27

27

பிரபாகரன் பேனர் அகற்றம் – 6 பேர் தீக்குளிக்க முயற்சி

tamilnadu.jpgபுதுக் கோட்டை அருகே விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பேனர்களை அகற்ற போலீசார் முயற்சி செய்ததால் 6 பேர் தீக்குளிக்க முயன்றனர்.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வடகாடு பகுதியில் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் சார்பில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் இயக்குநர் மணிவண்ணன், காளிமுத்து, வழக்கறிஞர் புரட்சி கவிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்பதாக இருந்தது. இந்த நிலையில் அந்த பகுதி முழுவதும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உருவம் பொறித்த படத்தை டிஜிட்டல் பேனர்களாக வைத்திருந்தனர். தகவல் அறிந்த எஸ்.பி மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த டிஜிட்டல் பேனர்களை அகற்ற முன்றனர்.

இதற்கு கூட்டத்த்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், விஜய், கோபி, சரவணன், திருப்பதி, ஆனந்த் உள்ளிட்ட 6 பேர் திடீரன உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் தீக்குளிப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

வேலை இழந்து நாடு திரும்பிய 20,000 இந்தியர்கள்

rajya-sabha.jpgவெளி நாடுகளில் வேலை செய்து வந்த சுமார் 20,000 இந்தியர்கள், உலக பொருளாதார வீழ்ச்சி காரணமாக வேலை இழந்து நாடு திரும்பியுள்ளனர்.பணிக்கான விசா காலத்தைப் புதுப்பிக்க மறுத்துவிட்ட நிறுவனங்கள், அனைவரையும திருப்பி அனுப்பிவிட்டனவாம். இத் தகவலை, வெளிநாடு வாழ் இந்தியர் நலத் துறை அமைச்சர் வயலார் ரவி ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது தெரிவித்தார்.

அவர் கூறுகையில்,  இப்போது நாடு திரும்பியுள்ளோர் அனைவரின் விசாக்களை அவர்கள் பணியாற்றிய நிறுவனங்கள் புதுப்பிக்காமல் விட்டுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த விஷயத்தில் நாம் எதுவும் செய்வதற்கில்லை. பல நாடுகளில் நிலைமை மோசமாக உள்ளதால் நாடு திரும்புவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

இலங்கைக்கு மனிதாபிமான உதவி செய்யத்தயார்: பிரான்ஸ்

_dr-bernard-kouchner.jpgஇலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு தயார் என பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் பெர்னாட் கோச்சுனர் தெரிவித்துள்ளார். வன்னியில் இடம்பெற்று வரும் யுத்த நிலவரங்களால் பிரான்ஸ் அரசாங்கம் பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் யுத்த நிலவரம் குறித்து வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவிடம் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்திய போது பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தில் பொதுமக்கள் சிக்குண்டு இருப்பதாகவும், உடனடியாக பொதுமக்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் இடம்பெறுவது விடுதலைப் போரல்ல. பயங்கரவாதமே -ஜனாதிபதி விளக்கம்

mahi.jpgஇலங்கையின் வடக்கில் இடம்பெறுவது விடுதலைப் போராட்டமல்ல. ஒரு தீவிரவாதி தனது கனவை நனவாக்க அப்பாவிப் பொதுமக்களையும் சிறுவர்களையும் பணயம் வைத்து மேற்கொண்ட பயங்கரவாதப் போராட்டமே என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேபாள வெளிவிவகார அமைச்சர் உபேந்திரா யாதேவிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நேபாள வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினர் நேற்றுக் காலை ஜனாதிபதியை அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி நேபாள இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தார்.

பொதுமக்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவதோடு சிறுவர்களின் கல்வியை இருளில் தள்ளி வெற்றி பெறக்கூடிய விடுதலை எதுவும் கிடையாதென இச்சந்திப்பின்போது சுட்டிக்காட்டிய நேபாள வெளிவிவகார அமைச்சர், புலிகள் சிறுவர்களை மோதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருவதனையிட்டு தனது அதிருப்தியைத் தெரிவித்தார்

