சேதுவும் தேசம் ஜெயபாலனின் பொறுப்பற்ற பத்திரிகா தர்மமும். : எஸ் சிவரூபன்

 ._._._._._.

விமர்சனக் கட்டுரைகள் சொந்தப் பெயரில் எழுதுவதற்கே தேசம்நெற் அழுத்தம் கொடுத்து வருகின்றது. இருப்பினும் இக்கட்டுரையை எழுதியுள்ள எஸ் சிவரூபன் என்பது புனைப்பெயர். கட்டுரையாளரது விமர்சனம் தேசம்நெற் ஆசிரியர்களில் ஒருவர் தொடர்பாக உள்ளதால் இவ்விமர்சனக் கட்டுரையை தேசம்நெற்றின் விதிமுறைகளுக்கு விலக்காக புனைபெயரிலேயே பிரசுரிக்கின்றோம். கட்டுரையின் இறுதியில் த ஜெயபாலனின் விளக்கக் குறிப்பும் இணைக்கப்பட்டு உள்ளது.

தேசம்நெற்

._._._._._.

டிசம்பர் 17 ம் திகதி இலண்டன் நேரத்துக்கு தேசம்நெற்றில் முன்னைநாள் நிதர்சனம் டொட் கொம் என்ற புலிகளின் இணையத்தள நிர்வாகி ஆகிய சேது என அழைக்கப்படும் நடராசா சேதுரூபன் மகிந்தவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கொழும்புக்குச் செல்வதாக செய்திக்கட்டுரையை எழுதிய தேசம் ஆசிரியர் ஜெயபாலன் அக்கட்டுரையில் (http://thesamnet.co.uk/?p=18265)   பின்வருமாறு எழுதுகிறார்.

“நடராஜா சேதுரூபன் இலங்கைத் தமிழ் மக்களின் வாக்கு வங்கிமீது பிடிமானத்தை கொண்ட ஒருவரல்ல. ஆனால் இலங்கையில் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய சேதுரூபன் காலஞ்சென்ற தவிபு இன் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் முதல் மனைவியுடன் பணியாற்றியவர். அதன் மூலம் அன்ரன் பாலசிங்கத்துக்கு அறிமுகமானவர். 2002 நோர்வேயில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ரிபிசி ஊடகவியலாளராகக் கலந்துகொண்ட சேதுரூபன் அன்ரன் பாலசிங்கத்துடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டவர்.”

நடராசா சேதுரூபன் 1978 ம் ஆண்டு இலங்கையில்  பிறந்தவர். துன்னாலையைச் சேர்ந்தவர். இப்பொதைய வயது 31 மட்டுமே. மேற்கூறிய விடயங்களை நாங்கள் சேதுவுடன் ஹாட்லிக்கல்லூரியில் படித்தவர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளோம். ஹாட்லிக்கல்லூரியின் இணையத்தளத்திலும் சேதுவின் தகவலை (http://www.hartleycollege.com/cgi-bin/hweb/form/more/all_info.cgi?SERIAL=2136) பார்க்கலாம். அன்ரன் பாலசிங்கம் அடேலை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்துகொண்டது 1978 இல். (ஆதாரம் அடேல் பாலசிங்கத்தின் நூல் – த வில் ரு பிறீடொம்) 1978 ம் ஆண்டுக்குமுதலே முதல் மனைவி நோய் காரணமாக மரணமடைந்துவிட்டார். அதாவது முதல் மனைவி சேது பிறப்பதற்கு முதலே இறந்துவிட்டார். பிறகெப்படி சேது முதல் மனைவியுடன் பணியாற்றியிருக்க முடியும்? இது மிகப்பெரிய பொய். தகவல்களின் நம்பகத்தன்மை பற்றியும் இலங்கையில் அவர் ஊடகவியலாளராக பணியாற்றியதையும் பின்னூட்டத்தில் வாசகர்கள் கேள்வி எழுப்பியபின்னரும் ஜெயபாலன் தானும் பின்னூட்டத்தில் வந்து பின்வருமாறு எழுதுகிறார்.

“சேது இலங்கையில் வீரகேசரியின் தினசரிப் பதிப்பிலும் குறிப்பாக ரிபிசி யில் இருந்து பிரியும்வரை ரிபிசி யிலும் பணியாற்றியவர். சேதுவுடன் சமகாலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் இன்னமும் இலங்கையிலும் ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளனர். அவர்கள் அதனை உறுதிப்படுத்தியும் உள்ளனர். சேது வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் அன்ரன் பாலசிங்த்தின் முதல் மனைவியும் அங்கு பணிபுரிந்திருந்தார். அந்த உறவும் அன்ரன் பாலசிங்கத்தின் ஒரே ஊரவன் என்ற பிடிப்பும் ஒஸ்லோவில் சேதுவின் ரையை பாலா அண்ணை சரி செய்துவிடத் தூண்டியது.”

பத்தாண்டுகளுக்கு மேலாக தரமான பத்திரிகைத்துறையில் இருப்பவர் ஜெயபாலன். புலிகள் மாற்று இயக்கங்கள் இலங்கை அரசு எல்லாவற்றினதும் அரசியலை நன்கறிந்தவர். அப்படியானவர் புலிகளின் ஏஜண்டாக இருந்த தன்னைவிட ஏறத்தாள எட்டு வயதுகள் குறைந்த ஒரு மூன்றாந்தரமான கோமாளியான போலிப் பத்திரிகையாளனிடம் இலகுவாக ஏமாந்து போனது எவ்வாறு?
பாலசிங்கத்தின் வயது என்ன? சேதுவின் வயது என்ன.? முதல் மனைவியுடன தான் வேலைசெய்தேன் என்று சேது ஜெயபாலனிடம் சொன்ன புழுகை உறுதிப்படுத்தாமலும் தகவலின் மூலத்தை வாசகர்களிடம் சொல்லாமலும் CNN fox news மற்றும் நிதர்சனம் டொட் கொம் பாணியில் ஜெயபாலன் ஒப்புவிப்பதன் மர்மம் என்ன? என்ன சுலபமாக ஊத்தை சேது ஜெயபாலனின் தலையில் மிளகாய் அரைத்துவிட்டுப்போகிறான்.

