22

22

சேனைப்பயிர்ச் செய்கை விவசாயிகள்மீது புலிகள் துப்பாக்கிச்சூடு- 14 பேர் மரணம்

uthaya_nanayakara_.jpgஅம்பாறை இங்கினியாங்கலை ரத்மல்கம பிரதேசத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள்மீது புலிகளால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட 12 பேர் மரணமானதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து அந்த பிரதேசத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்தத் தாக்குதலினை தோல்வியின் விளிம்பில் விரத்தியடைந்துள்ள புலிப்பயங்கரவாதிகளே மேற்கொண்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.  

வரலாறு படைப்பாரா ரஹ்மான்?

ar-rhman.jpgஉலகப் புகழ் பெற்ற ஆஸ்கர் விருது விழா இன்றிரவு நடைபெறும் நிலையில், இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஆஸ்கர் விருதை வென்று புதிய வரலாறு படைப்பாரா எனும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘ஸ்லம்டாக் மில்லினர்’ திரைப்படம் சர்வதேச அளவில் விருதுகளை வென்றுள்ளது. கோல்டன் குளோப் விருது உட்பட பல்வேறு விருதுகளை இந்தப்படமும், ஏ.ஆர்.ரஹ்மானும் வென்றுள்ளனர்.
.
ஆஸ்கர் விருதுக்காக 10 பிரிவில் இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 3 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஹாலிவுட்டின் மதிப்புமிகு விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்றிரவு கோலாகலமாக நடைபெறுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த விருதை வென்று வரலாறு படைக்க வேண்டும் என்று இந்திய திரைப்பட ரசிகர்கள் ஆர்வத்தோடும், நம்பிக்கையோடும் காத்திருக்கின்றனர்.

கட்டுநாயக்காவில் சுட்டு வீழ்த்திய விமான விமானியின் சடலம் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில்

041.jpgவிடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று கட்டுநாயக்காவில் விமானப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தையடுத்து, அந்த விமானம் விழுந்த இடத்திற்கு நேற்று சனிக்கிழமை நீர்கொழும்பு நீதிவான் ஜயகிடி அல்விஸ் சென்று விசாரணை நடத்தினார்.  கட்டுநாயக்க விமான நிலையத்துக்கும் கட்டுநாயக்க ரயில் நிலையத்துக்கும் இடையில் வெள்ளிக்கிழமை இரவு இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த விமானம் விழுந்த இடத்தில் இறந்து கிடந்த விமானியின் சடலத்தை நீர்கொழும்பு நீதிவான் பார்வையிட்டார். இச்சம்பவம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

வெள்ளை நிறத்திலான விமானியின் சடலம் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் வெள்ளிக்கிழமை இரவு வந்த விடுதலைப்புலிகளின் இரு விமானங்களில் ஒன்றை விமானப்படையினர் கட்டுநாயக்காவில் சுட்டுவீழ்த்தியதாக விமானப்படையினர் தெரிவித்தனர்.

இலங்கை இறைவரித்திணைக்கள கட்டிடத்தின்  மோதுண்ட விமான சிதைவுகள்

ltte-2nd-fight-03.jpg

ltte-2nd-fight-01.jpg

ltte-2nd-fight-02.jpg

புகைப்படங்கள் www.lankadeepa.lk,   இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டவை.

பொதுமக்கள் பாதுகாப்பு அதிக கரிசனைக்குரிய விடயம் ஜோன் ஹோம்ஸுடனான சந்திப்பில் ஜனாதிபதி ராஜபக்ஷ

holmes-rajapakse.jpgவிடுதலைப் புலிகள் மனிதக் கேடயமாக வைத்திருக்கும் பொதுமக்களின் பாதுகாப்பே தமது கரிசனைக்குரிய விடயம் என்றும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சகல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதி செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜோன் ஹோம்ஸ் நேற்று சனிக்கிழமை காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

வவுனியாவுக்கு நேற்று முன்தினம் சென்று இடம்பெயர்ந்த மக்களை ஹோம்ஸ் பார்வையிட்டிருந்தார். இச்சந்திப்பின்போது புலிகள் கொழும்பிலும் கட்டுநாயக்காவிலும் விமானத்தாக்குதல் நடத்தியது பற்றி குறிப்பிட்டபோது, இத்தாக்குதலில் பலியாகியவர்கள், காயமடைந்தவர்கள் தொடர்பாக தனது அனுதாபத்தை ஹோம்ஸ் தெரிவித்திருக்கிறார்.