முல்லைத்தீவிலிருந்து செவ்வாய் இரவு கப்பலில் திருமலைக்கு அழைத்து வரப்பட்டோர் விபரம். நேற்றைய தொடர்ச்சி……

vanni-injured.gifநேற்றைய தொடர்ச்சி……
233. சத்தியன்குமார், பூநகர், கிளிநொச்சி, (வயது 54),
234. ஜெதுஅம்மா, கிளிநொச்சி, (வயது 80),
235. குமரன், 236. குமரன், மாதலை, முல்லைத்தீவு, (வயது 08),
237. பெயர்தரப்படவில்லை,
238. பிரிசிலியா, மாத்தளன், (வயது 73),
239. ரி. நாகேஸ்வரி, வட்டக்கச்சி, (வயது 63),
240. றொபர்ட், முல்லைத்தீவு, (வயது 12),
241. ஆர். விவேகானந்தராசா, வவுனியா, (வயது 46),
242. எம். தர்சனி, கிளிநொச்சி, (வயது 07),
243. பரம்சோதி, கிளிநொச்சி, (வயது 43),
244. எஸ். பார்த்திமா, முல்லியவளை, உடையார்கட்டு, (வயது 61),
245. ஆர். லெட்சுமி, ராமநாதபுரம், கிளிநொச்சி, (வயது 68),
246. ஜே. கணேஷ், கிளிநொச்சி, (வயது 70),
247. எஸ். தவம், வெள்ளவராயன்கட்டு, (வயது 32),
248. சங்கீஸ்வரி, யாழ்ப்பாணம், (வயது 24)),
249. அளகிதன், யாழ்ப்பாணம், (வயது 1.5),
250. எஸ். ரஞ்சினி, மாங்குளம், (வயது 24),
251. கபிதன், மாங்குளம், (24 நாள்),
252. ஏ. அந்தனிப்பிள்ளை, கிளிநொச்சி, (வயது 74),
253. ஏ.தவராசா, யோகபுரம், முல்லியவளை,
254. ஆர். கந்தையா, இராமநாதபுரம், கிளிநொச்சி, (வயது 75),
255. செந்தூரன், கிளிநொச்சி, (வயது 21),
256. கே. மங்களேஸ்வரி, யோகபுரம், (வயது 57).
257. என். குருகுலசிங்கம், ஒட்டுசுட்டான், (வயது 61),
258. கே. விக்னேஸ்வரராஜா, உடையார்கட்டு, கிளிநொச்சி, (வயது 36),
259. எஸ். இராஜேஸ்வரி, யாழ்ப்பாணம், (வயது 62),
260. பத்மலோஜினி, கிளிநொச்சி, (வயது 60),
261. அப்பாத்துரை, முல்லைத்தீவு, (வயது 66),
262. பேபிகமலா, வவுனிக்குளம், முல்லைத்தீவு, (வயது 61),
263. பி. நந்தகுமார், முல்லைத்தீவு, (வயது 48),
264. ஜே. சரூஜன், கிளிநொச்சி, (வயது 01),
265. ஜெயானி, கிளிநொச்சி, (வயது 25),
266. முருகேசு, யாழ்ப்பாணம், (வயது 42),
267. ரி. தயானந்தன், யாழ்ப்பாணம், (வயது 55),
268. செல்வநாயகமூர்த்தி, யாழ்ப்பாணம், (வயது 60),
269. கமலாதேவி, முல்லைத்தீவு, (வயது 71),
270. பி. ஆறுமுகம், முல்லைத்தீவு, (வயது 74),
271. எஸ். செபஸ்தியன், உடையார்கட்டு, (வயது 66),
272. எஸ். ஆறுமுகம், கிளிநொச்சி, (வயது 64),
273. என். நாகேஸ்வரி, முல்லைத்தீவு, (வயது 60),
274. திஷாந்தினி, கிளிநொச்சி, (வயது 41),
275. டிலாக்ஷினி, கிளிநொச்சி, (வயது 41),
276. ரி. சரவணமுத்து, மன்னார், (வயது 69).
277. எஸ். மனோன்மணி, மன்னார், (வயது 61).
278. பி. அருள்தாஸ், முல்லைத்தீவு, (வயது 13),
279. எம். தங்கம்மா, முல்லைத்தீவு, (வயது 17),
280. எம். அழகம்மா, முல்லைத்தீவு, (வயது 47),