பத்திரிகையாளர்கள் தவறு செய்யாதவர்கள் அல்ல. நல்ல பத்திரிகையாளன் தான் தவறு செய்ததும் தவறைத்திருத்தி மன்னிப்புக் கேட்பான். இங்கோ ஜெயபாலன் தன்னுடைய தவறைத் தெரிந்த பின்னரும் தன்னுடைய மிக மோசமான தகவல் மூலத்தை(சேது) யும் தன்னுடைய மிகப்பலவீனமான செய்திக் கட்டுரையாக்கத்தையும் மறைப்பதற்காக பிடிவாதக்காரனாக இருப்பதைப் போலுள்ளது.

இலங்கையின் முக்கிய பத்திரிகையாளர்களாகிய இக்பால் அத்தாஸ் க்கும் டீ.பீ.எஸ். ஜெயராஜ் க்குமிடையில் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. இக்பால் அத்தாஸ் வேணுமென்றே பிழையான தகவலை எழுதுவதில்லை. தவறு சுட்டிக்காட்டப்பட்டால் அவர் அடுத்தவாரத்தில் தன்னுடைய தகவல் தவறை சுட்டிக்காட்டி திருத்துவார். டீ.பீ.எஸ். ஜெயராஜ் வேண்டுமென்றும் தவறுதலாகவும் பல தகவல் மற்றும் வாதப்பிழைகளைச் செய்வார். அவர் தவறு சுட்டிக்காட்டப்பட்டாலும் அதனை சரி செய்துகொள்ளமாட்டார். இதன் காரணமாகவே அத்தாஸ் சர்வதேச ரீதியிலும் மதிப்புக்குரிய பத்திரிகையாளராக இருக்கிறார்.

சேதுரூபனைப் பற்றிய ஜெயபாலனின் கட்டுரையானது ஜெயபாலன் என்ற பத்திரிகையாளனின் நம்பகத்தன்மை சுயாதீனம் மற்றும் பத்திரிகைசார் அறங்கள் சம்பந்தமான மிக வலுவான கேள்விகளை எழுப்புகிறது.

என்ன காரணங்களுக்காக நடராசா சேதுரூபன் இலண்டனைவிட்டு வெளியேறி அல்லது வெளியேற்றப்பட்டு இலங்கைக்குச் செல்லவேண்டி வந்தது? பன்னர் ஒரு ஆயசசயைபந Marriage of convenience மூலமாகவா சேதுரூபன் நோர்வே சென்றார்? இத்தகைய முக்கியமான விடயங்கள் ஜெயபாலனின் கட்டுரையில் வேணுமென்றே தவிர்க்கப்பட்டு விட்டன.

நிதர்சனம் டொட் கொம் விடுதலைப் புலிகளை விமர்சிப்பவர்களையும் மாற்றுக் கருத்தாளர்களையும் மிரட்டிப்பணிய வைப்பதற்காகவும் விடுதலைப் புலிகளின் பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் விடுதலைப் புலிகளால் கொல்லப்படப் போகிறவர்களின் “குற்றப் பத்திரிகையை” முன்கூட்டியே அறிவிக்கவும் புலிகளால் பயன்படுத்தப்பட்டது. இதனை நிர்வகித்தவர் சேது என்பதோடு சேதுவுக்கும் பொட்டம்மானுக்கும் நேரடித்தொடர்புகள் இருந்தது. அல்கைடா சம்பந்தப்பட்டு ஒரு இணையத்தை சேது நடாத்தி வந்திருந்தாரானால் இன்னேரம் அவர் சிறைக்குள்தான் இருப்பார். சேது பல கொலைகளுக்கு நிதர்சனம் ஊடாக உடந்தையாக இருந்தவர். மத்திய கல்லூரி அதிபர் ராஜதுரை கொல்லப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னரே கொலைத்தண்டனை அறிக்கை நிதர்சனத்தில் வந்தது.

இப்படிப்பட்ட சேதுவையும் ஜெயபாலன் கூறுகின்ற “ஜனநாயகவாதிகள்” மற்றும் ரயாகரன் ஆகியோரையும் ஜெயபாலன் ஒரே தளத்தில் வைத்து விமர்சிப்பது ஏளனத்திற்கும் கண்டனத்திற்குமுரியது. ரயாகரனின் கட்டுரை மொழி மட்டுமே கண்டனத்துக்குரியது என்றால் சேதுவின் இணையம் Psychological warfare செய்ததோடு நிஜத்தில் பல கொலைகளுக்கும் உடந்தைபோனது.

