடர்பிருப்பதாகச் சொல்கிறது. இப்போது சேதுரூபன் சொல்கிறார் தனக்குப் புலிகள் மற்றவர்கள் மீது போர்த்திய அனைவருடனும் தொடர்பிருந்ததாக. இங்கே புலிகளது தர்மப்படி சேது ரூபன் ஏன் துரோகியாக முடியவில்லை?மற்றவர்கள் புலிகளது பாசிசத்தை அம்பலப்படுத்தியபோது-டுசில்டோர்ப் மே தினத்தில் ரீ.ரீ.என் தொலைக்காட்சியின் கமராவில் பிடிக்கப்பட்ட எனது படத்துடன் -என்னை எட்டப்பனாகக் காட்டிப் புலிகள் கருத்துக்கட்டிப் போட்டது பலருக்கு ஞாபகம் இருக்கலாம்.இங்கே புலிகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த இந்தவிசயம் சொல்லப்படுகிறது.சேது ரூபனது வாக்குமூலம் மிக முக்கியமானது.புலிகளதும்-அவர்கள் விசுவாசிகளதும் இரட்டை முகத்தைப் புரிந்துகொள்ள.
புலிகளால் மிரட்டப்பட்டுத் தொடர்ந்து உளவியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நான் இப்போது எங்கே நியாயம் கேட்கலாம்.என்னைப் போல் எத்தனை தனிமனிதர்கள் இவர்களது பாசிசச் சேட்டையால் பாதிக்கப்பட்டோம்?இப்போது சேது ரூபன் தனது உறவுகளை வெளிப்படையாகப் பேசுகிறார்.இதுவே-புலிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பொருந்தும்.புலிகளுக்கு வக்கலாத்து வேண்டியவர்கள் முதல் அவர்களது உறுப்பினர்கள்வரை அனைவரும் புலிகளது பாசிசத்துக்குப் பொறுப்பானவர்கள்.எனவே-இவர்களுக்கும் அதே சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.எட்டப்பர்.கொம்-நிதர்சனம் என எத்தனை நூறு புலி ஊடகங்கள் மக்களை வெருட்டிப் பணி வைத்தனர்?இன்று இவர்கள் சுயமாகப் பாதிக்கப்படும்போது நியாயம்-சட்டம் எனப் பூச்சாண்டி காட்டுகின்றனர்.
எனக்கு இலங்கைத் து}துவர்காரியலய அதிகாரிகளோடு உறவென்றும்-சேர்ந்து குடித்ததென்றும்-புலிகளைக்காட்டிக் கொடுப்பதாகவும் உரைத்தவர்களே இப்போது தமக்கும் நியாயம் கேட்கின்றனர்.இதுள் சேது ரூபன் எங்கே நிற்கிறார்?எம்மைப் போன்ற நிலையுள்ளா அன்றிப் புலிப் பினாமிகளது நிலையிலா?
சேதுரூபன் உமக்கு இருக்கும் சட்டவுரிமை எமக்கும் உண்டுதானே? புலிகளால் தொடர்ந்து வெருட்டப்பட்ட-உளவியற் தாக்குதலுக்குள்ளான-படுங்கள்போட்டு எட்டப்பனாக இனம் காட்டபட்டவர்களுள் ஒருவனாக இப்போது நியாயம் எவரிடம் கேட்பதென்று யோசித்தபடி உமது(சேது ரூபன்)நிலையையும்-வாக்கு மூலத்தையும்கண்டு இதை எழுத முனைந்தேன்-அவ்வளவுதாம்!
“முற்பல் செய்தால் பிற்கல் விடியம்”என்று தமிழிலும் பல அநுபவ மொழி உண்டு. அது இப்போது நிஷமாகி வருகிறது. ம்… புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தக் கோட்டில் நியாயம் கேட்கிறது?புலிகள் நிசத்தில் தற்போது அடையாளம் காட்டுவார்களா?சேது ரூபனுக்கு இது தெரியாதா என்ன?கேளுங்கள் சேது நியாயத்தை-அது உங்களுக்கு மட்டும் உரித்தானது இல்லை.மற்றவர்களுக்கும் எனப் புரிந்து அவர்களுக்கும் உள்ளதை அங்கீகரித்து.இப்படி அங்கீகரிக்கும்போது நீங்கள் ஈ.ரி.பி.சி.வானொலியில் வைத்த அனைத்துப் பழி சுமத்தலுக்கும் பொறுப்பேற்று.உங்கள் குரலில் நீங்கள் புலிக்காக மற்றவர்கள்மீது பழி சுமத்தியதன் ஒலியிழை பலரிடம் ஆதாரமாக இருக்கு.அதை வைத்த அவர்களும் சட்ட நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
ப.வி.சிறீரங்கன்
பல்லி
//சட்ட நடவடிக்கை எடுப்பது எப்படி புலி பாணியென கொஞ்சம் விளக்க முடியுமா ?//
இதுவரை புலி பினாமிகள் தமக்கு ஆகாதவர்களை புலிகோட்டில்(கஸ்ரோ) முறையிடுவார்கள்; தமக்கே தீர்ப்பு சாதகமாக வருமென உறுதியான நம்பிக்கையுடன், இப்போதுதான் கஸ்ரோ(புலிகோடு) இல்லையே அதனால் சட்டத்தை நாடுகிறாரோ என யோசித்தேன், சரியான விளக்கம் வேண்டுமாயின் ஜெயதேவனை விசாரிக்கவும்; சிலருக்கு சட்டம் ஒரு இருட்டறைதான் பொட்டர் இல்லாதவரை; சரிதானே ரமில்:
Skanthan
சேது
உங்களின் நிதர்சனம் டொட் கொம்மில் புலிகளை விமர்சிப்பவர்களையெல்லாம் மிலேச்சத்தனமாகவும் மஞ்சள் பத்திரிகைத்தரத்திலும் நீங்கள் உட்பட தாக்கி எழுதியவர்களெல்லாம் புனைபெயரில்தானே எழுதினார்கள். சிவரூபன் புனைபெயரில் எழுதியதைக்கேட்க உங்களுக்கு என்ன அருகதை?
டிசம்பர் 17 இல் தேசம்நெற்றில் ஜெயபாலன் நீங்களும் அன்ரன் பாலசிங்கத்தின் முதல்மனைவியும் ஒன்றாக பத்திரிகையில் வேலைபார்த்ததாக தவறாக எழுதப்பட்ட நாளிலிருந்து இன்று சிவரூபன் தவறைச் சுட்டிக்காட்டும்வரை இத்தகவல் பிழையானது என்பதை ஜெயபாலனுக்குச் சுட்டிக்காட்டாமல் இப்புனைவை வைத்து உங்கள் இமேஜை கட்டத்தானே பார்த்தீர்கள். சிவரூபன் இக்கட்டுரையை எழுதாமல் விட்டிருந்தால் இன்றும் நீங்கள் பாலசிங்கத்தின் மனைவியுடன் வேலைசெய்தீர்கள் என்ற பொய் ‘உண்மை’ ஆகவல்லவா இருந்திருக்கும்.