281. எஸ். மொடிஸன், முல்லைத்தீவு, (வயது 10),
282. விதுஷா, (வயது 08),
283. அருளானந்தம், முல்லைத்தீவு, (வயது 85),
284. வி. தனுஷா, (வயது 02).
285. வி.தர்மலட்சுமி, முல்லைத்தீவு, (வயது 65),
286. வாசுகி, கிளிநொச்சி, (வயது 44),
287. ஏ.ராமசாமி, கிளிநொச்சி, (வயது 64),
288. கே. பூச்சோலை, முல்லைத்தீவு, (வயது 56),
289. புஷ்பராணி, முல்லைத்தீவு, (வயது57),
290. வை. அபிநயா, கிளிநொச்சி, (வயது 08),
291. எம். சாந்தகுமாரி, கிளிநொச்சி, (வயது 34),
292. எம். சத்யா, கிளிநொச்சி, (வயது 01),
293. ஏ. மகேஸ்வரி, முல்லைத்தீவு, (வயது 72),
294. வை. யமுனாயினி, கிளிநொச்சி, (வயது 30),
295. ஆர். யாகம்மா, யாழ்ப்பாணம், (வயது 60),
296. எஸ். சரஸ்வதி, முல்லைத்தீவு, (வயது 57),
297. ஆர்.கிருஸ்ணசாமி, முல்லைத்தீவு, (வயது 68),
298. ஜே. ஜேமிஸ், கிளிநொச்சி, (வயது 82),
299. எஸ். சுனிதா, கிளிநொச்சி, (வயது 29),
300. எஸ். கோபிதா, கிளிநொச்சி, (வயது 10),
301. எஸ். மகாலட்சுமி, யாழ்ப்பாணம், (வயது 52),
302. தர்ஷன், மன்னார், (வயது 10),
303. ரேணுகா, கிளிநொச்சி, (வயது 42),
304. மலர், கிளிநொச்சி, (வயது 02),
305. கலாஜோதி, மன்னார், (வயது 39),
306. அபிஷேக், மன்னார், (வயது 1.6),
307. எஸ். அன்ரனிதாஜ், யோகபுரம், மல்லாவி, (வயது 79),
308. சோதி, மட்டுவில், (வயது 60),
309. கே. மார்க்கண்டன், முல்லைத்தீவு, (வயது 66),
310. வள்ளிப்பிள்ளை, பொக்கணை, (வயது 61),
311. கஜேந்தினி, தர்மபுரம், (வயது 21),
312. ஜே. ராசமணி, திருநகர், கிளிநொச்சி, (வயது 78),
313. சுகித்ரா, ஜோகபுரம், மல்லாவி, (வயது 26),
314. மலரினியன், ஜோகபுரம், மல்லாவி, (வயது 1.5),
315. ஏ. தர்ஷணி, முல்லைத்தீவு, (வயது 29),
316. ஏ. அந்தோனி, முல்லைத்தீவு, (வயது 02),
317. அருள்ஞானக்குஞ்சி, முல்லைத்தீவு, (வயது 33),
318. அபினயா, முல்லைத்தீவு, (வயது 07),
319. அபிஷா, முல்லைத்தீவு, (வயது 02),
320. அருண், முல்லைத்தீவு (வயது 08),
321. எமில்டா, முல்லைத்தீவு, (வயது 07)
322. பி. செல்வநாயகம், ஆண்டாங்குளம், அடம்பன், (வயது 29),
323. எஸ். செல்லன், கதிர்காமர், யோகபுரம், (வயது 49),
324. எம். கௌஷா, முல்லைத்தீவு, (வயது 28),
325. கிருத்திகா, முல்லைத்தீவு, (வயது 02),
326. சாரதாம்பாள், யாழ்ப்பாணம், (வயது 67),
327. எம். இராசம்மா, முல்லைத்தீவு, (வயது 80),
328. எஸ். டிலுக்ஷன், மானிப்பாய், (வயது 13),
329. முத்தம்மா, முழங்காவில், மன்னார், (வயது 75),
330. செல்வநாயகி, யாழ்ப்பாணம், (வயது 62),
331. பிரதீஷன், புதுக்குடியிருப்பு, (வயது 25),
332. செல்வரத்தினம், யாழ்ப்பாணம், (வயது 75),