சேதுவிற்கு தமிழில் ஒழுங்காக எழுத வாசிக்கத் தெரியுமா என்பதே கேள்விக்குரியது. நல்ல ஆய்வுக் கட்டுரைகளையும் செய்திக் கட்டுரைகளையும் எழுதக்கூடிய பகுப்பாய்வுத்திறனுள்ள ஜெயபாலன் சென்ற ஆண்டிலிருந்து குழு அரசியலின் இயங்கியல் காரணமாக தன்னுடைய நடுநிலைத்தன்மையை விரைவாக இழந்து வருகிறாரோ என்ற ஐயம் எழுகிறது. நிர்மலா ராஜசிங்கம் இராகவன் முதலியோர் மீது தனிப்பட்ட கவனமெடுத்து அவர்கள் மீது நடுநிலமையற்ற புலி அடிவருடிகளான தமிழ்நதி போன்றவர்கள் எழுதிய கட்டுரைகளை பிரசுரித்ததும் மீள்பிரசுரித்ததும் ஆனது குழு அரசியலுக்குப் பலியாகியமையாலா? மாற்றுக் கருத்துக்களுக்கு இடமளித்து அவை பிரசுரிக்கப்பட வேண்டியவை என்பது நியாயமானதுதான். ஆனால் நிர்மலா ராகவன் போன்ற சிலருடன் சச்சரவு ஏற்பட்ட பின்னர் மட்டும் அச்சிலர் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி குறுகிய காலத்துக்குள் அவர்களைப்பற்றி வெளிவந்த “மாற்றுக்கருத்துக்” கட்டுரைகளை எழுதுவதற்கும் மீள்பிரசுரிப்பதற்கும் பின்னால் ஒரு குழு அரசியல் இருப்பதற்கான சாத்தியம் நிறையவுள்ளது.  இப்போது ஜெயபாலன் ஊத்தை சேதுவை மிக மென்போக்கோடு அணுகியம் தற்பாதுகாக்கிற அளவுக்கு அரவணைத்தும் ஓரளவுக்கு நியாயப்படுத்தியும் செல்வதை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும். ஜெயபாலனின் அளவுகோல்களில் இரட்டைத்தன்மை மேலோங்கிவருகிறதா? சேதுரூபனுடையதோடு ஒப்பிடுகிறபோது நிர்மலாவினதும் ராகவனினதும் நேர்மை எவ்வளவோ மேலானது. ஆனால் நிர்மலா முதலியாரையும் அவர்தம் ஜனநாயக இயக்க காரரையும் விமர்சிக்கிறபோது ஜெயபாலன் மிகக்கடுமையான அளவுகோல்களையும் கடுமையான மொழியையும் பயன்படுத்துகிறார். ஊத்தை சேது புலிகள் அழிந்த இப்போது மிகப்பரிதாபகரமாக வேண்டுகிற பிரபல்யத்தையும் ஏன் நம்பகத்தன்மையையும் கூட தன்னை அழித்தும் ஊத்தை சேதுவுக்குத் தருகிறார் ஜெயபாலன்.

குறித்த கட்டுரையில் ஜெயபாலன் தனது பெயரில் பின்வரும் பின்னூட்டமூடாக சேதுவை நியாயப்படுத்த முயல்கிறார்.

“படித்தவன் எல்லாம் பண்பாணவன் பண்பாணவன் எல்லாம் படித்தவன் என்ற இந்தச் சிந்தகனயே சேதுவினை ஒரு ஊடகவியலாளனாக பொறுப்பான தொழில் செய்பவனாக பார்க்க முடியாமல் தடுக்கின்றது. என்னைப் பொறுத்தவரை சேது ஒரு தெரிந்த கெட்டவன். இங்கு ஒளிவு மறைவு இல்லை.

ஆனால் இங்கு பின்னூட்டங்கள் சொல்லும் ஊடக நேர்மையை எப்படி மதிப்பிடுவது. ஜனநாயம் மார்க்ஸியம் புரட்சி பேசுகின்ற ஊடகங்களுக்கும் சேதுவின் அன்றைய எழுத்துகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தமிழ்சேர்க்கிள் இணையத்தளத்தின் இத்தொடுப்பில் உள்ள கருத்துக்களை ஒரு தடவை பார்க்கவும். (18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும்) http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6223:2009-09-11-10-49-49&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50

சேது பின்னணியில் இருந்ததாகக் குற்றம்சாட்டப்படும் நிதர்சனம் இணையத்தில் அல்லது மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள இணையங்களில் எழுதப்பட்டவைக்கும் தமிழ் சேர்க்கிளில் உள்ள கருத்துக்கும் என்ன வித்தியாசம். தமிழ்சேர்க்கிளில் மே 18க்குப் பின் அதன் மொழியில் ஓரளவு திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அதற்கு முன் இரயாகரனனின் கட்டுரைக்கும் நிதர்சனம் கட்டுரைகளுக்கும் என்ன வேறுபாடு? நிதர்சனம் கட்டுரையில் மார்க்சியம் சோசலிசம் லெனின் மாஓ போன்ற சொற்கள் காணப்படமாட்டாது. மற்றுப்படி இரு இணையங்களிலும் தமிழில் உள்ள அத்தனை வன்மம் கொண்ட சொற்களையும் பார்க்கலாம்.

லண்டனில் பத்திரிகை நடத்தியவர் தலைமறைவாக இருந்து நடத்திய பின்னூட்டம்.கொம் இணையத்தளம் அதில் கருத்துக்கள் மொட்டைக் கடிதங்கள் எழுதிய ஜனநாயகவாதிகள், மாவோயிஸ்ட்டுக்கள் இவர்களையெல்லாம் எப்படி மதிப்பிடுவது. இவர்கள் எழுதியதற்கும் சேது எழுதியதற்கும் எவ்வித வேறுபாடுகளும் இல்லை.

சேது முக்காடு போடாமல் அவற்றைச் செய்ய மற்றையவர்கள் முக்காடு போட்டுக்கொண்டு அதனைச் செய்கிறார்கள். இந்த ஊத்தைக் கனவான்கள் ஒரு இயக்கத்திற்கு அல்லது ஒருசாராருக்கு மட்டும் உரித்தானவர்கள் அல்ல. இவர்கள் ஜனநாயகம் மார்க்ஸியம் படித்தவன் பொறுப்பான தொழில் செய்பவன் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு சமூகத்தை மெல்ல மெல்ல நாசமாக்குகிறார்கள். சேது போன்றவர்களை இலகுவில் அடையாளம் கண்டு சிகிச்சையளிக்கலாம். ஆனால் மற்றையவர்களை அவ்வளவு இலகுவாக அடையாளம் காணவும் முடியாது சிகிச்சை அளிக்கவும் முடியாது. இவர்களே சமூகத்திற்கு மிக ஆபத்தானவர்கள். மிகமோசமான சமூகக்கொல்லிகள்.” – த ஜெயபாலன்.