இஸ்கந்தன்.
பார்த்திபன்
ஏற்கனவே என்னால்க் கேட்கப்பட்ட கேள்வியுடன் இனனொரு கேள்வியையும் முன் வைக்கின்றேன். இன்று மகிந்தவிற்கு வக்காலத்து வாங்கவிருக்கும் சேது முன்பு சுந்தரின் வானொலியில் புலிகளின் தவறுகளுக்கு வக்காலத்து வாங்கவென்று ஒரு நிகழ்ச்சி நடாத்தியதை இவ்வளவு சீக்கிரம் மறந்ததேனோ?? அந்நிகழ்ச்சியில் ஏதோ புலிகளின் கொள்(ளை)கை பரப்புச் செயலாளர் போலவே பல நேயர்களுக்கு பதலளித்ததும் மறந்து போனதோ?? மேலே என்னால்க் கேட்கப்பட்ட கேள்விக்கும் இதற்கும் சேர்த்து சேதுவின் பதிலை எதிர்பார்க்கின்றேன்.
Ranjan
இதில் மக்கள் மக்கள் என்று சொல்லி புலிதலைமைக்கும் அமைச்சர்களுக்கும் வெளிநாட்டு ஒற்றர்களுக்கும் ஊடகமாகவிருந்தோம் ஆனால் மக்களை கேனயர்கள் என்று நினைத்து.Ranjan elam
சேதுரூபன்
ப.வி.சிறீரங்கன்
ஒரு செய்தியாளன் அரசுடன் தொடர்பில் இருப்பது தவறா? குற்றமா? என்னதான் உங்கள் அறிவு? ஒரு செய்தியாளன் தமிழீழ போராட்டத்தை நியாயபடுத்துவது தவறா? குற்றமா? அப்ப எதிர்பது குற்றம் இல்லையா? எந்த உலகில் எவன் சொன்னது? இன்றும் இலங்கை தமிழ் ஊடகங்கள் ஆதரவாகவே செய்திகளை வெளியிடுகின்றது ஆகவே அவர்கள் குற்றவாளிகளா? புலிகள் வேறு செய்தியாளன் வேறு என்ற வேறுபாடு தெரியதவராக தாங்கள் இண்றும் உள்ளது வேதனைக்குரியது. சேதுருபன் ஏன் துரோகியாக வேண்டும்? சேதுருபன் புலி உறுப்பினராக இருந்தால்தானே புலிகள் அவரை துரோகி என்று அறிவிக்க முடியும்? சேதுருபன் துரோகி என்றால் இலங்கையில் ஊடகங்களில் சேலை செய்யும் 100க்கு மேற்பட்ட தமிழ் செய்தியாளர்கள் துரோகிகளா? ஊங்களை எட்டபன் என்று புலிகள் சொன்னால் அதற்கு சேதுவா பொறுப்பு?
சேதுவிடம் ஒரு இரட்டை முகமும் இல்லை. ஒரு செய்தியாளன் சட்டபடி அனைத்து தரப்புடனும் தொடர்பில் இருக்கவேண்டும் அவனே பூரணமான செய்தியாளன். தங்கள் வாதம் மாட்டுக்கும் ஆட்டுக்கும் வித்தியாசம் தெரியாத ஆதங்கம் நண்பரே. உங்கள் பாதிப்புக்கு சட்டத்தை நாடலாம் அல்லது உளவியல் மருத்துவரை நாடலாம் அதுக்கு சேதுவிடம் பரிகாரம் இல்லை. சேது தங்கள் தாக்கத்தை செயதியாக மட்டும் வெளிவிட கூடியவன் அதுவே அவன் தொழில். சேது பாசிசக்கோட்டையில் உறுப்பினர் இல்லை என்றுதானே உரத்துக் கூறுகிறேன். சேது புலி என்றால் அவருடைய தகட்டு இலக்கம் என்ன? கண்டு அறிந்து சட்டத்தை நாடவேண்டிதுதானே? நீங்கள் புலியால் பாதிக்கபட்டால் சேதுவிடம் ஏன் சீறிப்பாய வேண்டும்? புலிகளை வக்காளத்து வாங்கியது சேது மட்டுமா? 500 இணையத்தளங்கள் 50 ஆயிரம் உலக ஊடகங்கள் 50 இலங்கை ஊடகங்கள் ஆகவே இவை அனைத்தும் பாசிசத்திற்கு பொறுப்பானவர்களா? அப்ப புலி தலைவரின் பேட்டியை ஒலிபரப்பிய உலகின் 1 இலட்சம் ஊடகமும் பொறுப்பாளிகளா? எட்டபர்.கொம் நானா நடாத்தினேன்? நிதர்சனம்.கொம் எனது இணையமா? நான் எவரிடம் இருந்தும் பாதிக்கவில்லை. நான் எழுதிய கட்டுரையில் சேந்து குடித்து என்றோ சேந்து படுத்து என்றோ எதுவும் எழுதப்படவில்லையே? அது நடந்திருந்தாலும் அதில் என்ன தவறு? அது எனது தனி மனித உரிமை இல்லையா? குடிப்பது தவறா? புலிகளை காட்டி கொடுப்பது எனது தொழில் இல்லையே? உமக்கு சட்ட உரிமை இல்லை என்று ஆர் சொன்னது? உமது சட்ட உரிமையை நான்தான் தட்டி பறிச்சனா? புலிகளால் நீங்கள் வெருட்டபட்டால் அதற்கு நானா பொறுப்பு? நண்பரே எனது தொடர்புகள் பரந்து விரிந்தவை. அவை இங்கு தேவை அற்றவை.
ஸ்காந்தன்.
ஜெயபாலனையே கேட்டுபார்க்கவும். தேசம்நெட்க்கு இவை அனைத்தையும் பல வருடங்களுக்கு முதல் சொல்லிவிட்டேன். அவை இப்போதுதான் தேசம்நெட்டில் ஏறுகின்றது அது எனது தவறா? தேசம் நெட்டின் தவறா? உங்கள் தவறா?
பார்த்திபன்
சுந்தரின் வானொலில் கதைப்பது தவறா? கதைக்ககூடாது அப்படி கதைத்தாலும் தேசியத்திற்கு ஆதரவாக கதைக்ககூடாது அல்லது எதிராக கதைக்ககூடாது என்று பிரித்தானிய சட்டம் சொன்னதா? நான் சுசீலா மாதிரி பாடினால் சுசீலாவா? டக்ளஸ் தேவாணந்தா மாதிரி கதைத்தால் நான்
டக்ளஸா?