புலிகள் பொதுமக்களை பயன்படுத்துவதற்கு இது சான்று என்றும் ஜனாதிபதி இச்சந்திப்பில் ஹோம்ஸிடம் கூறியுள்ளார்.

அதேவேளை, புலிகளின் பிடியிலிருந்து பொதுமக்களை விடுவிக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குமெனவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.அத்துடன் இது தொடர்பாக புலிகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படவேண்டுமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இவர்கள் எனது மக்கள், எனது நாட்டின் பிரஜைகள், அவர்களின் பாதுகாப்பு எனக்கு முக்கியமானது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த பொதுமக்களின் எண்ணிக்கை குறித்து சரியாகக் கூற முடியாது. பொதுமக்கள், சிறுவர்களை ஆயுதங்கள் வைத்திருக்க புலிகள் பயன்படுத்துவது அறிந்த விடயம். புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் இந்தப் பொதுமக்களை பாதுகாப்பாக கொண்டுவர முடியும். இது தொடர்பாக நாம் திரும்பத்திரும்ப அழைப்பு விடுத்துள்ளோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வின் சாத்தியப்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டபோது, சகல மக்களினதும் அபிலாசைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வில் ஆர்வமாக இருப்பதாகவும் குறிப்பாக வடக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியம் தேவை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

முல்லைத்தீவிலிருந்து திருமலை வந்தவர்கள் இதுவரை 1,610 பேர்

trincomali.jpgநேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு முல்லைத்தீவிலிருந்து கப்பல் மூலம் திருகோணமலைக்கு 398 பொதுமக்கள் கூட்டிவரப்பட்டனர். அவர்களையும் சேர்த்து பெப்ரவரி 11 ஆம் திகதியிலிருந்து முல்லைத்தீவிலிருந்து கூட்டிவரப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 1,610 ஆக அதிகரித்துள்ளது நேற்று சனிக் கிழமை நண்பகல் 12 மணியில் உள்ள நிலைவரத்தின் படி 911 பேர் திருகோணமலை மாவட்டத்திற்கு வெளியே அனுப்பிவைக்கப்பட்டனர். வெளிமாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களின் விபரம் வருமாறு;
கந்தளாய்160, தம்பலகாமம்65, பொலன்னறுவ183, கொழும்பு மற்றும் கண்டி86, வவுனியா ஆஸ்பத்திரி23, திருகோணமலையில் திருமலை ஆஸ்பத்திரியில் 646, திருமலை மெதடிஸ்த மகளிர்கல்லூரி 53 பேரும் ஆக 699 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் உள்ள இடம் பெயர்ந்தவர்களுக்கான நலன்புரி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 441.

முல்லைத்தீவில் இருந்து கொண்டுவரப்பட்ட காயமடைந்தவர்களில் 528 பேருக்கு பெப்ரவரி 11 இருந்து பெப்ரவரி 20 வரை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்று மாகாண சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

வன்னி மக்களின் பாதுகாப்புக்கு ஐ.நா.வின் உத்தரவாதத்தை கோருகிறது தமிழ் கூட்டமைப்பு

John_Holmes_UNவன்னியில் மோதல் பகுதிகளிலுள்ள 3 இலட்சத்து 30 ஆயிரம் மக்களின் பாதுகாப்புக்கு ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகள் உத்தரவாதப்படுத்த வேண்டும் மெனவும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களின் முகாமைத்துவத்தை ஐ.நா.வே பொறுப்பேற்க வேண்டுமெனவும் வருகைதந்துள்ள ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான உதவி செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

ஜோன்ஹோம்ஸை கொழும்பு சிமைன்கிரான்ட் ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா , சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இச்சந்திப்பின் போது கூட்டமைப்பு எம்.பி. க்கள் கூறியதே கவனமாக செவிமடுத்த ஹோம்ஸ் அரச தரப்பினருடனான சந்திப்பின்போது வன்னி மக்களின் மனிதாபிமான அவலம் குறித்து சில உறுதி மொழிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவை தொடர்பாக அவர்கள் காட்டும் ஈடுபாட்டை பொறுத்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியதாக இச்சந்திப்பில் கலந்துகொண்ட மாவை சோனாதிராஜா எம்.பி. தெரிவித்தார்.