ஜெயபாலனின் கட்டுரைக்கூடாக மட்டும் சேது தனக்கு பிரபலம் தேடாமல் பின்னூட்டங்கள் ஊடாகவும் தேடுகிறார். இதனையும் ஜெயபாலன் அனுமதித்துள்ளார். 

சேது என்கிற சந்தர்ப்பவாத பச்சோந்தியின் இப்போதைய strategy பின்வருமாறு. நிதர்சனம் டொட் கொம் இயக்குனராக இருந்தபோது தனக்கும் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைக்குமிருந்த தொடர்பை பகீரதப்பிரயத்தனம் செய்து மறைப்பது. தனக்கும் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுக்குமிடையிலேயே அதிலும் குறிப்பாக அன்ரன் பாலசிங்கத்துக்குமிடையிலேயே தொடர்பு இருந்ததான புதிய மாயப்புனைவை ஊடகங்கள் ஊடாக கட்டமைப்பது. புலிகள் அழிந்த இக்காலத்தில் மகிந்த ஆட்சியோடு தொடர்பு எடுப்பது. மீண்டும் புதிய எஜமானர்களுக்கு ஊடக ரவுடியாகி (எப்போதும் போலவே வேலை வெட்டிக்குப்போகாது) செல்வாக்கையும் செல்வங்களையும் அனுபவிப்பது.

ஐரோப்பாவில் criminal recordஐ உடைய ஒரு பச்சோந்தியும் கோமாளியுமானவரை மகிந்தவோ அல்லது சரத் பொன்சேகாவோ தங்களது பிரச்சாரத்துக்கு உபயோகிப்பார்களாயின் அவர்களிக்கு கிடைக்கவிருக்கும் தமிழ் வாக்குகளும் கிடைக்காமலே போகும்.

தேசம் நெற் போன்ற பொறுப்பான பத்திரிகைகள் சேது போன்றவர்களின் வேலைத் திட்டங்களுக்குப் பலியாகமல் இருக்க வேண்டும்.

._._._._._.

த ஜெயபாலனின் குறிப்பு:

//இலங்கையில் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய சேதுரூபன் காலஞ்சென்ற தவிபு இன் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் முதல் மனைவியுடன் பணியாற்றியவர்.//

மேற்படி குறிப்பில் //’முதல் மனைவியுடன்’ என்பது ‘அன்புக்குரியவருடன்’// என்று வந்திருக்க வேண்டும். தகவல் மூலம் அன்புக்குரியவர் என்று அவரது பெயரைக் குறிப்பிட்டு இருந்தது. அதனைக் கேட்டுப் பதிவு செய்யும் போது நான் தவறாக அது அவருடைய மனைவி என்று அர்த்தப்படுத்திக் கொண்டேன். மேற்படி அந்த அன்புக்குரியவருடன் சேது வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றி இருந்தார். முதல் மனைவி பற்றிய எஸ் சிவரூபனின் குறிப்புச் சரியானதே. ஏனையவை எஸ் சிவரூபனுடைய ஊகம் அல்லது விமர்சனம்.

தவறுக்கு வருந்துகிறேன். முன்னைய கட்டுரையிலும் இத்திருத்தத்தை மேற்கொள்கிறேன்.

த ஜெயபாலன்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 Comments

  • chandran.raja
    chandran.raja

    சேதுவுக்கு ஒரு இணையத்தளம் ஊத்தை சேதுவை விமர்சிப்பதற்கும் அவருக்கொரு கட்டுரை எழுதிக் காத்துக் கொண்டிருப்பவர்களும் தேசம்நெற் இடம் தருமாக இருந்தால் அந்த தேசம்நெற் தேவையே இல்லை. ” தேசம்” தேசம்நெற் ரை பத்து வருடங்களுக்கு மேலாக நான் பார்த்து வருகிறேன்.
    த.ஜெயபாலனின் நேர்மையில் நான் சந்தேகப்பட மாட்டேன் என ஒரு பின்னோட்டம் இட்டிருந்தார்.

    அதையே நானும் சொல்லுவது. கதிரையில் குந்தியதும் முதலில் தேசம்நெற்றை பார்த்துவிட்டு மற்றம் மீதியை தொடருவேன். அதே போலத்தான் றயாகரனின் பிரச்சனையும். பழைய நாறிப்போன தமிழ்தேசத்தை கிளறிக்கிளறி முகர்ந்து பார்பவர்களுக்கு றயாகரனை விமர்சிக்க என்ன உரிமை இருக்கிறது. அது ஒரு பொதுயுடைமைவாதிகளுக்கு மட்டுமே!.
    இது போன்ற தவறுகளை தேசம்நெற் திருத்திக் கொள்ளும் என்பதில் எமக்கும் ஏதோ நியாயம் உண்டு.

    Reply
  • Sethurupan
    Sethurupan

    ஊகங்களை கட்டுரையாக வடித்து அதற்கு ஒரு ஊடகம் தேடும் போலிப் பேருக்கும் அதை காவிவரும் தேசத்திற்கும் பாராட்டுகள்.

    சிவரூபனுடைய ஊகத்திற்கு நான் பதில் கொடுக்க தேவை இல்லை என்றே கருதுகின்றேன். பயனுள்ள விமர்சனங்களுக்கு பதில் கொடுக்க தயார்.

    சிவரூபனுடைய ஊகம் சேதுவை அவமரியாதைக்கு உட்படுத்துமாக இருந்தால் அது சட்டத்திற்கு முரணானது என்பதை தேசம் த ஜெயபாலன் இந்த கட்டுரையை இணையத்தில் ஏற்றமுதல் சிந்தித்திருக்க வேண்டும்.