P.V.Sri Rangan
சேது>நீங்கள் பத்திரிகையாளன் என்பதைப் பயன்படுத்திவிடுவீர்களென நான் எண்ணியது சரி. அப்போது>நாங்கள் எல்லாம் உங்களது பாசையில் ஆடு மாட்டு வித்தியாசத்தில் கற்றுக் குட்டிகளா? நீங்கள் ஊடகத்துறைக்கு வருவதற்குமுன் நானும் எழுத்தாளனாக-கட்டுரையாளனாக-பத்திரிகையாளனாகத்தாம் இருக்கிறேன். இதுள் உங்களைமட்டும் இனம் காட்ட நீங்கள் குறித்த பத்திரிகையாளன் எனும் பதம் இப்போதைய” அரச-புலி” உறுவுகள் குறித்துச் சொல்வதற்குப் பொருத்தமாக இருக்கும். ஆனால்>வரலாற்றைத் திரும்பிப் பார்பவர்களுக்கு மிகத் தெளிவாகப் புலிகள் பக்கங்கள் தெரியும். அதாவது உங்களைப் போன்று பலருடன்-அரசு-அமைச்சகர்கள்> வெளியுலகமெனத் தொடர்பு வைத்த எத்தனை ஊடகவியலாளர்களைப் புலிகள் துரோகியாகக் கண்டு பொட்டுவைத்தார்கள் என்பது. ஒன்றா இரண்டா?
இப்போது>உங்கள் தரப்பு நியாயத்துக்கு இது பொருத்தமாகக் கையாளுகின்ற லொஜிக் ஏன் மற்றவர்கள் தரப்பில் பொருத்தப்பாடில்லை?
புலிகள் உங்களையும் பொட்டு வைக்கவில்லையெனக் கருதுவதாக இதைக் குறுக்காது>நமது சமுதாயத்தில் புலிகளது பாசிசப் பக்கங்களையும்> அவர்களுக்காக வக்காலத்துவேண்டிய ஊடகவியலாளர்களையும் நாம் இனங்கண்டு> அவர்களது இரட்டை வேடத்தைப் பொதுத் தளத்தில் அம்பலப்படுத்துவது ஜனநாயகப் பண்பு. உங்களது பாணியில் பத்திரிகையாளன் என்பது செய்திகள் தொகுக்கும் வேலைமட்டுமல்ல. அது>விரிந்த தளத்தில் எல்லாவகை எழுத்துக்களோடு சமுதாயத்தின் மீதான பிரச்சனைகளை முன் வைப்பவர்களுக்கும் பொருந்தும்.உங்களது பத்திரிகா தர்மத்தின்படி சமூக விரோதப் போராட்டத்தை எங்கே-எப்படி மக்கள் முன் வைத்தீர்கள்? புலிகள் குறித்து உங்கள் மதிபீடென்ன? பத்திரிகையாளன் அனைவருடனும் தொடர்பு வைப்பதுக்கும் தனிமனிதர் வைப்பதற்குமான வித்தியாசத்தைக் “காட்டிக்கொடுப்பு-செய்தி சேகரித்தல்” என்றோ அர்த்தப்படுத்தப்படும்?
சேதுவுக்கு இன்னுமொன்றையும் கூறிவிடலாம். இப்போது நீங்கள் பத்திரிகையாளன் என்பவன் பலமட்டத்துடன் தொடர்பு கொள்ளலாம் என்பதும்>அவர்கள் அப்பொழுதுதாம் முழுமையான பத்திரிகையாளர் என்பதும் சரியானால்> இது இந்துப் பத்திரிகை இராமுக்கும் பொருந்தி விடுந்தானே? நீங்கள் ஆம் என்பீர்கள் இப்போது. ஏனென்றால் உங்களுக்கான ஒரே துரும்பு இது. ஆனால்>இத்தகைய சந்தர்ப்ப அரசியலை விட்டு> ஒரு பத்திரிகையாளன் ஒடுக்கப்படும் மக்களுக்காகக் குரல் கொடுப்பதும்> அதிகாரத்தை கேள்வி கேட்பதும் அவசியமானது.
புலிகள்தானே இந்து இராமைத் துரோகி என்றனர். நான் இல்லையே என்றும் உங்களால் சால்ல முடியும். இப்போது நீங்கள் ஒரு பத்திரிகையாளன். சுந்தரின் வானொலியில் குமாரதுரை குறிதது நீங்கள் கட்டமைத்த கருத்துக்களம் பத்திரிகைக்காரருக்கு உள்ள தார்மீகக் கடமையில்தாம் நிகழ்ந்ததா?
எனக்கு மக்களுக்குத் துரோகமிழைத்த புலியுஞ்சரி> குமாரதுரையுஞ்சரி> இராமும்சரி> நீங்களும்சரி மக்களை ஏமாற்ற முனையும்போது அனைவருமே சமூக விரோதிகள்தாம்.மக்களைப் போலித்தனமாக எவர் ஏமாற்றிப் பாசிசத்துக்கு-அதிகாரத்துக்கு முண்டுகொடுக்கின்றாரோ (அதுள் நான் உட்பட)அவர்கள் பரந்துபட்ட மக்களதும்- ஜனநாயகத்தினதும் எதிரிகளே.
அவ்வளவுதாம். நீங்கள் உங்களை நியாயவாதியாகக் காட்டும் உரிமையை நான் மறுக்கவில்லை. அது அனைவருக்கும் பொதுவானதென்பதே எனது வாதம்.
சேதுரூபன்
P.V.Sri Rangan
நான் உங்களை தனிபட்ட முறையில் மதிக்கிறேன். ஆனால் பல உள் இரகசியம் தெரியாததை இட்டு கவலை அடைகிறேன். நான் எனது ஊடகத்றையை தாண்டி ஒரு நாகரீகத்துடன் புலிகளால் தரோகிகளாக்கபட்ட பலருடன் தொடர்பில் இருந்தேன். ஆனால் அவை எனது தகவல்களை சரிபார்பதற்காகவே வைத்திருந்தேன். உங்கள் ஊடக வரலாற்றை ஒரு சிறுவயதவன் என்ற முறையில் மதிக்கிறேன். நான் இதுவரை புலிக்கு எந்த தவறோ இடஞ்சலோ செய்தவன் இல்லை. ஆனால் புலிகள் வீடு திரும்பும்போது தாக்கினார்கள். புலிகள் அதை தாங்கள் தேடி பெற்ற ஒரு வலி. புலிகள் ஊடகவியலாளர்களை கொலை செய்திருந்தால் நான் கண்டிக்கிறேன். நீங்கள் எல்லாவற்றையும் புலி என்ற தராசில் பாப்பதை நான் ஏற்க மறுக்கிறேன். நான் என்னை ஒரு செய்தியாளனாகவே தெரிவித்திருந்தேன். புலிகள் தொடர்பான மதிப்பீடு என்ன என்பது; பகிரங்கமாக சொல்லிவிட்டேன். தனிமனித தொடர்புகள் வேறு ஒரு செய்தியாளனின் தொடர்புகள் வேறாகவே நான் கருதுகின்றேன். அதுவே சட்டமும் கூட.
