வெளி நாடுகளில் வேலை செய்து வந்த சுமார் 20,000 இந்தியர்கள், உலக பொருளாதார வீழ்ச்சி காரணமாக வேலை இழந்து நாடு திரும்பியுள்ளனர்.பணிக்கான விசா காலத்தைப் புதுப்பிக்க மறுத்துவிட்ட நிறுவனங்கள், அனைவரையும திருப்பி அனுப்பிவிட்டனவாம். இத் தகவலை, வெளிநாடு வாழ் இந்தியர் நலத் துறை அமைச்சர் வயலார் ரவி ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது தெரிவித்தார்.
அவர் கூறுகையில், இப்போது நாடு திரும்பியுள்ளோர் அனைவரின் விசாக்களை அவர்கள் பணியாற்றிய நிறுவனங்கள் புதுப்பிக்காமல் விட்டுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த விஷயத்தில் நாம் எதுவும் செய்வதற்கில்லை. பல நாடுகளில் நிலைமை மோசமாக உள்ளதால் நாடு திரும்புவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
palli
இலங்கைக்கு ஆயுதம் கொடுக்க நிதி இருக்கு. ஏன் இவர்களுக்கு ஒரு தொழில்துறையை ஆரம்பிக்க நிதி பற்றாகுறையா?? இரு பொருளாதார மேதைகள் இருக்கும் நாட்டில் (பொறுப்பில் சிதம்பரம் மகன்மோகன்சிங்) இது பிரச்சனையா?