    இந்த கட்டுரை தேசத்திற்கு எதிரான சட்ட ஆவணமாகலாம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சேது ஹாட்லிக்கல்லூரியில் 1984 இலிருந்து(முதலாம் வகுப்பிலிருந்து) படித்ததாக ஹாட்லிக்கல்லூரியின் இணையத்தளத்தில் பதியப்பட்டிருப்பதாக இங்கே காட்டப்படுவதே போலியானது. ஹாட்லிக்கல்லூரியில் எப்போதிருந்து முதலாம் வகுப்பிருந்தது என்பதை யாராவது புரிய வையுங்கப்பா??

    Reply
  • mathusena
    mathusena

    பார்த்திபன் சொன்னது சரிதான் ஆனால் பலரது ஆண்டுகள் மாறி இருக்கிறதே? அப்படி இருக்க முடியாது காரணம் அனைவரும் ஓ.எல்க்கு முதல் ஒரே தடவையில் விசேட பரீட்சையில்தான் பாடசாலை அனுமதி பெறுவது. இணையத்தில் ஏதாவது சிக்கலோ தெரியவில்லை.

    Reply
  • பல்லி
    பல்லி

    //சேதுவுக்கு ஒரு இணையத்தளம் ஊத்தை சேதுவை விமர்சிப்பதற்கும் அவருக்கொரு கட்டுரை எழுதிக் காத்துக் கொண்டிருப்பவர்களும் தேசம்நெற் இடம் தருமாக இருந்தால் அந்த தேசம்நெற் தேவையே இல்லை. //
    சந்திரா என்னையும் உங்களையும் விட சேது தமிழர் இந்த நிலைக்கு வர காரனமாக இருந்தத்தில் முன் நிற்க்குறார், அதையும் விட சேதுவிடம்
    புலி சமாசாரம் பல உண்டு, அதுக்கு காலம் பதில் சொல்லும்; இதுக்காக தேசத்துக்கு கல் எறிய வேண்டாமே;

    //அதையே நானும் சொல்லுவது. கதிரையில் குந்தியதும் முதலில் தேசம்நெற்றை பார்த்துவிட்டு மற்றம் மீதியை தொடருவேன். அதே போலத்தான் றயாகரனின் பிரச்சனையும். பழைய நாறிப்போன தமிழ்தேசத்தை கிளறிக்கிளறி முகர்ந்து பார்பவர்களுக்கு றயாகரனை விமர்சிக்க என்ன உரிமை இருக்கிறது. அது ஒரு பொதுயுடைமைவாதிகளுக்கு மட்டுமே!./

    வாளை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கலியானம் செய்ய சந்திரா ஆசைபடலாமா? அதை உலகநாதன் செய்யட்டுமே:

    //இது போன்ற தவறுகளை தேசம்நெற் திருத்திக் கொள்ளும் என்பதில் எமக்கும் ஏதோ நியாயம் உண்டு//
    தவறுகளை சுட்டி காட்டுவதே நமது வேலை,(திருந்தும் வரை) ஆனால் தவறையும் சுட்டி காட்ட வேண்டும் அதே நியாயமாக;

    Reply
  • Kusumpu
    Kusumpu

    சிவரூபன்-நீர் சேதுவின் மேல் உள்ள ஆத்திரத்திலும்> வேகத்திலும் தாங்கள் தேசத்தையும் ஜெயபாலனையும் போட்டுத் தாக்குகிறீர்கள் என்று எண்ணுகிறேன்: சேதுவை ஊத்தை சேது என்பதே ஒருவகையில் ஒரு தனிமனிதனை அவமானப்படுத்துவதாகும். இங்கே மனித மரியாதை என்பது மறைந்து விடுகிறது. சேதுவைப்பற்றி உங்கள் கோபத்தை எழுதுங்கள் ஆனால் நீரும் சேதுவைப்போல் அனாகரிகமான வார்த்தைகளைத் தானே பாவிக்கிறீர்: சேது நிதர்சனத்தில் எழுதியது யாவரும் அறிந்ததே. ஆனால் அது சேதுவினுடையது அல்ல. ஆனால் சேதுவே தொடர்ந்து எழுதிவந்தார். நீர் எழுதிய பலவிசயங்கள் உண்மையானது (எல்லாமல்ல)

    Reply
  • Skanthan
    Skanthan

    “சேது ஹாட்லிக்கல்லூரியில் 1984 இலிருந்து(முதலாம் வகுப்பிலிருந்து) படித்ததாக ஹாட்லிக்கல்லூரியின் இணையத்தளத்தில் பதியப்பட்டிருப்பதாக இங்கே காட்டப்படுவதே போலியானது. ஹாட்லிக்கல்லூரியில் எப்போதிருந்து முதலாம் வகுப்பிருந்தது என்பதை யாராவது புரிய வையுங்கப்பா??”/parththipan