இராம் தொடர்பாக நாங்கு இங்கு எதையும் எழுத விரும்பவில்லை ஆனால் நீங்கள் என்னை எழுதமாறு நிர்பந்திக்கும்போது பதில் கூற கடமைபட்டுள்ளேன். இராம் ஈ.என்.டி.எல்.எவ் என்ற ஆயுத அமைப்பின் சர்வதேச தலைவரா? அல்லது தான் ஒரு ஊடகத்துறை சாந்தவனா? அல்லது புலிகளின் உளவுத்துறையா? என்பதை வேறுபடுத்தி காட்டவேண்டும். இதை எழுதுவதால் றாம் என்மீது ஆத்திரம் அடையலாம். இங்குதான் றாம் முரன்படுகிறார். நான் புலியா? செய்தியாளனா? ஏன்று வேறுபடுத்தி காட்டுவது போல ஏன் றாம் தனது முரண்பாட்டு பக்கங்களை காட்டகூடாது? நான் பல சந்தர்பங்களில் பல வடிவங்களில் பல முறைகளில் ஒடுக்கபடும் பலருக்காக புலியிடம் நீதி கேட்டவன். அதை அதி உச்ச தந்திரமான முறையில் கேட்டவன். காலம் வரும்போது அம்பலபடுத்துவேன். (ஜெயதேவன் முதல் மகேஸ்வரன்வரை)
புலிகள் றாமை துரோகி ஆக்கியபோது நான் றாமுடன் இருந்தேன். அதே றாம்தான் 2009 புலி மரணிக்கும் வரை புலியுடன் தொடர்பில் இருந்தது தெரியாதா? தெரியாவிட்டால் றாமை கேட்டு அறியவும். புலிகளின் உளவுத்துறையுடன் இதே றாம் இறுதிவரை தொடர்பில் இருந்தது உங்களுக்கு தெரியாதா? ரிபிசி தொடர்பாக தயாமாஸ்ரரிடம் இலங்கை இராணுவம் விசாரித்தபோது புலிக்கும் றாமுக்குமான உறுகள் றாமுக்கும் புலிக்குமான உறவுகள் அனைத்தும் சொல்லபட்டதாக அறிந்தேன். றாம் உறவுக்கு நல்லவர். தனது உயிரை துச்சம் என மதித்து வன்னிக்கு இரகசியமாக போய் புலிகளின் உளவுத்துறையுடன் படுத்து உறங்கி சந்தித்தது உங்களுக்கு தெரியாதா? இவைபோன்ற பல விடயங்களை நான் ஈ.ரி.பி.சில் சொன்னது குற்றமா? நான் 2007க்கு முதல் புலிகளுக்கும் றாமுக்குமான உறவை அம்பலபடுத்தியது குற்றமா? றாம் இரகசியமாக புலிக்கு உளவு வேலை பார்த்தது குற்றமா? அதை சொன்ன நானா புலி? றாமா புலி?
றாமை நான் ஒரு புலிகளின் உளவுத்துறை முக்கியஸ்தராகவே பாக்கிறேன். இந்த இரகசியங்கள் உங்களுக்கு தெரியாதவை.
santhanam
சிலர் விளம்பரம் தேடில் பிரபல்யமானமனிதர்களுடன் படம் எடுத்து அதை காட்டி தாங்கள் விளம்பரம் தேடுவார்கள் அதைப் போல் உள்ளது இவரது விளம்பரம் இவரை இயக்கிய இயக்குனர்கள் இதில் வந்து இவரிற்கெதிரான கருத்துக்களை முன்வைக்கிறார்கள் மே 18 க்கு முன் சேது இவர்களிற்கு கடவுள் இப்ப துரோகி
சாந்தன்
சேது,
உங்கள் பதிலுக்கு நன்றி. ஆம் நீங்கள் சொல்வதுபோல டி.பி.எஸ் தனக்கு விரும்பாத கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டார் என்பது எனது அனுபவத்தில் கண்ட உண்மை மட்டுமல்ல தன்னிடம் கேள்வி கேட்போரை ”புலி” முத்திரை குத்துவதிலும் ஈடுபடுபவர்.
P.V.Sri Rangan
சேதுவுக்கு ஒரு முகம்-“செய்தியாளன்”.-சேது ரூபன்: சில கருத்துகள்
அன்பர் சேது ரூபன் கேட்கின்றார்”ஒரு செய்தியாளன் அரசுடன் தொடர்பில் இருப்பது தவறா?- குற்றமா?” என. இதை யாரிடம் கேட்கின்றார்?
பொதுவானவொரு மக்கட்டொகுதியின்முன்! நன்று.
இதுவரை, புலிகளுக்கும் உங்களுக்குமானவுறவு, தனியே”செய்தியாளன்” என்பதாக இருக்கின்றதெனப் புலம் பெயர் மக்களுக்குச் சொல்கிறீர்கள் இதன் மூலம்! நீங்கள் புலியினது அரசியலை “தமிழீழத்தின்” பொருட்டு ஏற்று, அவர்கட்காகக் கருத்துக்கட்டியதென்பதை பலரும் அறிவர். இந்த அரசியற் போக்கில் உங்களுக்கும் அரசுக்குமானவுறவு தனியே “செய்தியாளன்” என்பதுவரை நீடித்ததாகவிருந்தால், இலங்கை அரசு சசிகரனை-திச நாயகத்தைக் காரணமின்றித்தாம் கைது செய்து கூட்டில் அடைத்திருக்கிறது என்றாகிறது!
சேதுரூபன் என்ற “செய்தியாளன்” புலிகளையும், அவர்களது கொலை அரசியல்-போராட்டத்தையும் “நியாயப்படுத்தியது அவரது (சேதுவின்) ஜனநாயக உரிமையென இலங்கை அரசு கொள்ளும் பட்சத்தில், அதை, ஏன் சசிகரனுக்கும்-திசநாயகத்துக்கும் வழங்கவில்லை என்ற கேள்வி எனக்கு விடையளிக்கிற அளவுக்குப் புரிதற்பாட்டை ஏற்படுத்தவில்லை!
இன்று, இலங்கை அரசுக்காகச்” செய்தி கேரிக்கும்-கருத்தூன்றும் “சேதுவுக்கு எங்கிருந்து” புலிகள் வேறு-செய்தியாளன் வேறு” என்ற தத்துவம் சரியாக இருக்கோ, அதை அவர்சார்ந்த அன்றைய புலியும் இன்றைய இலங்கை அரசும் கவனத்தில் கொள்ளாதது சேதுவின் பிரச்சனை இல்லை!அது, அமைப்பினது-அரசினதும் பிரச்சனை. எனவே,சேது சொல்லும்போது அதைப் புரியாதவர் கற்றுக்குட்டி.
இந்தப்பிரச்சனையை மேலும் விருத்திக்கிட்டுச் செல்ல முனையும்போது,சில கேள்விகள் எழுவது தற்செயலானது இல்லை.அது,வர்க்க அரசியலில் வர்க்கஞ்சார்ந்த கொள்கைகளுடைய நமது உணர்வில் அறுதியான-கறாரான புரிதற்பாடு.
என்றபோதும், சேது, “செய்தியாளன்”.