விமான எதிர்ப்பு தாக்குதலில் மாணவி உயிரிழப்பு

colombo1.jpgகொழும்பு நகருக்குள் பிரவேசித்து தாக்குதல் நடத்த முயன்ற விடுதலைப்புலிகளின் விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்காக விமானப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் விமான எதிர்ப்பு ஏவுகணையின் சில பாகங்கள் ராஜகிரிய பகுதியில் விழுந்தனால் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.
இதில் ராஜகிரிய ஒபயசேகரபுரவை சேர்ந்த உதேசிகா என்ற 20 வயது மாணவியே வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

விமானப்படையினரின் விமான எதிர்ப்பு தாக்குதலை தமது அயலவர்களுடன் பார்த்துக் கொண்டிருந்த போதே வெடித்துச் சிதறிய ஏவுகணை வெடிபொருளின் பகுதியொன்று இம் மாணவியின் கழுத்துப்பகுதியை தாக்கியதையடுத்தே உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஈழத்துத் தமிழ் பெண்ணுக்கு ஆஸ்கார் விருது பரிந்துரை:ஸ்லம்டாக் மில்லியனர்

mia.jpgசமீபத்தில் வெளியாகி ஆஸ்கார் வரை சென்றுள்ள திரைப்படமான “ஸ்லம்டாக் மில்லியனர்” (Slumdog Millionaire) திரைப்படத்தில் வரும் ‘ஓ சயா’ என்ற பாடலை எழுதி பாடியவர் MIA.  இவருக்கு ஆஸ்கார் விருது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உலகெங்கும் தமிழனின் வேதனை உணர்த்த தக்க சமயத்தில் MIA என்ற தமிழ் பாடகிக்கு ஆஸ்கார் மற்றும் மிகவும் உயர்ந்த பாடகர்  விருதான கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் வ‌சிக்கும் ஈழ‌த்து த‌மிழ்பெண் ‘MIA’ மாத‌ங்கி அருள்பிர‌காச‌ம் இவ‌ர் இங்கிலாந்தில் புக‌ழ் பெற்ற‌ பாட‌ல் ஆசிரிய‌ர், ராப் பாட‌க‌ர். த‌மிழ் ஈழ‌த்தில் 17 ஜுலை 1977-ல் க‌லா ம‌ற்றும் அருட்பிர‌காச‌ம் த‌ம்ப‌தியின‌ருக்கு பிற‌ந்த‌வ‌ர். இவ‌ர‌து த‌ந்தை அருட்பிர‌காச‌ம் தீவிர‌ ஈழ ஆத‌ர‌வாள‌ர் ம‌ற்றும் அப்போதையை த‌மிழ் ஈழ‌ மீட்பு போர்ப்ப‌டை (த‌ற்போது த.ஈ.வி.புலிக‌ள்) ப‌ணியாற்றிய‌வ‌ர். முத‌லாம் உள்நாட்டு போரில் சிங்க‌ளப்‌ப‌டைக‌ள் த‌மிழ‌ர்க‌ளை குடும்ப‌ம் குடும்ப‌மான‌ கொலை செய்த‌போது த‌ன‌து தாயுட‌ன உயிர் பிழைத்து சென்னைக்கு வ‌ந்தார். சென்னையில் த‌ங்கிருந்த‌ இவ‌ர் சில‌ வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து மீண்டும் த‌ன‌து த‌ந்தையைக் காண‌ யாழ்ப்பாண‌ம் சென்றார்.