    These informations are posted by the Hartlietes themselves. For example SETHU can and puts his own information in the hartley web. That is how the system works.As usual Sethu always fabricates his information. He wanted to show the mad world that he studied too many years in Hartley college. He actually entered hartley in 1989.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இந்த பிறப்பில் பல்லி எதையும் புரிந்து கொள்வதற்கு சாத்தியமே இல்லை. பல்லி எப்பவும் தேசம்நெற்றுக்கு தான் ஒரு “செக்குறிடி காட்” என்ற நினைவு உள்ளது. உள்ளே அனுமதிப்பது. உங்களை சுயவிமர்சனம் செய்யுங்கள் கேட்பது. தான் சுயவிமர்சனம் செய்யும் போது…. மற்றவரையும் குழப்பி தானும் குழம்புவது என்று சொல்லுவார். இது ஒரு முறையல்ல. பல முறை இங்கு நடந்தேறிருக்கிறது. இதுவெல்லாம் அரசியல் கருத்தாக
    யாரும் எடுக்க முடியுமா?.
    இந்த பாணியில் ஆனதே சேதுவின் பிரச்சனைகளும். சேது ஏன் ஊத்தை சேது ஆனாரென்றால் அவர்க்கென்று ஒரு அரசியல் கொள்கை கிடையாது. நேரத்திற்கு ஏற்றமாதிரி ஐக்கியமாக இருந்தார் என்பதையே காணக் கூடியதாகயிருக்கிறது. தமிழனில் கடைந்தெடுத்த காடைகளுக்கு சரனாலயமாகயிருந்தது நோர்வே நாடு இங்கிருந்தவர்கள் யாரும் தமிழனின் அரசியல் வாழ்வையோ இலங்கை மக்களின் அரசியல் வாழ்வையோ நேசித்தவர்கள் அல்ல. இதுவே சேதுவின் உள்ளடக்கம். தமிழில் அதற்கு ஒரு வார்த்தையிருக்கிறது.”அங்கிடுதத்தி”. இல்லையேல் தானும் இருபிள்ளைககைளும் சீரும்சிறப்புமாக வாழ்கிறோம் என வாக்குமூலம் கொடுத்திருப்பாரா? இது அரசியலை வியாபாராத் தனத்தில் அணுகியதின் பிரதிபலிப்பே!.
    இனி விஷயத்திற்கு வருவோம். சேதுவை விட பல்லியும் இந்த கொள்கைகளில் விலத்தி நின்றவர் அல்ல. இவரின் கொள்கைகளும் சேதுவின் கொள்கைகளுக்கு நிகரானதே. எல்லா இயக்கங்களோடும் தொடர்பு வைத்திருந்தாராம் அன்பாகப் பழகியவராம். ஏதோ ஒரு தரணத்தில் அவர்களை சாகவிட்டு ஓடிவந்து இங்கிருக்கிறாம்.சேதுவின் பீத்தல் அரசியலும் பல்லியின் பீத்தல் அரசியலும் என்னைப் பொறுத்தவரை ஒன்றே. முடிந்தால் பல்லி தனது அரசியல் கொள்கையை வெளியிடட்டும். றாயாகரனின் கொள்கைளில் அதாவது துணிகரமாகா தான் ஒரு பொதுயுடைவாதி என திரும்பத்திருப காண்பித்துக் கொண்டேயிருக்கிறார். அவர் அந்த நிலையில் என்றுமே மாறியதில்லை. அவரை விமர்சிப்பதற்கு பொதுயுடமை இல்லாதவனுக்கு அதை ஏற்றுக் கொள்ளாதவனுக்கு என்ன உரிமையிருக்கிறது றயாகரனை விமர்சிப்பதற்கு? புலிகளும் பாசிஸம் இலங்கையரசும் பாஸிசம் என்பதே றாயாகரனின் கருத்து. இதை கேள்விக்குள்ளாக்குவது ஒரு பொதுவுடமையை வாதியின் கருத்தாக இருக்க வேண்டுமே ஒழிய ஒருஇனவாதி வரலாற்றை தாறுமாறாகப் புரிந்து கொண்டு றயாகரனை உங்கள்வழியில் குற்றவாளியாக்க நாங்கள் ஒருபோதும் அனுமதியோம் பல்லி!.

    நீங்கள் தான் தேசம்நெற்றை பாதுகாப்பவராகவும் மற்றவர்கள் எல்லாம் கல்லெறிபவர்களாகவும் கணக்கு போட்டு கதை சொல்லாதீர்கள். உங்கள் மண்டைக்கள் இருப்பது தமிழ் தேசியத்தின் ஊத்தைகளும் தமிழ் சினிமா பாடல்களும் சீரியல் பற்றிய விளக்கங்களுமே எங்களுக்கு மானிடதைப் பற்றி அடுத்த தேவைகளைப் பற்றியும் அதில் தமிழினம் எந்தப் பாத்திரத்தை வகிக்கப் போகிறது என்பது பற்றியுமே.

    Reply
  • பல்லி
    பல்லி

    //றயாகரனை உங்கள்வழியில் குற்றவாளியாக்க நாங்கள் ஒருபோதும் அனுமதியோம்//
    ஆகா நீங்க அந்த பாட்டியா?? சரி ரயகரனை நான் எங்கே குற்றவாளியாக்கினேன்: இந்த பக்கத்து இலைக்கு பருப்பு பல்லி சின்ன வயதிலேயே பார்த்து விட்டேன்; ஆகவே கருத்தை எழுதுங்கள்;
    //தேசம்நெற்றுக்கு தான் ஒரு “செக்குறிடி காட்” என்ற நினைவு உள்ளது//
    திருத்தி கொள்ளுங்கள் நானும் (பல ஆயிரம் வாசகரில் நானும் ஒருவன் என்பதால்)

    //சேதுவை விட பல்லியும் இந்த கொள்கைகளில் விலத்தி நின்றவர் அல்ல//
    சேது போல் சட்டத்தை நாடமாட்டேன்; ஆதாரத்தை கேக்கமாட்டேன், சரியான பதிலை பொறுமையாய் தருவேன்; காரனம் நான் மல்லாக்க படுத்து துப்புவபவனல்ல,
    எதுக்கும் பல்லியையும் ஊத்தையாக கணிப்பிட்ட சந்திராவுக்கு நன்றி? அதனால் குழித்துவிட்டு (குடித்துவிட்டல்ல) எழுதுகிறேன்;

    Reply
  • பல்லி
    பல்லி

    //இந்த பிறப்பில் பல்லி எதையும் புரிந்து கொள்வதற்கு சாத்தியமே இல்லை//
    சந்திரா இந்த பிறப்பே கேவலமானது எனநினைப்பதால் அடுத்த பிறவி பற்றி பல்லி யோசிப்பதில்லை; அப்படி ஒன்று இருக்குமாயின் உங்களை மகிள்விக்க லெனினின் குடும்பத்தில் பிறக்க விண்ப்பிக்கிறேன்,