இதன் தெரிவில், இன்று பாசிச இலங்கை அரசோடு கைகுலுக்கும்போது அது தமிழ் பேசும் மக்களது பிரச்சனையுள் கையாண்ட இலங்கையினது பாசிசத்துக்கும் சேதுவுக்கும் எந்த முரண்பாடுமில்லை.காரணம்: சேது வெறும்”செய்தியாளன்”-உலகினால் அங்கீகரிக்கப்பட்ட “செய்தியாளன்”. இத்தகைய “செய்தியாளன்” புலிகள் வலுவாக இருந்தபோது, புலிக்காகக் குரல் கொடுப்பது அவரது தார்மீகக் கடமையாகிறது அது குற்றமில்லை!-இதைக் குற்றமென்று எவனும்-எவளும் உரைக்கமுடியாது-இது சேது அவர்களது வாதம்!
நன்று, அன்பா-நன்று!
இதை,இன்று உரக்கக் கூறும் காலமொன்று உருவாகியுள்ளது.
நீங்கள் கைகுலுக்கும்”விரிந்த” தளங்களின் மூலம் உங்களைப் போன்றவொரு செய்தியாளனான திசநாயகத்தை உங்களுடன் உறவாடும் இலங்கை அரசு 20 வருடச் சிறையுள் தள்ளியுள்ளதே! அது, குறித்து உங்களது குரலைக் காணவில்லையே?-இது, ஏன்?
உங்களால் இலங்கை அரசிடம் இவ்வாதத்தைக்(செய்தியாளன் வேறு-புலிகள் வேறு) கறாராகச் சொல்லமுடியுமா? அங்ஙனம், முடியாதுபோனால் உங்களது ஊடகவியல் தர்மத்துக்கமைய அதை உலகத்தில் அம்பலப்படுத்திப் போராடமுடியுமா?-இது உங்களது கடமை இல்லையா?
சேதுருபன் கேட்கிறார், புலிகள் ஏன் தன்னைத் துரோகியாகப் பார்க்கவேண்டுமென. அதாவது, தான் புலியின் உறுப்பினர் என்றால் மட்டுமே அஃது, துரோகமாம். அஃதாவது, புலிகள் “துரோகி” சொல்லிப் போட்டவர்கள் அனைவரும் புலிகளது உறுப்பினர்தாம் என்று சொல்கிறார். ஆகப் புலிகள் “துரோகி” என்று கொன்றவர்கள் அனைவரும் புலிகளது உறுப்பினர்களானால், புலிகள் தமது அரசுடனான உறவாடலில், முதலில் கொன்று தள்ளப்பட்டிருக்க வேண்டியவர் பிரபாகரனே. ஏனெனில், அவர்தாம் தனது சுமூகமான உறவாடலைப் பிரேமதாசாவுடன் செய்து, தனது தாய் தந்தையரை இலங்கை அரசின் விமானம் மூலம் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கூட்டி வரச் செய்தவர்.
இது,வேறு-செய்தியாளனது கடமை வேறு! சொல்லக்கூடும். சேது, இதைச் சொல்வார். ஏனெனில், அவர் புலி உறுப்பினரில்லை-மாறாகப் புலிக்கு ஆதரவாகக் கருத்துக்கட்டியது மட்டும்தாம். இது, அவரது ஜனநாயக உரிமை!
புலிகளில் கணிசமான தலைவர்களுக்குக் கொள்கை-கோதாரி ஒன்றும் இருந்ததில்லை என்பதற்குச் சேது ரூபன் ஒரு உரைகல். காற்றடிக்கும் திசைக்கேற்ப அவர்கள் பட்டம் ஏற்றிக்கொள்வர்கள். இதுதாம,; அடியாட்சேவையின் இன்றைய உதாரணம்.
மக்களைச் சார்ந்து, அவர்களது விடுதலைக்காக இனவாத ஒடுக்குமுறை அரசை எதிர்த்துப்போராடும் அமைப்பு, ஒருபோதும் இத்தகைய நடிவடிக்கையைச் செய்ய எதிரி அநுமதிப்பதில்லை.
அரசுக்கும்,புலிக்கும் உறவைவைத்து அடுத்துக்கெடுக்கும் உளவாளிகள் மற்றும் ஒடுக்குமுறையாளர்களது ஏவல்படைகளுக்கேதாம் இத்தகைய நிலைப்பாடும், உறவும் நிலைக்கமுடியும். இன்றைய புலிகளது அழிவுக்குச் சேது போன்றவர்களது பாத்திரம் மிக நேர்த்தியாக இயங்கி இருக்கிறது. இதைப் பார்க்காத புலிகளது விசுவாசிகள், ஒடுக்கும் வர்க்கத்துச் செய்தியாளன்-பத்திரிகையாளன் இந்து இராமைப் போட்டுத் தாக்கினார்கள். உள்ளிருந்து கருவறுத்த சேது போன்ற”செய்தியாளர்களை” கவனத்தில் எடுக்காது, தமது நட்பு சக்தியாகக் கனவுகண்டார்கள். இப்போது, “செய்தியாளன்” உலகு தழுவி ஒடுக்கும் வர்க்கத்தோடு கைகுலுக்கும்போது அது “செய்தியாளன்” தார்மீக உரிமையாகிறது அன்பர் சேதுவுக்கு!
புலிகளின் கணிசமான புலம்பெயர் தலைவர்கள்-பினாமிகளும் இத்தகைய “கொள்ளை”யின் நிமித்தம் இப்போது இலங்கை அரசோடு கைகுலுக்குவது இந்த அர்த்தத்தில்தாம்.
வாசகர்களே, ஒன்றை வடிவாக இனங்காணுங்கள்! அதாவது, இலங்கைப் பாசிச அரசு மக்களைக் கொன்று புலிகளை அழித்ததுமட்டும் வரலாறு இல்லை. அத்தகைய அரசை மிக நேர்த்தியாகத் தாங்கும் இத்தகைய “செய்தியாளர்கள்”தாம் அதன் பாசிசப்போக்கின் கொலைக் களத்தை நியாயப்படுத்தும் முதற்றரமான உந்து சக்திகள்!
இலங்கை அரசை ஆதரித்துச் செய்தி வெளியிடும் செய்தியாளர்களை நாம் கூறுகிறோம்”ஒடுக்குமுறை அரசினது கைக்கூலிகள்” என்று. அது , பரந்துபட்ட மக்களது நலனினது அடிப்படையில்.
இப்போது, சேதுரூபன் இலங்கை அரசோடும், அதன் அடக்குமுறை ஜந்திரத்தோடும் உறவாடித்தாம் செய்திகளை மக்களுக்குச் சொல்வதாகவிருந்தால் சேதுரூபன் பரந்துபட்ட மக்களுக்கு எதிரான அரசுசார்பு-ஒடுக்குமுறை ஜந்திரம்சார்பு ஊதுகுழல்.
இத்தகைய ஊடக தர்மம் ஒடுக்குமுறைக்குள்ளாகும் சிறுபான்மை இனங்களதும், பரந்துபட்ட இலங்கை-உலக மக்களதும் எதிரி என்பது நிர்ணயமானது.
புலிகளின் பினாமிகளுஞ்சரி, புலித்தலைமையும்சரி ஒருபோதும் மக்கள் நலனுடனான கொள்கையுடன் இருந்தவர்களில்லை என்பதை சேதுவின் இன்றைய நிலையிருந்து உரைக்கும்போது, அவர்களில் கணிசமானோர் இன்று இலங்கை அரசின் பின்னேதாம் நிற்கின்றனர். இது, எதனால் ஆனது?
