13

13

வடகொரியாவில் இருந்து வந்த விமானத்தில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் – தாய்லாந்து பொலிஸார்

flight_.jpgவட கொரியாவில் இருந்து வந்த சரக்கு விமானத்தில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோ எடையுள்ள ஆயுதங்களை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்துள்ளதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆயுதங்களில் பெருமளவான ஏவுகணைகளும், கிறனைட் லோஞ்சர்களும் இருப்பதாக தாய்லாந்து தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆர்.பி.ஜி உந்துகணைகள், உந்துகணை செலுத்திகள், விமான எதிர்ப்பு சாம் ஏவுகணைகள், வெடிபொருட்கள் பெருமளவில் விமானத்தில் உள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

பியோங்யாங்கில் புறப்பட்ட சிறீலங்கா நோக்கி பயணித்து கொண்டிருந்த இந்த விமானம் பாங்காக் உள்நாட்டு முனையத்தில் எரிப்பொருள் நிரப்ப தரையிறங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் கிழக்கு ஐரோப்பாவை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று விவரித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பெலராஸை சேர்ந்தவர்கள் ஒரு செய்தி கூறுகிறது. இதற்கிடையே, மாட்ரிட் ரயில் குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய போலி கடவுச் சீட்டு விபரம் தொடர்பில் பலரை தாய்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சரத் பொன்சேகாவை ஆதரிக்க ரணில் யாழ்ப்பாணத்தில் கோரிக்கை

srilanka_ranil.jpgஇலங்கை எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க சனிக்கிழமையன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு, ஐக்கிய தேசியக் முன்ணணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் சரத் பொன்சேகாவை ஆதரிக்குமாறு கேட்டு கொண்டார். தான் ஆட்சிக்கு வந்தால் சரத் பொன்சேகா மூலமாக அரசியல் சாசனத்தை மாற்றியமைத்து, புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதன் மூலம் இனப்பிரச்சனையை தீர்ப்பேன் என்றும் ரணில் விக்ரமசிங்க அப்போது கூறினார்.

மேலும் கடந்த முறை ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தது போன்ற தவறை இந்த முறையும் தமிழ்மக்கள் செய்து விட கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தெலுங்கானா உருவாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 20 அமைச்சர்கள் ராஜினாமா

andhraprotestap.jpgஇந்தியா வின் ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதியைப் பிரித்து தனி மாநிலத்தை உருவாக்குவது என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக அந்த மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள் பலர் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ள நிலையில், இதே பிரச்சனையை முன்வைத்து 20 அமைச்சர்கள் பதவி விலக முன்வந்துள்ளனர்.

இவர்கள் ராயல்சீமா மற்றும் ஆந்திரா பகுதியை சேர்ந்தவர்கள். இந்த ராஜினாமாக்கள் இதுவரை ஏற்கப்படவில்லை. மாநிலத்தை பிரிக்கக் கூடாது என்று கூறும் எம் எல் ஏக்கள் மற்றும் அமைச்சர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் மாநில முதல்வர் இறங்கியுள்ளார்.

மைக்கல் ஜாக்சனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

michael.jpgஅமெரிக் காவில் ‘பொப்’ இசை உலகில் வழங்கப்படும் ‘கிராமி’ விருது, மிகவும் பிரபலமானது. மறைந்த பொப் இசை சக்கரவர்த்தி மைக்கேல் ஜாக்சன், இவ்விருதை 13 தடவை பெற்றுள்ளார். இந்நிலையில், இசை உலகில் அவரது பங்கை பாராட்டும் வகையில், அவருக்கு வாழ்நாள் சாதனைக்கான கிராமி விருது வழங்கப்படுவதாக, அமெரிக்க ரெக்கோர்டிங் அகடமி தலைவர் நீல் போர்ட்நோ அறிவித்துள்ளார்.