333. எஸ். கமலாம்பிகை, வட்டக்கச்சி, (வயது 65),
334. ஜே. மேரி யோசபைன், கிளிநொச்சி, (வயது 73),
335. தேவநாயகபிள்ளை, பொக்கணை, (வயது 74),
336. எஸ். தயாத்ரியன், மல்லாவி, (வயது 06),
307. ஆச்சிமுத்து, மல்லாவி, (வயது 74),
338. செல்லம்மா, தாலியங்குளம், (வயது 79),
339. அகஸ்டின், கிளிநொச்சி, (வயது 63),
340. சோதிராசா, அரியாலை, யாழ்ப்பாணம், (வயது 67),
341. தம்பிராசா, மல்லாவி, (வயது 76),
342. வில்லுதேவன், மன்னார், (வயது 74),
343. மயூரதி, யாழ்ப்பாணம், (வயது 28),
344. நரசிங்கம், வேலணை, (வயது 76),
345. கே. நந்தகுமார், வவுனிக்குளம், (வயது 56),
346. பெயர் தரப்படவில்லை,
347. பி.லட்சுமி, கந்தனை, (வயது77),
348. கே. அரள்மணி, புதுக்குடியிருப்பு, (வயது 58),
349. சுபாஜினி, மருதங்கேணி, (வயது 32),
350. மோஹனதாஸ், கிளிநொச்சி, (வயது 32),
351. தேவராணி, மருதங்கேணி, (வயது 51),
352. பெயர் தரப்படவில்லை. 353. சுபத்ரா, முல்லைத்தீவு, (வயது 06),
354. என். நவமலசேகரி, முல்லைத்தீவு, (வயது 38),
355. என். அபிஷேக், முல்லைத்தீவு, (வயது 10),
356. ஏ. இராசேந்திரன், கிளிநொச்சி, (வயது 49),
357. அமராவதி, கிளிநொச்சி, (வயது 73),
358. ஹெலன் மேரி, இரணைபாலை, (வயது 38),
359. என். கமலேஸ்வரி, இரணைபாலை, (வயது 59),
360. கிரிஷாந்தினி, ஆண்டான்குளம், (வயது 08),
361. ஜெயலெட்சுமி, ஆண்டான்குளம், (வயது 30),
362. விதுஷன், ஆண்டான்குளம், (வயது 03),
363. விதுஷியா, ஆண்டான்குளம், (வயது 01),
364. என். நவமலசேகரி, கிளிநொச்சி, (வயது 41),
365. எஸ். பவிஷாத், கிளிநொச்சி, (வயது 25),
366. கே. பிரஷாந், முல்லைத்தீவு, (வயது 02),
367. ஜதுஷா, முல்லைத்தீவு, (வயது 08 1/2),
368. எஸ். குணசீலன், முல்லைத்தீவு, (வயது 29),
369. எஸ். குகணேஸ்வரி, விஸ்வமடு, (வயது 63),
370. இ. பாலமணி, விஸ்வமடு, (வயது 66),
371. கே. சூரியகுமார், புதுக்குடியிருப்பு, (வயது 40),
372. கந்தையா, யாழ்ப்பாணம், (வயது 75),
373. ரி. சந்திரலதா, மாங்குளம், (வயது 90),
374. கேதுஜா, மாங்குளம், (வயது 10)),
375. சிவக்கொளுந்து, மாங்குளம், (வயது 84),
376. எஸ். தர்மராஜா, மாங்குளம், (வயது 46),
377. சங்கவி, மாங்குளம், (வயது 04),
378. பார்வதி, அக்கராயன்குளம், (வயது 48),
379. புஷ்பராணி, புதுக்குடியிருப்பு, (வயது 56),
380. அன்ரன் யோசப், வவுனியா, (வயது 50),
381. ரி. சின்னத்தம்பி, வட்டக்கச்சி, (வயது 81),
382. எஸ். ஜனனி, முல்லைத்தீவு, (வயது 34),
383. றோஸரி, முல்லைத்தீவு, (வயது 06),
384. சரோஜன், முல்லைத்தீவு, (வயது 04),
385. வினோஜா, கிளிநொச்சி, (வயது 28),
386. வினோஜன், கிளிநொச்சி, (வயது 3.1/2),
 