அங்கு த‌ன‌து வீடு ம‌ற்றும் ப‌டித்த‌ ப‌ள்ளிக்கூட‌ம் முழுவ‌தும் இல‌ங்கை இராணுவ‌த்தின‌ரால் சூரையாட‌ப்ப‌ட்டு கொண்டிருந்த‌து. அவ‌ர‌து த‌ந்தையும் இல‌ங்கை இராணுவ‌த்துட‌ன் போராடிக்கொண்டிருந்த‌ கார‌ண‌த்தால் இராணுவ‌ம் இவ‌ரையும் இவ‌ர‌து தாய் ம‌ற்றும் இவ‌ர‌து இர‌ண்டு ச‌கோத‌ர‌ர்க‌ளையும் தேடிக்கொண்டிருந்த‌து. உயிருக்கு ப‌ய‌ந்து மீண்டும் த‌மிழ‌க‌ம் வ‌ந்த‌ இவ‌ர்க‌ள் உற‌வின‌ர் இருவ‌ரின் ஆத‌ர‌வால் ல‌ண்ட‌ன் நோக்கி ப‌ய‌ண‌ம் ஆனார்கள். MIAவிற்கு வ‌ய‌து 11 ல‌ண்ட‌னில் அக‌தியாக‌ த‌ன‌து வாழ்க்கையை தொட‌ங்கிய‌வ‌ர். ல‌ண்ட‌னில் உள்ள‌ சென்ட்ர‌ல் செயிண்ட் மார்சியல் ஆர்ட் அகேடமியில் த‌ன‌து க‌லைப் ப‌ட்டப்‌ப‌டிப்பை முடித்தார். ப‌ட்டப்‌ப‌டிப்பு முடிந்ததும் இவ‌ர் த‌னி இசைப்பாட‌ல்க‌ள் இய‌ற்றுவ‌தும் தானாக‌வே ஆல்ப‌ங்க‌ள் த‌யாரிக்கும் ப‌ணியில் ஈடுப‌ட்டார். இவ‌ர‌து பாட‌ல்க‌ள் இங்கிலாந்து ம‌ட்டுமின்றி அமெரிக்க‌ நாடுக‌ளிலும் பிர‌ப‌ல‌மான‌து. த‌னி இசை ஆல்ப‌ம் இங்கிலாந்தில் மிக‌வும் பிர‌ப‌ல‌மான‌து. 2005-ஆம் ஆண்டில் ‘ஆல்ப‌ம் ஆப் த‌ இய‌ர்’ என்ற‌ விருதை பெற்றுத்த‌ந்த‌து. இந்த‌ வ‌ருட‌ம் பேப்ப‌ர் ப்ளேன்ஸ் (Paper Planes-2008), சகா லைக் அஸ் என்ற‌ இர‌ண்டு ஆல்ப‌ங்க‌ளுக்கு மிக‌ உய‌ரிய‌ விருதான‌ கிராமிவிருது இவ‌ருக்கு ப‌ரிந்துரை செய்ய‌ப‌ட்டுள்ள‌து.

ஈழத் தமிழர்களைக் காக்கக் கோரி தீக்குளித்த திமுக தொண்டர் மரணம்

united-people.jpgஇலங் கைத் தமிழர்களைக் காக்கக் கோரி சென்னையில் திமுக இளைஞர் அணி நடத்திய மனித சங்கிலியின்போது தரமணியைச் சேர்ந்த தொண்டர் தீக்குளித்தார். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவர் உயிரிழந்தார். சென்னை தரமணி மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம்(55). மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து 1999ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். பின்னர் தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் டிரைவராகப் பணியாற்றி வந்தார்.

இவருக்கு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.நேற்று திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற ஈழத் தமிழர்களைக் காக்கக் கோரும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் சிவப்பிரகாசமும் கலந்து கொண்டார். அப்போது திடீரென தான் வைத்திருந்த பையில் இருந்த பாட்டிலை எடுத்து அதில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீயைக் கொளுத்தி வைத்துக் கொண்டார். சிவப்பிரகாசம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தி.மு.க. பகுதி பிரதிநிதியாகவும், டாக்டர் கலைஞர் மன்ற செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவப்பிரகாசம் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் நிதியுதவி அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் பீட்டர்மாரிஸ்பர்க்கில் தமிழர்கள் பேரணி

sa-tamils-protest.jpgதென் ஆப்பிரிக்காவின் பீட்டர்மாரிஸ்பர்க் நகரில், இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து தமிழர்களும், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் பேரணி நடத்தினர்.

தமிழ் மக்கள் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றக் கோரியும், கட்டுண்டு கிடக்கும் அனைத்துலக சமூகம் உடனடியாகத் தலையிட்டு தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை நிறுத்துமாறும் இப்பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர். இப்பேரணியை நீதிக்கும் சமாதானத்திற்குமான ஒருமைப்பாட்டுக் குழு, தென்னாபிரிக்க தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், பாலஸ்தீன ஆதரவு அமைப்பு, அருட்பா கழகம், தென்னாபிரிக்க இஸ்லாமிய ஒன்றியம், தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை ஏற்பாடு செய்திருந்தன.

பீட்டர்மாரிஸ்பர்க் நகரின் முக்கியச் சாலை வழியாக சென்ற பேரணி, சுதந்திர சதுக்கத்தில் முடிவடைந்தது. அங்கு கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் இலங்கையில், தமிழ் மக்கள் மீதான இன அழிப்புக்கு எதிராகவும், தமிழ் மக்கள் படுகொலைக்கு இந்தியா துணை போவதாகவும், அனைத்துலகம் பாராமுகமாக இருப்பதாகவும் முழக்கமிட்டனர்.