இதுதாம் வர்க்க நலன் என்பது!
புலிகள் உழைக்கும் வர்க்கத்தின் பரம எதிரி-பரந்துபட்ட தமிழ்பேசும் மக்களது வர்க்க எதிரி.இதுவேதாம் இன்றைய புலிகளது நிலைக்கான சரியான தெரிவு.இதுவேதாம்,அந்நிய அடியாட்படையென நாம் புலிகளை வரையறை செய்ததற்கான அடிப்படைக் காரணம்.அதன் உச்சபட்ச அரசியலை இன்றைக்குப் புரிவதற்குச் சேது ரூபன் ஒரு உதாரணம்.
சேது மீளவும், அடித்துக் கூறுகிறார்”சேது ரூபன் பாசிசக் கோட்டையின் உறுப்பினர் இல்லை”என.ஆகப் பாசிக் கோட்டை என்பது புலிகள்மட்டும்தாமென இந்தப் புத்திஜீவிச்”செய்தியாளர்”புரிவது புலனதகிறது.
இலங்கை அரசைப் பாசிசக் கோட்டை இல்லை என்று, இதன் மறுபுரிதலை அவர் சொல்லிச் செல்வது மிக அவசியமாகப் புரியப்பட வேண்டியது!
இன்று,புலிகளது விசுவாசிகள் தமக்குள் இருந்த விரோதிகளை இனங்காணாமல், நம்மைப் போட்டு “எட்டப்பன்-காக்கை வன்னியன்”என்று வாந்தியெடுக்கும்போது, முழுமொத்த தமிழ்ச் சமுதாயமே மிகப் பின்தங்கிய புரிதலில் உள்ளது புலனாகிறது. புலிகள் என்ற அமைப்பு, முழுமொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் தம்மைப்போலவே உருவாக்கித் தமது அடியாட்பாத்திரத்தை வெற்றிகரமாக நடாத்தி முடித்துவிட்ட வரலாற்றுப்பாத்திரத்தில் சேது ஒரு உரைகல்.
இதற்குமேல், சேதுவுக்கு மக்கள் சமுதாயம் வர்க்கமாக இருப்பதால் அங்கு வர்க்க அரசியலும்-வர்க்க ஒடுக்குமுறையும் உள்ளதென்று கூற நாம் என்ன மூடர்களா?
சேதுவுக்குத் தனது வர்க்க நிலை நன்றாகவே புரிந்துள்ளது. அது, இனிவரும் அரசியலில், சேதுவை இலங்கையின் ஒரு தொகுதிக்குப் பாராளுமன்ற உறுப்பினராக்கும் அரசின் முயற்சியில் கொணர்ந்து நிறுத்தினாலும் ஆச்சரியமுண்டோ?
சேதுவிடம் இரட்டை முகமில்லை என்று அவரே உரைப்பது சரியானது! அது, ஆளும் வர்க்க-ஒடுக்குமுறை வர்க்கத்தின் ஒரே முகம் என்பது சரியானதுதாம் சேது .நான் அதை ஏற்கிறேன்!
நீங்கள், உங்கள் பரந்துவிரிந்த உறவுகளைச் செவ்வனவே செய்வீர்கள் என்பது உங்களது கருத்திலிருந்து கொள்ளதக்கதே.
ப.வி.ஸ்ரீரங்கன்
29.12.09
பார்த்திபன்
சேது,
நான் வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், நீங்கள் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்லுகின்றீர்கள். நான் இரண்டு கேள்விகள் கேட்டுள்ளேன். முதலாவது கேள்விக்கு இன்னும் பதிலே வரவில்லை. எனது கேள்விகளை முழுமையாக உள்வாங்கி சரியான பதிலைத் தர முயற்சிக்கவும். சுந்தரின் வானொலியில் தாங்கள் கலந்து கொண்டது பற்றி நான கேட்கவில்லை. ஆனால் அங்கு புலிகளுக்கு மாத்திரம் வக்காலத்து வாங்கிக் கொண்டு, அது தான் தேசியம் என்று யார் சொன்னது??
DEMOCRACY
இந்த சேது பற்றி எனக்கு “ஐடியா” இல்லை. ஆனால், இவரை தமிழ்நாட்டின் ஒரு சாதாரண “பிளாட்பாரம் பேச்சாளர்” அளவுக்கு கணிக்கலாம். இந்த உல்டா எல்லாம் அங்கே சர்வ சாதாரணம். நாங்கள் அதிர்ந்தது, விடுதலைப் புலிகளின் “உயிர் தியாகத்திற்கான? “மோட்டிவேஷனை” கண்டுதான்”. அது இப்படி குட்டிச்சுவரானதன் காரணம் மெதுவாக வெளிவருகிறது!. திரு.ஜெயதேவன் இலங்கைத் தமிழர் மட்டத்தில்(வட்டத்தில்)மேல்தளத்தில், ஒரு “ரீசனபல் பர்சனாக” மதிக்கத் தக்கவர். சேதுவை பற்றி அவரின் தரவு “ஒரு ஊடக? பேட்டை ரவுடி”- இது சரியானது – விடுதலைப் புலிகளது அழமான பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. புலிகளின் “சரிவு போக்கை” வரலாறாக எழுதுகிறவர்கள், இத்தகைய “பலவீனத்தை” பதிவு செய்ய வேண்டும்!. தனி நபர்களை விடுத்து இது வெளிப்படுத்தும் அரசியல் என்ன?. புலன் பெயர்ந்த நாடுகளில், புலிகள் தங்கள் “பிராண்டை” தனிநபர்கள் பயன்படுத்தும் போது, தங்களின் அரசியல் தளம்? பிரதிபலிக்கப் பட்டிருக்கிறதா என்று கவனித்திருக்க வேண்டும். இதிலிருந்து தெரிகிறது, புலிகளின் “ஆயுத போராட்ட தளத்தை” “வருங்காலத்தில்” யார் வேண்டுமானாலும் (பணமிருப்பவர்கள்) தங்கள் நலனுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று!. சேதுவின் வயதும், தடாலடியும், ஒரு “லிட்மஸ் டெஸ்டாக” பரீட்சிக்கப் படுகிறது, “முள்ளிய வய்க்காலின் வெற்றி நாயகர்களால்”. வெற்றியடைந்தால், இலங்கை அரசாங்க பிடியில் இருக்கும் கே.பி.யும் இவ்வாறே பரீட்சிக்கப் படலாம். இது “இலங்கையர் வட்டத்திற்குள்” இருந்தாலும், ஒரு தீர்வுக்கு வழி வகுத்தாலும் பரவாயில்லை பாராட்டலாம். ஆனால், “அடித்து அலர விடப்பட்ட குறும்பு ஆடு போல்” “கொழுப்பேறியிருக்கும்” வெற்றி உவகை, விஸ்த்தரிப்புக்கு (இதற்கு பல உதாரணங்கள் உள்ளன) ஆட்படுமனால், இதுவரை நடந்ததை விட, பலமடங்கு படுகொலைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று எண்ணுகிறேன். அதாவது பிரேமதாஸா காலத்தை மறுபடியும் “ஒன்ஸ் மோர்” செய்யமுடியாது. அதாவது அரசியல் நெருக்குதல் காரணமாக “சொகுசு போர்க் கப்பலில்” மகிந்தா அரசாங்கம் ஏறாதிருக்க வேண்டும்.