சிறுவர்களைப் புலிகளிடமிருந்து காப்பதில் அரசு கரிசனை- ஜனாதிபதி

mahinda.jpgநாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து மீட்பதோடு சிறுவர்களைப் புலிகளிடமிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் முனைப்புடன் ஈடுபட்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சிறுவர்களைப் படையில் சேர்த்துக் கொள்வதற்கு எதிரான தேசிய இயக்கமொன்று நேற்றுக் கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யுனிசெப் அமைப்பின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள இச்செயற்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில், எமது அரசாங்கத்துக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஓர் இயக்கத்தினால் தோற்றுவிக்கப்பட்ட சிறுவர் படைக்கு எதிராக இன்று நாமே எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எமது சமூகத்தைச் சீரழிந்து வந்த கொடிய பயங்கரவாதத்திலிருந்து எமது பிள்ளைகளை மீட்பது மிக முக்கியமாகும்.

சிறுவர்களை படையில் சேர்த்துக்கொள்வதை நிறுத்துமாறு சர்வதேச சமூகம் விடுத்த வேண்டுகோளை புலிகள் நிராகரித்தனர். உத்தியோகபூர்வ புள்ளி விபரங்களின்படி கடந்த 2003ஆம் ஆண்டுக்கு முன்னர் புலிகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்டோரில் 60 வீதமானோர் 18 வயதுக்குக் குறைந்தவர்களாகவே காணப்பட்டனர். அதாவது 14000 பேரில் 8500 பேர் சிறுவர்களாவர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் புலிகளால் பலவந்தமாக சேர்த்துக்கொள்ளப்பட்ட 6288 பேரும் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் என்றும் அவர்களுள் 3809 சிறுவர்களும் 2478 சிறுமியர்களும் காணப்பட்டதாகவும் அந்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்செயற்திட்டம் எப்போதோ ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் காலங்கடந்தாவது இதனைச் செய்துள்ளோம். இது எமது எதிர்கால பரம்பரையான சிறுவர்களுக்காக நாம் மேற்கொள்ள வேண்டிய முக்கியமானதொரு பணியாகும். அவர்களுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய நாம் எந்நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். சிறுவர்கள் படையில் சேர்த்துக் கொள்ளப்படுவதைத் தடுப்பதோடு, ஏற்கனவே சேர்த்துக்கொள்ளப்பட்ட சிறுவர்களை விடுவிப்பதற்குமான பணிகளை இந்த இயக்கம் முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கென 3 ஆயிரம் தற்காலிக வீடுகளை அமைக்க திட்டம்

navy_rg.jpgவன்னியி லிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு செட்டிகுளம் மெனிக்பாம் பிரதேசத்தில் தற்காலிக மூவாயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்க ஐக்கிய நாடுகள் அகதிகளுக்குரிய உயர்ஸ்தானிகர் காரியாலயம் முன்வந்துள்ளது. இந்த வீடுகளில், இடம்பெயர்ந்து வரும் மக்கள் தனித்தனி குடும்பங்களாக தங்கவைக்கப்படுவர். கடந்த ஞாயிறு வவுனியா மாவட்ட செயலக மண்டபத்தில் மீள்குடியேற்ற அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட மகாநாட்டில் இந்த விடயம் ஆராயப்பட்டது.

அத்துடன், மேலும் அதே இடத்தில் 200 ஏக்கர் நிலம் துப்புரவு செய்யப்பட்டு இதே போன்றதொரு திட்டத்தை அமுல்படுத்தும் ஆலோசனையும் இங்கு முன்வைக்கப்பட்டது. அமைக்கப்படவுள்ள தற்காலிக வீடுகள் குறைந்த செலவில் ஏற்படுத்தப்படும். இடம்பெயர்ந்து வந்தவர்கள் தற்போது 13 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். மேலும், 70 ஆயிரம் மக்கள் வவுனியா வருவார்கள் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். வந்துள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து நாம் அடிக்கடி அதிகாரிகளுடன் கலந்துரையாடலை நடத்திவருகின்றோம். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள வவுனியா நலன்புரிநிலையங்களுக்கு உணவு விநியோகத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 31 ஆயிரம் மக்களுக்கு சமைத்த உணவே வழங்கப்பட்டு வந்தது.

சில அசௌகரியங்களைத் தொடர்ந்து 100 பேரைக் கொண்ட ஒவ்வொரு குழுவினரை அமைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு அவர்களே உணவு தயாரிப்பதற்கான திட்டம் நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. உலக உணவு தாபனம் உலருணவுப் பொருட்களை வழங்கியுள்ளது. சில அரச சார்பற்ற நிறுவனங்கள் சமையல் பாத்திரங்களையும் சமையலுக்குரிய கொட்டகைகளையும் ஏனைய உப உணவு பொருட்களையும் வழங்கியுள்ளதாக மகாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இலங்கைக்கு மருத்துவக் குழுக்களை அனுப்புகிறது இந்தியா

vanni-injured.gifஇலங்கை யில் போரினால் காயமடைந்த பொதுமக்களுக்கு உதவ, மருத்துவக் குழுக்களையும், தேவையான மருந்து மற்றும் உபகரணங்களையும் உடனடியாக அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஷ் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இத் தகவலைத் தெரிவித்துள்ளார் என பி.பி.ஸி. தமிழோசை செய்தி வெளியிட்டிருந்தது. 