கிராமி விருது வழங்கும் விழா லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜனவரி 31ந் திகதி நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள், மைக்கேல் ஜாக்சனுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

பதுளை ஆஸ்பத்திரி: மேலும் நால்வருக்கு பன்றிக் காய்ச்சல்

swine-flu-2.jpgபதுளை அரசினர் மருத்துவ மனையில் மேலும் நால்வருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. கொழும்பு வைத்திய பரிசீலனை பீடத்திற்கு அனுப்பப்பட்டிருந்த இரத்தம், சளி மாதிரிகளின் அடிப்படையிலேயே பன்றிக் காய்ச்சல் நோய் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ஒருநாள் போட்டிகளில் அதிரடி மாற்றங்கள் 50 ஓவர்களை 40 ஆகக் குறைக்கத் திட்டம்

ஒருநாள் போட்டிகளில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன. தற்போது உள்ள 50 ஓவர்களை 40 ஆக குறைக்க ஐ.சி.சி. ஆலோசித்து வருகிறது. கிரிக்கெட்டின் புதிய பரிமாணமான “ருவென்ரி20” போட்டிகளின் வருகைக்குப் பின் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வமில்லை. இதனால் புதிய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) உள்ளது.

ஒருநாள் போட்டிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கும் நோக்கில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவர ஐ.சி.சி. குழு முடிவு செய்துள்ளது. 12 பேர் கொண்ட இக் குழுவின் தலைவராக முன்னாள் மேற்கிந்திய கப்டன் கிளைவ் லொயிட் உள்ளார். தற்போது நடைமுறையிலுள்ள 50 ஓவர்களை 40 ஆகக் குறைக்க ஐ.சி.சி. ஆலோசித்து வருகிறது. இதன் மூலம் 25 ஓவர் முதல் 40 ஓவர் வரை உள்ள மந்த நிலையை மாற்ற முடியும். தவிர “ருவென்ரி20” போட்டிகளைப் போல துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டிற்கும் சாதகமான சூழ்நிலை உருவாகும்.

ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் அதிகபட்சமாக 10 ஓவர் மட்டுமே வீச முடியும். இதனை மாற்றம் செய்து இரண்டு பந்துவீச்சாளர்கள் மட்டும் தலா 12 ஓவர்களை வீச அனுமதி வழங்க முடிவு செய்யப்படவுள்ளது. அடுத்த இரண்டு பந்துவீச்சாளர்களுக்குத் தலா 10 ஓவர்களும் ஐந்தாவது பந்துவீச்சாளர் 6 ஓவர் மட்டுமே வீச முடியும்.

இதன் மூலம் திறமையான பந்துவீச்சாளர்களை அணியின் கப்டன்கள் கூடுதலாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் 25 ஓவர்களுக்கு ஒருமுறை புதிய பந்தைப் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.சி.சி. கிரிக்கெட் குழு எடுத்துள்ள இம் முடிவுகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட அதிக வாய்ப்புகளுள்ளது.

இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க வடக்கில் விசேட ஏற்பாடுகள்

vote.jpgஜனாதிபதித் தேர்தலில் வடக்கில் மீளக் குடியமர்த்தப்பட்ட மற்றும் நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக விசேட ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. இதற்கமைய 20 விசேட வாக்குச் சாவடிகளும் கொத்தணி வாக்குச் சாவடிகளும் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னார், முல்லைத்தீவு, வவு னியா மாவட்டங்களிலுள்ள வாக்கா ளர்களின் பெயர்ப்பட்டியல்களை அந் தந்த பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் ஊடாக பார்வைக்கு வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட வுள்ளன. முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களின் தேர்தல் நட வடிக்கைகள் குறித்து ஆராயவென நேற்று வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தலைமையில் விசேட கூட்டமொ ன்று நடைபெற்றது.

நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்க ளுக்கு தற்காலிக ஆளடையாள அட்டையை பெற்றுக்கொடுப்பதற்கு ஏதுவாக ஆட்பதிவு திணைக்கள த்தின் அதிகாரிகள், தேர்தல் ஆணை யாளர் அலுவலக அதிகாரிகள், மாவ ட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் பலரும் இந்த விசேட கூட்டத்தில் கலந்துகொண்டனர். துணுக்காய், மல்லாவி, ஜயபுரம், முழங்காவில் மற்றும் மன்னார் மாவட்டங்களில் மீளக்குடியமர்த் தப்பட்ட பகுதி மக்களுக்கு சுமார் 20 வாக்குச் சாவடிகள் அமைக்க வேண்டும் என்ற ஆலோசனையும் இக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக சரணடைந்தவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படும் நிலையங்க ளுக்கு வெளியேயும், நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்களுக்கு வாக்க ளிக்கும் விதத்தில் நிவாரணக் கிரா மங்களுக்கு வெளியேயும் கொத்தணி முறையிலான வாக்குச் சாவடிகள் அமைப்பது எனவும் முடிவு செய் யப்பட்டது. அத்துடன் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படும் அரச ஊழியர்களின் விபரங்களை சேகரிப்பது தொடர் பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தபால் மூல வாக் காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என தேர் தல் திணைக்களம் அறிவித்துள்ளது. தபால் மூலம் வாக்களிக்க இருப்பவர்கள் முடியுமானவரை குறிப்பி ட்ட 17ஆம் திகதிக்கு முன்னதாக நேரகாலத்துடன் விண்ணப்பிக்குமாறு தேர்தல் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வாகன இறக்குமதியாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இலகுபடுத்த நடவடிக்கை

வெளிநாடு களிலிருந்து வாகனம் இறக்குமதி செய்வோர் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை இலகுபடுத்தவும் அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வாகன இறக்குமதியாளர்களுடனான சந்திப்பொன்று நேற்று அலரிமாளிகையில் நடைபெற்ற போது அவர்களின் பிரச்சினைகளுக்குச் செவிமடுத்த ஜனாதிபதி இவ்வாறு பதிலளித்தார்.

வாகன இறக்குமதியாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை ஆராயும் வகையில் நாம் ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளதுடன், அங்கு முறைபாடுகளை செய்யக்கூடிய வசதிகளையும் நாம் ஏற்படுத்திக் கொடுத்திருந்தோம். சகல பிரச்சினைகளுக்கும் இப்போது தீர்வு காணப்பட்டு வருகின்றன. இந்த வகையில் வாகனம் இறக்குமதி நடவடிக்கையில் முகங்கொடுக்க நேரும் பிரச்சினைகளிலும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

அதற்கிணங்க அவர்களுக்கு நிவாரணமொன்றை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். வாகன இறக்குமதிக்கான சுங்கவரி அதிகரிக்கப் பட்டுள்ளதாகவும் புதிய வாகனங்களுக்கும் பாவி த்த வாகனங்களுக்கும் ஒரே விதமாக வரி அறவிடப்பட்டு வருவதாகவும் இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டனர். கடந்த காலங்களைப் போன்று தொடர்ந்தும் ஜனாதிபதிக்கே தமது முழுமையான ஆதரவினை வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.

ஆளும் கட்சி அமைச்சர் எம்.எம். முஸ்தபா ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனமாக போட்டியிடத் தீர்மானம்?

ballot-muthaffa.jpgஆளும் கட்சியைச் சேர்ந்த பிரதி அமைச்சர் ஒருவர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனமாக போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. உயர் கல்வி பிரதி அமைச்சர் எம்.எம். முஸ்தபா சுயாதீனமாக தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
எதிர்வரும் திங்கட்கிழமை இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த மாதம் 17ம் திகதி வரையிலேயே ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள நிலையில் விரைவில் அவர் தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
உயர்கல்வி பிரதி அமைச்சராக தாம் நியமிக்கப்பட்ட போதிலும் எவ்விதமாக சேவையும் தம்மால் மக்களுக்கு ஆற்ற முடியவில்லை என அவர் விசனம் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் வலியுறுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.