சேதுரூபன்
பார்த்திபன்
கேள்வி கேட்டால்தானே நான் பதில் சொல்ல முடியும்? தாங்கள் படிச்ச பாடசாலையில் கேள்வியை எப்படி யாரிடம் கேட்கவேண்டும் என்டு சொல்லி தரவில்லையா? நான் வட்டுக்கோட்டைக்கு வரலாறு சொல்ல நீங்கள் துட்டுப் பாக்கு விலையை என்னிடம் கேக்கிறயள்.
ப.வி.ஸ்ரீரங்கன்
நீங்கள் முதலாவதாக எழுதிய கருத்துக்கு பதில் நேர்த்தியாக நிதானமாக போட்டேன் ஆனால் தேசம் அதை தணிக்கை செய்து விட்டது. ஆகவே என்னால் எதுவும் செய்யமுடியாது. அந்த கருத்தை முடிந்தால் தேசத்திடம் பெற்று வாசிக்கவும். அது வரலாற்றில் நீங்கள் அறியவேண்டிய இரகசியங்கள்.
இலங்கையின் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவபடுத்தும் அனைத்து தமிழ் கட்சிகளும் தமிழ்ஈழத்தை கட்டியம் கூறி நிற்பவதை. ஆகவே அவர்கள் எல்லாம் உங்கள் கண்னில் துரோகிகள்.
திசநாயகம் விடயம் நீதிமன்றினுடையது. இலங்கை அரசுக்காக செய்தி சேது சேகரிக்கிறான் என்று சொல்வது தகவலை வேறு திசைக்கு திருப்புவது போன்றது. சேது புலியையோ அரசையோ சார்ந்து இருந்தது இல்லை. செய்தியாளனாக நான் மட்டுமே எனது நன்பன் லசந்த கொலையில் இருந்து திசநாகம்வரை பிறானசிஸ் கரிசனினுடன் இணைந்து அண்றும் அதிகார மட்டத்தில் இந்த விடயத்தை எடுத்துச் சென்றுள்ளோம். பிரான்சிஸ் கரிசனே அதை எழுத்துமூலமாக பகிரங்கமாக போட்டுள்ளார் போய் பாக்கவும்.
http://www.facebook.com/group.php?sid=5fe539fe00788e08e68c22701be7e5d0&gid=43591312285
ஆதாரத்தை பார்க்கவும். இதை பாக்காதது எனது தவறா உங்கள் தவறா? ஆம் புலிகள் வேறு செய்தியாளன் வேறு என்பதை என்னால் உறுதியாக எங்கும் சொல்ல முடியும். ஆனால் அதே இலங்கை அரச ஊடகங்களில் நானும் புலியாக முத்திரை குத்தபட்டவன். புலிகள் செய்தியாளர்கள் எவரையும் துரோகியாக பகிரங்கமாக அறிவிக்கவில்லை புலிகளின் போராட்டம் தோற்றுப்போனதே செய்தியாளர்களை நண்பர்களாக பாக்காமையே. புலிகள் துரோகி என போட்டுதள்ளியவர்களை நாம் செய்தியாக வெளியிடமுடியுமே தவிர அதற்கு துரோகியா தியாகியா பதவி கொடுக்க முடியாது. சேது என்பவன் அரசியல்வாதி இல்லை அவன் செய்தியாளன் மட்டுமே ஆகவே அரசியல் கொள்கை என்பது அதற்கு அப்பாற்பட்ட விடயம். புலிகள் மட்டுமல்ல எதிர்காலத்தில் அனைத்து தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் சேது செம்ம சொற்பணமாக இருப்பான். உள்ளிருந்து சேது கருவறுக்கவில்லை. அவர் புலிக்குள் இருக்கவில்லை. ஒரு செய்தியாளன் அரசுடன் நட்பாக இருந்தால் அது ஒடுக்கு முறை அரசின் கை கூலி என பொருளா? சேது என்றும் அரச ஆதரவு ஊது குழலாக செய்தி வெளியிட்டவன் இல்லை. சேதுவையும் புலிகளையும் வேறுபடுத்தி பாக்கவே தெரியாத உங்களை நான் எப்படி ஒரு கருத்து ஒற்றுமைக்கு கொண்டுவரமுடியும். சேதுவின் பாவையில் பாசிக்கோட்டை அனைத்து ஆயுதம் ஏந்திய குழுக்களுமே.
Sinnan
சேது தன்னைத்தானே பத்திரிகையாளன் என்று தப்பா அடிக்கலாம். வரிக்கு வரி பத்திரிகையாளன் என்பதனால் ஒரு பத்திரிகையாளன் ஆகா முடியுது. எழுத்து>சமூகநோக்கு என்பனவே ஒருவனை உண்மையான பத்தரிகையாளான பரிணமிக்கச் செய்கிறது. தனிநபர் காள்புணர்வுகளை இணையத்தளங்களில் கொட்டுவதும். புளொக்குகளை இலவசமாகத் திறக்கலாம் என்பதால் தன் தனிப்பட்ட எதிரிகளை> பிடிக்காதவர்களை வசைபாடுவதற்காக புளொக்குகளைத் திறக்கும் சேது போன்றவர்கள் என்றுமே எழுத்தாளனாகவே பத்திரிகையாளனாகவே இருக்க முடியாது. பத்திரிகையாளனின் கடமை>போக்கு>சமூகநோக்க எதுவுமே இல்லாமல் எழுதத்தெரியும் என்பதற்காக எழுதுவர்கள் எல்லாம் எழுத்தானராகவோ பத்திரிகையாளராகவோ இருக்க முடியாது. சேது துரோகிகள் என்று புலிகளால் கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் தொடர்வில் இருந்தாராம். என்ன செய்தார்? புலிகளுக்கெதிராகப் போராடினார்ரா? மாறாக புலிகளைத் தூக்கி வைத்துக் கொண்டாடினார்.பூநோ எழுத்தாளார்கள் கூட தாம் கொண்ட எழுத்த விடயத்தில் அளவுகோல் மாறாது நிற்பார்கள் அவர்களுக்குரிய தகுதியே சேதுவுக்குக் கிடையாது. மற்றவர்களின் தொடர்பில் இருப்பதுதான் பத்திகையாளன் என்றார் நாமேல்லாம் எழுத்தாளர் பத்திரையாளர்தான். செய்திகளைச் சேகரித்த எழுதுபவன் செய்தியாளன் என்றால் ஒவ்வொரு தமிழனும் செய்தியாளன்தான். ஏனென்றால் விடுப்பு தமிழர்களின் பிறவிக்குணம். சமூகத்தில் புரையோடிக்கிட்கும் புண்களுக்கு புணுகு தடவும் சேது போன்றவர்கள் சமூக வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிக்கும் விசமிகளே. சேதுவின் எழுத்துக்களை வாசித்துவிட்டு வந்து உண்மையான நேர்மையான ஒரு பத்திரைகையாளன் வந்து சொல்லட்டும் சேது ஒரு சரியான பத்திகையாளன் என்று. இந்தியாவிலும் சரி உலகிலும் சரி பெரிய பத்திரிகையாளர்களுக்கு பேப்பரில் பத்திரிகையாளர் என்ற பட்டம் கிடையாது. அவர்கள் பத்திரிகையாளராக வாழ்ந்தார்கள்.பேப்பரின் பட்டம் விடுபவர்கள் எல்லாம் பத்திரிகையாளராக முடியாது சேது
