பிரபாகரன் பேனர் அகற்றம் – 6 பேர் தீக்குளிக்க முயற்சி

tamilnadu.jpgபுதுக் கோட்டை அருகே விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பேனர்களை அகற்ற போலீசார் முயற்சி செய்ததால் 6 பேர் தீக்குளிக்க முயன்றனர்.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வடகாடு பகுதியில் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் சார்பில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் இயக்குநர் மணிவண்ணன், காளிமுத்து, வழக்கறிஞர் புரட்சி கவிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்பதாக இருந்தது. இந்த நிலையில் அந்த பகுதி முழுவதும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உருவம் பொறித்த படத்தை டிஜிட்டல் பேனர்களாக வைத்திருந்தனர். தகவல் அறிந்த எஸ்.பி மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த டிஜிட்டல் பேனர்களை அகற்ற முன்றனர்.

இதற்கு கூட்டத்த்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், விஜய், கோபி, சரவணன், திருப்பதி, ஆனந்த் உள்ளிட்ட 6 பேர் திடீரன உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் தீக்குளிப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • palli
    palli

    பிரபாகரன் பேனர் அகற்றபட வேண்டும்.
    தீக்குளிப்பு அடியோடு நிறுத்தபட வேண்டும்.

    Reply
  • Kusumbo
    Kusumbo

    இனியென்ன பிரபாகரன் தம்பி பனரில்தானே இருக்க ஆசைப்பட்டவர். அதிலையும் இருக்க விடமாட்டாங்கள் போலை கிடக்குது. வேலுப்பிள்ளையின்ரை பிள்ளை போட்டால் பேந்துஆர் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு விளக்கு வைக்கிறது பேசுறது.

    Reply