இந்தியா இலங்கை அணிகளுக்கிடையிலான ஒரு நாள் ஆட்டத் தொடரின் இறுதியாட்டம் பாதியில் கைவிடப்பட்டுள்ளது. தில்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தின் ஆடுகளம் விளையாட்டைத் தொடருவதற்குரிய நிலையில் இல்லை என்று தீர்மானிக்கப்பட்டதை அடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது.
களத்தின் மோசமான எகிறும் தன்மையால் விளையாட்டு வீரர்களுக்கு அடிபடலாம் என்பதன் காரணமாக இந்த ஆட்டத்தை அத்தோடு நிறுத்திக்கொள்வதாக இந்த ஆட்டத்திற்கான ஐ.சி.சி. பிரதிநிதியான ஆஸ்திரேலியாவின் அலன் ஹர்ஸ்ட் அறிவித்துள்ளார்.
ஆட்டம் கைவிடப்படவேண்டி வந்தது குறித்து தில்லி கிரிக்கெட் சங்கத்தினர் பார்வையாளர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளனர். கட்டணம் செலுத்தி ஆட்டத்தைக் காணவந்தவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்படும் என்றும் அவர்கள் வாக்குறுதி வழங்கினர்.
தில்லி மைதானத்தின் விக்கெட் கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்தது என்றாலும் கடந்த சாம்பியன்ஸ் லீக் போட்டிகளின்போதும், ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரின்போதும் இந்தக் களத்தில் பந்து போதிய அளவு எகிறவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்திருந்தன. அதன் எதிரொலியாக பனிக்காலத்து புற்கள் இந்த ஆட்டத்திற்காக ஆடுகளத்தில் பதியப்பட்டிருந்தன. ஆனால் அது களத்தின் எகிறும் தன்மையை மேலும் மோசமாக்கிவிட்டுள்ளது.
Sri Lanka in India ODI Series – 5th ODI
India v Sri Lanka
No result
ODI no. 2936 | 2009/10 season
Played at Feroz Shah Kotla, Delhi
27 December 2009 (50-over match)
Sri Lanka innings (50 overs maximum)
WU Tharanga b Khan 0
TM Dilshan c †Dhoni b Khan 20
ST Jayasuriya lbw b Harbhajan Singh 31
KC Sangakkara*† c Raina b Tyagi 1
TT Samaraweera run out (Raina) 2
SHT Kandamby not out 12
M Pushpakumara not out 7
Extras (lb 1, w 8, nb 1) 10
Total (5 wickets; 23.3 overs; 125 mins) 83 (3.53 runs per over)
Did not bat NLTC Perera, S Randiv, RAS Lakmal, UWMBCA Welegedara
Fall of wickets1-0 (Tharanga, 0.1 ov), 2-39 (Dilshan, 10.5 ov), 3-58 (Sangakkara, 15.1 ov), 4-60 (Jayasuriya, 16.4 ov), 5-63 (Samaraweera, 17.6 ov)
Bowling
Z Khan 8 1 31 2
A Nehra 5 0 24 0
S Tyagi 6.3 1 15 1
Harbhajan Singh 4 0 12 1
India team
V Sehwag, G Gambhir, KD Karthik, V Kohli, MS Dhoni*†, SK Raina, RA Jadeja, Harbhajan Singh, Z Khan, A Nehra, S Tyagi
Match details
Toss India, who chose to field
Series India won the 5-match series 3-1