கடற் படையினரால் கைப்பற்றப்பட்ட புலிகளுக்குச் சொந்தமான பிரின்ஸஸ் கிரிஸான்டா என்ற கப்பல் பொதுமக்களின் பார்வைக்காக இன்று முதல் எதிர்வரும் 31ம் திகதி வரை காலி துறைமுகத்தில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.
புலிகளின் கப்பலுடன் கடற்படைக்குச் சொந்தமான ‘சயுர’ என்ற கரையோர ரோந்து கப்பலும் பொதுமக்களின் பார்வைக்காக காலி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் அதுல செனரத் தெரிவித்தார்.
காலியில் நடைபெறும் சீசன் – 2009 கண்காட்சியிலேயே இந்தக் கப்பல் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. அத்துடன் கொழும்பிலுள்ள பொதுமக்கள் இந்தக் கப்பலை காண்பதற்காக கொழும்பு காலி முகத்திடலில் கப்பல் நேற்றுக் காலை தொடக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.