இலங்கையின் வடக்கே போர் பகுதியில் சிக்கிக் கொண்டிருக்கும் பொதுமக்களை மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு வரும் நடைமுறைகளுக்கும் உதவத் தயாராக இருப்பதாக இந்தியா ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தது.

அவர்களுக்குத் தேவையான மனிதாபிமான மற்றும் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றத் தயாராக இருப்பதாகவும் இந்தியா கூறியிருந்தது. அதுதொடர்பான நடைமுறைகள் குறித்து இலங்கை அரசுடன் விவாதித்ததாக இந்திய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் அவசர மருத்துவத் தேவைகளை நிறைவேற்ற இரு நாட்டு அரசுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்தியா உடனடியாக அவசரகால மருத்துவக் குழுவை உடனடியாக இலங்கைக்கு அனுப்ப உள்ளது. அந்த மருத்துவக் குழுவில், மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் துணைப் பணியாளர்கள் இடம்பெற்றிருப்பார்கள்.

அத்துடன், தேவையான மருத்துவ உபகரணங்களும், மருந்துகளும் இருக்கும். தேவையைப் பொறுத்து, அது மேலும் அதிகரிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு நடவடிக்கைகளிலும் இலங்கை அரசுடன் இந்தியா இணைந்து செயல்படும் என்றும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பிபிசி உலக சேவையின் சில பிரிவுகள் வேலை நிறுத்தம்

bbc.gifபிபிசி உலக சேவையின் தெற்காசிய பிரிவின் சில சேவைகளைச் சேர்ந்தவர்கள் அவற்றின் ஆசிரிய பீட பணிகளை இந்திய துணைக்கண்டத்துக்கு மாற்றும் திட்டத்தை எதிர்த்து இன்று 24 மணி நேர வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர்.

ஹிந்தி சேவையின் முழுவதையும் இந்தியாவுக்கும், லண்டனில் இயங்கும் உருது மற்றும் நேபாள சேவைகளில் ஒரு பகுதியை முறையே இஸ்லாமாபாத் மற்றும் காத்மண்டு ஆகிய இடங்களுக்கும் மாற்றுவது, அந்தச் சேவைகளின் ஊடக சுதந்திரத்துக்கு பாதகமாக அமையும் என்று போராட்டத்தில் ஈடுபடும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள். இந்த மாற்றம் அந்த சேவையின் ஊழியர்களின் பணி நிலைமை மற்றும் ஊதியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்களுக்கான தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

ஆனால், இந்தத் திட்டம் உலக சேவையை அதனது நேயர்களுக்கு அருகில் கொண்டு செல்லும் என்று பிபிசி முகாமையாளர்கள் கூறுகிறார்கள்.

வங்கதேச கலகக்காரர்கள் சரணடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது

buyinfromreuters.jpgவங்கதேச டாக்கா நகரில் கலவரம் நடத்திய படையினர் சரணடைந்துவிட்டதாக வங்கதேச அரசு அறிவித்துள்ளது என பி.பி.ஸி. தமிழோசை செய்தி வெளியிட்டிருந்தது.  .

இருந்த போதிலும் சுமார் 130 அதிகாரிகளை காணவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இவர்களில் சிலர் கலகக்காரர்களால் கொல்லப்பட்டிருக்கக் கூடும். கலவரத்தை முறியடிக்க கொண்டுவரப்பட்ட இராணுவத்துடன், பொதுமக்களும் சேர்ந்து, தெருக்களில் கூடி, இந்த நெருக்கடி தீர்ந்ததை கொண்டாடினார்கள்.

ஆயுதங்களைக் களையும் கலவரகக்காரர்களுக்கு பகிரங்க மன்னிப்பு வழங்குவதாக உறுதியளித்த பிரதமர் ஷேக் ஹசீனா, அதனைச் செய்யாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். தமது ஊதியம் மற்றும் பணி நிலைமை குறித்து விசனம் தெரிவித்து, நேற்று கலவரம் செய்த டாக்கா எல்லைக்காவல் படையினரின் தலைமையகத்தை சுற்றி 14 யுத்த தாங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.