    //பல்லி எப்பவும் தேசம்நெற்றுக்கு தான் ஒரு “செக்குறிடி காட்” //
    அந்த தகுதி பல்லிக்கு இல்லை;அதே நேரம் தேசத்துக்கும் எனது பாதுகாப்பு தேவையில்லை, தேசம்னெற்றில் பல்லி மட்டும் எழுதவில்லை என்பது கூடவா சந்திராவுக்கு தெரியாது;

    //. உங்களை சுயவிமர்சனம் செய்யுங்கள் கேட்பது. //
    என்றாவது சந்திராவை கேட்டேனா?? சதிராட்டகாரரை மட்டும்தானே கேட்டேன், நான் மட்டுமா கேட்டேன்; என்மீது மட்டும் ஏன் இந்த அன்பு;

    // சுயவிமர்சனம் செய்யும் போது:://
    மாயாவை தவிர யார் செய்தார்கள் பல்லி குளம்ப; பல்லியை குளப்புவதே பல்லிதான் மற்றவர்கள் அல்ல;

    //இதுவெல்லாம் அரசியல் கருத்தாக//
    இல்லையாயின் இவையெல்லாம் பல்லியின் பங்காளிகளா??

    :://சேது ஏன் ஊத்தை சேது ஆனாரென்றால் அவர்க்கென்று ஒரு அரசியல் கொள்கை கிடையாது. //
    அப்படி யாருக்கு இருக்குதென பல்லி தெரியலாமா? சந்திரா உட்பட;

    //நேரத்திற்கு ஏற்றமாதிரி ஐக்கியமாக இருந்தார் ::
    உங்கள்நிலை இன்று என்னவாம்??

    //.”அங்கிடுதத்தி”. // இதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கலாம்; ஆனால் பல்லிக்கு ஆங்கிலம் தெரியாது;

    //இனி விஷயத்திற்கு வருவோம். // அப்படியாயின் இதுவரை காய்கறி கடையா நடத்தினீர்கள்;

    //இவரின் கொள்கைகளும் சேதுவின் கொள்கைகளுக்கு நிகரானதே. // அப்படியா சொல்லவே இல்லை;

    //எல்லா இயக்கங்களோடும் தொடர்பு வைத்திருந்தாராம் அன்பாகப் பழகியவராம்.::// அதுவும் தப்பா,,,

    //ஏதோ ஒரு தரணத்தில் அவர்களை சாகவிட்டு ஓடிவந்து இங்கிருக்கிறாம்//
    பல்லியும் சேர்ந்து சாகவில்லை என சந்திராவுக்கு வருத்தமா?? அது சரி சந்திரா எங்கே தெல்லிபளை ஆஸ்பத்திரியில் நோயாளியாக இருக்கிறியளா??

    //பீத்தல் அரசியலும் என்னைப் பொறுத்தவரை ஒன்றே.//
    அப்படா மக்களை பொறுத்தவரை என சொல்லிவிடுவீர்களோ என பயந்து விட்டேன்,

    // பல்லி தனது அரசியல் கொள்கையை வெளியிடட்டும். //
    எனது வோட்டு சரத்துக்கு என பலதடவை சொல்லி விட்டேனே;

    //றாயாகரனின் கொள்கைளில் அதாவது துணிகரமாகா தான் ஒரு பொதுயுடைவாதி என திரும்பத்திருப காண்பித்துக் கொண்டேயிருக்கிறார்.//
    சந்திராவுக்கு நல்ல ஒரு கட்டளை தளபதி;

    // அவர் அந்த நிலையில் என்றுமே மாறியதில்லை. :://
    பண்ணி காச்சலுக்கு கூட இதுவரை சரியான மருந்து கண்டு பிடிக்க இல்லை என சொல்லுகிறார்கள்;

    //விமர்சிப்பதற்கு பொதுயுடமை இல்லாதவனுக்கு அதை ஏற்றுக் கொள்ளாதவனுக்கு என்ன உரிமையிருக்கிறது றயாகரனை விமர்சிப்பதற்கு:://
    சந்திரா இது கிலோ என்ன விலை, மலிவாக எங்கே கிடைக்கும்;??

    // புலிகளும் பாசிஸம் இலங்கையரசும் பாஸிசம் என்பதே றாயாகரனின் கருத்து//
    இருக்கட்டுமே ஆனால் நீங்கள் மகிந்தா குடும்பத்துக்கு தமிழர் அனைவரும் வட்டிக்கு நன்றி கடன்பட்டதாக பல பின்னோட்டம் விட்டீர்களே;;

    //ஒருஇனவாதி வரலாற்றை தாறுமாறாகப் புரிந்து கொண்டு றயாகரனை உங்கள்வழியில் குற்றவாளியாக்க நாங்கள் ஒருபோதும் அனுமதியோம் பல்லி!.// பல்லியை பதம் பார்த்துவிட்டு நீங்க மட்டும் றயாகரனுக்கு மெய்பாதுகாவலராய் சத்தியபிரமாணம் செய்வது நியாயமா??

    //நீங்கள் தான் தேசம்நெற்றை பாதுகாப்பவராகவும் மற்றவர்கள் எல்லாம் கல்லெறிபவர்களாகவும் கணக்கு போட்டு கதை சொல்லாதீர்கள். :://
    எறியாதவர்கள் சொன்னால் பல்லி மன்னிப்பு கேப்பேன், ஆனால் நீங்க;;;

    //உங்கள் மண்டைக்கள் இருப்பது //
    சமூக சிந்தனை மட்டுமே;

    //சினிமா பாடல்களும் சீரியல் பற்றிய விளக்கங்களுமே//
    மக்கள் வாழ்வுதானே சினிமாவும் சீரியலும்; அதுகூடவா சந்திராவுக்கு தெரியாது,

    //எங்களுக்கு மானிடதைப் பற்றி அடுத்த தேவைகளைப் பற்றியும் //
    அதுதான் மகிந்தா குடும்பத்துக்கு எல்லோரும் ஒரு ஓ போடுங்க என பல தடவை ஒப்பாரி வைக்கிறியளா??