பார்த்திபன்
//சேது,
ஹாட்லிக்கல்லூரியின் இணையத்தளத்தில் தாங்கள் 1984 இலிருந்து (அதாவது முதலாம் வகுப்பிலிருந்து) கல்வி கற்றதாக பதிந்துள்ளீர்கள். எப்போதிலிருந்து ஹாட்லிக்கல்லூரியில் முதலாம் வகுப்பு இருந்தது?? நானும் ஹாட்லிக்கல்லூரியின் மாணவன் தான்.//
மேலே என்னால் எழுதப்பட்டது இங்கு சேதுவுக்கு கேள்வியாகத் தெரியவில்லையாம். எங்கே போய் முட்டிக்கொள்வது. இந்த இலட்சணத்தில் தன்னைத் தானே ஊடகவியலாளனென பிதற்றல் வேறு………
P.V.Sri Rangan
தம்பி சேது ரூபன்>வணக்கம்! எனக்கு எவரதும்-எவரரைப் பற்றியும் தகவல்கள் வேண்டாம். நான் கோருவது>அப்பாவி மக்களை அதிகாரத்திடம் அடிபணிய வைக்கவேண்டாம். அவர்களது அழிவுக்கு நீதி கிடைக்க வழி செய்யுங்கள் என்பதே! புரட்சி செய்வது-போராடுவது எல்லாம் காலத்தின் கைகளில் உண்டு .இப்போது எமது மக்களைப் புலிகள்-மற்றும் அரசு பாணியில் கொல்ல வேண்டாம் என்பதே. இங்கு கொல்வதென்பது:பரந்த தளத்தில் சொல்கிறேன். அது உயிர்பறிப்பது மட்டுமல்ல.
அவ்வளவுதாம். உங்கள் மேலான விளக்கத்துக்கு நன்றி.
நீங்கள் பரந்துபட்ட மக்களுக்கு விரோதியென நான் சொன்னாலும்-அதைத் தீர்மானிப்பது காலம். மக்களுக்கு அருகினில் நிற்பவர்களைக் எவராலும் அழித்துவிட முடியாது-சேறடிக்க முடியாது! நீங்கள் மக்களுக்குப் பக்கத்தில் நின்றால் உங்களை எவரால் என்ன செய்யமுடியும்?
பி-குறிப்பு: நான் கேட்டது இராமராஜன் அவர்கள் குறித்து அல்ல.மாறாக தி இ(கி)ந்துப் பேப்பரது ஆசிரியர் ராம் குறித்தே.
சேதுரூபன்
பி.வி றங்கன்.
அப்பாவி மக்களை புலிகளே கடந்த 30 வருடங்களாக அதிகாரத்திடம் அடிபணிய வைத்தனர். நான் பரந்துபட்ட மக்களுக்கு என்றும் விரோதியாக இருக்கமாட்டேன். இருந்ததும் இல்லை. இ(கி)ந்து றாமை றாம் ரிபிசி றாமுடன் லண்டனில் அமிர்தலிங்கம் நினைவு தினத்தில் சந்தித்தேன். ஆனால் இந்து றாமையும் குமாரதுரையையும் ஏன் செருகவேண்டும். ரிபிசி றாமையோ இந்து றாமையோ புலிகள் பகிரங்கமாக துரோகி என்று அறிவிக்க இல்லையே?
பார்த்திபன்
உங்கள் கேள்விக்கு உங்களிடமே விடை இருக்கிறது. எனது சுருக்கமான பதிலா உங்கள் பிதற்றலா, பிதற்றலாக தெரிகிறது?
சின்னன்
நான் ஒரு பத்திரிகை நிறுவனத்தில் பத்திரிகையாளனாக வேலை செய்ததால் இண்றும் பத்திரிகை நிறுவனத்தில் சுயாதீனமாக வேலை செய்வதால் பத்திரிகையாளன் அல்ல செய்தியாளன் என்கிறேன். உங்களுக்கு தமிழ் தெரியாவிட்டால் அன்னைபூபதி தமிழ் பாடசாலை இருக்கிறது உங்கள் அறிவுக்கு அரம்போட. புளொக்குகள் எதுவும் என்னிடம் இல்லை. புலிகளால் கொல்லபட்டதாக கூறும் பத்திரிகையாளர்கள் ஆர்? அவர்களுடன் தொடர்பில் இருந்ததாக சேது ஆரிடம் கூறினார்? புலிக்கு எதிராக போராடுவது செய்தியாளன் தொழில் இல்லையே? புலிகளின் மேடைகள் எதிலும் ஏறாத என்னை எப்படி புலிகளை தூக்கி வைத்து கொண்டாடியாதாக சொல்ல முடியும்? மற்றவர் தொடர்பில் இருப்பவர் எல்லாம் செய்தியாளர்கள் என்று சொல்லவில்லையே? செய்தியாளன் என்பவன் ஒரு செய்தி இஸ்தாபனத்தில் செய்தியாளனாக அல்லது சுயாதீனமாக சட்டபடி வேலை செய்யவேண்டும். சேது யாரிடமாவது பட்டம் கேட்டாரா?
பார்த்திபன்
//பார்த்திபன்
உங்கள் கேள்விக்கு உங்களிடமே விடை இருக்கிறது. எனது சுருக்கமான பதிலா உங்கள் பிதற்றலா, பிதற்றலாக தெரிகிறது? – சேது //
நான படித்த கல்லூரியில் எது ஆரம்ப வகுப்பென்பது எனக்குத் தெரியும். ஆனால் உம்மை போன்றவர்களின் ஏமாற்று வேலைகள் அங்கேயே ஆரம்பித்துள்ளதை மற்றவர்களும் அறிய வேண்டுமென்பதனாலேயே அதனை நான் சுட்டிக் காட்டினேன். படித்த கல்லூரியின் இணையத்தளத்திலேயே ஏமாற்று வேலை செய்யும் நீர் உண்மையிலேயே ஹாட்லிக்கல்லூரியின் மாணவன் தானா?? அல்லது அப்படிச் சொல்லி அடுத்தவர்களை ஏமாற்றப் பார்க்கின்றீரா?? இதைவிட உமது பிதற்றல்களுக்கு உதாரணம் வேண்டுமா??