    // அதில் தமிழினம் எந்தப் பாத்திரத்தை வகிக்கப் போகிறது என்பது பற்றியுமே.:://
    தொடரும் பல்லி;;;;

    சந்திரா இதை படித்தபின் எனது முன்னய பின்னோட்டத்தை படிக்கவும் சிலவேளை புரியகூடும்; என்னமாய் கடுப்பேத்துறியள்;

    Reply
  • Ramathevan
    Ramathevan

    Sethu where are U now. from ur past history?
    October,20, London, Sri Lanka Guardian) LTTE’s intelligence head Pottu Amman’s man based in Norway Nadarajah Sethurupan alias Dirty Sethu has produced another nasty piece of news in his websites ‘tamileditors.com’ and ‘nitharsanam.com’ name-calling the leader of the UK branch of the Tamil United Liberation Front (TULF) Dr Anthoniplliai Nicholaspillai as ‘Sillai Sex Guru’ and fraud.

    Dirty Sethu seeks the help of LTTE’s aging vanguard Charles Somasundaram alias Charlie Somu and Cllr Daya Idaikadar to write up depraving news items and publish them without any fear enjoying the patronage he is receiving from the Norwegian government.

    Dr Anothonipillai Nicholaspillai is from his birth place of Sillai in Jaffna, Sri Lanka. Six years ago Dr Nicholaspillai had to face legal action filed by one of his patient of Turkish origin over a claim that his medical practitioner failed to give proper treatment for a disease that developed following the ritual circumcision operation done according to Islamic traditions back in Turkey. The case was dismissed by the judges and Dr Nichalaspillai was paid cost and damages according to news filed in the ‘Thenee’ website.

    Having failed in the Court action, the patient has filed a complaint with the General Medical Council (GMC) which deals with complaints and disciplinary issues of the medical practitioners and the GMC too included this complaint to be investigated and published in its website as an agenda item for the disciplinary committee to investigate.

    This news was supposed to have been picked up by a pro-LTTE medical practitioner and passed on to Dirty Sethu. Reading the news published his websites, it is now clear that Dirty Sethu get excited and overjoyed to put up tantalising news about testicles and penises and on this occasion his English news writers too were overjoyed to publish it as a hit news in the said LTTE websites to give a story for its support base to over joy and to gossip.

    Dirty Sethu was running a sex trade website and he closed it down after it came under scrutiny in the Tamil web media. His creativity reached the peak when he targeted the leader of Tamil Democratic Congress R Jayadevan based in the UK by publishing nude sex pictures down loaded from a porn website and transposing Mr Jayadevan and his wife’s heads from a family photograph. Dirty Sethu always had supporters like Charie Somu and Cllr Daya Iadaikadar (who is the brother in law of LTTE’s legal representative Visvanathan Rudrakumaran) to publish depraving news like these in his websites including many anonymous and clandestine ones he operates from Oslo.

    Dirty Sethu was convicted by the Harrow Magistrate Court for causing unrest at the Tamil Broadcasting Corporation and he has appealed for full hearing of the case which will be heard at the Harrow Crown Court on the November 19, 2007.

    Unemployed Dirty Sethu is said to be funded by LTTE’s Intelligence man Pottu Amman. He is married to a divorcee by the name of Latha of Sri Lankan origin and by profession she is a nurse. According to news published in another media, he is said to have obtained Rs 2 million as dowry from Latha to marry her. Sources in Oslo say Dirty Sethu ill treats his wife and even uses physical violence to suppress her. But his wife is said to be silently suffering without taking any further measures to redress her difficulties fearing Dirty Sethu will scandalise her publicly and is scared to leave him fearing it will earn bad name for her within the Tamil community as she had divorced her first husband.

    The news published by Dirty Sethu in his websites about Dr Nicholaspillai is reproduced below.

    ‘Sillalai Sex Guru’ in fresh scandal.

    Ananda Sangaree’s right hand man in the United Kingdom and the chief of the TULF branch in that country, ‘Sillalai Sex Guru’ Dr Nicholas Pillai is to be deemed unfit to practice following complaints that he deformed a man’s penis.

    A notice published on the British General Medical Council (GMC) website reads: “The Panel will inquire into allegations that Anthonipillai Nicholas-Pillai, a General Practitioner carried out a circumcision on a patient, a result of which is that the patient’s penis is cosmetically abnormal. It is alleged that this conduct was not in the best interests of the patient and/or below the standard to be expected of a reasonably competent medical practitioner.”

    Nicholas Pillai famously earned the title of ‘Sillalai Sex Guru’ after demanding to inspect the gentiles of every patient who visited him in his hometown of Sillalai in Jaffna.

    Further the GMC stated: “The Panel will further inquire into allegations that Dr Nicholas-Pillai sent a letter to the firm of solicitors acting on behalf of the patient enclosiong medical notes that were inaccurate and/or not prepared contemporaneously with or as soon as possible after the matters to which they related. It is alleged that Dr Nicholas-Pillai’s conduct was unprofessional, intended to mislead and/or below the standard to be expected of a reasonably competent medical practitioner.”

    Nicholas Pillai is a renowned fraud in the Tamil community.

    -From
    http://www.srilankaguardian.org/2007/10/dirty-sethu-calls-respectable-tamil.html

    -Rama Thevan

    Reply
  • Paramathas
    Paramathas

    மிக சுவாரசியமாக இருக்கிறது சேதுவின் வரலாறுகள். சேதுவின் பிரபல்யத்தைப் பார்த்துவிட்டு ஆட்டோ சங்கருக்கு ஆனந்தவிகடன் தொடராக சீரியல் எழுதியமாதிரி நக்கீரன் அல்லது குமுதம் சேதுவின் வரலாறடறை எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. –பரமதாஸ்.

    Reply